என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • புதுக்கோட்டையில் 9 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது
    • மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், 9 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு பயனாளிகளுக்கு வழங்கினார்.விராலிமலை வட்டம், அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த 9 நபர்களுக்கு தலா 50 சதுர மீட்டர் பரப்பளவுடைய இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. மேலும் பயனாளிகளுக்கு வீடுகட்டும் திட்டத்தின்கீழ், முன்னுரிமை அடி ப்படையில் அவர்களுக்கு வீடுகள் கட்டி க்கொடுக்கவும், பெட்டிக்கடை அமைத்திடவும், மகளிர் சுயஉதவிக்குழு கடனுதவி வழங்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் கவிதா ராமு அறிவுறுத்தினார்.இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி, விராலிமலை ஒன்றியக்குழுத் தலைவர் காமு.மு.பி.மணி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, ஒன்றிய குழு உறுப்பினர் மு.பி.ம.சத்தியசீலன், வட்டாட்சி யர் சதீஸ்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • தமிழ்நாடு தொல்லியல்துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற உள்ளது
    • அகழ்வாராய்ச்சி பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

    புதுக்கோட்டை,

    தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டம் தொன்மை சின்னங்கள் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பொற்பனைக்கோட்டை சங்ககால தொன்மை மிக்க இடமாக கருதப்படுகிறது. இங்கு கோட்டை கொத்தளங்கள், அகழிகள் உள்ளன. கோட்டை சுவரில் 4 இடங்களில் வாசல்கள், கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், பல்வேறு இரும்பு உருக்கு ஆலைகள் செயல்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.இவ்விடத்தை அரசு அகழாய்வு செய்ய வேண்டும் என தொல்லியல் ஆய்வுக் கழகத்தினர் தொடர்ந்த வழக்கில், ஆய்வு செய்ய அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த 2021 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்நிலையில், இவ்விடத்தை அகழாய்வு செய்வதற்கு அனுமதி கோரி அரசுக்கு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகம் கோரிக்கை விடுத்திருந்தது. அதனடிப்படையில் இப்பல்கலைக்கழகத்துககு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் பொற்பனைக்கோட்டை பகுதியில் அகழ்வாராய்ச்சி பணி தொடங்கியது. இந்தப் பணியை தமிழ்நாடு நிதித்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா முத்துராஜா எம்.எல்.ஏ., கலெக்டர் கவிதா ராமு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    • பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தபோது இந்திய பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தது.
    • புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த போது அமைச்சர் வேதனை

    புதுக்கோட்டை,

    தமிழ்நாடு நிதித்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புதுக்கோட்டை அரசு விருந்தினர் மாளிகையான ரோஜா இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:- பணமதிப்பிழப்பு நடவடிக்கை முடிவுகளை ரிசர்வ் வங்கி எடுக்கிற போது இதில் சம்பந்தப்பட்ட கருத்துக்களை ஏற்கனவே கேட்டிருக்க வேண்டும் என்பது தமிழக அரசின் நிலைப்பாடு. மாநில அரசாக இருந்தாலும் பொதுமக்களாக இருந்தாலும் அவர்களிடத்தில் முறைப்படி இது போன்ற முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன்பு ரிசர்வ் வங்கி கலந்து ஆலோசித்து இருக்க வேண்டும்.பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கும்போது இந்திய பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தது. அப்போது தி.மு.க. எதிர்த்து உள்ளது. அதற்கு மாறுபட்ட நடவடிக்கைகளை எடுக்கும் போதும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளாக இருக்கக்கூடிய அனைத்து மாநிலத்தைச் சேர்ந்தவர்களிடமும் இது போன்ற விஷயங்களில் கொள்கை முடிவு எடுக்கும்போது கலந்து ஆலோசனை செய்திருந்தால் முறையாக இருந்திருக்கும் என்று தெரிவித்தார்.

    • அடிமர பகுதி தீயினால் சேதம்
    • தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்

    புதுக்கோட்டை,

    விராலிமலை தாலுகா காளப்பனூர் கிராமத்தில் ஆலங்குளம் ஆலடியான் கோவில் உள்ளது. கோவிலின் ஒரு பகுதியில் பழமைவாய்ந்த ஆலமரம் உள்ளது. இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவ்வழியாக சென்றபோது மரத்தின் அடிப்பகுதியில் புகையுடன் தீப்பிடித்து எரிந்ததை பார்த்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ஆலமரத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். பழமைவாய்ந்த ஆலமரத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஆய்விற்கு உட்படுத்தப்படாத விசைப்படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்கத் தடை
    • அதிகாரிகள் தரம் குறித்த ஆய்வில் திட்டவட்டம்

