என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • ரூ.21.5 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்டு
    • மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே உரியவர்களிடம் ஒப்படைத்தார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் திருட்டு மற்றும் தொலைந்து போன செல்போன்கள் தொடா்பாக போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த செல்போன்களை மீட்க புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்கிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, சைபர் கிரைம் போலீசார் மூலம் 105 செல்போன்களை மீட்டனர். இதன் மதிப்பு ரூ.21½ லட்சம் ஆகும். மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே நேற்று ஒப்படைத்தார். மேலும் செல்போன்களை மீட்ட போலீசாரை பாராட்டி, வெகுமதியும் வழங்கினார்.

    • உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயணா தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது.
    • அரசு பள்ளியில் பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணையை மேற்கொள்ள உள்ளார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து கடந்த 5 மாத காலமாக சி.பி.சி.ஐ.டி விசாரணை செய்து வருகின்றனர்.

    இதுவரை 147 நபர்களிடம் விசாரணை செய்து அவர்களின் வாக்குமூலங்களை பெற்றுள்ளனர். இதில் 139 நபர்களின் டிஎன்ஏ இரத்த மாதிரி பரிசோதனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் 10 நபருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. 10 நபர்களில் 3 பேர் மட்டுமே பரிசோதனைக்கு ஒப்பு கொண்டனர். மீண்டும் புதிதாக 10 நபருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்ற நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்ததில் வரும் திங்கட்கிழமை அவர்களுக்கு பரிசோதனை செய்யப்படவுள்ளது.

    இந்நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி முறையாக கையாளவில்லை என்று வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நலவழக்கு தொடரப்பட்டது.

    அந்த பொது நலவழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயணா தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்தது. சத்திய நாராயணா தலைமையிலான ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்து 2 மாத காலத்திற்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது.

    உயர்நீதிமன்ற உத்தரவுபடி தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி சத்திய நாராயணா ஆய்வு செய்து வருகிறார். அவர் வேங்கைவயல் கிராமத்தில் மலம் கழித்த பழைய நீர் தொக்க தொட்டியை ஆய்வு செய்தார். தமிழக அரசு சார்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் நீர் தேக்க தொட்டியையும் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து அங்கு உள்ள அரசு பள்ளியில் பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணையை மேற்கொள்ள உள்ளார். இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்திலும் கலந்து கொள்கிறார்.

    • முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி யாக சாலையில் கலசங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் முத்துமாரியம்மன் கோவில் மூலஸ்தான விமான கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.15 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் அருட்பிரசாதங்கள் வழங்கப்பட்டது.பாதுகாப்பு ஏற்பாடுகளை காரையூர் காவல்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.


    • முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • வரும் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

    புதுக்கோட்டை:

    சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது.நடப்பு ஆண்டிற்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும் . விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றி இருக்க வேண்டும்.

    மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.இணையதளம் மூலம் வரும் 31-ந் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களுடைய சான்றிதழ்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலரிடம் சான்றிதழ் சரிபார்ப்பதற்காக ஒப்படைக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலைபேசி எண் 7401703498 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.


    • தூர்வாரும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது
    • கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் எஸ்.கணேஷ், கலெக்டருடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சிறப்பு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை, கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் எஸ்.கணேஷ், மாவட்ட கலெக்டர் கவிதா ராமுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்த சிறப்பு தூர்வாரும் பணிகளை தொடர்புடைய அலுவலர்கள் விரைவாகவும், நல்ல முறையிலும் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் எஸ்.கணேஷ் தெரிவித்தார்.

    • போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது
    • மவுண்ட் சீயோன் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மவுண்ட சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 22வது ஆண்டு விழா போட்டியின் தொடக்கவிழா கல்லூரி வளாகத்தில் வெகு விமரிசையாக நடைப்பெ ற்றது.டீன் முனைவர் எஸ்.ராபின்சன் வரவேற்பு ரையாற்றினார். கல்வி நிறுவனத்தின் தலைவர் பிளாரன்ஸ் ஜெயபரதன் ஒலிம்பிக் கொடியையும், இயக்குநர் முனைவர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன் தேசிய கொடியையும் ஏற்றினர். இறுதியாக கல்லூரி முதல்வர் முனைவர் பாலமுருகன் கல்லூரி கொடியை ஏற்றி வைத்தார்.

