என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • பிளஸ்-1 படித்து வந்தார்
    • கிணற்றில் தவறி விழுந்த மாணவர் பரிதாபமாக இறந்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே நொச்சியம் நடுத்தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவருக்கு சசிகலா என்ற மனைவியும், விஷால் (வயது 16). ரித்திஷ் (12) ஆகிய 2 மகன்களும் இருந்தனர். பாஸ்கர் சவுதியில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். பெரம்பலூரில் தனியார் பள்ளி ஒன்றில் விஷால் பிளஸ்-1-ம், ரித்திஷ் 6-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    நேற்று காலை சசிகலா அதே பகுதியில் உள்ள தனது வயலில் பயிரிட்டுள்ள மக்காச்சோளத்திற்கு மருந்து தெளிக்க மகன் விஷாலுடன் சென்றுள்ளார். அங்கு மருந்தில் கலக்குவதற்காக குடத்தில் தண்ணீர் எடுத்து வர விஷால் கிணற்றில் இறங்கியுள்ளார். அப்போது விஷால் கால் தடுமாறி கிணற்றில் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாததால் விஷால் கிணற்றில் தண்ணீரில் தத்தளித்தவாறு உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை கண்ட அவரது தாயார் கிணற்றில் தவறி விழுந்த மகனை காப்பாற்றுமாறு கதறி அழுதவாறு வயலில் வேலை செய்தவர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து வயலில் வேலை செய்தவர்கள் கிணற்றில் குதித்து விஷாலை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் விஷால் கிணற்று தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக சசிகலா கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாயி வீட்டில் 20 பவுன் நகை களை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    • வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு சென்றனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சிறுகன்பூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 47), விவசாயி. இவரது மனைவி தேவகி (40). இந்தநிலையில் கணவன்-மனைவி 2 பேரும் நேற்று காலை வழக்கம்போல் தங்களது வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு சென்றனர். பின்னர் வயலில் வேலையை முடித்து விட்டு மதியம் 2 மணியளவில் வீட்டிற்கு சென்றனர்.

    இதையடுத்து வீட்டின் அருகே உள்ள உறவினர் இல்ல திருமண விழாவுக்கு செல்வதற்காக தேவகி பீரோவில் வைத்திருந்த நகைகளை எடுக்க முயன்றார். அப்போது அங்கு வைத்திருந்த 20 பவுன் நகைகள் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் இந்த நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து தேவகி அளித்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது
    • ஆசிரியர் கொலை வழக்கில்

    பெரம்பலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் செட்டியார்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது58). இவர் பெரம்பலூர் ஸ்ரீபுரந்தான் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

    கடந்த 2021-ம் ஆண்டு அக்ேடாபர் மாதம் 5-ந் தேதி செல்வராஜ் இருசக்கரவாகனத்தில் ஸ்ரீபுரந்தான் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

    உடையார்பாளையம் சோழன்குறிச்சி பிரிவு சாலையில் வந்த போது ஜெயங்கொண்டம் காமராஜ்புரத்தை சேர்ந்த வெங்கடேசன்(24) என்பவர் செல்வராஜை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் துடிதுடித்து உயிரிழந்தார்.

    அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் இன்று நீதிபதி கிறிஸ்டோபர் தீர்ப்பு வழங்கினார். அதில் வெங்கடேசனுக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

    அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் சின்னதம்பி ஆஜராகினார்.

    • வாகன விபத்தில் விவசாயி பலியானார்.
    • மொபட் மீது கார் மோதியது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, இரூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 74), விவசாயி. இவர் தனது இரு சக்கர வாகனத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரை பிரிவு சாலை நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கார் ஒன்று இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • போலீஸ் சார்பில் நடந்தது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூர் கிராமத்தில் போலீசார் சார்பில் 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பெரம்பலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துணை சூப்பிரண்டு வளவன் கருத்துகளை எடுத்துரைத்தார். அப்போது சமூக நீதி மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும், சாதிய ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம் உருவாக்க வேண்டும், பெண்களுக்கு உயர்கல்வி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துக் கூறினார்.

