என் மலர்
புதுக்கோட்டை
- 16 வயது சிறுமியை போலீஸ்காரர் உட்பட 4 வாலிபர்கள் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கடலோர காவல் படை போலீஸ்காரர் வடிவேல் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்த அண்டக்குளம் அருகேயுள்ள புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மகள் மேகலா (வயது 16) (இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). மயில்சாமி விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.
மேகலா பத்தாம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். பின்னர் பெற்றோருக்கு துணையாக வீட்டில் இருந்தார். பெற்றோர் தினமும் காலையிலேயே கூலி வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.
இதனால் மேகலா வீட்டில் தனியாக இருந்து வந்தார். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கீரனூர் கோவில் விழாக்குடி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், துரைராஜ் ஆகிய 2 இளைஞர்கள் அந்த சிறுமிக்கு வலை விரித்தனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் அந்த சிறுமியிடம் திருமண ஆசை காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர்.
இந்தக் கொடுமை பல மாதமாக தொடர்ந்து வந்தது. இதனை புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்ற வாலிபர் மோப்பம் பிடித்துள்ளார். பின்னர் அவரும் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதன் தொடர்ச்சியாக கீரனூர் பறவயல் பகுதியைச் சேர்ந்த கடலோர காவல் படை போலீஸ்காரர் வடிவேல் என்பவரும் மேகலாவை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் 4 பேரின் தொடர் பாலியல் தொல்லையால் உடல் தளர்ந்த அந்த சிறுமி மறுப்பு தெரிவித்தார். இருந்தபோதிலும் விடாமல் மிரட்டி 4 பேரும் தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த சிறுமிக்கு திடீர் வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக அவரது தந்தை மகளை அழைத்துக் கொண்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஓடினார். அங்கு டாக்டர் பரிசோதனை செய்து விட்டு மேகலா 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். இதைக் கேட்டு மயில்சாமிக்கு தலையில் இடி விழுந்தது போல இருந்தது.
பின்னர் கர்ப்பத்துக்கு காரணம் குறித்து மகளிடம் கேட்டபோது, மேற்கண்ட ரஞ்சித், துரைராஜ், ஆனந்த், போலீஸ்காரர் வடிவேல் ஆகிய நான்கு பேரும் தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு அளித்து தன்னைக் கெடுத்து விட்டதாக கண்ணீர் மல்க கூறினார். அதிர்ச்சி அடைந்த மயில்சாமி இது தொடர்பாக கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ரஞ்சித், துரைராஜ், ஆனந்த் ஆகிய மூன்று பேரையும் நேற்று இரவோடு இரவாக கைது செய்தனர். அவர்களை இன்று புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க முடிவு செய்துள்ளனர்.
கடலோர காவல் படை போலீஸ்காரர் வடிவேல் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 16 வயது சிறுமியை போலீஸ்காரர் உட்பட 4 வாலிபர்கள் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- ஜல்லிக்கட்டில் 425 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
- வெற்றி பெறும் காளை, வீரர்களுக்கு குக்கர், கட்டில், பைக் என விதவிதமான பரிசுகள் வழங்கப்படுகிறது.
தச்சங்குறிச்சி:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது.
ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதலில் கோவில் காளைகள் வாடிசாலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.
ஜல்லிக்கட்டில் 425 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வெற்றி பெறும் காளை, வீரர்களுக்கு குக்கர், கட்டில், பைக் என விதவிதமான பரிசுகள் வழங்கப்படுகிறது.
ஏற்கனவே இருமுறை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- சாலையை சீரமைக்கும் பணிக்காக சாலை நெடுகிலும் கருங்கல் ஜல்லிகள் கொட்டப்பட்டுள்ளது
- அந்த சாலையில் தெரு விளக்கும் இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், கிழக்கு கவிநாடு ஊராட்சிக்கு உட்பட்ட கீழ விளாக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு ராம்தியேட்டர் வழியாக செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அந்தப்பகுதியில் மயானமும் உள்ளது. அந்த சாலையை சீரமைக்கும் பணிக்காக கடந்த 15 நாட்களுக்கு முன் சாலை நெடுகிலும் கருங்கல் ஜல்லிகள் கொட்டப்பட்டது. ஆனால் இன்று வரை சாலைப் பணி தொடங்கப்படவில்லை.
