என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாந்தநாத சாமி  கோவிலில் சிறப்பு வழிபாடு
    X

    சாந்தநாத சாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

    • சாந்தநாத சாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது
    • சித்திரை மாத பிரதோஷததையொட்டி

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல்வேறு சிவாலயங்களில் நடைபெற்ற சித்திரை மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    அதன்படி சாந்தநாதசுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. வேதநாயகி உடனுறை சாந்தநாத சுவாமிக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம், மஞ்சள் நீர் திருநீர் உள்ளிட்ட போன்ற 18 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. நந்திகேஸ்வரர் வெள்ளிக் கவசமலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதைப் போல, திருக்கோ கர்ணம் கோகர்ணேஸ்வரர், நெடுங்குடி கைலாசநாதர் ஆலயம், திருவேங்கைவாசல், நற்சாந்துபட்டி, பனையபட்டி, வலையபட்டி ஆகிய சிவன் ஆலயங்க ளிலும், பொன்னமராவதி சோழீஸ்வரர் ஆலயம், வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர், இலுப்பூர் பகுதியில் உள்ள சொர்ணாம்பிகை சமதே பொன்வாசி நாதர் வௌ்ளாஞ்சார் மீனாட்சிசுந்தேரஸ்வரர், ராப்பூசல் தாயுமானவர், தாண்டீஸ்வரம் சத்குரு சம்ஹாரமூர்த்தி, இலுப்பூர் சொர்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர் ஆலத்தூர் தர்மாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் மற்றும் இலுப்பூரை சுற்றியுள்ள பல்வேறு சிவன் கோயில்களில் உள்ள நந்தி பகவானுக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.

    இதில் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

    Next Story
    ×