என் மலர்
பெரம்பலூர்
- போலீசாருடன் கலந்துரையாடல் நடந்தது.
- போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி நடத்தினார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட போலீசாரின் நலன் மற்றும் போலீசாரை மேம்படுத்தும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி 'காபி வித் கான்ஸ்டபிள்' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை போலீஸ் அலுவலகத்தில் நடத்தினார்.
இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆயுதப்படை மற்றும் சட்டம்- ஒழுங்கு, சிறப்பு பிரிவு ஆகியவற்றில் பணிபுரியும் போலீஸ்காரர் முதல் ஏட்டு வரை உள்ளவர்களில் எஸ் என்ற ஆங்கில எழுத்தில் பெயர் தொடங்கும் போலீசார்களில் தோராயமாக 15 போலீசாரை தேர்ந்தெடுத்து மாவட்ட போலீசாரை மேம்படுத்தும் வகையில் அவர்களுடன் போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி கலந்துரையாடல் நடத்தினார்.
மேலும் அவர் இந்த நிகழ்ச்சியானது ஒவ்வொரு வாரமும் நடைபெறும் என்றும் தெரிவித்தார். இந்த கலந்துரையாடல் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் போலீசாரின் குறை, நிறைகள் மற்றும் மாவட்ட போலீசாரை மேம்படுத்தும் ஆலோசனைகள் பெறப்பட்டு, அவை நடைமுறைபடுத்தப்பட உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் போலீசாரின் மனநிலையை அறிந்து, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா எம்.பி. உருவப்படங்கள் எரிக்கப்பட்டன.
- சனாதனம் குறித்து பேசிய சம்பவத்தில்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் செல்வராஜ் தலைமையில், அக்கட்சியை சேர்ந்த சிலர் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு உள்ள சாலைக்கு வந்தனர். பின்னர் அவர்கள், சனாதனம் குறித்து தவறாக பேசியதாக தி.மு.க. இளைஞரணி செயலாளரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் உருவபொம்மையையும், உருவப்படத்தையும் மற்றும் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி.யின் உருவப்படத்தையும் கொண்டு வந்து, தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
- 2-ம் நிலை காவலர்-தீயணைப்பாளர் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி நடைபெறுகிறது
- பெரம்பலூரில் 11-ந்தேதி தொடங்குகிறது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வேலை நாடும் இளைஞர்கள் படித்து பயன் பெறும் வகையில் தன்னார்வ பயிலும் வட்டம் இயங்கி வருகிறது. இவ்வட்டத்தின் சார்பாக பல்வேறு வகையான போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை) இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான 3,359 காலிப்பணியிடம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. வருகிற 17-ந்தேதி இத்தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாளாகும். இத்தேர்விற்கான கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், வயது வரம்பு 18 வயது முதல் 26 வயது வரை ஆகும். வயது வரம்பு சலுகை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 28 வயது, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் 31 வயது, ஆதரவற்ற விதவை 37 வயது, முன்னாள் ராணுவத்தினர் 47 வயது ஆகும். இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 11-ந்தேதி காலை 10 மணியளவில் நேரடியாக தொடங்கப்படவுள்ளது. எனவே இத்தேர்விற்கு, தயாராகி கொண்டிருக்கும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த தேர்வர்கள் தங்களின் பெயர் மற்றும் செல்போன் எண்ணை பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 9499055913 என்ற செல்போன் எண் மூலமாகவோ அணுகி பதிவு செய்து பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு, மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
- கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி
பெரம்பலூர்:
பெரம்பலூர் மறைந்த முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் பெரம்பலூர் ரோவர் கல்விக்குழுமம் ஆகியவை இணைந்து சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமினை நாளை (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை பெரம்பலூர் ரோவர் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் டயர் தொழிற்சாலை, விரைவில் தொடங்கப்படவுள்ள கோத்தாரி பீனிக்ஸ் நிறுவனம் உள்ளிட்டவைகளும் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான பணி வாய்ப்புகள் வழங்க உள்ளார்கள். டிரைவர், தையல், 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ., டிப்ளமோ, அக்ரி, நர்சிங், பார்மஸி, பி.இ., பி.டெக், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் ஆசிரியர் கல்வி தகுதியுடையவர்களை தேர்வு செய்யவுள்ளனர். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலை நாடுனர்கள் தங்களது ஆதார் எண், சுயவிவரம் மற்றும் கல்வி சான்றுகளுடன் கலந்து கொள்ளலாம்.
