என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • தம்பிரான்பட்டி ரேஷன் கடையில் பொருட்கள் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே தம்பிரான்பட்டி ரேஷன் கடையில் நேற்று அத்தியாவசிய பொருட்கள் வழங்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தம்பிரான்பட்டி ரேஷன் கடையில் பயோமெட்ரிக் முறை மெஷின் வேலை செய்யாததால் ரேஷன் கடையில் பணிபுரியும் ஊழியர் ராகவன் மிஷினை சரி செய்தவுடன் பொருட்கள் வழங்கப்படும் என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் செட்டிகுளம் -செஞ்சேரி கிராம சாலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் டிஎஸ்பி பழனி ச்சாமி, பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கைகளால் எழுதி பொருட்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்ததால் பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த மறியலால் சுமார் ஒரு மணி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • பெரம்பலூரில் உடும்பை வேட்டையாடி எடுத்து சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
    • அவர்களிடம் இருந்து 3 உடும்புகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே வனவிலங்கான உடும்பினை வேட்டையாடி 3 பேரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு பிரிவை சேர்ந்த வனவர் பிரதீப், வனக்காப்பாளர்கள் கண்ணதாசன், முகமது சித்தீக் அன்பரசு, மணி கண்டன் ஆகியோர் கொண்ட வனக்குழு வினர் ஜெமீன் ஆத்தூர் செல்லி யம்மன் கோவில் அருகில் ரோந்து பணியில் ஈடுப்ப ட்டிருந்தனர். அப்போது 3 உடும்பினை வேட்டையாடி எடுத்து சென்ற 3 பேரை பிடித்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அப்பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் பெரியசாமி (வயது50), பெரியசாமி மகன் ஐயப்பன் (27), பிச்சைபிள்ளை மகன் பாக்கியராஜ்(31) ஆகியோர் என்பவதும் சட்ட விரோதமாக உடும்பினை வேட்டை யாடியது தெரிய வந்தது.

    இது குறித்து வனத்து றையினர் வழக்குபதிந்து பெரியசாமி உட்பட 3 பேரை கைது செய்து அவர்க ளிடமிருந்த உடும்பினை பறிமுதல் செய்தனர். பின்னர் பெரியசாமி உட்பட 3 பேரையும் பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • புது வேட்டக்குடி கிராமத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது
    • அமைச்சர் சிவசங்கர் விழாவில் கலந்து கொண்டு ரேஷன் கடையை திறந்து வைத்தார்

    குன்னம்

    குன்னம் வட்டம் புது வேட்டக்குடி கிராமத்தில் புதிய நியாய விலை கடையை மாவட்ட ஆட்சித் தலைவர் கற்பகம் தலைமையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்

    புது வேட்டக்குடி பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு புதிய நியாய விலை கடை வேண்டி அமைச்சரிடம் மனு அளித்திருந்தனர்.இதைத்தொடர்ந்து நேற்று முன் தினம் புதுவேட்டக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில்

    முழு நேர புதிய நியாய விலைக் கடையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்

    நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் லலிதா கூட்டுறவு சார்பதிவாளர் விஸ்வநாதன் வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேமலதா செல்வகுமார் வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மருவத்தூர் ராஜேந்திரன் வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    • பெரம்பலூர் சுதந்திர தின விழாவில் ரூ.2.05 கோடி நில திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • 286 பயனாளிகளுக்கு கலெக்டர் கற்பகம் வழங்கினார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் சுதந்திரத்திருநாள் விழா நிகழ்ச்சிகள் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் கற்பகம் தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் 286 பயனாளிகளுக்கு ரூ.2,04,74,026 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணிபுரிந்த 286 அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

    • பெரம்பலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் நிர்வாக குழு ஆலோசனை கூட்டம்
    • அனைத்து கிராமங்களிலும் நலத்திட்ட உதவிகள்வழங்கிட தீர்மானம்

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்குமாவட்ட செயலாளர் வக்கீல் ரத்தினவேல் தலைமை வகித்தார். மாவட்ட செய்தித் தொடர்பாளர் உதயகுமார்ஒன்றிய செயலாளர்கள் பாஸ்கர், பிச்சைப்பிள்ளை, வெற்றியழகன், இடிமுழக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில செயலாளர் வீரசெங்கோலன், எம்பி தொகுதி துணை செயலாளர் மன்னர்மன்னன், மண்டல துணை செயலாளர்லெனின் ஆகியோர் பேசினர்.நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் தலித் பள்ளி மாணவனை கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்களை கண்டித்துநாளை (15ம்தேதி) பெரம்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது, வரும் 17ம்தேதி கட்சி தலைவர் தொல்.திருமாளவனின் பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் அனைத்து கிராமங்களிலும் நலத்திட்ட உதவிகள்வழங்கி கொண்டாடுவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக நகர செயலாளர்தங்கசண்முகசுந்தரம் வரவேற்றார். முடிவில் ஒன்றிய செயலாளர் மனோகரன் நன்றி கூறினார்.