    • 2 விவசாயிகள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு

    பெரம்பலூர்

    திருமானூர் அருகே குருவாடி கிராமத்திற்கும், தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் கிராமத்திற்கும் இடையே செல்லக்கூடிய கொள்ளிடம் ஆற்றில் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையொட்டி அப்பகுதியில் நில அளவிடும் பணிைய அதிகாரிகள் நேற்று மேற்கொண்டனர். இதற்கு குருவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் ராட்சத ஆழ்துளை கிணறு அமைத்தால் நீராதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே இப்பகுதியில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்ட வேண்டும் என வலியுறுத்தினர்.

    கிராம மக்களின் போராட்டம் குறித்து தகவல் அறிந்த தூத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்தநிலையில் ராட்சத ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளான சுயராஜன் (வயது 52), மகேந்திரன் (41) ஆகியோர் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தடுத்து நிறுத்தினர். பின்னர் தீக்குளிக்க முயன்ற 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 41 ஆண்கள், 22 பெண்கள் என மொத்தம் 63 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் மின்கம்பத்தில் கார் மோதிய விபத்தில், மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர் பரிதாபமாக பலியானார்
    • உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

    பெரம்பலூர்,

    திண்டுக்கல் லட்சுமிசுந்தரம் காலனியை சேர்ந்தவர் தெய்வேந்திரன். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகிவிட்டது. இதில் மூத்த மகன் ஸ்ரீதர் (வயது 34). இவர் புதுச்சேரி-கடலூர் சாலையில் பிள்ளையார் குப்பம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சமூக மருத்துவத்திற்கான துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இதையொட்டி அந்த மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள பணியாளர் குடியிருப்பில் அவர் தங்கியிருந்தார். ஸ்ரீதர் தனக்கு விடுமுறை கிடைக்கும்போது புதுச்சேரியில் இருந்து திண்டுக்கல்லுக்கு சென்று, தனது மனைவி மற்றும் பெற்றோரை பார்த்துவிட்டு வருவது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பணி முடிந்த பின்னர், இரவில் திண்டுக்கல் செல்வதற்காக ஸ்ரீதர் தனது காரில் புறப்பட்டார். இரவு 10 மணியளவில் அவரது கார் பெரம்பலூர் புறநகர் துறைமங்கலம் நான்கு ரோடு சந்திப்பில் உள்ள உயர்மட்ட பாலத்தின் வழியாக சென்று, மாவட்ட அரசு கண் மருத்துவமனை அருகே வந்தது. அப்போது ஸ்ரீதரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது. இதில் படுகாயமடைந்த ஸ்ரீதர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர்.

    மேலும் ஸ்ரீதரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து பற்றி ஸ்ரீதரின் குடும்பத்திற்கு போலீசார் தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து ஸ்ரீதரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ. 4.42 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது
    • அமைச்சர் சிவசங்கர் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நன்னை, வடக்கலூர், கிழுமத்தூர், மிளகாநத்தம், கீழப்புலியூர், மழவராயநல்லூர் ஆகிய கிராமங்களில் பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுதல், சிமெண்ட் சாலை அமைத்தல், கதிரடிக்கும் களம் அமைத்தல் போன்ற ரூ. 4.42 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர்சிவசங்கர், மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தலைமையில் அடிக்கல் நாட்டினார்.

    இந்நிகழ்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பாண்டியண், மேலாண் இயக்குநர் (த.அ.போ.(கும்ப)லிட்,கும்பகோணம் மோகன், பொது மேலாளர் (த.அ.போ.(கும்ப)லிட்)திருச்சி மண்டலம் சக்திவேல், வேப்பூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பிரபா செல்லப்பிள்ளை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன், உதவி பொறியாளர் சதீஷ்குமார், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார்

    உள்ளிட்ட அலுவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் நன்னை சின்னு, கீழப்புலியூர் சாந்தி செல்வராஜ், ஒகளூர் அன்பழகன், வசிஷ்டபரம் பன்னீர்செல்வம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகள் பலர் 

    • பெரம்பலூரில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட பயிற்சி தொடக்க விழா நடந்தது
    • புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட ஒருங்கி ணைப்பாளர் குணசேகரன் தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே வடக்குமாதேவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்ப ள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட பயிற்சி தொடக்க விழா நடந்தது.

    பெரம்பலூர் வட்டார வளமைய மேற்பார்வை யாளர் தேவகி தலைமை வகித்தார். புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட ஒருங்கி ணைப்பாளர் குணசேகரன் தொடங்கி வைத்து பேசினார்.

