என் மலர்
புதுக்கோட்டை
- புதுக்கோட்டையில் சதுர்த்தி விழா நடைபெற்றது
- விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டுச் சென்றனர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பெரிய கடை வீதியில் உள்ள ராஜ விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து நெய் தீபம் ஏற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டுச் சென்றனர். விழாகுழு சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- ஆலங்குடி புதுக்கோட்டை விடுதியில் பொங்கல் தொகுப்பு வினியோகிக்கபட்டது
- பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்குவதற்கு முன்னதாக ரேஷன் கடைகளில் பொதுமக்கள் ஏராளமானோர் வரிசையில் அமர்ந்திருந்தனர்
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதி ஊராட்சியில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கரும்பு, பச்சரிசி, சர்க்கரை கொண்ட பொங்கல் தொகுப்பு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது. மாவட்ட கவுன்சிலர் உஷா செல்வம் தலைமையில் பொங்க தொகுப்பு வழங்கப்பட்ட நிகழ்வில் கிளைச் செயலாளர் முத்துவீர் பாலாஜி, வடிவேல், வீரமணி, தர்மராஜ், மதி, முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு பொங்கல் தொகுப்புகளை வழங்கினார்கள்.
பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்குவதற்கு முன்னதாக ரேஷன் கடைகளில் பொதுமக்கள் ஏராளமானோர் வரிசையில் அமர்ந்திருந்தனர். பின்னர் அமைதியாக பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக் கள் வாங்கிச்சென்றனர். விழாவில் ஒன்றிய நகர பேரூர் கழக திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
- புதுக்கோட்டையில் குறைதீர்ப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் குறைதீர்ப்பாளரின் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளிக்கலாம்
புதுக்கோட்டை:
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் 27-வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்ட சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் உருவாக்கப்பட்டுள்ளது.அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் குறைகளைத் தீர்ப்பதற்காக ரகோத்தமன் என்பவர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கான குறைதீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் மேற்கண்ட குறைதீர்ப்பாளரின் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
- மாணவர்களின் நலன் கருதி நெம்மேலிவயல் பகுதியில் தரைப்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்
- மழைக்காலங்களில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்தால் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து விடுகின்றனர் என பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா நெம்மேலிவயல் பகுதியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு அதே பகுதியின் அருகே உள்ள கொள்ளுத்திடல் கிராமத்திலிருந்து 15 ற்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கொள்ளுத்திடலிலிருந்து கிருஷ்ணாஜிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக நெம்மேலிவயல் பள்ளியை அடைவதற்கு 4 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க வேண்டியதாலும், கிழக்கு கடற்கரை சாலை வழியாக பிள்ளைகளை அனுப்ப அச்சம் உள்ளதாலும், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை 1 கிலோ மீட்டர் தூரம் உள்ள கண்மாய்கரை மற்றும் வயல்காடு வழியாக பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர்.
அவ்வாறு செல்லுகின்ற பாதையின் குறுக்கே ஆறு செல்லுவதால், அந்த ஆற்றின் குறுக்கே தற்காலிகமாக பலகையின் மூலம் பாதை அமைக்கப்பட்டு போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் மழைக்காலங்களில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்தால் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து விடுகின்றனர் என பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே தமிழக அரசு பள்ளிச் சிறுவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் அடுத்த மழைக்காலம் வருவதற்குள் குறுக்கு பாலம் மற்றும் கண்மாய்கரை வழியாக தார்ச்சாலை அமைத்து தர அப்பகுதி பெற்றோர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வழி பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை விடுதி யைச் சேர்ந்த முத்துவீர் மகன் ரமேஷ் (வயது 42). இவர் அம்புலி ஆற்று பாலத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது இவரிடம் ஆலங்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர்கள் வெள்ளைச்சாமி (வயது 22), கௌதம் (19 ), மற்றும் பாரதிதாசன் சாலையை சேர்ந்த நடராஜன் மகன் கண்ணன் (30) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்தனர். இவர்களிடமிருந்து தப்பி ரமேஷ் ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அழகம்மை மற்றும் சப் -இன்ஸ்பெக்டர் நதியா ஆகியோர் வழக்கு பதிவு ெ சய்து அந்த 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கறம்பக்குடியில் பொங்கல் கலைத்திருவிழா நடைபெற்றது
- விழாவில் மாணவ, மாணவியர்கள் பொங்கலிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
கறம்பக்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கறம்பக்குடி அனுமார் கோவில் பள்ளி மற்றும் இல்லம் தேடி கல்வி மையங்கள் சார்பில் மருத்துவ தெருவில் பொங்கல் கலைத்திருவிழா நடைபெற்றது. விழாவில் மாணவ, மாணவியர்கள் பொங்கலிட்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பேரூராட்சி தலைவர் முருகேசன் சார்பில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முதுகலை வருவாய் ஆய்வாளர் ஸ்டெல்லா முத்து, செல்வராஜ் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் அனுசுயா மற்றும் ஷாலினி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
- பழைய பொருட்களை எரிக்க ேவண்டாம்
- புகையில்லா போகி கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரூர்
தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் ஒரு பகுதியாக, புகையில்லா போகி பண்டிகை கொண்டாட மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. எனவே குளித்தலை நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து குடியிருப்பு தாரர்கள், வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோர்கள் தங்களிடம் உள்ள அனைத்து விதமான வீணான தேவையில்லாத பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தாமலும், வீதிகளிலும், கழிவுநீர் கால்வாய்களில் போடாமலும், தினசரி குப்பைகள் சேகரம் செய்ய வரும் தூய்மை பணியாளர்கள் மற்றும் வீடு தேடி வரும் தூய்மை பணியாளர்களிடம் வழங்கிடவும், இந்நகராட்சி பகுதியினை சுகாதாரமாக பாதுகாத்திட ஒத்துழைப்பு வழங்குமாறு நகராட்சி ஆணையர் பொறுப்பு மனோகர் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்..
