என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரத்த தான முகாம்
- ரத்த தான முகாம் நடைபெற்றது
- முகாமினை வட்டார மருத்துவ அலுவலர் மணிமாறன் தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் புதுநகர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நாம் தமிழர் இயக்கம் ஆகியவை சார்பில் வெள்ளாள விடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமினை வட்டார மருத்துவ அலுவலர் மணிமாறன் தொடங்கி வைத்தார். மருத்துவ அலுவலர் ரஞ்சித் முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம், முத்துக்குமார், பழனிச்சாமி, சுகாதார ஆய்வாளர் இயக்க தலைவர் சரவணகுமார், துணைத்தலைவர் யோகராசா, செயலாளர் வெள்ளைச்சாமி, இணைச் செயலாளர் வெள்ளைச்சாமி, முத்துக்குமார், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், ஆகியோர் முகாமில் கலந்து கொண்டனர்.
Next Story






