என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • ஆடு திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்
    • போலீசார் சிறையில் அடைத்தனர்



    புதுக்கோட்டை:

    கறம்பக்குடி அருகே உள்ள பொன்னன் விடுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். விவசாயியான இவர், ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது வீட்டு அருகே இருந்த கொட்டகையில் கட்டி இருந்த 3 ஆடுகளை காணவில்லை. இது குறித்து மலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தார்.

    இதற்கிடையே வெட்டன் விடுதி சந்தையில் நின்ற ஒரு வாலிபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தில். இதில் அவர் வேளாங்கண்ணி பூக்காரத்தெருவை சேர்ந்த சதீஷ்குமார் ( வயது32)என்பதும், பொன்னன் விடுதியில் காணாமல் போன 3 ஆடுகளையும் இவர் தான் திருடியது என்று தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் ஆலங்குடி நீதித்துறை நடுவர் மன்ற நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கால்நடைகளை அப்புறப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
    • போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை கந்தர்வகோட்டையில் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுக்கா மற்றும் சட்டமன்ற தொகுதியின் தலைமை இடமாக உள்ளது. மேலும், தஞ்சாவூர் மதுரைக்காண சாலை போக்குவரத்து கந்தர்வகோட்டை வழியாக உள்ளதால். கந்தர்வகோட்டைக்கு தினசரி ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள், அலுவலர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும் வாகனத்தில் செய்வார்கள் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது . இந்த நிலையில் கந்தர்வ கோட்டையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் அச்சுறுத்தும் வகையில் கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. எனவே சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்தவும், கால்நடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது
    • மாவட்ட கல்வி அலுவலர் நேரில் ஆய்வு


    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கோமாபுரம், புது நகர், குளத்தூர் நாயக்கர் பட்டி, வேலாடிப்பட்டி ,அக்கச்சிப்பட்டி ஆகிய மையங்களில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் தொடர்பான பயிற்சியும், நான்கு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஸ்போக்கன் ஆங்கில பயிற்சியும் நடைபெற்றது. பயிற்சியினை மாவட்ட கல்வி அலுவலர் சுவாமி. முத்தழகன், ஆசிரியர்களுக்கு பயிற்சியின் அவசியம் குறித்து எடுத்துக் கூறி, ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி முறைகளை மாணவர்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்க வலியுறுத்தினார். வட்டார கல்வி அலுவலர் நரசிம்மன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர். பயிற்சியில் பள்ளி ஆசிரியர்கள் கருத்தாளர்களாக செயல்பட்டு விரிவாக பயிற்சி அளித்தனர்.

    • ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் 54 பேர் கைது செய்யப்பட்டனர்
    • திருமண மண்டபத்தில் அடைத்து மாலை விடுவித்தனர்

    புதுக்கோட்டை:

    திருச்சி புத்தூர் பகுதியில் மனமகிழ் மன்றம் தொடங்கப்படுவதை கண்டித்து திருச்சி மாநகர், மாவட்ட பா.ஜ.க. சா ர்பில் புத்தூர் நால்ரோடு பகுதியில சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக கூறி திருச்சி மாநகர், மாவட்ட பா.ஜ.க. தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட 9 நிர்வாகிகளை உறையூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த கைது சம்பவத்தை கண்டித்து, புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. கட்சி சார்பில் நாகுடியில் சாலைமறியல் போராட்டம் தேசிய பொதுக்குழு உறுப்பினர் புரட்சி கவிதாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொதுச் செயலாளர் முரளிதரன், மாநில செயற்குழு உறுப்பினர் உமாமகேஸ்வரி, மாவட்டத் துணைத் தலைவர் சந்தானலெட்சுமி, மீனவர் அணி மாநில செயலாளர் சோனகருப்பன், மாவட்ட ஆன்மீக அணி வீரமாகாளியப்பன், தெற்கு ஒன்றியத் தலைவர் சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது 24 பேரை நாகுடி போலீசார் கைது செய்தனர்.