    அம்மாபாளையத்தில் புனித புதுமை மாதா கோவில் ஆண்டுப்பெரு விழா சப்பர பவனி

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே அம்மாபாளையம் கிராமத்தில் புனித புதுமை மாதா கோவில் ஆண்டு பெரு விழா சப்பர பவனி நேற்றுநடந்தது.அம்மாபாளையம் கிராமத்தில் புனித புதுமை மாதா கோவில் ஆண்டு பெரு விழாவையொட்டி நேற்று காலை 8மணியளவில் திருவிழா சப்பர பவனி நடந்தது. பாளையம் புனித சூசையப்பர் தேவாலயப் பங்கு குரு ஜெயராஜ் ஜெபம்செய்து சப்பரத்தை மந்திரித்த பிறகு, அம்மாபாளையம் ஊராட்சி தலைவர் பிச்சைபிள்ளை, பாளையம் பங்குகுரு ஜெயராஜ்ஆகியோர் சப்பர பவனியை கூட்டாக தொடங்கி வைத்தனர். இந்த சப்பர பவனி அம்மாபாளையம் கிராமத்தின் முக்கியவீதிகளில் பவனியாக வந்து, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு பங்கு குருஜெயராஜ் தலைமையில் சிறப்புப் பாடல் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து ஆராதனையும், அன்னதானமும் நடந்தது.இதில் பாளையம், அம்மாபாளையம், குரும்பலூர், பெரம்பலூர், புதுநடுவலூர், சத்திர மனை, ரெங்கநாதபுரம் உள்ளிட்டப்பல்வேறு கிராமங்களை சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வேப்பூர் ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.11 கோடி செலவில் வளர்ச்சி திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது
    • போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள ஜெமின் பேரையூர், சாத்தனூர், கொளக்காநத்தம், ஆகியகிராமங்களுக்கு உயர்மட்ட மேம்பாலம், தார்சாலை மற்றும் பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்டுதல் ஆகிய பணிகளைதுவக்கி வைத்தும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கரம்பியம், பெரியம்மாபாளையம், குன்னம், சின்னவெண்மணி, பெரிய வெண்மணி, கொத்தவாசல், நல்லறிக்கை, காடூர் மற்றும் புதுவேட்டக்குடி ஆகிய கிராமங்களில் ஏரி,குளம் தூர்வாருதல், தார் சாலைகள் அமைத்தல் ஆகிய பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் பணி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ். எஸ் சிவசங்கர்பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் ராஜேந்திரன், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி வேப்பூர் ஊராட்சிஒன்றியக்குழுத் தலைவர் பிரபா செல்லப்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஜெமின்பேரையூர் முதல் அருணகிரிமங்கலம் இடையே கிராம சாலை திட்டத்தின் கீழ்மருதையாற்றின் குறுக்கே ரூ.7கோடியே 25 லட்சம் செலவில் உயர் மட்ட மேம்பாலம் கட்டும் பணியினையும், கிராமசாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சாத்தனூர் முதல் கொட்டறை வரை ரூ.91 லட்சம் செலவில் தார் சாலைஅமைக்கும் பணியினையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.39 லட்சம் செலவில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டும் பணியினையும்.அதனை தொடர்ந்து வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட கரம்பியம் ஊராட்சியில் உள்ள சின்ன ஏரியில் ரூ.8 லட்சத்து 28ஆயிரம் செலவில் ஏரி ஆழப்படுத்துதல் மற்றும் படித்துரை அமைக்கும் பணியினையும், பெரியம்மாபாளையம் ஊராட்சியில்கிராம நிர்வாக அலுவலகம் உள்ள தெருவில் ரூ.9 லட்சத்து 75 ஆயிரம் செலவில் சிமெண்ட் சாலை அமைக்கும்பணியினையும், பெரியம்மாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.3 லட்சம் செலவில் சைக்கிள் நிறுத்தும்கொட்டகை அமைக்கும் பணியினையும், பெரியம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.5.லட்சத்து 90ஆயிரம் செலவில் மாணவர்களுக்கான கழிவறை அமைக்கும் பணியினையும், ரூ.9 லட்சத்து 10 ஆயிரம் செலவில் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணி உள்பட ஆலத்தூர் மற்றும் வேப்பூர் ஒன்றியங்களில் மொத்தம் 11 கோடியே 69லட்சத்து 69 ஆயிரம் செலவில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.

