என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • பெரம்பலூர் மாவட்டம் பேரளி, வாலிகண்டபுரம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் நிறுத்தம் என்று அறிவிப்பு

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மாவட்டம், பேரளி துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பேரளி, அசூர், சித்தளி, பீல்வாடி, ஒதியம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், கே.புதூர், எஸ்.குடிக்காடு, வாலிகண்டபுரம், கல்பாடி, க.எறையூர், நெடுவாசல், கவுல்பாளையம், மருவத்தூர், குரும்பபாளையம், செங்குணம் ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 வரை மின்சாரம் வினியோகம் இருக்காது, என்று பெரம்பலூர் நகர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூரில் போலீசாரின் சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது
    • பொதுமக்களிடம் இருந்து 35 மனுக்கள் பெறப்பட்டன

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறப்பு குறைதீர் முகாம் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். முகாமில் மொத்தம் 35 மனுக்கள் பெறப்பட்டன. பின்னர் இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறும். இந்த முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் மாவட்ட போலீஸ் அலுவலகம் வருவதற்கு ஏதுவாக போலீசார் சார்பில் பாலக்கரையில் இருந்து போலீஸ் அலுவலகத்திற்கும், மீண்டும் போலீஸ் அலுவலகத்திலிருந்து புதிய பஸ் நிலையம் செல்ல பஸ் வசதி செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்தார்.

    • பெரம்பலூரில் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • சட்டவிரோத மது விற்பனையை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அருகே உள்ள முருக்கன்குடி கிராமத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் பல்வேறு புகார் தெரிவித்து வந்தனர். மேலும் மது பிரியர்களால் அப்பகுதி பெண்கள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். குறிப்பாக பள்ளி செல்லும் மாணவிகள் மற்றும் அந்த வழியாக செல்லும் பெண்களை மதுபிரியர்கள் கேலி, கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் முருக்கன்குடி கிராமத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையை கண்டித்து எறையூர் சர்க்கரை ஆலை முதல் பெரம்பலூர் நோக்கி செல்லும் அரசு பேருந்தை தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மங்களமேடு உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு சீராளன், மங்களமேடு இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.மேலும் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். பொதுமக்களின்மறியல் போராட்டத்தால் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பெரம்பலூர் சாலைகளைஆக்கிரமித்து நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோக்கள்
    • போக்குவரத்து நெரிசலால் அவதியுறும் வாகன ஓட்டிகள்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் நகரைச் சுற்றி ஏராளமான ஷேர் ஆட்டோக்கள் ஓடுகின்றன. நகரத்தின் போக்குவரத்து விரிவடைந்து வருதால், தற்போது பெரம்லூர் பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன.குறிப்பாக பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து முக்கிய சாலை சந்திப்புகளான வடக்குமாதேவி, தண்ணீர் பந்தல், எளம்பலூர் பகுதிகளுக்கு அதிகளவில் ஷேர் ஆட்டோக்கள் இயங்குகிறது.இந்த ஷேர் ஆட்டோக்களுக்கு உரிய வகையில் பார்க்கிங் வசதிகளோ, வேக கட்டுப்பாடோ கண்காணிக்கப்படுவது இல்லை. இதனால் சாலைகளின் ஓரங்களிலேயே ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் ஆட்டோக்கள் நிறுத்தப்படும் இடத்தை கடக்கும் போது, இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.குறிப்பாக புதிய பேருந்து நிலையத்தின் எதிரிலேயே வரிசையாக ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால், பேருந்து நிலையத்திற்குள் இருந்து வரும் பேருந்தை திரும்பி செல்வதற்கு ஓட்டுனர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.மேலும் ஷேர் ஆட்டோக்கள் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் அதிவேகமாக இயக்கப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாகவே ஆட்களை ஏற்றிச் செல்கிறது.இது குறித்து மாவட்ட கலெக்டர், ஆர்டிஓ, போக்குவரத்து போலீஸ் ஆகிய அலுவலகங்களில் இது குறித்து ஏராளமான மனு கொடுக்கப்பட்டிருந்தாலும், எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.இது பற்றி சமூக ஆர்வலர்கள் கூறும்போது,பெரம்பலூரில் ஓடும் ஷேர் ஆட்டோக்கள் அனைத்திலும் , அதிகளவில் ஆட்கள் ஏற்றப்படுகிறது. மேலும் ஸ்பீக்கரில் பாடல்களை அலற விட்டு, செல்கிறது. சரியான பராமரிப்பு இல்லாதததால் அதிகளவு புகையை வெளியிடுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஷேர் ஆட்டோக்களை கட்டப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.இது குறித்து பெரம்பலூர் ஆர்டிஓ பிரபாகரன் கூறும்போது,விதிமுறைகளை மீறும் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுத்து கொண்டு தான் இருக்கிறோம். புதிதாக எந்த ஷேர் ஆட்டோவிற்கும் பர்மிட் தரப்படுவதில்லை. தற்போதுள்ள குறைகளை களைய உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று அவர் கூறினார்.

