என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிடப்பில் கிடக்கும் சாலைப் பணி.. அதிகாரிகள் கவனிப்பார்களா..?

    • சாலையை சீரமைக்கும் பணிக்காக சாலை நெடுகிலும் கருங்கல் ஜல்லிகள் கொட்டப்பட்டுள்ளது
    • அந்த சாலையில் தெரு விளக்கும் இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், கிழக்கு கவிநாடு ஊராட்சிக்கு உட்பட்ட கீழ விளாக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு ராம்தியேட்டர் வழியாக செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அந்தப்பகுதியில் மயானமும் உள்ளது. அந்த சாலையை சீரமைக்கும் பணிக்காக கடந்த 15 நாட்களுக்கு முன் சாலை நெடுகிலும் கருங்கல் ஜல்லிகள் கொட்டப்பட்டது. ஆனால் இன்று வரை சாலைப் பணி தொடங்கப்படவில்லை.

    கருங்கல் ஜல்லி குவியல் சாலையில் கிடப்பதால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இறந்தவர்கள் உடலை மாயானத்திற்கு எடுத்துச் செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். கற்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதால் இரு சக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயமும் உள்ளது. மேலும் அந்த சாலையில் தெரு விளக்குகளும் இல்லை. இதனால் இரவு நேரங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டி உள்ளது. அந்த சாலையை கடந்து செல்பவர்கள், இதற்கு எப்போதுதான் தீர்வு கிடைக்குமோ? என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

    இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×