கருங்கல் ஜல்லி குவியல் சாலையில் கிடப்பதால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இறந்தவர்கள் உடலை மாயானத்திற்கு எடுத்துச் செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கற்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதால் இரு சக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயமும் உள்ளது. மேலும் அந்த சாலையில் தெரு விளக்குகளும் இல்லை. இதனால் இரவு நேரங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டி உள்ளது. அந்த சாலையை கடந்து செல்பவர்கள், இதற்கு எப்போதுதான் தீர்வு கிடைக்குமோ? என்று வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- புதுக்கோட்டை சாந்தநாதசாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது
- சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் உடனாய சிவகாமி அம்பாள் மற்றும் மாணிக்க வாசகர் புறப்பாடு திருவீதி உலா நடைபெற்றது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை வேதநாயகி அம்பிகை உடனுறை சாந்தநாதசுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம் விழா நடைபெற்றது.ஆருத்ர தரிசன விழாவை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு கோவிலில் திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. பின்பு காலை 5 மணிக்கு ஆலயத்தின் அலங்கார மண்டபத்தில் உற்சவர் நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் எழுந்தருளி பால், திருமஞ்சனம், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது
.அதன் பின் மூலவர் ஆடல்வல்லான் நடராஜருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து மாணிக்கவாசகருக்கு அங்கி மற்றும் மாலைகள் அணிவிக்கப்பட்டு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது. அப்போது மாணிக்கவாசகர் 108 திருவாசகம் ஓதுவரால் பாடப்பட்டது. உற்சவர் நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு அலங்காரம் நடைபெற்று பன்முக தீபாராதனை, சோடஷ தீபாராதனை, பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாணிக்க வாசகருக்கும் தீபாராதனை நடைபெற்றது
.சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் உடனாய சிவகாமி அம்பாள் மற்றும் மாணிக்க வாசகர் புறப்பாடு திருவீதி உலா நடைபெற்றது. கீழ ராஜ வீதி தெற்குராஜவீதி மேலராஜவீதி வடக்குராஜவீதி பிருந்தாவனம் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.இவ்விழாவில் உபயதாரர் குடும்பத்தார்கள், பல்வேறு பிரமுகர்கள், சிவபக்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் குருக்கள் சிறப்புடன் செய்தனர் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது ஆலயத்தில் வேதநாயகி அம்பிகை சாந்தநாதசுவாமி சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர் ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
- ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் தீவிரபடுத்தபட்டு வருகின்றன
- ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடத்தினை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம் சார்பில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக நேற்று ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான முன்னேற்பாடுகளை கலெக்டர் கவிதாராமு தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு ஆய்வு செய்தனர்.
அப்போது சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்திய வழிகாட்டல் கடைப்பிடிக்கவில்லை எனவும், இதனை முழுமையாக செய்த பின் ஜல்லிக்கட்டு முறையாக நடத்த விழாக்குழுவினருக்கு அனுமதி வழங்கப்படும் என்றனர். ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. முருகேசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு நாளை (8-ந் தேதி) ஜல்லிக் கட்டு போட்டி நடைபெறும் என்று அறிவிப்பு ெவளியானது. இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள இடத்தினை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பணிகளை தீவிரப்படுத்தினர். இதனை முன்னிட்டு விழா குழுவினர் மற்றும் ஜல்லிக்கட்டு காளையர்கள், ஜல்லிக்கட்டு உரிமையாளர்கள் உற்சாகம் அடைந்தனர்
- அறந்தாங்கியில் கால்நடை சிறப்பு முகாம் நடைபெற்றது
