என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • பேரளி கிராமத்தில் குடிநீரில் புழுக்கள் வந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • சாலை மறியலால் அப்பகுதியில் போக்குரத்து பாதிக்கப்பட்டது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பேரளி கிராமத்தில் வடக்கு தெரு, தெற்கு தெரு, நடுத்தெரு, மேற்கு தெரு, காலனி தெரு ஆகிய தெருக்கள் உள்ளன. இந்த ஊரில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு கிராம நிர்வாக அலுவலகம் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் காலனி தெரு பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது குடிநீர் புழுக்கள் இருந்தன. இதனால் ஆத்திரமடைந்த காலனி தெரு மக்கள், எங்கள் பகுதியின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது இல்லை. கடந்த ஒரு மாதமாக தெரு விளக்குகள் எரியவில்லை. அடிக்கடி தண்ணீரில் புழுக்கள் கலந்து வருகிறது என்று கூறி, ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அரியலூர்-பெரம்பலூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் மற்றும் மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் காலனி தெரு பகுதிகளுக்கு வரும் குடிநீர் குழாய் உடைந்துள்ளதால் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வந்துள்ளது. உடனடியாக குடிநீர் குழாய் மாற்றி அமைக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியதன்பேரில், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அரியலூர்-பெரம்பலூர் சாலையில் சுமார் அரை மணி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • மொபட் மோதி மின்வாரிய பெண் ஊழியர் பலியானார்
    • பதவி உயர்வுக்காக படித்து கொண்டிருந்தவர் பரீட்சை எழுதி விட்டு திரும்புகையில் சோகம்

    பெரம்பலூர் ராயபுரம் தாலுகா வெள்ளூர் மேல தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி சித்ரா (வயது 38). இவர் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவர் பதவி உயர்வு பெறுவதற்காக துவாக்குடி அருகே உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் பகுதி நேரமாக இ.இ.இ.படித்து வந்தார். இந்நிலையில் கல்லூரியில் தேர்வு எழுதிவிட்டு மாலை நண்பர் ஒருவருடன் மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தார். காட்டூர், கைலாஷ் நகர் அருகே வந்தபோது, பின்னால் வந்த மொபட் அவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சித்ராவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரம்பலூரில் டிஜிட்டல் தடயவியல், சைபர் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது
    • பெரம்பலூர் தனலட்சுமி மகளிர் கல்லூரியில், வேந்தர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது

    பெரம்பலூர், 

    தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரம்பலூர் தடய அறிவியல் துறையின் சார்பாக "டிஜிட்டல் தடயவியல் மற்றும் சைபர் பாதுகாப்பில் எதிர்காலம்" என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் அ. சீனிவாசன் தலைமை வகித்தார். தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியின் முதல்வர்உமாதேவி பொங்கியா முன்னிலை வகித்தார். தடய அறிவியல் துறை தலைவர் எஸ்.ராணி சந்திரா வரவேற்புரை ஆற்றினார். பெங்களூருவில் உள்ள ஜீரோபாக்ஸ் இன் டேட்டா பிளாட்ஃபார்ம் நிபுணர் தணிகைவேல் பேசும்போது, சைபர் கிரைம் என்பது உலகளாவிய பிரச்சினை. எதிர்கால டிஜிட்டல் தடயவியல்துறைக்கு வலுவான சர்வதேச ஒத்துழைப்பு தேவைப்படும். இணைய அச்சுறுத்தல்களை திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கு, சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவதும், எல்லைகளை தாண்டி உளவுத்துறையைப் பகிர்வதும் இன்றியமையாததாக இருக்கும் என்று அவர் பேசினார். இந்நிகழ்வில் புல முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூரில் ஓ.பி.எஸ். அணி - அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வலியுறுத்தி கோஷம்

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வலியுறுத்தி ஓபிஎஸ் அணியினர் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பெரம்பலூர் காந்தி சிலைக்கு முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓபிஎஸ் அணியின் மாநில ஜெ. பேரவை செயலாளரும், மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அமமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.இதில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் சின்னராஜேந்திரன், முகமது இக்பால், சிவக்குமார், பெருமாள், ஜெயக்குமார், மோகன், வீரமுத்து, கலைவாணன், முத்துசாமி, இளவரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கீழப்பெரம்பலூர் அரசு பள்ளியில் குறு வட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது
    • 15க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள கீழப்பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளான மேசைப்பந்து மற்றும் கைப்பந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.போட்டியினை பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் தொடங்கி வைத்தார். இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட 15-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் .மேசைப்பந்து பிரிவு போட்டியில் அனைத்து பிரிவுகளிலும் கீழப் பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் வெற்றி பெற்றனர். இதனைத் தொடர்ந்து கைப்பந்து போட்டியில் 14 வயது பெண்கள் பிரிவில் திருமாந்துறை ஆண்ட்ரூஸ் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் வெற்றி பெற்றனர் . வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் பிரபாகரன், உடற்கல்வி ஆசிரியர் தட்சிணாமூர்த்தி கிழுமத்தூர் மாதிரி பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அறிவேல் கண்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • பிரவீனாவின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சின்னத்துரையை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    அகரம் சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அகரம் சீகூர் வடகலூர் கிராம ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ராமகிருஷ்ணன்.

    இவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகா மையில் அமைந்துள்ள நூலக கட்டிடத்திற்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு கழிப்பி டத்தை கட்டியுள்ளார்.

    இந்த கழிப்பிடம் அந்த பகுதியில் வசிக்கும் சின்னதுரை (வயது 43) என்பவரின் வீட்டுக்கு முன்பாக அமைந்துள்ளது. இதனை கேள்விப்பட்டு வெளிநாட்டில் இருந்த சின்னத்துரை அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடந்த 10 தினங்களுக்கு முன்பு அவர் ஊர் திரும்பினார்.

    பின்னர் நேற்று குடிபோதையில் நேராக ராமகிருஷ்ணன் வீட்டுக்கு சென்றார்.

    பின்னர் அங்கிருந்த ராமகிருஷ்ணனிடம் என் வீட்டுக்கு முன்பாக எதற்கு கழிப்பிடம் கட்டினீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த சின்னத்துரை ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணனை அருகில் கிடந்த கட்டையை எடுத்து தாக்கினார்.இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பிரவீனா (33) ஊராட்சி மன்ற தலைவரை காப்பாற்ற ஓடி வந்தார். அப்போது சின்னத்துரை அவரையும் கட்டையால் தாக்கிவிட்டு தப்பி ஓடினார்.

    இதில் பிரவீனாவின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார்.

    பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் தம்பதியை உறவினர்கள் மீட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சின்னத்துரையை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • நண்பர்களுடன் குடித்து விட்டு தகராறில் ஈடுபட்ட வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • நண்பர்கள் ஆம்புலன்ஸ் மீது கல் எரிந்ததில் கண்ணாடி உடைந்தது

    பெரம்பலூர்,

    அம்மாபாளையம் தேவேந்திர குல வேளாளர் தெருவை சேர்நதவர் முருகன். இவரது மகன் சந்திரன் (வயது 22). இவர் நேற்று மதியம் தனது நண்பர்களுடன் களரம்பட்டி மருதையான் கோவில் ஒடை அருகே மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது மது போதையில் நண்பர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். இதனால் சந்திரன் அந்த இடத்தை விட்டு சென்றார்.இதையடுத்து அவரது நண்பர்கள் களரம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, சந்திரன் வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர் போன் செய்து மது குடித்த இடத்தின் அருகே கருவேல மரத்தில் லுங்கியால் தூக்குப்போட்ட நிலையில் சந்திரன் தொங்குவதாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவரது நண்பர்கள் அங்கு விரைந்து சென்று சந்திரனை மீட்டு சிகிச்சைக்காக மோட்டார் சைக்கிளில் அம்மாபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு சந்திரனுக்கு டாக்டர் சிகிச்சை அளித்தனர்.அப்போது அவரது நண்பர்கள் அங்கு நின்று கொண்டிருந்த 108 ஆம்புலன்சை எடுங்கள், சந்திரனை மேல் சிகிச்சைக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வோம் என்று அங்குள்ளவர்களிடம் கூறி தகராறு செய்துள்ளனர். அதற்கு டிரைவர் 108-க்கு போன் செய்தால் வருவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த நண்பர்களில் ஒருவர் ஆம்புலன்சின் முன் பக்க கண்ணாடியின் மீது கல்லை வீசினார். இதில் கண்ணாடி உடைந்தது. பின்னர் அவர்கள் சந்திரனை மோட்டார் சைக்கிளை அழைத்து கொண்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை பிரேத கூடத்தில் வைக்கப்பட்டது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு, ஆம்புலன்ஸ் மீது கல் எறிந்த சந்திரனின் நண்பரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    • சாலையோர இரும்பு தடுப்பு கம்பியில் ஏறி கார் விபத்துக்குள்ளானது
    • விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர்,

    திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா, கொடும்பப்பட்டியை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு. இவரது மகள் தமிழ்ச்செல்வி (வயது 24). இவர்  சென்னையில் இருந்து காரில் சொந்த ஊருக்கு புறப்பட்டார். காரை கொடும்பப்பட்டியை சேர்ந்த செல்வராஜின் மகன் கண்ணன் (32) என்பவர் ஓட்டினார். சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி சாலையோர தடுப்புக்கம்பியில் மோதி, அதன் மீது ஏறி நின்றது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காரை அப்புறப்படுத்தினர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டிற்கு முன் பொது கழிப்பிடம் கட்டியதால் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்
    • தடுக்க சென்ற மனைவியின் கை எலும்பு முறிந்தது

