என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • ஊரக வேலை உறுத்தித் திட்ட பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • பட்டியலில் பெயர் சேர்க்க கோரி நடந்தது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே குளமங்கலம் வடக்கு ஊராட்சியில் ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களின் பணி அட்டை புதுப்பிக்கப்பட்டு, பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் 60 பேரின் பெயர்கள் இல்லை என கூறப்படுகிறது. இதை கண்டித்தும், விடுபட்டடோரை பட்டியலில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தியும், குளமங்கலம் வடக்கு ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ஊராக வேலை உறுதித் திட்ட பணியாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    புகார்கள் வந்ததை தொடர்ந்து நடவடிக்கை

    புதுக்கோட்டை ,

    புதுக்கோட்டை தஞ்சை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சரஸ்வதி புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் சமீபத்தில் புதிய பஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது சுகாதார பணிகள் சரியாக செய்யாமல் இருப்பதை கண்டறிந்தார். இதுகுறித்து விசாரித்ததில் பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் வந்ததை தொடர்ந்து சுகாதார ஆய்வாளர்கள் மணிவண்ணன் மற்றும் கணேசன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    • புதுக்கோட்டையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • நில ஒருங்கிணைப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை திலகர் திடலில், விவசாயிகள் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் புதிய நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதை கைவிட வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் மாவட்ட செயலாளர்கள் ராமையன், சோமையா ஆகியோர் தலைமை தாங்கினர். விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் இந்திரஜித், விவசாயத் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் சங்கர், மாவட்டத் தலைவர் பொன்னுச்சாமி, நிர்வாகிகள் செல்வராஜ், பாலசுந்தரமூர்த்தி, ராசு, அன்பழகன், நாராயணசாமி, சுந்தர்ராஜன், அம்பலராஜ், மாரக்கண்டேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டை சிவாலயங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது
    • நந்திகேஸ்வரர் பகவானுக்கு அக்கினியில் நல்ல மழை வேண்டி தண்ணீர் அபிஷேகம் மகாதீபா ஆராதனை நடைபெற்றது.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை வேதநாயகி உடனுறை சாந்தநாத சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு சாமிக்கு பால், தயிர், இளநீர், தேன், சந்தனம், மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட போன்ற 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. மாலையில், நந்திகேஸ்வரருக்கு பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர், திருநீறு உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம் கலசாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் நந்திகேஸ்வரர் பகவானுக்கு அக்கினியில் நல்ல மழை வேண்டி தண்ணீர் அபிஷேகம் மகாதீபா ஆராதனை நடைபெற்றது. நந்திகேஸ்வரருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள் வருகைதந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

    விழா ஏற்பாடுகளை பிரதோஷ வழிபாட்டு மன்ற, திருக்கோவில் நிர்வாகிகள், கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.இதேபோல், புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கோகர்ணேஸ்வரர், நெடுங்குடி கைலாசநாதர் கோவில், திருவேங்கைவாசல், நற்சாந்துபட்டி, பனையபட்டி, வலையபட்டி ஆகிய சிவன் கோவில்களிலும், பொன்னமராவதி சோழீஸ்வரர் கோவில், வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர், இலுப்பூர் பகுதியில் உள்ள சொர்ணாம்பிகை சமதே பொன்வாசி நாதர் வௌ்ளாஞ்சார் மீனாட்சிசுந்தேரஸ்வரர், ராப்பூசல் தாயுமானவர், தாண்டீஸ்வரம் சத்குரு சம்ஹாரமூர்த்தி, இலுப்பூர் சொர்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர் ஆலத்தூர் தர்மாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் மற்றும் இலுப்பூரை சுற்றியுள்ள பல்வேறு சிவன் கோவில்களில் உள்ள நந்தியம் பகவானுக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.

    • புதுக்கோட்டைக்கு வருகிற 25-ந்தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகையால் கலெக்டர் தலைமையில் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது
    • வளர்ச்சிப் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் கலந்தாய்வு மேற்கொண்டார்கள்.

    புதுக்கோட்டை,

    தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 25-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை தருகிறார். அன்றைய தினம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து துறை திட்டப்பணிகள் குறித்து ஆய்வு நடத்த உள்ளார்.இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம் புதுக்கோட்டை கலெக்டர் கவிதாராமு தலைமையில் நடைபெற்றது.

    அனைத்து த்துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் கலந்தாய்வு மேற்கொண்டார்கள்.இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தங்கவேல், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன், செய்தி மக்கள் தொடர் பு அலுவலர் மதியழகன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • அடிப்படை வசதிக்கோரி கறம்பக்குடி பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்
    • இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தை சேர்ந்த கரு கீழத்தெரு ஊராட்சியில் குரும்பி வயல், கருக்காக்குறிச்சி ஆதி திராவிடர் காலனி, மஞ்சு காடு, அருங்குளம் மஞ்சள் வயல், திருமுருகப்பட்டினம், நல்லாண்டார் கொள்ளை உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த கிராமங்களுக்கு குடிநீர், சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லை என ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பலமுறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.

    மேலும் பழுதான நிலையில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிடத்தை இடித்து விட்டு அதே இடத்தில் கட்டாமல் வேறொரு இடத்தில் கட்டுவதற்கு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அனுமதி வழங்கியதை கண்டித்தும், கிராம பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன்பு கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த கறம்பக்குடி தாசில்தார் ராமசாமி, ஆணையர் கருணாகரன், சப் இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அறந்தாங்கியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்பாட்டம் நடத்தினர்
    • நியாய விலை கடைகளில் தற்போது புதிதாக செரிவூட்டப்பட்ட அரிசி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அம்மா உணவகம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. நியாய விலை கடைகளில் தற்போது புதிதாக செரிவூட்டப்பட்ட அரிசி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் இந்த அரிசியால் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் அறந்தாங்கியில் கண்டன ஆர்பாட்டம் ஒன்றியச் செயலாளர் தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்றது.