    • பெரம்பலூரில் கோவில் பூட்டை உடைத்து அம்மனின் தாலி, குத்துவிளக்குகள், உண்டியல் திருட்டு நடைபெற்று உள்ளது
    • திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் புறநகர் திருச்சி-சென்னை புறவழிச்சாலையில் தனியார் பருத்தி ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு பின்புறம், எளம்பலூரில் இருந்து செங்குணம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் மகா வராகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இரவு பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் கிடந்த மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்ட குண்டுமணியுடன் சேர்ந்த 1 பவுன் தாலி, 3 அடி உயர பித்தளை குத்து விளக்குகள் 2 மற்றும் பொருத்தப்படாத உண்டியலை திருடிச்சென்றுள்ளனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரம்பலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
    • துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக அறிவிப்பு

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்ச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பெரம்பலூர் நகர பகுதிகளான புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின்நகர், நான்குரோடு, அருமடல் பிரிவுசாலை, பாலக்கரை, எளம்பலூர் சாலை, ஆத்தூர்சாலை, வடக்குமாதவி சாலை, துறையூர் சாலை, அரணாரை, மாவட்ட அரசு மருத்துவமனை, ஆலம்பாடி ரோடு, அண்ணாநகர், கே.கே.நகர், அபிராமபுரம், வெங்கடேசபுரம் மற்றும் கிராமிய பகுதிகளான செங்குணம், அருமடல், போலீஸ் குடியிருப்பு, எளம்பலூர், சிட்கோ, இந்திராநகர், சமத்துவபுரம் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூர் அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்த 3 மாத குழந்தை உடலை பொது நல சேவகர்கள் அடக்கம் செய்தனர்
    • விபத்தில் சிக்கிய தம்பதி மருத்துவமனையில் கவலைக்கிடம்

    பெரம்பலூர்,

    சென்னை புழல் பகுதியை சேர்ந்தவர்கள் கணேசன் (வயது 34) - பத்மா (32) தம்பதி. இவர்களின் குழந்தைகள் தஷ்வந்த் (4) தீக்சித் (85 நாள் குழந்தை) இந்நிலையில் கணேசன் தனது மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் காரில் திருப்பரங்குனறம் கோயிலிலுக்கு சென்று விட்டு கடந்த 10-ந்தேதி சென்னை திரும்பிக் கொண்டி ருந்தனர்.பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் கேட் அருகே சென்ற போது கார் சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கணேசன், பத்மா உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். உறவி னர்கள் மற்றும் குடும்பத்தினர் பெரம்பலூர் அரசு மருத்துவம னையில் சிகிச்சை பெறுகின்றனர்.கணேசன், பத்மா திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலை யில் விபத்தில் காயமடைந்த 85 நாள் குழந்தை தீக்சித் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண் செல்லும் வழியிலேயே உயிரி ழந்தது.பெற்றோர் திருச்சி அரசு மருத்துவமனையில் கவலைக்கி டமான நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் குழந்தை யின் உடல் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சவக்கிடங்கில் 2 நாட்களாக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள் குழந்தையின் உடலை பெரம்பலூரிலேயே அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.இது குறித்து அறிந்த உதிரம் நண்பர்கள் குழு தலைவர் ஜெயராமன் உள்ளிட்டோர் குழந்தையின் உடலை தங்களது சொந்த செலவில் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை அருகேயுள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர். மனிதநே யமிக்க இந்த செயலுக்கு குழந்தை யின் உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.