    இதே ே பால் கந்தர்வகோட்டை ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஒன்றிய தலைவர் தவமணி தலைமையில் பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநில தொழில் பிரிவு செயலாளர் ஏ. வி.சி. கணேசன் முன்னிலை வகித்தார்.சாலை மறியலில் ஈடுபட்ட கார்த்திகேயன், தங்கவேல், சந்திரன், ராகவன், முத்துக்குமார், முருகானந்தம் உள்ளிட்ட 30 நபர்களை கந்தர்வகோட்டை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து மாலை விடுவித்தனர்.

    • சிவன் கோவிலில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • பக்தர்கள் சிலர் விரட்ட முயன்றனர்

    புதுக்கோட்டை

    விராலிமலை புதிய பஸ் நிலையம் அருகே வன்னிமரத்தடியில் சிவன் கோவில் உள்ளது. நேற்று காலை வழக்கம்போல் கோவிலுக்கு பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது கோவிலுக்கு வெளியே சுமார் 8 அடி நீளமுள்ள கருஞ்சாரை பாம்பு ஒன்று கோவில் சுற்றுச்சுவரின் ஓரமாக இருப்பதை கண்ட பக்தர்கள் சிலர் அந்த பாம்பை விரட்ட முயன்றனர். அப்போது அங்கிருந்து சென்ற பாம்பு கோவில் முன்வாசல் வழியாக கோவிலுக்குள் சென்றது. பின்னர் சிறிது நேரம் அப்பகுதியில் சுற்றிய பாம்பு கோவிலின் பின்புறமாக வெளியே சென்றது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • தீராத வயிற்று வலியால் அவதியடைந்த

    புதுக்கோட்டை

    வடகாடு அருகேயுள்ள ஆலங்காடு பகுதியை சேர்ந்த நாடிமுத்து மகள் திலகா (வயது 16). இவர் கொத்தமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த திலகா கடந்த 1-ந்தேதி விஷம் குடித்தார். இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் திலகா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் 21-ந் தேதி முதல் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும் என நல்லசாமி கூறினார்.
    • கள் இறக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் நாங்கள் போலீசாரை கேள்வி கேட்போம்

    புதுக்கோட்டை

    தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயலாளர் நல்லசாமி புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ''தமிழகம் முழுவதும் வருகிற ஜனவரி மாதம் 21-ந் தேதியில் இருந்து கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும். கள் இறக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் நாங்கள் போலீசாரை கேள்வி கேட்போம். கள்ளுக்கான தடையை அகற்றும் போராட்டத்தில் இளைஞர்கள், பொதுமக்கள் பங்கேற்பார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல் இதுவும் வெற்றி பெறும். தென்னை மரங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் நீராவுக்கான நிபந்தனைகளை தளர்த்த வேண்டும். தமிழகத்தில் பனை, தென்னை, ஈச்சமரங்கள் இருந்தால் அவற்றில் இருந்து நீராகவோ, கள்ளாகவோ, பதநீராகவோ இறக்கியும், விற்றும், குடித்தும் கொள்ளலாம் எனவும், மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக சந்தைப்படுத்தி உள்நாட்டிலும், பன்னாட்டிலும் விற்க வழி செய்யலாம். இவ்வாறு செய்தால் தமிழகத்திற்கு வருமானம் கிடைக்கும். தமிழகம் முதல் மாநிலமாக மாறும். முதல்-அமைச்சர் விரைவில் இந்த அறிவிப்பை வெளியிடுவார் என நம்புகிறோம்''. இவ்வாறு அவர் கூறினார்.

    • ரத்த தான முகாம் நடைபெற்றது
    • முகாமினை வட்டார மருத்துவ அலுவலர் மணிமாறன் தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் புதுநகர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நாம் தமிழர் இயக்கம் ஆகியவை சார்பில் வெள்ளாள விடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமினை வட்டார மருத்துவ அலுவலர் மணிமாறன் தொடங்கி வைத்தார். மருத்துவ அலுவலர் ரஞ்சித் முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம், முத்துக்குமார், பழனிச்சாமி, சுகாதார ஆய்வாளர் இயக்க தலைவர் சரவணகுமார், துணைத்தலைவர் யோகராசா, செயலாளர் வெள்ளைச்சாமி, இணைச் செயலாளர் வெள்ளைச்சாமி, முத்துக்குமார், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், ஆகியோர் முகாமில் கலந்து கொண்டனர்.