    தலைவர் பிளாரன்ஸ் ஜெயபரதன் ஆண்டுவிழா போட்டியை தொடங்கி வைத்தார். ஒலிம்பிக் ஜோதியை நான்கு ஹவுஸ் கேப்டன்கள் மற்றும் எமரால்டு குழுவினர் ஏந்திச் சென்று, ஒலிம்பிக் ஜோதி பீடத்தில் வைத்தனர்.மின்னியில் மற்றும் மின்னணு பொறியியல் துறைத் தலைவர் டி.திவ்ய பிரசாத் வரவேற்புரையாற்றினார். மவுண்ட் சீயோன் கல்வி நிறுவனத்தின் தலைவர் பிளாரன்ஸ் ஜெயபரதன் தலைமையுரையாற்றினார்.

    இயக்குநர் டாக்டர். ஜெய்சன் கீர்த்தி ஜெயபரதன், கல்வி ஒருங்கிணைப்பாளர் விவியன் ரேச்சல் ஜெய்சன், முதல்வர் முனைவர் பி.பாலமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.விழாவில் சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் மாமன்னன் ராஜராஜ சோழன் அறக்கட்டளை நிறுவனரும், முன்னாள் சர்வதேச கூடைப்பந்து நடுவர் முனைவர் ரமேஷ்குமார் துரைராஜு கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.மாணவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். பல கட்டங்களாக நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. கட்டமைப்பு பொறியியல் துறை தலைவர் ராதா நன்றியுரை ஆற்றினார்.

    • கடந்த 2-ந் தேதி முதல் விழா தொடங்கியது.
    • நாட்டாணி கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    மணமேல்குடி தாலுகா நாட்டாணி கிராமத்தில் அமைந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ நந்தனவிநாயகர், ஸ்ரீ பூரணபுஷ் அம்பிகை சமேத ஸ்ரீ சதுரமுடைய அய்யனார் கோவிலில் திருப்பணிகள் முடிவுற்று கும்பாபிஷேகம் நடத்துவதென அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர்.அதன்படி யாகசாலை அமைத்து கணபதி ஹோமத்துடன் கடந்த 2-ந் தேதி முதல் விழா தொடங்கியது. அதனை தொடர்ந்து 4கால யாக பூஜை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பெற்று பூஜிக்கப்பட்ட புனித நீரோடு கடம்புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து கண்ணன் சாஸ்திரிகள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைக் காண திரண்டிருந்த அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள், ஆன்மீக மெய்யன்பர்கள் சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • கருப்பர் கோவிலில் மது எடுப்பு திருவிழா நடைபெற்றது.
    • பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும் வழிபட்டனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ காசாம்பு நீலமேனி கருப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 8 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதளுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து எட்டு நாட்களும் மண்டகப் படிதாரர்களால் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவிழாவின் கடைசி நாளான நேற்று முக்கிய நிகழ்வான மது எடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கறம்பக்குடி தட்டாவூரணி தென்நகர் அக்ரஹாரம் குலகாரன் தெரு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது இல்லங்களில் குடங்களை வைத்து அதில் தென்னம்பாளைகளை வைத்து அலங்கரித்து தலையில் சுமந்தபடி கறம்பக்குடி சீனி கடை மூக்கில் உள்ள முருகன் கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்றும், பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும் அருள்மிகு காசாம்பு நீலமேனி கருப்பர் கோவிலில் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கறம்பக்குடி காவல் நிலைய ஆய்வாளர் செந்தூர் பாண்டியன் தலைமையில் செய்திருந்தனர்.