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் ஆகிய விசைப்படகு துறைமு கங்களில் மீன்வளத்துறை அதிகாரிகள் விசைப்படகு கள் தரம் குறித்து ஆய்வு மேற்கொ ண்டனர். கோட்டை ப்பட்டினம், ஜெகதாபட்டி னம் மீன்பிடித் துறைமுகங்களிலிருந்து சுமார் 550 க்கும் மேற்பட்ட விசைப்ப டகுகள் மீன்பிடித் தொழிலு க்காக பயன்படுத்தப்படுகின்றன. இதனை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் பெறுகின்றனர்.கடந்த ஏப்ரல் 14ம் தேதி முதல் மீனவர்கள் மீன்பிடித் தடைக்காலத்தை அனுசரித்து வருகின்றனர். இந்த தடைக்காலத்தில் விசை ப்படகுகள், மீன்பிடி உபகர ணங்கள் போன்றவற்றை பழுது நீக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் மீன் பிடித்தடைக்காலங்களில் மீன்வளத்துறை அதிகாரிகள் படகுகளின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்கின்றனர். ஆய்வில் எத்தனை படகுகள் கடலுக்கு செல்ல தகுதியாக உள்ளது,எத்தனை படகுகள் சேதமடை ந்துள்ளது,அவைகள் இயக்தில் உள்ளனவா என்று மீன்வளத்துறை அதிகாரிகள் படகுகளை ஆய்விற்கு உட்படுத்துவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு திருச்சி மண்டல துணை இயக்குநனர் சர்மிளா தலைமையில் 4 உதவி இயக்குனர்கள் உட்பட 8 குழுவாக 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.407 விசைப்படகுகள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது.ஆய்வு குறித்தான அறிக்கைகள் மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை ஆணையருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.அப்போது அதிகாரிகள் தெரிவிக்கையில், மீன்பிடித்த டைக்கா லங்களில் மீனவர்கள் தங்கள் படகை பழுது நீக்கி சரி செய்து வைத்துக்கொள்ள வேண்டும், அவ்வாறு சரி செய்யப்பட்ட படகுகள் உரிய ஆய்விற்கு பிறகு கடலுக்கு செல்ல அனுமதி சீட்டு வழங்கப்படும், ஆய்விற்கு காட்டப்படாத, உட்படுத்தப்படாத படகுகள் தடைக்கா லத்திற்கு பிறகு மீன்பிடிக்க அனுமதி க்கப்படாது என்று தெரிவித்தனர்.ஆய்வில் உதவி இயக்குநர்கள் ரம்யா லட்சுமி, ஜோதிலட்சுமணன், ஞானம், சின்னக்குப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • கறம்பக்குடி திருமணஞ்சேரி ஊராட்சியில் இலவச தையல் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது
    • ஏழை பெண்களுக்கு இலவச தையல் மிஷின் வழங்கப்பட்டது

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் திருமணஞ்சேரி ஊராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பெண்கள் மற்றும் ஏழை மாணவிகளுக்கு நடத்தப்படும் அரசு இலவச தையல் பயிற்சி மையத்தில் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. விழாவினை மாரிமுத்து மாசிலாமணி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமை வகித்தார். புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நல மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கருணாகரன் மாவட்ட தாட்கோ மேலாளர் முத்துரத்தினம் மாவட்ட சமூக நல அலுவலர் கோகுலப்பிரியா கறம்பக்குடி வட்டாட்சியர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக நீதிபதி செல்வகுமார் கலந்துகொண்டு பயிற்சி முடித்த ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் மிஷின்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட அறங்காவலர் குழு தலைவரும் கரம்பக்குடி தெற்கு ஒன்றிய திமுக செயலாளருமான தவ.பாஞ்சாலன் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆர் எம் ஓ இந்திராணி திருமணஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் பிரபு காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 98 பஞ்சாயத்துகளில் வாழ்வாதாரம் மேம்படுத்த திட்டம்
    • விண்ணப்பிக்க விவசாயிகளுக்கு அழைப்பு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மின் இணைப்புடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. முன்பதிவு செய்து பயன்பெறலாம் என வேளாண்மை இணை இயக்குநர் மா. பெரியசாமி விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:-

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 98 பஞ்சாயத்துக்களில் விவசாயிகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் அரசு மானியத்துடன் பண்ணை குட்டைகள், உழுவை எந்திரங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு மின் இணைப்புடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைத்தல் போன்ற சேவைகள் வழங்கப்பட உள்ளது. இத்திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு மற்றும் உழவன் செயலி வாயிலாக முன் பதிவு ஆகியவை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    எனவே விவசாயிகள் அனைவரும் தங்களுடைய நில உரிம விவரம் (பட்டா, சிட்டா) ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் நகல் போன்ற விவரங்களுடன் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

