என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட 6 பார்களுக்கு ‘சீல்' வைக்கப்பட்டது.
    • புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 143 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது

    புதுக்கோட்டை:

    தஞ்சாவூரில் டாஸ்மாக் பாரில் சட்டவிரோதமாக விற்பனையான மதுபானத்தை குடித்த 2 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறதா? என சட்டம்-ஒழுங்கு பிரிவு போலீசார், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 143 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதில் பார்கள் பல இடங்களில் இணைந்து செயல்படுகிறது. டாஸ்மாக் பார்களில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை தான் அனுமதிக்கப்பட்ட நேரம். ஆனால் இந்த நேரத்தை விட சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.புதுக்கோட்டை நகரப்பகுதியில் புதிய பஸ் நிலையம் அருகே 2 டாஸ்மாக் பார்களில் 24 மணிநேரமும் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்து போராட்டம் நடந்தது.

    போலீசாரும் ரோந்து சென்று நடவடிக்கை எடுத்தாலும் சட்டவிரோதமாக மதுபான விற்பனை தொடர்ந்து நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் மாவட்டத்தில் டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தியில் சட்டவிரோதமாக செயல்பட்ட 6 டாஸ்மாக் பார்களுக்கு 'சீல்' வைத்தனர்.இந்த சோதனை குறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் தொடர்பு கொண்டு கேட்க முயன்ற போது அவர் செல்போன் அழைப்பை எடுக்கவில்லை.

    எந்தெந்த பார்கள் என்ற விவரத்தையும் டாஸ்மாக் அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்க மறுத்து விட்டனர். மாவட்ட மேலாளரிடமே கேட்டு தெரிந்து கொள்ளவும் என கூறிவிட்டனர். அவரை தொடர்பு கொண்டால் பதிலும் அளிக்கவில்லை.இதற்கிடையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றது தொடர்பாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரால் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். மேலும் 80-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.கந்தர்வகோட்டையில் டாஸ்மாக் கடைகளின் அருகில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த 2 டாஸ்மாக் பார்களை அதிகாரிகள் அகற்றினர்.

    • புனித கித்தேரியம்மாள் ஆலய தேர் பவனி நடைபெற்றது.
    • ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது

    புதுக்கோட்டை:

    கறம்பக்குடி அருகே உள்ள கே.கே.பட்டி கிராமத்தில் புனித கித்தேரியம்மாள் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மே மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் நவநாள் திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தன. அதனை தொடர்ந்து கே.கே.பட்டி பங்குத்தந்தை ஆரோ சேசுராஜ் தலைமையில் சிறப்பு ஜெப வழிபாடு மற்றும் கூட்டு பாடல் திருப்பலி நடந்தது.

    விழாவை முன்னிட்டு ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. இரவு அலங்கார தேர்பவனி நடந்தது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களில், புனித கித்தேரியம்மாள் மற்றும் தெய்வங்கள் ஒன்றன்பின் ஒன்றாக பவனி வந்தன. இதில் சாதி, மத, இன பாகுபாடின்றி ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். தொடர்ந்து கண் கவர் வாணவேடிக்கை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • புதுக்கோட்டை திருவரங்குளம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் ஆய்வு மேற்கொண்டார்
    • பொது கிணற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன்படி திருவரங்குளம் ஒன்றியம், குப்பக்குடி ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் போடப்பட்ட பேவர்பிளாக் சாலை, சிமெண்ட் சாலை ஆகியவற்றை ஆய்வு செயதார்.குப்பக்குடி கிராம அங்காடியினையும், பொட்டத்திக்கொல்லை கிராமத்தில் நடப்பட்டுள்ள வேப்பம், நாவல், புங்கை உள்ளிட்ட மரங்களின் பராமரிப்பையும் அவர் ஆய்வு செய்தார். .