- பா.ஜ.க. போராட்டம் நடைபெற்றது
- தி.மு.க. அரசை கண்டித்து நடைபெற்றது
பெரம்பலூர்:
பெரம்பலூரில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பட்டியல் அணி சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டமும், பிச்சை எடுத்து தி.மு.க. அரசுக்கு நிதி அனுப்பும் போரா ட்டமும் புது பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் நடைபெற்றது.
போராட்டத்திற்கு பட்டியல் அணி மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் செல்வ ராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பார்வையாளர் சுரேஷ் பரமசிவம் கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்து பேசி னார்.
தொடர்ந்து தமிழக அரசை கண்டித்து கோஷமி ட்டனர். பின்னர் பட்டியல் அணி பாஜக நிர்வாகிகள் கையில் ஏந்தி பிச்சை எடு த்து திமுக அரசுக்கு நிதி அனுப்பி வைப்பதற்காக நிதியை திரட்டினர்.
இதில் பட்டியல் அணி மாநில செயலாளர் பிச்சை முத்து, மாநில பொதுகுழு உறுப்பினர் அசோகன், பொது செயலாளர் முத்த மிழ் செல்வன், நகர தலைவர் சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட பொதுசெயலாளர் ஜெயபால் வரவேற்றார். முடிவில் ஓபிசி மாவட்ட பொதுசெயலாளர் உதயகுமார் நன்றி கூறினார்.
- வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர்.
- கோரிக்கை நிறைவேறும் வரை நடைபெறும்
பெரம்பலூர்
பெரம்பலூர் கோர்ட்டில் தாக்கல் செய்யும் அனைத்து மனுக்களும், வழக்கு ஆவணங்களும் ஆன்லைனில் இ-பைலிங் தாக்கல் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இது உடனடியாக செயல்பாட்டுக்கு வருவது மிக கடினமாக இருப்பதால் வக்கீல்களின் நலன் கருதியும், நீதிமன்ற பணிகள் பாதிக்காமல் இருப்பதற்காகவும் இ-பைலிங் உடனடியாக கட்டாயப்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திட வேண்டும் என்றும், இ-பைலிங் தாக்கல் முறையை தற்காலிகமாக நிறுத்தும் வரை பெரம்பலூர் பார் அசோசியேஷன் (குற்றவியல்) தலைவர் வள்ளுவன் நம்பி தலைமையிலும் வக்கீல்களும், பெரம்பலூர் அட்வகேட் அசோசியேஷன் தலைவர் மணிவண்ணன் தலைமையிலும் வக்கீல்களும் நேற்று முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் பணிகளை புறக்கணிக்க தொடங்கினர். இதனால் கோர்ட்டு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. கோரிக்கை நிறைவேறும் வரை 2 அசோசியேஷனை சேர்ந்த வக்கீல்கள் தொடர்ந்து கோர்ட்டு பணிகளை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
- இலவச முயல் வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது
- 12- ந் தேதி நடைபெறுகிறது
பெரம்பலூர்:
பெரம்பலூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் வரும் 12- ந் தேதி நடைபெறும் முயல் வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாமில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து அம்மைய தலைவர் டாக்டர் சுரேஷ்கு மார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பெரம்ப லூர் அருகே செங்குணம் - கைகாட்டி எதிரே உள்ள கால்நடை மருத்துவ பல்க லைக்கழக ஆராய்ச்சி மைய த்தில் முயல் வளர்ப்பு குறி த்த இலவச நாள் பயிற்சி முகாம் வரும் 12-ந் தேதி நடைபெறுகிறது.
இதில் முயல் இனங்கள் மற்றும் இனப்பெருக்க மேலாண்மை, தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, பராமரி க்கும் முறை மற்றும் நோய்த்த டுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பயிற்சியில் சேர விரும்பு வோர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தி ற்கு நேரிலோ அல்லது செல்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெயர் பதிவு செய்து பயிற்சி பெற்று பயன்பெறலாம். பயிற்சியில் கலந்து கொள்ள வரும் போது ஆதார் அட்டை நகல் எடுத்து வரவேண்டும் என தெரிவித்து உள்ளார்.
- வாகன விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
- ஒருவர் படுகாயம் அடைந்தார்
பெரம்பலூர்:
அரியலூர் மாவட்டம் கொடுங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 23). இவரது உறவினரான ஆண்டிமடம் மேற்கு தெருவை சேர்ந்த தயாநிதி (20). கல்லூரி மாணவர்களான இவர்கள், அரியலூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். வாகனத்தை சக்திவேல் ஓட்டி சென்றார்.