    • அகரம்சீகூரில் செல்போன் கடை உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
    • ரூ.2500 லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டார்

    அகரம்சீகூர்,

    கடலூர் மாவட்டம், திட்டக்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் திட்டக்குடியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.இந்நிலையில் இவரது தந்தை முத்துராமலிங்கத்திற்கு சொந்தமான நிலம் பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூரில் உள்ளது. அந்த நிலத்தை தனது பெயருக்கு மாற்றம் செய்வதற்காக ஆன்லைன் முறையில் விண்ணப்பித்தார்.இதையடுத்து அதற்கான சான்றில் கையெழுத்து பெறுவது தொடர்பாக அகரம்சீகூர் கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் (வயது 29) ராமகிருஷ்ணன் அணுகியுள்ளார். அப்போது அதற்கு பிரகாஷ் ரூ.2,500 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ராமகிருஷ்ணன் இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷை கையும், களவுமாக பிடித்து கைது செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர்.போலீசாரின் அறிவுறுத்தலின்படி நேற்று மதியம் அகரம்சீகூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்த ராமகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷிடம் ரூ.2,500-ஐ கொடுத்தார். அதனை பிரகாஷ் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு ஹேமசித்ரா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பிரகாஷை பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அகரம்சீகூர் அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் சங்கிலி பறித்த ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்
    • தப்பியோடிய மற்றோருவரை மங்களமேடு போலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் அருகே உள்ள வடக்கலூர் அகரம் கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சிந்துமதி(வயது 27). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் வெளிக்கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர், சிந்துநதி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றனர்.இதனால் திடுக்கிட்டு கண் விழித்த சிந்துமதி, மர்ம நபர்களை கண்டு சத்தம் போட்டார். இதையடுத்து அக்கம், பக்கத்தினர் அங்கு வந்து, சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடிய 2 பேரையும் பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் சிக்கினார். மற்றொருவர் தப்பி ஓடி விட்டார்.இது குறித்து மங்களமேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீசாரிடம், அந்த நபரை பொதுமக்கள் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், கள்ளக்குறிச்சி அருகே உள்ள அலங்கரி கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி(57) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அய்யாசாமியை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய மற்றோருவரை மங்களமேடு போலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கல்லூரி மாணவியை வாலிபர் கடத்தி சென்றதாக பெற்றோர் போலீசாரிடம் புகார்
    • 17 வயது கல்லூரி மாணவியை வாலிபரிடம் இருந்து மீட்ட போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கேட் பகுதியை சேர்ந்தவர் நல்லுசாமி. இவரது மகன் விக்னேஷ் (வயது 27). இவர் விஜயகோபாலபுரத்தில் உள்ள ஒரு தனியார் டயர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர், 17 வயதுடைய கல்லூரி மாணவியை காதலித்து வந்ததாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை கடத்தி சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த மாணவியின் தாய் பாடாலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசையும், மாணவியையும் மீட்டு அழைத்து வந்தனர். பின்னர் விக்னேசை போலீசார் கைது செய்து, பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். மாணவி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

    • பெரம்பலூர் துறைமங்கலத்தில் கோவிலில் உண்டியல் திருட்டு போனது
    • பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

     பெரம்பலூர்,

    பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் மூன்று ரோட்டில் இருந்து கவுல்பாளையம் செல்லும் சாலையில் வீர ரெட்டியார் அம்பலக்காரர் கோவில் உள்ளது. இந்த கோவில் கதவின் பூட்டு நேற்று உடைக்கப்பட்டிருந்தது. மேலும் கோவில் கருவறையில் பொருத்தப்படாமல் இருந்த உண்டியல் திருட்டு போயிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • அங்கன்வாடி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது
    • பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்த விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் காலனி தெருவை சேர்ந்தவர் உதயசூரியன். இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். உதயசூரியன் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் தங்கியிருந்து சமையல் வேலை செய்து வருகிறார். கோமதி மேலப்புலியூர் அங்கன்வாடியில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் கோமதி தனது வீட்டை பூட்டி விட்டு மகன்களை அழைத்துக்கொண்டு திருச்சியில் தனது அக்காளின் மருமகளுக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். அங்கிருந்து நேற்று காலை அவர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உடனடியாக அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரம், 2 பவுன் நகை திருட்டு போயிருந்தது. இது குறித்து அவர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனா். இதற்கிடையே போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×