    பின்னர் கே.வி.கோட்டையில் ரூ.3.65 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்ட சிமெண்ட் சாலையை அவர் ஆய்வு மேற்கொண்டு, அங்கிருந்த பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அங்குள்ள பொதுகிணற்றை சரிசெய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.அதனை தொடர்ந்து ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டதோடு, கல்லுகுண்டு ஊரணி குளம் ரூ .58 லட்சம் மதிப்பில் தூர்வாரப்பட்டு மேம்பாடு செய்யப்பட்டுள்ளதையும், திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செயல்பாடுகளையும் அவர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர் ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் எஸ்.பாலகிருஷ்ணன், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, இணை இயக்குநர் (ஊரக நலப் பணிகள்) மரு.ராமு, வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுலகிருஷ்ணன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு புகுந்தது
    • வனத்துறையினர் நார்த்தாமலை காப்புகாட்டில் மலைப்பாம்பை விட்டனர்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை அன்னவாசல் அருகே மேலூரை சேர்ந்தவர் மனோகரன். இவரது குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு புகுந்து அச்சுறுத்துவதாக சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு அவர் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் அப்துல்ரகுமான் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மலைப்பாம்பை லாவகமாக உயிருடன் பிடித்து சாக்கு பையில் அடைத்தனர். பின்னர் பிடிபட்ட மலைப்பாம்பை தீயணைப்புதுறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வனத்துறையினர் நார்த்தாமலை காப்புகாட்டில் மலைப்பாம்பை விட்டனர்.


    • கறம்பக்குடி அருகே கிணற்றில் முதியவர் பிணம் மிதந்தது
    • இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கறம்பக்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ரெகுநாதபுரம் ஆதிதிராவிடர் குடியிருப்பை சேர்ந்தவர் சண்முகம் (வயது 60). இவருக்கு வலிப்பு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரெகுநாதபுரம் கடைவீதிக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் புது விடுதி சாலையில் உள்ள ஒரு தோட்டத்தில் உள்ள கிணற்றில் சண்முகம் பிணமாக கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் ரெகுநாதபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சண்முகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் விராலிமலை விவேகா மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை பெற்றது
    • சிறப்பிடம் மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும் பள்ளி முதல்வர், நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள் வாழ்த்துக்கள் கூறி பாராட்டினர்.

    விராலிமலை,

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள விவேகா மெட்ரிக். மேல் நிலைப்பள்ளி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாணவி சொர்ணராகினி வணிகவியல், கணக்குப்பதிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் ஆகிய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை தேடி தந்துள்ளார்.

    மேலும் மாணவி ஹரிலட்சுமி பயாலஜி பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று மேலும் பெருமை சேர்த்துள்ளார். இதே போல 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகள் தர்ஷினி 477 மதிப்பெண்களும், பவதாரிணி 475 மதிப்பெண்களும், குணபிரியா 473 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்று தேர்ச்சியடைந்ததோடு, பள்ளியின் புகழை பறைசாற்றி உள்ளனர்.சிறப்பிடம் மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களையும் பள்ளி முதல்வர், நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள் வாழ்த்துக்கள் கூறி பாராட்டினர்.

