என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டிற்கு முன் பொது கழிப்பிடம் கட்டியதால் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய தொழிலாளி
    X

    வீட்டிற்கு முன் பொது கழிப்பிடம் கட்டியதால் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கிய தொழிலாளி

    • பிரவீனாவின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சின்னத்துரையை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    அகரம் சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அகரம் சீகூர் வடகலூர் கிராம ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ராமகிருஷ்ணன்.

    இவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகா மையில் அமைந்துள்ள நூலக கட்டிடத்திற்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு கழிப்பி டத்தை கட்டியுள்ளார்.

    இந்த கழிப்பிடம் அந்த பகுதியில் வசிக்கும் சின்னதுரை (வயது 43) என்பவரின் வீட்டுக்கு முன்பாக அமைந்துள்ளது. இதனை கேள்விப்பட்டு வெளிநாட்டில் இருந்த சின்னத்துரை அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடந்த 10 தினங்களுக்கு முன்பு அவர் ஊர் திரும்பினார்.

    பின்னர் நேற்று குடிபோதையில் நேராக ராமகிருஷ்ணன் வீட்டுக்கு சென்றார்.

    பின்னர் அங்கிருந்த ராமகிருஷ்ணனிடம் என் வீட்டுக்கு முன்பாக எதற்கு கழிப்பிடம் கட்டினீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த சின்னத்துரை ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணனை அருகில் கிடந்த கட்டையை எடுத்து தாக்கினார்.இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பிரவீனா (33) ஊராட்சி மன்ற தலைவரை காப்பாற்ற ஓடி வந்தார். அப்போது சின்னத்துரை அவரையும் கட்டையால் தாக்கிவிட்டு தப்பி ஓடினார்.

    இதில் பிரவீனாவின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார்.

    பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் தம்பதியை உறவினர்கள் மீட்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சின்னத்துரையை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×