    • சாந்தநாத சாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது
    • சித்திரை மாத பிரதோஷததையொட்டி

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல்வேறு சிவாலயங்களில் நடைபெற்ற சித்திரை மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    அதன்படி சாந்தநாதசுவாமி கோவிலில்  பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. வேதநாயகி உடனுறை  சாந்தநாத சுவாமிக்கு  பால், தயிர், இளநீர், தேன்,   சந்தனம், மஞ்சள் நீர் திருநீர் உள்ளிட்ட போன்ற 18 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. நந்திகேஸ்வரர் வெள்ளிக் கவசமலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு  அருள் பாலித்தார்.

    இதைப் போல, திருக்கோ கர்ணம் கோகர்ணேஸ்வரர், நெடுங்குடி கைலாசநாதர் ஆலயம், திருவேங்கைவாசல், நற்சாந்துபட்டி, பனையபட்டி, வலையபட்டி ஆகிய சிவன் ஆலயங்க ளிலும், பொன்னமராவதி சோழீஸ்வரர் ஆலயம், வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர்,   இலுப்பூர் பகுதியில் உள்ள சொர்ணாம்பிகை சமதே பொன்வாசி நாதர் வௌ்ளாஞ்சார் மீனாட்சிசுந்தேரஸ்வரர், ராப்பூசல் தாயுமானவர், தாண்டீஸ்வரம் சத்குரு சம்ஹாரமூர்த்தி, இலுப்பூர் சொர்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர் ஆலத்தூர் தர்மாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் மற்றும் இலுப்பூரை சுற்றியுள்ள பல்வேறு சிவன் கோயில்களில் உள்ள நந்தி பகவானுக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.

    இதில் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

    • இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்
    • முதல்வர் இறந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், புதுப்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லூரில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இங்கு மீமிசல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீ்ஸ்காரர் நவநீதகிருஷ்ணன் என்பவர் அங்கு பாதுகாப்பு பணிக்காக சென்றார். பாதுகாப்பு பணியின் போது காளை முட்டியதில் படுகாயமடைந்து பரிதாபமாக அவர் இறந்தார்.

    இதையடுத்து உரிய பாதுகாப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தாமல் மஞ்சுவிரட்டு போட்டியை நடத்திய நிர்வாகத்தை கண்டித்தும், இறந்தவர் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், இறந்த போலீஸ்காரரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனை அறிந்து விரைந்து வந்த வந்த கோட்டாட்சியர் சொர்ணராஜ், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் பெற்றுத்தர ஆவணம் செய்யப்படும் என உறுதியளித்தார். இதனை தொடர்ந்து உறவினர்கள் உடலை பெற்றுக் கொண்டு கலைந்து சென்றனர்.

    இதற்கிடையில் தமிழக முதல்வர் இறந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பொதுமக்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது
    • கந்தர்வகோட்டையில் கிராம சபை கூட்டம்

    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை ஒன்றியம், பழைய கந்தர்வகோட்டை ஊராட்சி, மெய்குடி பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் ராணி முருகேசன் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் கவிதா ராமு கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது,

    ஆண்டிற்கு ஆறு முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அதன் படி இன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. இது போன்ற கூட்டங்கள் வாயிலாக அரசு அலுவலர்கள் தெரிவிக்கும் திட்டங்கள் குறித்து முழுமையாக தெரிந்து கொள்வதுடன் இதன் மூலம் பயன் பெற்று தங்கள் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

    கூட்டத்தில் குடிநீர், சாலை வசதி, |பேருந்து, கழிப்பறை வசதிகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் கோரி பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ. சின்னத்துரை, வருவாய் அலுவலர் செல்வி, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நளினி, திலகவதி, வட்டாட்சியர் காமராஜ் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் |பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தீக்காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தார்
    • அடுப்பில் இருந்து தீ அவர் மீது பரவியது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே வம்பன் காலனியை சேர்ந்தவர் ரெத்தினம் (வயது 65). சம்பவத்தன்று இவர், வீட்டில் வெந்நீர் போட்ட போது ஸ்டவ் அடுப்பில் இருந்து தீ அவர் மீது பரவியது. இதில் உடலில் தீப்பிடித்து பலத்த காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் ரெத்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×