என் மலர்
புதுக்கோட்டை
- சட்டவிரோதமாக மது விற்றவர் கைது செய்யப்பட்டார்
- தனிப்படை போலீசார் நடவடிக்கை
புதுக்கோட்டை:
ஆலங்குடியில் சட்ட விரோதமாக மது விற்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்தித பாண்டேக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படை போலீசா ர் ஆண்டிக்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கும்மங்குளத்தை சேர்ந்த அந்தோணிசாமி மகன் ஜஸ்டின்திரவியம் (வயது 35) என்பவர், அரசு மதுபானகடை அருகில் மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனை பார்த்த தனிப்படை போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 12 மது பாட்டில் பறிமுதல் செய்து ஆலங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆலங்குடி சப் இன்ஸ் பெக்டர் லதா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார் .
- லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- தனிப்படை போலீசார் நடவடிக்கை
புதுக்கோட்டை:
ஆலங்குடியில் லாட்டரி சீட்டுக்கள் விற்பதாக டிஎஸ்பி-க்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் பாரதிதாசன் சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடி மாவட்டம் தோப்புவளமும் ஊராட்சி சாத்தான் குளம் செல்வராஜ் மகன் சிவனேசன் (வயது 41) என்பவர் கேரளா லாட்டரி சீட்டுகளை டீ கடை ஒன்றில் வைத்து விற்றுக்கொண்டிருந்தார். இதனை பார்த்த தனிப்படை போலீசார், அவரை கைது செய்து ஆலங்குடி காவ ல் நிலையத்தில் ஒப்படைத்தனர் ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- ரூ.1.59 கோடி மதிப்பிலான விதை கடலை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
- அதிகாரிகள் ஆய்விற்குப்பின் நடவடிக்கை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் மழையைப் பயன்படுத்தி கடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகி ன்றனர்.
இதையடுத்து, ஆலங்குடியில் விதைக்கடலை வியாபாரம் களைகட்டி உள்ளது. அதே வேளையில், தரமில்லாத விதைக் கடலை விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, விதை ஆய்வு துணை ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையிலான அலுவலர்கள் நேற்று ஆலங்குடியில் விதைக்கடலை விற்பனை செய்யும் கடைக ளுக்குச் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது, ஆந்திரா, குஜராத் போன்ற வெளி மாநிலங்களில் இருந் து கொண்டு வந்து, சான்று அட்டைகள் இல்லாத, தரமில்லாத கடலை களை விதைக் கடலையாக விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.1.59 கோடி மதி ப்புள்ள 156 டன் கடலைகளை விற்பனை செய்ய தடை விதித்தும், சா ன்று பெற்று விற்பனை செய்யுமாறும் விற்பனையாளர்களுக்கு அலு வலர்கள் அறிவுறுத்தினர்.
- தராசு முத்திரையிடும் முகாம்
- 18-ந் தேதி வரை நடைபெறுகிறது
புதுக்கோட்டை:
பொன்னமராவதி வர்த்தக கழக கட்டிடத்தில் தராசு முத்திரையிடும் முகாம் தொடங்கப்பட்டது. புதுக்கோட்டை தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் குணசீலன் தலைமையில் அலுவலர்கள் நேற்று தராசு முத்திரையிடும் முகாமை தொடங்கினர். பொன்னமராவதி வர்த்தகர் கழக தலைவர் பழனியப்பன் முகாமினை தொடங்கி வைத்தார். புதிதாக தராசு முத்திரையிட விரும்புவர்கள் மறு முத்திரையிட விரும்புபவர்கள் முறையாக ஆன்லைனில் பதிவு செய்து அதற்கான கட்டணம் செலுத்தி பின்னர் தராசு முத்திரையிட்டு வழங்கப்பட்டது. இந்த முகாம் வரும் 18-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொன்னமராவதி தாலுகாவில் உள்ள அனைத்து வணிகர்களும் தாங்கள் பயன்படுத்தும் தராசு க்கு முத்திரையிட்டு பயன்பெறுமாறு தொழிலாளர் நலத்துறையினர் தெரிவித்தனர்.
- கறம்பக்குடியில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- தி.மு.க. அரசை கண்டித்து நடைபெற்றது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பா.ஜ.க.வினர் மாநில அரசு உயர்த்திய பால் விலை உயர்வு, மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து கறம்பக்குடி சீனி கடை முக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் விலை உயர்வை திரும்ப பெற கோரியும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தக் கோரியும் கோஷங்கள் எழுப்பினர். மேலும் மாநில அரசின் மக்கள் விரோத போக்கை கைவிடும் படியும் பேசினர். இந்த ஆர்ப்பாட்டநிகழ்ச்சிக்கு கறம்பக்குடி ஒன்றிய பா.ஜ.க. தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வைத்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் தியாகராஜன் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்தினார். மேலும் கலியபெருமாள் செந்தில்குமார் முத்துக்குமார் விவேகானந்தன் கருப்பையா மற்றும் பா.ஜ.க., ஆர் எஸ் எஸ், இந்து முன்னணியினர் திரளாக கலந்து கொண்டனர்.
