search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டை சாந்தநாதசாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா
    X

    புதுக்கோட்டை சாந்தநாதசாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா

    • புதுக்கோட்டை சாந்தநாதசாமி கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது
    • சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் உடனாய சிவகாமி அம்பாள் மற்றும் மாணிக்க வாசகர் புறப்பாடு திருவீதி உலா நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை வேதநாயகி அம்பிகை உடனுறை சாந்தநாதசுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம் விழா நடைபெற்றது.ஆருத்ர தரிசன விழாவை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு கோவிலில் திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. பின்பு காலை 5 மணிக்கு ஆலயத்தின் அலங்கார மண்டபத்தில் உற்சவர் நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் எழுந்தருளி பால், திருமஞ்சனம், தயிர், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது

    .அதன் பின் மூலவர் ஆடல்வல்லான் நடராஜருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து மாணிக்கவாசகருக்கு அங்கி மற்றும் மாலைகள் அணிவிக்கப்பட்டு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது. அப்போது மாணிக்கவாசகர் 108 திருவாசகம் ஓதுவரால் பாடப்பட்டது. உற்சவர் நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு அலங்காரம் நடைபெற்று பன்முக தீபாராதனை, சோடஷ தீபாராதனை, பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாணிக்க வாசகருக்கும் தீபாராதனை நடைபெற்றது

    .சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் உடனாய சிவகாமி அம்பாள் மற்றும் மாணிக்க வாசகர் புறப்பாடு திருவீதி உலா நடைபெற்றது. கீழ ராஜ வீதி தெற்குராஜவீதி மேலராஜவீதி வடக்குராஜவீதி பிருந்தாவனம் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.இவ்விழாவில் உபயதாரர் குடும்பத்தார்கள், பல்வேறு பிரமுகர்கள், சிவபக்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் குருக்கள் சிறப்புடன் செய்தனர் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது ஆலயத்தில் வேதநாயகி அம்பிகை சாந்தநாதசுவாமி சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர் ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


    Next Story
    ×