- ரோந்து சென்ற போது சம்பவம்
- போலீசாரிடம் ஆபாசமாக பேசிய வாலிபர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை
வடகாடு போலீசார் நேற்று பிலாபுஞ்சை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பாலன் (வயது 35) என்பவர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரை பார்த்து ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பொது இடத்தில் ஆபாசமாக பேசியதாக, பாலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தேர்வில் மதிப்பெண்கள் குறைந்ததால் மனவேதனை
- விஷம் தின்ற பிளஸ்-2 மாணவர் உயிரிழந்தார்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த முகமது அப்பாசின் மகன் முகமது ஹனிப் (வயது 17). இவர் புதுக்கோட்டையில் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று எலி மருந்தை தின்றார். அவர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பப்பட்டார். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் முகமது ஹனிப் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து புதுக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அரையாண்டு தேர்வில் மதிப்பெண்கள் குறைந்ததால் மனவேதனையில் இருந்த முகமது ஹனிப் விஷத்தை தின்றதாக கூறப்படுகிறது."
- குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்த சம்பவம்
- பொதுமக்கள் 70 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தி உள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் கிராமத்தில் வேங்கைவயல் பகுதியில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியில் அசுத்தம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் விசாரணை தொடர்பாக நேற்று புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-இறையூர் வேங்கைவயல் காலனியில் கடந்த டிசம்பர் மாதம் 26-ந் தேதி ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மர்மநபர்கள் அசுத்தம் செய்திருந்தது தொடர்பாக வெள்ளனூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளியை விரைந்து கண்டுபிடிக்க திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் உத்தரவின்பேரில் புதுக்கோட்டை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்கிருஷ்ணன் தலைமையில் 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 4 இன்ஸ்பெக்டர்கள், 4 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பாக இதுவரை பொதுமக்களில் 70 சாட்சிகளை விசாரித்து அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரியை ஆய்விற்காக சென்னை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளியை அடையாளம் கண்டு கைது செய்வது தொடர்பாக உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வருகின்ற 13-ந் தேதி வரை வழங்கப்படும்
- 1040 அங்காடிகளில் 4,90,188 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் அர்பன் கடை எண் 17-ல், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, வேட்டி - சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கத்தினை வழங்கி பேசினார்.அப்போது அவர் தெரிவித்ததாவது:புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1037 பொதுவிநியோக திட்ட அங்காடிகள் மற்றும் இலங்கை தமிழர்மறுவாழ்வு முகாம்களில் உள்ள 3 அங்காடிகள் என மொத்தம் 1040 அங்காடிகளில் உள்ள 4,90,188 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு 13-ந் தேதி வரை வழங்கப்படுகிறது.குடும்ப அட்டைதாரர்கள் சிரமமின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொள்ள ஏதுவாக சுழற்சி முறையில் தினசரி 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.இதனால் சிரமமின்றி கூட்ட நெரிசலின்றி பரிசு தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம். குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பில் குறைகள் ஏதேனும் இருப்பின் இலவச தொலைப்பேசி எண் மூலமாக புகார்தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், நகர்மன்ற தலைவர்திலகவதி செந்தில், வருவாய் கோட்டாட்சியர்முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன், மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் தனலெட்சுமி, வேளாண் இணை இயக்குநர் பெரியசாமி, துணைப் பதிவாளர்கள் சதீஸ்குமார், கோபால், அப்துல்சலீம், கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர்குமார், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- கண்மாயில் அழுகிய நிலையில் உடல்...
- காரையூர் போலீசார் விசாரணை
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் பெரிய கண்மாயில் முதியவர் ஒருவர் உடல் அழுகிய நிலையில் எழும்புக்கூடாக கிடந்துள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அங்குள்ள காரையூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காரையூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தபோது, உயிரிழந்தவர் காயாம்பட்டியை சேர்ந்த ராமையா (வயது 70) என்பது தெரியவந்தது .இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி சடையம்பட்டிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து காரையூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில் நேற்று ராமையா உடல் அழுகிய நிலையில் எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளது.இது குறித்து காரையூர் காவல்துறையினர் உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.






