என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெரம்பலூரில் தன்னார்வலருக்கான பயிற்சி
- பெரம்பலூரில் பள்ளி கல்வி வட்டார வள மையம் சார்பில் தன்னார்வலருக்கான பயிற்சி நடைபெற்றது
- 200 கல்வியறிவு கிடைக்காதவர்களை தேர்ந்தெடுத்து கல்வி அளிக்க முடிவு
பெரம்பலூர்
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வளமையம் சார்பில் பெரம்பலூர் அரசு ஆண்கள் மேல்நி லை ப்ப ள்ளியில் கல்லாதவர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ள தன்னார்வலர்களுக்கான பயிற்சி நடந்தது.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் தேவகி தலைமை வகித்து பயிற்சியை தொடங்கி வைத்து பேசுகையில், பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட 66 பள்ளிகளை சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகளில் 15 வயதுக்கு மேல் கையொப்பமிட மற்றும் தமிழ் வாசிக்க தெரியாத ஆயிரத்து 200 கல்லாதவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு அவர்கள் கற்பதற்கு ஏதுவாக மையங்களை தேர்வு செய்து நடத்து வதற்கு தன்னா ர்வலர்களை தேர்வு செய்து 20 பேர் கொண்டு ஒரு மையம் என்ற வீதத்தில் 66 மையங்கள் மையங்கள் அமை க்கப்பட்டு தன்னார்வலர்கள் மூலம் கொண்டு வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் கற்போருக்கு பயிற்சிகள் நடத்தப்படவுள்ளது என தெரிவித்தார்.
ஆசிரியர் பயிற்றுநர் குணசேகரன், கலைவாணன், ரமேசு ஆகியோர் பயிற்சி அளித்தனர். இதில் 66 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.






