என் மலர்
உள்ளூர் செய்திகள்

கறம்பக்குடியில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
- கறம்பக்குடியில் பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- தி.மு.க. அரசை கண்டித்து நடைபெற்றது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பா.ஜ.க.வினர் மாநில அரசு உயர்த்திய பால் விலை உயர்வு, மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து கறம்பக்குடி சீனி கடை முக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் விலை உயர்வை திரும்ப பெற கோரியும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தக் கோரியும் கோஷங்கள் எழுப்பினர். மேலும் மாநில அரசின் மக்கள் விரோத போக்கை கைவிடும் படியும் பேசினர். இந்த ஆர்ப்பாட்டநிகழ்ச்சிக்கு கறம்பக்குடி ஒன்றிய பா.ஜ.க. தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வைத்தார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் தியாகராஜன் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்தினார். மேலும் கலியபெருமாள் செந்தில்குமார் முத்துக்குமார் விவேகானந்தன் கருப்பையா மற்றும் பா.ஜ.க., ஆர் எஸ் எஸ், இந்து முன்னணியினர் திரளாக கலந்து கொண்டனர்.






