என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 9-ம் தேதி முதல் வழங்கப்படும்-கலெக்டர் கவிதா ராமு அறிவிப்பு
    X

    புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 9-ம் தேதி முதல் வழங்கப்படும்-கலெக்டர் கவிதா ராமு அறிவிப்பு

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 9-ம் தேதி முதல் வழங்கப்படும் என கலெக்டர் கவிதா ராமு அறிவித்துள்ளார்
    • நாள் ஒன்றுக்கு 200 முதல் 250 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 2023ம் ஆண்டு பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் மக்கள் கொண்டாட வழிவகை செய்யும் வகையில் பொது விநியோகத் திட்ட அரிசி பெறும் மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக்கரும்புடன் ரூ.1000 ரொக்கப்பணம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்க அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நியாய விலைக் கடைகள் மூலமாக வருகிற 9ந் தேதி முதல் புதுக்கோட்டை மாவட்டத்தில் புழக்கத்தில் உள்ள 4 லட்சத்து 90 ஆயிரத்து 338 குடும்ப அட்டைதாரர்களுக்கு (இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்கள் உட்பட) பொங்கல் பரிசுத் தொகுப்பு தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கும், நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசு விநியோகத்தை முறைப்படுத்தும் வகையிலும், தெரு வாரியாக உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் சுழற்சி முறை மூலமாக நாள் ஒன்றுக்கு 200 முதல் 250 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப் பணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு நாள் மற்றும் நேரம் குறிப்பிட்டு டோக்கன்களை வருகிற 8ந் தேதி வரை வழங்கப்பட உள்ளது. மேலும், குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் சென்றாலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு நியாய விலைக் கடையில் வழங்கப்படும். எனவே, ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மட்டுமே பொருள் பெற்றுச் செல்ல நியாய விலைக்கடைக்கு வர வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் வழங்கும் பணியை குடும்ப அட்டைதாரர்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி சீராக விநியோக செய்வதை கண்காணிக்க மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், வட்ட அளவிலும் கட்டுபாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. எனவே மின்னனு குடும்ப அட்டைதாரர்கள் கீழ்குறிப்பிட்டுள்ள அலைபேசி எண்களிலும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1967 மற்றும் 1800-425-5901 என்ற எண்களிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான தகவல்கள் ஏதுமிருப்பின் தொடர்பு கொண்டு ெதரிவிக்கலாம்.

    Next Story
    ×