- கால்நடைகளை சிறப்பாக பராமரித்த விவசாயிகள் பொதுமக்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே விக்னேஷ்வரபுரத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் ஏகாம்பாள் சந்திரமோகன் ஏற்பாட்டில் நடைபெற்ற முகாமில் சட்ட மன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார்.அப்போது கால்நடைகளுக்கு பரவிவரும் நோய்கள் குறித்தும், அவற்றிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது என்று எடுத்துக் கூறப்பட்டது. மேலும் கால்நடைகளுக்கு தடுப்பூசி, மருத்து, மாத்திரைகள் வழங்கப்பட்டதோடு கால்நடைகளை சிறப்பாக பராமரித்த விவசாயிகள் பொதுமக்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இதில் விக்னேஷ்வரபுரம், பாக்குடி, பஞ்சாத்தி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் பயனடைந்தனர். அதே போன்று கானாடு ஊராட்சியில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் மூலம் பொதுமக்களுக்கான சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது. ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திகேயன் முன்னிலையில், சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.நிகழ்ச்சியில் துறை மருத்துவர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை நகராட்சி நிர்வாகம் சார்பில் பிடிக்கபட்டது
- சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்
அறந்தாங்கி:
அறந்தாங்கி நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இதில் நகரின் முக்கிய சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் நகராட்சி ஆணையர் லீமாசைமன் உத்தரவுபடி நகராட்சிப் பணியாளர்கள் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்த 50 க்கும் மேற்பட்ட மாடுகளைப் பிடித்து சட்டமன்ற அலுவலகம் எதிரே உள்ள வளாகத்தில் பூட்டி வைத்தனர். மேலும் சிறைபிடிக்கப்பட்ட மாடுகளுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை கொடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில் மாடுகளை தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாட்டின் உரிமையாளர்கள் தங்களுடைய மாட்டின் அடையாளத்தை கூறி ரூ 2 ஆயிரம் அபராதம் செலுத்தி மாடுகளை கூட்டிச் செல்லுமாறு நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- பொன்னமராவதியில் ஆதார் நிரந்தர பதிவு மையம் தொடங்கப்பட்டது
- காரையூரில் ஒரு நிரந்தர ஆதார் பதிவு மையம் தொடங்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னமராவதி:
பொன்னமராவதி ஒன்றியத்தில் தாலுகா அலுவலகத்தில் மட்டுமே ஆதார் பதிவு மையம் செயல்பட்டு வருகின்றது. இந்த சேவையை ஒன்றிய அலுவலகம் மற்றும் காரையூர் பகுதியில் அமைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆதார் நிரந்தர பதிவு மையம் அமைக்கப்பட்டு இதன் தொடக்க விழா நடந்தது.
ஒன்றியக்குழுத்தலைவர் சுதாஅடைக்கலமணி ஆதார் பதிவு மையத்தை தொடங்கிவைத்தார். இதில் ஒன்றிய ஆணையர்கள் தங்கராசு, குமரன், ஊராட்சித்தலைவர்கள் கீதாசோலையப்பன், கிரிதரன், அழகுமுத்து, மீனாள்அயோத்திராஜா, லெட்சுமி, துணைஆணையர்கள் குமார், கற்புக்கரசி, வள்ளி, ஒன்றிய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சிப்பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதில் புதிதாக ஆதார் எடுத்தல் திருத்தம், மொபல் எண் மாற்றம், புகைப்படம் மாற்றம் உள்ளிட்ட ஆதாரின் அனைத்துப்பணிகளும் இந்த மையத்தில் மேற்கொள்ளப்படும். இதே போல காரையூரில் ஒரு நிரந்தர ஆதார் பதிவு மையம் தொடங்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் குமார் தலைமையில் நீதிபதியால் அமைக்கப்பட்ட ஆணையத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் செந்தில் குமார், சங்கீதா உள்ளிட்டோர் விசாரணையை தொடங்கினர்.
- மூன்று சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு இடையே எந்தவித பிரச்சினையும் இல்லை என்று கூறியதோடு, சுமூகமாக வாழ விரும்புவதாகவும் தெரிவித்தனர்.
விராலிமலை:
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் இறையூர் கிராமத்தில் உள்ள வேங்கை வயல் பகுதியில் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு கடந்த 27-ந்தேதி அந்த கிராமத்தில் ஆய்வு செய்தார். அப்போது பட்டியலினத்தை சேர்ந்த மக்களை அங்குள்ள அய்யனார் கோவிலில் வழிபட அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. பின்னர் அவர்களை கலெக்டர் கவிதா ராமு கோவிலுக்கு அழைத்து சென்று சாமி தரிசனம் செய்ய வைத்தார்.