    அரியலூர் முதல் திட்டக்குடி வழித்தடத்தில் புதுவேட்டக்குடியிலிருந்து 2.கி.மீ தொலைவில் உள்ள காடூர் கிராமத்தினைதொட்டு செல்லும் வகையில் நகரப் பேருந்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ். எஸ் சிவசங்கர் துவக்கிவைத்தார். பின்னர் மக்களோடு மக்களாக மாவட்ட கலெக்டர் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் பேருந்தில்பயணம் செய்தனர். நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மனைவி இறந்த சோகத்தில் மங்களமேடு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்
    • தூக்கில் தொங்கிய உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    பெரம்பலூர்,

    மங்களமேடு இந்திராநகர் பகுதியை சேர்ந்த பொன்னன் என்பவரின் மகன் வெங்கடேஷன்(வயது 30). கூலி தொழிலாளியான வெங்கடேஷன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக, தனது மனைவியுடன் பைக்கில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் வெங்கடேஷனின் மனைவி உயிரிழந்துள்ளார். மேலும் வெங்கடேஷனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு, வலது கால் செயல் இழந்து உள்ளது. இதன் காரணமாக இவர்களின் இரண்டு வயது மகள் இஷிகாவை, வெங்கடேஷனின் பெற்றோர்கள் வளர்த்து வந்துள்ளனர். வலது கால் செயல் இழந்ததால், வெங்கடேஷனால் கூலி தொழிலுக்கு தொடர்ந்து செல்ல இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது. மனைவி இறந்த துக்கத்தோடு, தானும் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதை எண்ணி மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில மனவிரக்தி அடைந்த அவர் தனது வீட்டில், துப்பட்டாவினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து அங்கு வந்த மங்களமேடு போலீசார் உடலை கைப்பற்றி, வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரம்பலூரில் குழந்தை இல்லாத விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    குன்னம்,

    பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டியை சேர்ந்த ஜகன் என்பவரின் மனைவி ரஞ்சனிதேவி(வயது 33). இவர்களுக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு ரஞ்சனி தேவி சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் கிடைத்த பெரம்பலூர் போலீசார் களரம்பட்டிக்கு வந்து ரஞ்சனி தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ரஞ்சனி தேவி தற்கொலை குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், திருமணமான தம்பதிக்கு இது வரை குழந்தைகள் இல்லை என்பதும், அதனால் அடிக்கடி குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வந்ததும், இதன் காரணமாக மனமுடைந்த ரஞ்சனிதேவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பது தெரிய வந்தது. இது குறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார் இளம் தற்கொலை குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரம்பலூர் எழமூர் கிராமம் மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது
    • ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து தீமிதித்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள எழமூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழாவையொட்டி கடந்த 5-ந் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாரியம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீமிதித்தனர். விழாவில் எழமூர், ஓலைப்பாடி, வயலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மங்களமேடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • பெரம்பலூரில் கோழிகளை ஏற்றி சென்ற லோடு வாகனம் மீது ஆம்னி பஸ் மோதி விபத்துக்குள்ளானது
    • ஏராளமான கோழிகள் செத்தன

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூரில் இருந்து சிறுவாச்சூருக்கு 540 கோழிகளை ஏற்றி கொண்டு சரக்கு வாகனம் ஒன்று புறப்பட்டது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூரில் சென்று கொண்டிருந்தபோது சரக்கு வாகனத்தின் பின்பக்க டயர் பஞ்சரானது. இதையடுத்து சரக்கு வாகன டிரைவர் வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் பகுதியை சேர்ந்த ராசையா (வயது 38), சரக்கு வாகனத்தை சாலையோரம் திருப்பிய போது மதுரையில் இருந்து சென்னை நோக்கி பயணிகளுடன் வந்த ஒரு தனியார் ஆம்னி பஸ் மோதியது. இதில் சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டிரைவர் ராசையா லேசான காயமடைந்தார். ஏராளமான கோழிகள் செத்தன. ஆம்னி பஸ்சின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போக்குவரத்து போலீசாரும், பாடாலூர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான சரக்கு வாகனம், பஸ்சை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். இது தொடர்பாக பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரம்பலூர் குரும்பலூர்-நக்கசேலம் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது
    • மங்கூன் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக அறிவிப்பு

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட மங்கூன் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் குரும்பலூர், பாளையம், மூலக்காடு, ஈச்சம்பட்டி, புதுஆத்தூர், லாடபுரம், மேலப்புலியூர், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், அடைக்கம்பட்டி, புது அம்மாபாளையம், டி.களத்தூர் பிரிவு ரோடு, சிறுவயலூர், குரூர், மாவிலங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, கீழக்கணவாய், வேலூர், சத்திரமனை, பொம்மனப்பாடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின்சாரம் இருக்காது என்று பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

    ×