- ஆலங்குடியில் மருத்துவ முகாம் நடந்தது
- பரிசோதனைகள் செய்யப்பட்டது
புதுக்கோட்டை:
ஆலங்குடி அரசு மருத்துவமனையி்ல் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது. முகாமிற்கு தலைமை மருத்துவர் மு.பெரியசாமி தலைமை வகித்தார். இதில் மருத்துவர்கள் அருண்குமார், ஜோதிராஜன், லிபர்த்தி செவிலியர்கள் வேலுமணி, ஜான்,செல்வாம்பிகை,காயத்திரி,ஆய்வக நுட்புநர்கள், லெட்சுமிபிரபா, பூபாலன் ஆகியோர் கலந்துகொண்டனர். முகாமில் ரத்த அழுத்தம், உடல்பருமன், சரக்கரை அளவு, ரத்த வகை, ரத்த சோகை, உயரம், எடை , இசிஜி ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டது. முடிவில் செவுலியர் கண்கா ணிப்பாளர் ஜெயந்தி நன்றி கூறினார்.
- மின்னல் தாக்கி 3 பேர் பலியானார்கள்
- பள்ளியில் இருந்து வந்த போது சம்பவம்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா பறையூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி, இவரது மகன் சஞ்சய் (வயது 18) மகள் சஞ்சனா (16) இருவரும் திருப்புனவாசலில் உள்ள ஒரு தனியார்ப்பள்ளியில் முறையே 12 மற்றும் 10 வகுப்பு படித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை இருவரும் பள்ளியை முடித்துவிட்டு, வீட்டிற்கு செல்வதற்காக பள்ளி வளாகத்திலேயே காத்திருந்துள்ளனர். அப்போது சித்தப்பா இளையராஜா (38) இரு சக்கர வாகனத்தில் வந்து இருவரையும் அழைத்து சென்றுள்ளார். 3 பேரும் இருசக்கர வாகனத்தில் ஒன்றாக சென்று கொண்டிருந்துள்ளனர்.
அப்போது பழையதோர் சிங்காரகோட்டை கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென மின்னல் தாக்கியுள்ளது. இதில் சஞ்சய், சஞ்சனா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இளையராஜாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்புனவாசல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து திருப்புனவாசல் காவல்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாணவர், மாணவி உட்பட 3 பேர் இடி தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மௌண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியில் உணவு திருவிழா நடைபெற்றது
- மாணவிகளின் வரவேற்பு நடனம் நடைபெற்றது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை லேணாவிளக்கில் அமைந்துள்ள மௌண்ட் சீயொன் சர்வதேசப் பள்ளியில் உணவு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
மௌண்ட் சீயொன் சர்வதேச பள்ளி நிர்வாகம் மாணவர்களிடம் மற்றவர்களுக்கு உதவும் மனப்பாங்கினை வளர்க்கும் பொருட்டு உணவு திருவிழா நடைபெற்றது.
பள்ளியின் தலைவர் டாக்டர் ஜோனத்தன் ஜெயபரதன், துணைத்தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் முதல்வர் ஜலாஜா குமாரி முன்னிலையில் ராபின்சன் தேவதாசன், ஸ்டாரி தேவதாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவின் தொடக்கமாக மாணவ மாணவிகளின் வரவேற்பு நடனம் நடைபெற்றது. தொடர்ந்து பள்ளியின் தலைவர்சிறப்பு விருந்தினர்களை வரவேற்று வரவேற்புரை வழங்கி பொன்னாடையும், நினைவுப்பரிசும் வழங்கி கௌரவித்தார். இணைத்தலைவர் கடந்த ஆண்டில் நடைபெற்ற உணவுத் திருவிழாப் பற்றிய அறிக்கையை கூறியதுடன், கடந்த வருடம் உணவுத்திருவிழா வாயிலாக கிடைத்த நிதி எந்த ஆஸ்ரமங்களுக்கு வழங்கப்பட்டது , எவ்வாறு ஏழை எளியவர்களுக்கு சென்று சேர்ந்தது என்பது குறித்த அறிக்கையை வாசித்தார்.
சிறப்பு விருந்தினர்கள் தனது சிறப்புரையில் ஏழைக்கு உதவுகிறவன் கடவுளை மகிழ்ச்சியடைய வைக்கிறான் என்ற இறைவனின் வார்த்தைகளை கூறி பெற்றோர் ஆசிரியர்களின் வார்த்தைகளுக்கு மாணவர்கள் மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும் குழந்தைகளுக்கு அறிவுரையுடன் வாழ்த்துரை வழங்கினார்கள்.