அப்போது அதனை விமர்சித்து சாமியாடியவாறு சிங்கம்மாள் என்ற பெண் அவதூறாக பேசினார். இதே போல் அங்குள்ள டீக்கடையில் இரட்டைக்குவளை முறை பயன்பாட்டில் இருந்தை பார்த்து அந்த கிராமத்தில் தீண்டாமை வன்கொடுமை இருப்பதை கலெக்டர் உறுதி செய்தார்.
இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இறையூர் கிராமத்தைச் சேர்ந்த சிங்கம்மாள் மற்றும் டீக்கடை உரிமையாளர் மூக்கையா ஆகியோர் சாதிய பாகுபாடு காட்டியதாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரினர். அதனை நீதிபதி சத்தியா தள்ளுபடி செய்தார்.
மேலும் சம்பந்தப்பட்ட கிராமத்தில் ஆய்வு மேற்கொள்ள 2 வக்கீல்களை கொண்ட ஆணையத்தை அமைத்து அங்கு நிலவும் சூழல் குறித்து ஆய்வு செய்து அதன் அறிக்கையை இன்றைக்குள் (6-ந் தேதி) சமர்ப்பிக்க நீதிபரி உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் குமார் தலைமையில் நீதிபதியால் அமைக்கப்பட்ட ஆணையத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் செந்தில் குமார், சங்கீதா உள்ளிட்டோர் விசாரணையை தொடங்கினர்.
அவர்கள் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் முதலில் விசாரணை மேற்கொண்டு அந்த கிராமத்தில் சாதிய பாகுபாடு உள்ளதா என்பதை கேட்டனர். பின்னர் அவர்களை அழைத்துக்கொண்டு அங்குள்ள அய்யனார் கோவிலுக்கு சென்று பிற இரண்டு சமூக மக்களையும் வரவழைத்து மூன்று சமூக மக்களையும் ஒரே நேரத்தில் வழிபாடு செய்ய வைத்தனர். கோவில் பூசாரி மூலம் பட்டியல் இன மக்களுக்கு விபூதியும் பூச வைத்தனர்.
அப்போது மூன்று சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு இடையே எந்தவித பிரச்சினையும் இல்லை என்று கூறியதோடு, சுமூகமாக வாழ விரும்புவதாகவும் தெரிவித்தனர். இன்று இரண்டாவது நாளாக சம்பந்தப்பட்ட கிராமங்களில் ஆணையத்தை சேர்ந்த வக்கீல் குழுவினர் விசாரணை மேற்கொண்டு அதன் பின்பு நாளை மாலை அதன் அறிக்கையை புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை நீதிமன்ற நீதிபதியிடம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- புதுக்கோட்டையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்பட்டது
- 17 நபர்களுக்கு ரூ.5 லட்சத்து 9 ஆயிரத்து 920 மதிப்பீட்டில் உதவித் தொகைகளை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் சமூகப்பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், யுனைடெட் வே ஆப் சென்னை நிறுவனத்திடமிருந்து நிதியுதவிகள் பெறப்பட்டது. அதன்படி, கொரோனாவால் கணவரை இழந்த தாய்மார்களுக்கு வாழ்வாதார உதவிகள் பெறும் 10 தாய்மார்களுக்கு மின்மோட்டாருடன் இணைந்த தையல் இயந்திரம், பெரிய கிரைண்டர், கறவைமாடு, தள்ளுவண்டிக் கடை, ஆடு அல்லது மாடு வாங்குவதற்காக ரூ.3 லட்சத்து 19 ஆயிரத்து 500 மதிப்பீட்டிலான உதவித் தொகைகளும், மேலும் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்லூரி கல்வி நிதி உதவிகள் பெறும் 7 நபர்களுக்கு ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 420 மதிப்பீட்டில் கல்வி உதவித் தொகைகளும் என மொத்தம் 17 நபர்களுக்கு ரூ.5 லட்சத்து 9 ஆயிரத்து 920 மதிப்பீட்டில் உதவித் தொகைகளை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனிதா, யுனைடெட் வே ஆப் சென்னை திட்ட அலுவலர் ஜெரசலோ வினோத், யுனைடெட் வே ஆப் சென்னை உதவி மேலாளர் அபிராமி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 9-ம் தேதி முதல் வழங்கப்படும் என கலெக்டர் கவிதா ராமு அறிவித்துள்ளார்