    10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ந்து 100 சதவீதம் வெற்றி கண்டு சாதனை படைத்து வரும் விராலிமலை விவேகா மெட்ரிக். மேல் நிலைப்பள்ளியில் தற்போது பிரிகேஜி முதல் 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு வரையில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இது குறித்த மேலும் விவரங்களுக்கு 04339-220087, 04339 221380, 89402 43366, 89402 43377, 89402 43388 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • புனித அடைக்கல அன்னை ஆலய தேர் பவனி நடைபெற்றது.
    • ஆலயத்தில் கடந்த 11-ந் தேதி ஆலய பங்கு தந்தை பாபியன் கூட்டுப் பாடல் திருப்பலி பூஜையு டன் கொடியேற்றம் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே வேங்கிடகுளம் புனித அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. ஆலயத்தில் கடந்த 11-ந் தேதி ஆலய பங்கு தந்தை பாபியன் கூட்டுப் பாடல் திருப்பலி பூஜையு டன் கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, தினந்தோறும் கிராம பொதுமக்களால் காலை முதல் மாலை வரை தேர் பவனி மற்றும் நவநாள் திருப்பலி, மன்றாட்டு பாடல் பாடி கலை நிகழ்ச்சி நடந்தது. வேங்கிடகுளம் பங்குத்தந்தை பபியான் மற்றும் கிராம பங்கு தந்தையர்கள் அருட்சகோதரிகள் விழா கூட்டுப்பாடல் திருப்பலியுடன் தேர்பவனி நடந்தது. இதனை தொடர்ந்து, சிறுமிகளுக்கு முதல் திருவிருந்து நடைபெற்றது. தொடர்ந்து, நடந்த தேர் பவனி நான்கு வீதிகள் வழியாக சுற்றி வந்து கோவிலை வந்தடைந்தது. இதில் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பங்கு தந்தையர்கள், அருட் சகோதரிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பூக்களின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனைப்பட்டு வருகின்றனர்.
    • இப்பகுதிகளில் மலர் சந்தை மற்றும் நறுமண தொழிற்சாலை, குளிர்பதன கிடங்கு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட காலமாகவே கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    வடகாடு பகுதியில் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், சம்பங்கி, பிச்சி, அரளி, சென்டி, ரோஜா போன்ற பூக்கள் சாகுபடி பணிகளில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு உற்பத்தி ஆகும் பூக்கள் அந்தந்த ஊர்களில் உள்ள பூ கமிஷன் கடைகள் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு உள்ளூர் பகுதிகளில் உள்ள சில்லறை விற்பனை நிலையங்கள் முதல் வெளிமாவட்டங்கள் வரை பஸ், மோட்டார் சைக்கிள், சரக்கு வேன் உள்ளிட்டவைகளில் கொண்டு செல்லப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

    அதிகாலை நேரங்களில் இருந்தே பூக்களை பறித்து குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே விற்பனை நிலையங்களுக்கு விவசாயிகள் பூக்களை கொண்டு சேர்த்தாக வேண்டும். அதனால் கூலி விவசாய தொழிலாளர்களை பயன்படுத்தி பூக்களை பறிக்கும் விவசாயிகள். ஒரு கிலோ பூ பறிக்க ரூ.50 வரை கூலி கொடுக்க வேண்டி இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் தற்போது வெயில் காலை 8 மணிக்கு எல்லாம் கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கி விடுவதால் பூக்களை பறிக்க படாதபாடு பட வேண்டி இருப்பதாகவும், மேலும் தற்போது கோடை வெயிலால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி இருப்பதால் பூக்கள் விற்பனையும் சரிவர நடப்பது இல்லை எனவும் கூறப்படுகிறது.

    பூக்களின் விலை வீழ்ச்சிக்கு இது ஒரு காரணமாக கூறப்படுகிறது. இப்பகுதிகளில் மலர் சந்தை மற்றும் நறுமண தொழிற்சாலை, குளிர்பதன கிடங்கு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட காலமாகவே கோரிக்கை விடுத்து வருகின்றனர்.1 கிலோ மல்லிகை ரூ.150, முல்லை ரூ.120, கனகாம்பரம் ரூ.300, சென்டி ரூ.40, ரூ.50, பிச்சி ரூ.30, ரூ.40, சம்பங்கி ரூ.10, ரூ.20 ஆகிய விலைகளில் விற்பனை ஆகி வருகின்றன.

    • மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடமிருந்து 37 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    புதுக்கோட்டை

    விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மதுபாட்டில்கள் விற்கப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் தேராவூர் மற்றும் அகரப்பட்டி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேராவூர் மேட்டுப்பட்டி பகுதியில் மதுவிற்று கொண்டிருந்த கள்ளம்பட்டியை சேர்ந்த முருகேசன் (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் கொடும்பாளூர் லஞ்சமேடு பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் மது விற்ற கிருஷ்ணன் (37) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 37 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 30 திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா-அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு கறம்பக்குடி தாலுகா, பட்டத்திக்காடு கிராமத்தைச் சேர்ந்த 30 திருநங்கைகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். மேலும் இதேபோல், குளத்தூர் தாலுகா, வெள்ளனூர் ஊராட்சி, ரெங்கம்மாள்சத்திரம் கிராமத்தில் வசிக்கும் 95 நரிக்குறவர் சமூக மக்களுக்கு, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்வதற்காக மாவட்ட கலெக்டர் கவிதா ராமு அவர்களின் தன்விருப்ப நிதியிலிருந்து ஒரு குடும்பத்திற்கு தலா ரூ.10,000 மதிப்பீட்டில் 2 ஆட்டுக்குட்டிகளையும்,

