என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின்னல் தாக்கி 3 பேர் பலி
- மின்னல் தாக்கி 3 பேர் பலியானார்கள்
- பள்ளியில் இருந்து வந்த போது சம்பவம்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா பறையூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி, இவரது மகன் சஞ்சய் (வயது 18) மகள் சஞ்சனா (16) இருவரும் திருப்புனவாசலில் உள்ள ஒரு தனியார்ப்பள்ளியில் முறையே 12 மற்றும் 10 வகுப்பு படித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை இருவரும் பள்ளியை முடித்துவிட்டு, வீட்டிற்கு செல்வதற்காக பள்ளி வளாகத்திலேயே காத்திருந்துள்ளனர். அப்போது சித்தப்பா இளையராஜா (38) இரு சக்கர வாகனத்தில் வந்து இருவரையும் அழைத்து சென்றுள்ளார். 3 பேரும் இருசக்கர வாகனத்தில் ஒன்றாக சென்று கொண்டிருந்துள்ளனர்.
அப்போது பழையதோர் சிங்காரகோட்டை கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென மின்னல் தாக்கியுள்ளது. இதில் சஞ்சய், சஞ்சனா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இளையராஜாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்புனவாசல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து திருப்புனவாசல் காவல்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாணவர், மாணவி உட்பட 3 பேர் இடி தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






