என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேட்டக்குடியில் புதிய ரேஷன் கடை திறப்பு
- புது வேட்டக்குடி கிராமத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது
- அமைச்சர் சிவசங்கர் விழாவில் கலந்து கொண்டு ரேஷன் கடையை திறந்து வைத்தார்
குன்னம்
குன்னம் வட்டம் புது வேட்டக்குடி கிராமத்தில் புதிய நியாய விலை கடையை மாவட்ட ஆட்சித் தலைவர் கற்பகம் தலைமையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்
புது வேட்டக்குடி பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு புதிய நியாய விலை கடை வேண்டி அமைச்சரிடம் மனு அளித்திருந்தனர்.இதைத்தொடர்ந்து நேற்று முன் தினம் புதுவேட்டக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில்
முழு நேர புதிய நியாய விலைக் கடையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்
நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் லலிதா கூட்டுறவு சார்பதிவாளர் விஸ்வநாதன் வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேமலதா செல்வகுமார் வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மருவத்தூர் ராஜேந்திரன் வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Next Story






