search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட 6 பார்களுக்கு சீல்
    X

    புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட 6 பார்களுக்கு சீல்

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட 6 பார்களுக்கு ‘சீல்' வைக்கப்பட்டது.
    • புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 143 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது

    புதுக்கோட்டை:

    தஞ்சாவூரில் டாஸ்மாக் பாரில் சட்டவிரோதமாக விற்பனையான மதுபானத்தை குடித்த 2 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறதா? என சட்டம்-ஒழுங்கு பிரிவு போலீசார், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 143 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதில் பார்கள் பல இடங்களில் இணைந்து செயல்படுகிறது. டாஸ்மாக் பார்களில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை தான் அனுமதிக்கப்பட்ட நேரம். ஆனால் இந்த நேரத்தை விட சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.புதுக்கோட்டை நகரப்பகுதியில் புதிய பஸ் நிலையம் அருகே 2 டாஸ்மாக் பார்களில் 24 மணிநேரமும் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்து போராட்டம் நடந்தது.

    போலீசாரும் ரோந்து சென்று நடவடிக்கை எடுத்தாலும் சட்டவிரோதமாக மதுபான விற்பனை தொடர்ந்து நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் மாவட்டத்தில் டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தியில் சட்டவிரோதமாக செயல்பட்ட 6 டாஸ்மாக் பார்களுக்கு 'சீல்' வைத்தனர்.இந்த சோதனை குறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்க முயன்ற போது அவர் செல்போன் அழைப்பை எடுக்கவில்லை.

    எந்தெந்த பார்கள் என்ற விவரத்தையும் டாஸ்மாக் அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்க மறுத்து விட்டனர். மாவட்ட மேலாளரிடமே கேட்டு தெரிந்து கொள்ளவும் என கூறிவிட்டனர். அவரை தொடர்பு கொண்டால் பதிலும் அளிக்கவில்லை.இதற்கிடையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றது தொடர்பாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரால் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். மேலும் 80-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.கந்தர்வகோட்டையில் டாஸ்மாக் கடைகளின் அருகில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த 2 டாஸ்மாக் பார்களை அதிகாரிகள் அகற்றினர்.

    Next Story
    ×