    அகரம் சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அகரம் சீகூர் வடகலூர் கிராம ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ராமகிருஷ்ணன்.இவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகாமையில் அமைந்துள்ள நூலக கட்டிடத்திற்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு கழிப்பிடத்தை கட்டியுள்ளார்.இந்த கழிப்பிடம் அந்த பகுதியில் வசிக்கும் சின்னதுரை (வயது 43) என்பவரின் வீட்டுக்கு முன்பாக அமைந்துள்ளது. இதனை கேள்விப்பட்டு வெளிநாட்டில் இருந்த சின்னத்துரை அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடந்த 10 தினங்களுக்கு முன்பு அவர் ஊர் திரும்பினார்.பின்னர் நேற்று குடிபோதையில் நேராக ராமகிருஷ்ணன் வீட்டுக்கு சென்றார்.பின்னர் அங்கிருந்த ராமகிருஷ்ணனிடம் என் வீட்டுக்கு முன்பாக எதற்கு கழிப்பிடம் கட்டினீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதில் ஆத்திரமடைந்த சின்னத்துரை ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணனை அருகில் கிடந்த கட்டையை எடுத்து தாக்கினார்.இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பிரவீனா (33 )ஊராட்சி மன்ற தலைவரை காப்பாற்ற ஓடி வந்தார். அப்போது சின்னத்துரை அவரையும் கட்டையால் தாக்கிவிட்டு தப்பி ஓடினார்.இதில் பிரவீனாவின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார்.பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் தம்பதியை உறவினர்கள் மீட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமுறைவாக இருந்த சின்னத்துரையை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • ஒகளூரில் மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது
    • தேரோட்டத்தை தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா நடந்தது

    அகரம்சீகூர், 

    பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் அடுத்த ஒகளூர் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி கடந்த 17-ந் தேதி கணபதி பூஜை, கலச பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம் நடத்தப்பட்டு கொடியேற்றப்பட்டது. இதனையடுத்து 28-ந் தேதி சக்தி அழைத்தல் மற்றும் சந்தனக்காப்பும் நடைபெற்றது. நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி தலைவர் அன்பழகன் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக வந்த தேர் நிலையை அடைந்தது. இதைத்தொடர்ந்து இன்று மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.

    • முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது
    • பதவி உயர்வு, பணி மாறுதலில் பழைய முறை ஆகியன வலியுறுத்தி தீர்மானம்

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாநில பொதுசெயலாளர் தமிழ்மணியன், மாநில பொருளாளர் கணேஷ், மாநில செய்தி தொடர்பு செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் பணி உயர்வு , பதவி மாறுதலில் பழைய முறைப்படி 44 ஆண்டுகள்அளவில் உள்ளபடி பட்டியலில் பதவி உயர்வு பெற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களையும் இணைத்து வெளியிட அரசாணையை திருத்தி கொள்ள முடிவெடுக்கவேண்டும் , ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓயவூதியம் வழங்கவேண்டும், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பட்டியலில பதவி உயர்வு பெற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு வழங்கவேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை அனுமதித்து பணபலன்களை வழங்கிடவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாநில, மாவட்ட முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட தலைவர் பிரபாகரன் வரவேற்றார். முடிவில் மாவட்ட செயலாளர் மணி நன்றி கூறினார்.

    • குரும்பலூர் அரசு கலைக்கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
    • நீதிபதி சந்திரசேகர் பங்கேற்று பேசினார்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே குரும்பலூர் அரசு கலைக்கல்லூரியில், பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், பெரம்பலூர் இந்தோ டிரஸ்ட்டும் இணைந்து தனி நபர் கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாமினை நடத்தியது. முகாமிற்கு கல்லூரி முதல்வர் ரேவதி தலைமை வகித்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைமை சட்ட உதவி ஆலோசகர் வக்கீல் சீராஜுதீன், உதவி ஆலோசகா வக்கீல் தினேஷ், இந்தோ டிரஸ்ட் மேலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சப்-கோர்ட் நீதிபதியுமான சந்திரசேகர் பேசுகையில், மனித கடத்தல் நவீன முறையில் இப்போது நடந்து வருகின்றது. மனிதர்களின் உடல் உறுப்புகளை திருடுவதற்காகவும். மனிதர்களை கொத்தடிமைகளாக்க வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் கடத்தப்படுகின்றனர். இதனை தடுத்து நிறுத்துவதற்கு பல வழிமுறைகளை அரசு கடைபிடித்து வருகிறது. அவசர உதவி எண் 181 மற்றும் 1098 ஆகும். மாணவர்கள் ஆள் கடத்தல் தொடர்பாக தகவல் கிடைக்கும் பட்சத்தில் இந்த நம்பரில் தொடர்பு கொண்டு தகவல் அளித்து மனித கடத்தலை தடுப்பதற்கு உதவிட வேண்டும் என தெரிவித்தார். இதில் மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர். முன்னதாக சமூக பணித்துறை தலைவர் செல்லம் வரவேற்றார். முடிவில்ச ட்டப்பணிகள் ஆணைக்குழுவின் முதுநிலை நிர்வாக உதவியாளர் கலைவாணன் நன்றி கூறினார்.

    ×