    ஆர்பாட்டத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் தமிழக அரசின் நில ஒருங்கிணைப்பு மசோதாவை திரும்ப பெற்றிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதில் சி.பி.ஐ. மாவட்டத் துணைச் செயலாளர் ராஜேந்திரன், தேசியக்குழு உறுப்பினர் மாதவன், ஒன்றியத் தலைவர் குமார், இராதாகிருஷ்ணன், பெரியசாமி, அஜய்குமார்கோஷ், காமாட்சி, கணேசன், அழகுமன்னன், சுப்பிரமணியன், செல்வராஜ், முருகன், கருப்பையா, ராஜேந்திரன், பழனிவேலு, சேவுக பெருமாள், காளிதாஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்டு குப்பை கொட்டும் போராட்டம் நடந்தது
    • கழிவு நீர் வாய்க்கால் முறையாக பராமரிக்கப்படாததாலும் கழிவு நீர் மற்றும் குப்பைகள் ஆங்காங்கே தேங்கிக்கிடக்கிறது

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலபட்டிணம் அவுலியா நகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் முறையான சாலை வசதிகள் இல்லாததாலும், கழிவு நீர் வாய்க்கால் முறையாக பராமரிக்கப்படாததாலும் கழிவு நீர் மற்றும் குப்பைகள் ஆங்காங்கே தேங்கிக்கிடக்கிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாக, அப்பகுதி பொதுமக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இது நாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததையடுத்து, ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள் ஊராட்சிமன்ற அலுவலகத்திற்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நீண்ட நாட்களாக தேங்கிக் கிடந்த குப்பைகள் மற்றும் கழிவுநீரை அலுவலக வளாகத்திற்குள் கொட்டி விநோத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • புதுக்கோட்டையில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட ஏஐடியூசி குழு கூட்டம் மாவட்ட தலைவர் அரசப்பன் தலைமையில் நடைபெற்றது. ஏஐடியூசி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அரசு போக்குவரத்து கழகத்தில் போதிய அளவில் பணி நியமனம் செய்திட வேண்டும், ஓட்டுநர் நடத்துனர்களுக்கு அத்த கூலி வழங்கும் முறையை கைவிடவேண்டும், பண்ணை தினகூலி தொழிலாளர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வை அறிவிக்க வேண்டும், போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படை உயர்த்தி வழங்கிட வேண்டும், ஓய்வுபெறும்போது வழங்க வேண்டிய பணபலன்களை பணி நிறைவு நாள் அன்றே உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில், பொதுசெயலாளர் ப.ஜீவானந்தம், மாவட்ட பொருளாளர் டி.எம்.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் கே.ஆர்.தர்மராஜன், கெளரவ தலைவர்கள் வீ.சிங்கமுத்து, ஏனாதி ஏ எல் இராசு, எஸ்.நாராயணன், பா.பாண்டியராஜன், ஆர்.மணிவண்ணன், பா.செளந்தரராஜ், கே.மணி, டி.ராஜா, டி.ஆர்.ரெங்கையா, ஏ.மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெ உள்ளது
    • வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.30 மணி முதல் நடைபெற உள்ள இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில், பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இத்தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைநாடுவோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளலாம். தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார்அட்டை மற்றும் கல்வி ச்சான்று நகல்களுடன் வந்து கலந்து கொள்ள வேண்டும். மேலும், வேலைநாடும் இளைஞர்கள் "தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம்" என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • கறம்பக்குடி அருகே 200 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர்
    • தமிழகம் முழுவதும் போலீசார் ஆங்காங்கே அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

    கறம்பக்குடி,

    தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்தவர்களில் 22 பேர் வரை பலியான சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் ஆங்காங்கே அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள சாத்தான் தெரு ராஜா என்பவரது தோட்டத்தில் உள்ள கொட்டகையில் எரி சாராய ஊரல் இருப்பதாக கறம்பக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் படி விரைந்து சென்ற போலீசார் அந்த ஊறல் பேரல்களை கைப்படுத்தி அதில் உள்ள சுமார் 200 லிட்டர் எரி சாராய ஊறலை அழித்தனர். விசாரணையில் இந்த எரி சாராய ஊரலை போட்டிருந்த கறம்பக்குடி மேற்கு தெருவை சேர்ந்த தனபால் என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    • கந்தர்வகோட்டை அரசு பள்ளியில் அறிவியல் திருவிழா நடைபெற்றது
    • விழாவை ஊராட்சி மன்ற தலைவர் ஆரஞ்சுபாப்பா குணசேகரன் தொடங்கி வைத்தார்

    கந்தர்வகோட்டை,

    கந்தர்வகோட்டை ஒன்றியம் காட்டுநாவல் ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் அறிவியல் திருவிழா நடைபெற்றது. விழாவை ஊராட்சி மன்ற தலைவர் ஆரஞ்சுபாப்பா குணசேகரன் தொடங்கி வைத்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவி லட்சுமி, வார்டு உறுப்பினர் பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிரகாஷ் அனைவரையும் வரவேற்றார். விழாவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீரப்பன் பார்வையிட்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவை இல்லம் தேடி கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் ரகமத்துல்லா ஒருங்கிணைத்தார். வானவில் மன்ற கருத்தாளர்கள் வசந்தி, தெய்வீக செல்வி ஆகியோர் மாணவர்களுக்கு எளிய அறிவியல் சோதனை, கணித புதிர்கள், படம் வரைந்து விளக்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளை செய்து காண்பித்தனர்.

    ×