உணவுத்திருவிழா தொடக்க விழாவைத் தொடர்ந்து அன்றைய நாள் முழுவதும் எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் விதவிதமான உணவினை சமைத்து விற்பனை செய்தனர். உணவுத் திருவிழாவில் மாணவர்களும், பெற்றோ ர்களும் அறுசுவை உணவினை உண்டு மகிழ்ந்தனர். உணவுப் பொருட்கள் மட்டுமின்றி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டு நிகழ்சிகளும் நடைபெற்றன. இந்நிகழ்வு சிறப்பாக அமைய அனைத்து ஆசிரியர்களும், அலுவலகப் பணியாளர் களும் இணைந்து செயல்பட்டனர்.
- ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது
- மாணவர்களை ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர்
புதுக்கோட்டை:
குழந்தைகள் தின விழாவில் குதூகலம் ஐந்தே நிமிடத்தில் கவிதை எழுதி அசத்திய மாணவர்கள் புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மிகவும் வித்தியாசமான முறையில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு 'புத்தகம் இல்லா நாள்' என அறிவித்தார் பள்ளி முதல்வர் தங்கம் மூர்த்தி. புத்தகப் பை இல்லாமல் மாணவர்கள் மழையையும் பொருட்படுத்தாது மிக உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி, ரோஜாப்பூ கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு படத்துக்கு மாணவர்கள் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
ரோட்டு மேல காரு, காருக்குள்ள யாரு, எங்க மாமா நேரு என்ற பிரபலமான பாடலை முதல்வர் தங்கம் மூர்த்தி பாட மாணவர்கள் தொடர்ந்து பாடி உற்சாகத்தில் மகிழ்ந்தனர்.
ஒன்பதாம் வகுப்புக்கு சென்ற பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி மாணவர்களை சந்தித்து இன்று மழை பெய்கிறது. ஜன்னல் வழியே அதனை ரசிக்கிறீர்கள். அதனை வைத்து கவிதை எழுதுங்களேன் என்று கூற உடனே பேனா எடுத்த மாணவர்கள் ஐந்தே நிமிடங்களில் மழை பற்றிய மழலைச் சிந்தனைச் சிதறல்களை கவிதைகளாக எழுதிக் காட்டியது பெரும் வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு கோணத்தில் தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதி தாங்களும் கவிஞர்கள் தான் என்பதை நிரூபித்தார்கள். வகுப்புகளை அலங்கரித்து மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றுக் கொண்டாடிய காட்சி கண்ணைக் கவர்ந்தது.
- சர்க்கரை நோய் விழிப்புணர்வு பரிசோதனை முகாம் நடந்தது
- டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில்
புதுக்கோட்டை:
உலக சுகாதார மையம் மற்றும் சர்வதேச சர்க்கரை நோய் கூட்டமைப்பு இணைந்து இன்சுலின் மருந்தை கண்டுபிடித்த பேண்டிங் என்ற விஞ்ஞானி பிறந்தநாளான நவம்பர் 14-ம் தேதியை உலகமெங்கும் "உலக சர்க்கரை நோய் தினம்" என்று அனுசரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வளாகத்தில் சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு பரிசோதனை முகாம் மற்றும் உணவுக் கண்காட்சி நடைபெற்றது.
மாவட்ட அரசு மருத்துவ சங்கத் தலைவர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் சலீம் அப்துல் குத்தூஸ், இருதய நோய் சிறப்பு மருத்துவர் வெங்கடேசன், மகப்பேறு மற்றும் மகளிர் நோய் சிறப்பு மருத்துவர் அனிதா தனசேகரன் மற்றும் இருக்கை மருத்துவர் பிரியங்கா கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் கே.ஹெச்.சலீம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
விழாவில் உணவுக் கண்காட்சி மற்றும் சர்க்கரை நோயின் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டு மக்களுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
உணவுக் கண்காட்சி ஏற்பாடுகளை உணவியல் நிபுணர் மகாலெட்சுமி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயபாரதி ஏற்பாடுகளை செய்திருந்தனர். மருத்துவமனையின் பொது மேலாளர் ஜோசப் அனைவருக்கும் நன்றி கூறினார். இவ்விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அனைவருக்கும் சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டது.
- தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
- அறந்தாங்கி அருகே பறையத்தூரில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்
புதுக்கோட்டை:
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த அதீத கனமழையால் டெல்டா மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பறையத்தூரில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். இரு சக்கர வாகனத்தில் சென்ற 2 பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் மீது மின்னல் தாக்கியதில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- பொற்பனை முனீசுவரர் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது
- ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள மேலநெம்பகோட்டையில் உள்ள பழைமை வாய்ந்த பொற்பனை முனீசுவரர் கோவிலில் நடைபெற்றுவந்த திருப்பணிகள் நிறைவடைந்தன. இதையொட்டி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் சில தினங்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றுவந்தன. தொடர்ந்து நேற்று காலை மேளதாளங்கள் முழங்க புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில், ஆலங்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். ஆலங்குடி போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்