    தலா ரூ.5,000 வீதம் துளசிமணி பாசி செய்வதற்கான ஒரு மாதத்திற்கு தேவையான மூலப் பொருட்களையும், பாசி உற்பத்தி செய்து கடைகளில் விற்பனை செய்வதற்கு ஏதுவாக வழங்கினார். மேலும் காமராஜபுரத்தைச் சேர்ந்த 51 நபர்களுக்கு ரூ.5,000 மதிப்பீட்டில் அவர்களின் வாழ்வாதாரத்திற்கான பொருட்களையும் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்.இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, வருவாய் கோட்டாட்சியர்கள் முருகேசன் (புதுக்கோட்டை), குழந்தைசாமி (இலுப்பூர்), துணை ஆட்சியர் (பயிற்சி) ஜி.வி.ஜெயஸ்ரீ, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், வட்டாட்சியர் சக்திவேல் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமைச்சராக இருந்தபோது 55 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் சோதனை நடந்தது.
    • சோதனையில் விஜயபாஸ்கர் ரூ.35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    புதுக்கோட்டை:

    தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 18.10.2021 அன்று புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து அவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். 56 இடங்களில் குறிப்பாக டாக்டர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, குவாரிகள் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது.

    அவர் அமைச்சராக இருந்தபோது 55 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த சோதனை நடந்தது.

    இதில் அவர் ரூ.35 கோடியே 79 லட்சத்து 90 ஆயிரத்து 81 சொத்து சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ரூ.23 லட்சம் பணம், 4.87 கிலோ தங்கம், 136 ஹார்டு டிஸ்க்குகள், கனரக வாகனங்களின் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

    தொடர்ந்து நடைபெற்ற வழக்கின் அடுத்த கட்டமாக இன்று புதுக்கோட்டை கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் 216 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. இமயவரம்பம், இன்ஸ்பெக்டர்கள் ஜவகர், பீட்டர் ஆகியோர் நீதிபதி ஜெயந்தியிடம் தாக்கல் செய்தனர்.

    • அறந்தாங்கி பேருந்து நிலையம் முன்பு ஆட்டோ சங்கத்தினர் திடீர் மறியல்
    • புதிதாக ஸ்டாண்டு திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்றது

    அறந்தாங்கி,

    அறந்தாங்கி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 13 இடங்களில் ஆட்டோ ஸ்டாண்டுகள் அமைக்கப்பட்டு சுமார் 150-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது பேருந்து நிலையத்திற்குள் செல்லும் வழியில் புதிதாக ஆட்டோ ஸ்டாண்ட் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பில் அரசு அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    பேச்சுவார்த்தையை தொடர்ந்து உடன்பாடு எட்டப்படாதததால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுனர்கள் பேருந்து நிலையம் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு எட்டப்படும் என உறுதியளித்தார். வட்டாட்சியரின் உறுதியளிப்பை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

    மறியல் போராட்டத்தால் பேருந்து நிலையம் முன்பு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. கௌரவ தலைவர் ராஜேந்திரன், ஆட்டோ சங்க நகர தலைவர் சேகர்,நகர செயலாளர் கார்த்திக், நகர பொருளாளர் மோகன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் பெரியசாமி, சி.பி.ஐ. ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், சி.ஐ.டி.யு. தலைவர் கர்ணா,

    சி.பி.ஐ. ஒன்றிய துணை செயலாளர் போஸ் கணேசன், ஆட்டோ தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, விநாயகமூர்த்தி, சித்திக் முகமது, ரவி, கணேசன், நாகராஜ், கணேசன், சேகர், சிங்கசெல்வம், கல்யாணராமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×