பேரழி சுங்கச்சாவடி அருகே முன்னால் சென்று கொண்டு இருந்த லாரியை சக்திவேல் கடக்க முயன்றனர். அப்போது எதிரே அரியலூர் மாவட்டம் கடுகூர் கிராமம் நடுத்தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளி சம்பத் (65) என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள்களில் இருந்து தூக்கி வீசப்பட்ட சம்பத், சக்திவேல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கால் முறிவு ஏற்பட்ட தயாநிதியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- தீராத வயிற்று வலியால் அவதியடைந்த
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கோவிந்தராஜ பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 31), கொத்தனார். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட திருநாவுக்கரசு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி தீரவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த அவர் விஷ விதைகளை தின்றார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி திருநாவுக்கரசு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
- சக்கர நாற்காலி 3 நபர்களுக்கு வழங்கப்பட்டது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை ஆகியவற்றின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
முகாமிற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முகாமில் அரசு மருத்துவமனை மருத்துவர்களான எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர், மனநல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், கண் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து அறுவை சிகிச்சை தேவைப்படுவோர்கள், அடையாள அட்டை மற்றும் உதவி உபகரணங்களுக்காக பரிந்துரை செய்தனா்.
இதில் 25 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டன. 4 மாற்றுத்திறனாளிகளுக்கு மறு மதிப்பீடு செய்யப்பட்டது. சி.பி. நாற்காலி ஒரு நபருக்கும், சக்கர நாற்காலி 3 நபர்களுக்கும், நடைபயிற்சி வண்டி ஒரு நபருக்கும் வழங்க தேர்வு செய்யப்பட்டனர்.
- பா.ஜ.க. பட்டியல் அணியினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்
பெரம்பலூர்
பெரம்பலூர் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பட்டியல் அணி சார்பில், தமிழகத்தில் உள்ள பட்டியல் இன சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு ஒதுக்கிய நிதியை பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பிய தி.மு.க. அரசை கண்டித்தும், உண்டியல் மூலம் யாசகமாக கிடைக்கும் நிதியை வசூலித்து தமிழக அரசிற்கு அளிக்கும் நூதன போராட்டம் பெரம்லூர் புதிய பஸ் நிலையம் முன்பு நடந்தது. இந்த நூதன போராட்டத்திற்கு பா.ஜனதா பட்டியல் அணி மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பா.ஜனதா தலைவர் செல்வராஜ் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில், பா.ஜனதாவினர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
- வக்கீல்கள் இன்று முதல் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுகிறார்கள்.
- இ-பைலிங் நடைமுறைக்கு கால அவகாசம் வழங்கக்கோரி
பெரம்பலூர்
பெரம்பலூரில் அட்வகேட்ஸ் அசோசியேசன் அமைப்பின் அவசர பொதுக்குழுக்கூட்டம் அதன் தலைவர் மணிவண்ணன் தலைமையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. இதில் செயலாளர் சிவசங்கரன், பொருளாளர் மணிகண்டன் மற்றும் திரளான வக்கீல்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கடந்த 1-ந் தேதி முதல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் விபத்து இழப்பீடு கோரும் மனு மற்றும் இந்து திருமணம் தொடர்பான மனு உள்பட அனைத்து மனுக்களும் ஆன்லைன் முறையில் மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும் என்ற நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. போதிய காலஅவகாசம் அளிக்காமலும், இந்த நடைமுறையில் உள்ள நிறை மற்றும் குறைகள் குறித்து வக்கீல்களிடம் கருத்து கேட்காமலும் நீதிமன்றத்தில் இதற்கான முழுமையாக அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்காமலும், ஆன்லைன் மூலம் இ-பைலிங் முறையை அவசரமாக நடைமுறைக்கு கொண்டு வருவதால், வழக்கு நடத்துபவர்களும், வக்கீல்களும் கடுமையான பாதிக்கப்படுவார்கள். எனவே உரிய கால அவகாசம் வழங்கி இதனை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், இதற்கான முழுமையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும் வரை முன்பு இருந்த நடைமுறையையே தொடர அனுமதிக்க வேண்டும் என்றும், இந்த கோரிக்கைகளை நிறைவேற்றப்படும் வரை இன்று (வியாழக்கிழமை) முதல் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து நீதிமன்ற பணிகளில் இருந்தும் விலகி இருப்பது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.