    ஆசிரியர் பயிற்றுநர்கள் ரமேசு கல்வி கற்க வயது ஒரு தடை இல்லை, நீங்களும் எளிதில் கற்றுக்கொ ள்ளலாம் என தெரிவித்தார். வடக்குமாதேவி பள்ளி ஆசிரிய பயிற்றுநர் சுப்ரமணியன் அனைத்து கற்போர்களும் முதல் நாள் உள்ள ஆர்வம் போல் தொடர்ச்சியாக வந்தால் மட்டுமே நமது இலக்கை எட்ட முடியும் என்று தெரிவித்தார். முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் சசிநர்மதா வரவேற்றார். முடிவில் பள்ளியின் இடைநிலையாசிரியர் நாகராஜ் நன்றி கூறினார்.பயிற்சிபயிற்சி

    • காளிங்கராயநல்லூர் கிராம மன்னாதசுவாமி கோவில் தீமிதி திருவிழா
    • தீமிதி விழாவை முன்னிட்டு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர் அருகேயுள்ள காளிங்கரா யநல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பச்சைய ம்மன் சமேத மன்னாதசுவாமி திருக்கோயில் அமைந்து ள்ளது .

    இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் தீமிதி திருவிழா நடப்பது வழக்கம்.

    அதுபோல இந்த ஆண்டும் கடந்த வெள்ளி க்கிழமை காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் திமிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், பன்னீர் சந்தனம் மஞ்சள் உள்ளிட்ட மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு தீபாரா தனை நடைபெற்றது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்தி கட ன்களை செலுத்தினார்கள்.

    வேப்பூர் தீயணைப்பு துறையினர் மற்றும் குன்னம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு இருந்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அசலா ம்பிகை, தக்கார் சுசீலா, தர்மகர்த்தாக்கள் ஆசை த்தம்பி, காசிநாதன், பழனிமுத்து, வெங்கடேசன், கருணாநிதி, தேவகி சீனிவா சன், அண்ணாதுரை, கோவி ந்தசாமி , வசிஷ்டபரம் ஊராட்சி மன்றத் தலைவர் கணிமொழி பன்னீ ர்செல்வம் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மத்திய அரசை கண்டித்து நடைபெற்றது

    பெரம்பலூர்

    இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு இந்தியில் பெயர் மாற்றம் செய்து மசோதா தாக்கல் செய்துள்ளது. இதனை திரும்பப்பெற வலியுறுத்தி பெரம்பலூர் பார் அசோசியேஷன் சார்பில் பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து கலெக்டர் அலுவலகம் எதிரே வக்கீல்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு பெரம்பலூர் பார் அசோசியேஷன் தலைவர் வள்ளுவன் நம்பி தலைமை தாங்கினார். உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டமைப்பின் ஆலோசகர் வாசுதேவன் தொடங்கி வைத்து பேசினார். இதில் பெரம்பலூர் பார் அசோசியேஷன் வக்கீல்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர். வக்கீல்கள் போராட்டத்தின் காரணமாக நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.

    • பெரம்பலூரில் கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது
    • 7-ந் தேதி நடக்கிறது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தமிழக அரசின் ஆணைப்படி மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்தும் கல்வி கடன் முகாம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 7-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. இந்த முகாமில் தொழில்முறை படிப்பு பயிலும் மற்றும் கல்வி கடன் பெற விரும்பும் அனைத்து மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாமில் கலந்துகொள்ள வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பான் கார்டு, ஆதார் கார்டு ஆவணங்களையும், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் மாணவர்களின் 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12-ம் வகுப்பு மாற்று சான்றிதழ், குடும்ப வருமான சான்று, கல்லூரி சேர்க்கைக்கான சான்று, கல்விசான்று, கல்லூரி கட்டண அறிக்கை ஆகிய ஆவணங்களின் அசல் மற்றும் நகல் சான்றிதழை கொண்டு வர வேண்டும். கல்விக்கடன் முகாமிற்கு வருவதற்கு முன்பாக https://www.jansamarth.in இணையதளத்தில் விண்ணப்பித்து, விண்ணப்பித்த படிவத்தின் நகலை கொண்டு வர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×