என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை
    X

    பொதுமக்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை

    • பொதுமக்கள் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது
    • கந்தர்வகோட்டையில் கிராம சபை கூட்டம்

    புதுக்கோட்டை:

    கந்தர்வகோட்டை ஒன்றியம், பழைய கந்தர்வகோட்டை ஊராட்சி, மெய்குடி பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் ராணி முருகேசன் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் கவிதா ராமு கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது,

    ஆண்டிற்கு ஆறு முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அதன் படி இன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. இது போன்ற கூட்டங்கள் வாயிலாக அரசு அலுவலர்கள் தெரிவிக்கும் திட்டங்கள் குறித்து முழுமையாக தெரிந்து கொள்வதுடன் இதன் மூலம் பயன் பெற்று தங்கள் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

    கூட்டத்தில் குடிநீர், சாலை வசதி, |பேருந்து, கழிப்பறை வசதிகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் கோரி பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ. சின்னத்துரை, வருவாய் அலுவலர் செல்வி, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நளினி, திலகவதி, வட்டாட்சியர் காமராஜ் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் |பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×