ஆலங்குடி புதுக்கோட்டை விடுதியில் பொங்கல் தொகுப்பு வினியோகம்

ஆலங்குடி புதுக்கோட்டை விடுதியில் பொங்கல் தொகுப்பு வினியோகிக்கபட்டது பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்குவதற்கு முன்னதாக ரேஷன் கடைகளில் பொதுமக்கள் ஏராளமானோர் வரிசையில் அமர்ந்திருந்தனர்
ஆலங்குடி புதுக்கோட்டை விடுதியில் பொங்கல் தொகுப்பு வினியோகம்
Published on

ஆலங்குடி:

ஆலங்குடி அருகே உள்ள புதுக்கோட்டை விடுதி ஊராட்சியில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கரும்பு, பச்சரிசி, சர்க்கரை கொண்ட பொங்கல் தொகுப்பு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது. மாவட்ட கவுன்சிலர் உஷா செல்வம் தலைமையில் பொங்க தொகுப்பு வழங்கப்பட்ட நிகழ்வில் கிளைச் செயலாளர் முத்துவீர் பாலாஜி, வடிவேல், வீரமணி, தர்மராஜ், மதி, முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு பொங்கல் தொகுப்புகளை வழங்கினார்கள்.

பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்குவதற்கு முன்னதாக ரேஷன் கடைகளில் பொதுமக்கள் ஏராளமானோர் வரிசையில் அமர்ந்திருந்தனர். பின்னர் அமைதியாக பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக் கள் வாங்கிச்சென்றனர். விழாவில் ஒன்றிய நகர பேரூர் கழக திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com