- நாள் ஒன்றுக்கு 200 முதல் 250 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2023ம் ஆண்டு பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் மக்கள் கொண்டாட வழிவகை செய்யும் வகையில் பொது விநியோகத் திட்ட அரிசி பெறும் மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக்கரும்புடன் ரூ.1000 ரொக்கப்பணம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்க அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நியாய விலைக் கடைகள் மூலமாக வருகிற 9ந் தேதி முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் புழக்கத்தில் உள்ள 4 லட்சத்து 90 ஆயிரத்து 338 குடும்ப அட்டைதாரர்களுக்கு (இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்கள் உட்பட) பொங்கல் பரிசுத் தொகுப்பு தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கும், நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசு விநியோகத்தை முறைப்படுத்தும் வகையிலும், தெரு வாரியாக உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் சுழற்சி முறை மூலமாக நாள் ஒன்றுக்கு 200 முதல் 250 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப் பணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு டோக்கன்களை வருகிற 8ந் தேதி வரை வழங்கப்பட உள்ளது. மேலும், குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் சென்றாலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு நியாய விலைக் கடையில் வழங்கப்படும். எனவே, ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மட்டுமே பொருள் பெற்றுச் செல்ல நியாய விலைக்கடைக்கு வர வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் வழங்கும் பணியை குடும்ப அட்டைதாரர்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி சீராக விநியோக செய்வதை கண்காணிக்க மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், வட்ட அளவிலும் கட்டுபாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே மின்னனு குடும்ப அட்டைதாரர்கள் கீழ்குறிப்பிட்டுள்ள அலைபேசி எண்களிலும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1967 மற்றும் 1800-425-5901 என்ற எண்களிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான தகவல்கள் ஏதுமிருப்பின் தொடர்பு கொண்டு ெதரிவிக்கலாம்.
- பட்டியலின மக்களுக்கு கோவிலில் வழிபாட்டுக்கு மறுப்பா என வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்
- அனைத்து சமுதாய மக்களோடும் வருவாய் கோட்டாட்சியர் கோவிலில் வழிபாடு செய்தனர்
கறம்பக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மற்றும் ஆலங்குடி பகுதிகளில் பட்டியலின மக்களுக்கு கோவில்களில் வழிபாட்டுக்கு தடை இருப்பதாக திருமணஞ்சேரியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வராத நிலையில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் சம்பந்தப்பட்ட கோவில்கள் முள்ளம் குறிச்சி முத்துமாரியம்மன் கோவில், கறம்பக்குடி கருப்பர் கோவில், வடக்களூர் முத்துமாரியம்மன் கோவில், திருமணஞ்சேரி சுகந்த பரிமளேஸ்வரர் கோவில், வேம்பன் பட்டி முருகன் கோவில் உள்ளிட்ட ஒன்பது கோவில்களில் நேரடியாக சென்று பொதுமக்கள், பட்டியலின மக்கள் மற்றும் கோவில் பூசாரிகள் ஆகியோரிடம் நேரடி விசாரணை செய்தார். விசாரணையில் அது போன்று ஏதும் இல்லை என்றும் தெரியவந்தது. மேலும் அனைத்து சமுதாய மக்களோடும் வருவாய் கோட்டாட்சியர் கோவிலில் வழிபாடு செய்தனர். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின அலுவலர் கருணாகரன், கறம்பக்குடி வட்டாட்சியர் ராமசாமி ஆகியோர் உடன் சென்றனர். பிறகு வருவாய் கோட்டாட்சியர் பேசும்போது இந்த அறிக்கை வழக்கு விசாரணை வரும்துபோது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறினார்.