    • புதுக்கோட்டையில் ரூ.89 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பு
    • எம்.எம்.அப்துல்லா எம்.பி. திறந்து வைத்தார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை புதிய பேருந்துநிலையம் அருகில், டி.டி.பிளான்சாலையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரின் திட்ட நிதியிலிருந்து ரூ.65 இலட்சம் மற்றும் மாவட்ட கலெக்டரி ன் சிறப்பு நிதி ரூ.24 இலட்சம் என மொத்தம் ரூ.89 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, சாலையோர மாலைநேர பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா திறப்பு விழா மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. புதுக்கோட்டை எம்பி, எம்.எம்.அப்துல்லா பூங்காவை திறந்து வைத்தார். இவ்விழாவில் புதுக்கோ ட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், நகர் மன்றத் துணைத் தலைவர் எம்.லியாகத் அலி, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், நகராட்சி ஆணையாளர் (பொ) எஸ்.டி.பாலாஜி, வட்டாட்சியர் விஜயலெட்சுமி, நகர்மன்ற உறுப்பினர்கள் செந்தாமரை பாலு, காதர்கனி, ஜெயலட்சுமி, குமாரவேலு, க.லதா, பழனிவேல், சுகாதார ஆய்வாளர் மகாமுனி, வருவாய் ஆய்வாளர் விஜயஸ்ரீ, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களை பாராட்டி வழங்கப்பட்டது
    • புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்டத்தில் 'சிறப்பாக பணியாற்றிய நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திருமயம் , ஆர்.ஆர்.சமுத்திரம் விற்பனையாளர் தனபாலுக்கு முதல் பரிசாக 4 ஆயிரம் ரூபாயும், ஆலங்குடி, சிக்கப்பட்டி விற்பனையாளர் அமுதாவிற்க்கு இரண்டாம் பரிசாக 3 ஆயிரம் ரூபாய், திருமயம் கூட்டுறவு விற்பனை சங்கம், ரேஷன் கடை எடையாளர் ராமாயிக்கு முதல் பரிசாக 3 ஆயிரம் ரூபாயும், மீமிசல் அமுதம் அங்காடி எடையாளர் கண்ணகிக்கு இரண்டாம் பரிசாக 2 ஆயிரம் ரூபாயும், பாராட்டு சான்றிதழோடு கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வழங்கல் அலுவலர் ஆர்.கணேசன், துணைப் பதிவாளர் சதீஸ்குமார், துணை ஆட்சியர்(பயிற்சி) ஜி.வி.ஜெயஸ்ரீ மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • முத்துமாரியம்மன் கோவில் தெப்ப உற்வம் நடைபெற்றது
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

    புதுக்கோட்டை:

    அரிமளம் அருகே ராயவரம் முத்துமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 1-ந் தேதி பூச்சொரிதல், 8-ந்் தேதி காப்பு கட்டுதலுடன் முதல் நாள் திருவிழா தொடங்கியது. திருவிழாவின் ஒவ்வொரு நாள் இரவும் அண்ணா சீரணி கலையரங்கில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனிடையே நேற்று முன்தினம் 9-ம் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்ட நிலையில் தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவும், தொடர்ந்து நள்ளிரவு கோவில் அருகே அமைந்துள்ள ஊரணியில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதையடுத்து தெப்பத்தில் சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் எழுந்தருளினார். இதையடுத்து தெப்பத்தில் வலம் வந்து முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து முத்துமாரியம்மன் கோவிலில் காப்பு கலைக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது.

    • ரேஷன் கடை விற்பனையாளர்கள்- எடையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • கலெக்டர் வழங்கினார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை ரேஷன் கடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்கள் சிறப்பாகவும், பொதுமக்கள் வரவேற்கத்தக்க வகையில், பணிபுரியும் பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, ஆர்.ஆர்.விற்பனையாளர் எஸ்.தனபால் முதல் பரிசு ரூ.4 ஆயிரமும், ஆலங்குடி தாலுகா, சிக்கப்பட்டி விற்பனையாளர் எஸ்.அமுதாவுக்கு 2-வது பரிசு ரூ.3 ஆயிரமும், திருமயம் சி.எம்.எஸ். எடையாளர் சி.ராமாயிக்கு முதல் பரிசு ரூ.3 ஆயிரமும், மீமிசல் எடையாளர் ஆர்.கண்ணகிக்கு 2-வது பரிசு 2 ஆயிரம் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் கவிதாராமு வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வழங்கல் அலுவலர் கணேசன், கூட்டுறவு சரக துணைபதிவாளர் சு.சதீஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கண்களில் மிளகாய் பொடியை தூவி அடி-உதை
    • வாலிபரை தாக்கிய 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்

    புதுக்கோட்டை

    கந்தர்வகோட்டை மட்டங்கால் கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி மகன் ரெங்கநாதன் (வயது 35). அதே ஊரை சேர்ந்த அவரது உறவினர்கள் வீரபாண்டி (30), முருகேசன் (25), இவர்களது நண்பர் ராஜ்குமார். ரெங்கநாதனுக்கும், வீரபாண்டி, முருகேசன் ஆகியோருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்துள்ளது. இந்நிலையில் வீரபாண்டி உள்பட 3 பேரும் ரெங்கநாதனை வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்று அழைத்துள்ளனர். இதை நம்பி அங்கு சென்ற ரெங்கநாதனின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி தாக்கினர். இதில் மயக்கம் அடைந்த ரங்கநாதனை அங்கேயே விட்டு விட்டு 3 பேரும் தப்பி சென்று விட்டனர். ரெங்கநாதனின் சத்தத்தை கேட்ட அந்த வழியாக சென்றவர்கள் ரெங்கநாதனை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில், கந்தர்வகோட்டை ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து வீரபாண்டி உள்பட 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×