    • பாலின பாகுபாடு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • சுய உதவி குழு பெண்கள் கலந்து கொண்டனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சர்வதேச வன்முறை ஒழிப்பு தினம் மற்றும் பாலின பாகுபாடு தொடர்பாக வட்டார அளவிலான மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் பங்கு கொண்ட விழிப்புணர்வு பேரணிநடைபெற்றது.

    மாவட்ட ஊராட்சி செயலாளர் வாசுதேவன் தலைமையேற்று தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதரன், திட்ட உதவி அலுவலர் ராஜா முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேரணி நகரில் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணிக்கான ஏற்பாடுகளை வட்டார இயக்க மேலாளர் சந்திரசேகரன் செய்திருந்தார். பேரணியில் நூற்றுக்கு மேற்பட்ட மகளிர் சுய உதவி குழு பெண்கள் கலந்து கொண்டுபெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோசங்கள் எழுப்பினர்.

    • ஆடு திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது ெசய்யப்பட்டார்
    • வாகன சோதனை நடத்தி வந்தனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மற்றும் கறம்பக்குடி பகுதியில் தொடர்ந்து ஆடுகள் திருடு போவதாக காவல் துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனை தொடர்ந்து காவல் துணை கண்காணிப்பாளரின் அறிவுறுத்தலின்படி தனிப்படை போலீசார் நகரில் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஆடு திருட்டில் ஈடுபட்டவர் வெட்டன்விடுதி அருகே நின்று கொண்டிருந்த சதீஷ்குமாரை தனிப்படை போலீசார் கைது செ ய்து மழையூர் காவல் நிலையம் கொண்டு வந்தனர்.போலீசார் விசா ரித்தபோது பொன்னன் விடுதியில் ஆடு திருட்டில் ஈடுபட்டதாக ஒப்பு க்கொண்டதின் பேரில் மழையூர் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாற்றுத்திறனாளி சிறார்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. வருவாய்த்துறை ஆய்வாளர் துரைக்கண்ணு கொடியசைத்து போட்டிகளை துவக்கி வைத்தார். சிறப்பு அளைப்பாளராக மேலாத்தூரை சேர்ந்த நீரினை பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் குமார் கலந்து கொண்டார். போட்டியில் பலூன் உடைத்தல், இசை நாற்காலி, லெமன் இன் தி ஸ்பூன், மெமரி கேம், நண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி சிறார்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • ஆலங்குடியில் கலையரங்கம் இடிக்கப்பட்டது
    • 1973 -ம் ஆண்டு கட்டப்பட்டது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கடந்த 1973 -ம் ஆண்டு கட்டப்பட்ட கலையரங்கத்தில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு முன்னணி நடிகர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியுள்ளனர். இந்நிலையில் ஆலங்குடியின் அடையாளமாக திகழ்ந்த இந்த கலையரங்கம் சிதிலமடைந்ததால் அதிகாரிகளின் வழிகாட்டல்படி பேரூராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினார்கள். இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில், ஆலங்குடிக்கு ஒரு அடையாளம் என்றால் அது கலையரங்கம்தான். அந்த கலையரங்கத்தை சொன்னாலோ ஆலங்குடி நினைவிற்கு வரும். இந்த கலையரங்கத்தால் நாங்கள் ஜெயலலிதா உள்ளிட்ட பல தலைவர்களை நேரில் பார்க்க நேர்ந்தது. தற்போது இந்த கலையரங்கம் இடித்து தரைமட்ட மாக்கப்்பட்டுள்ளதை பார்க்கும் போது மனது கஷ்டமாக உள்ளது என்று தெரிவித்தனர்.

    ×