search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலைகளைஆக்கிரமித்து நிறுத்தப்படும்  ஷேர் ஆட்டோக்கள்
    X

    சாலைகளைஆக்கிரமித்து நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோக்கள்

    • பெரம்பலூர் சாலைகளைஆக்கிரமித்து நிறுத்தப்படும் ஷேர் ஆட்டோக்கள்
    • போக்குவரத்து நெரிசலால் அவதியுறும் வாகன ஓட்டிகள்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் நகரைச் சுற்றி ஏராளமான ஷேர் ஆட்டோக்கள் ஓடுகின்றன. நகரத்தின் போக்குவரத்து விரிவடைந்து வருதால், தற்போது பெரம்லூர் பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன.குறிப்பாக பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து முக்கிய சாலை சந்திப்புகளான வடக்குமாதேவி, தண்ணீர் பந்தல், எளம்பலூர் பகுதிகளுக்கு அதிகளவில் ஷேர் ஆட்டோக்கள் இயங்குகிறது.இந்த ஷேர் ஆட்டோக்களுக்கு உரிய வகையில் பார்க்கிங் வசதிகளோ, வேக கட்டுப்பாடோ கண்காணிக்கப்படுவது இல்லை. இதனால் சாலைகளின் ஓரங்களிலேயே ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் ஆட்டோக்கள் நிறுத்தப்படும் இடத்தை கடக்கும் போது, இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.குறிப்பாக புதிய பேருந்து நிலையத்தின் எதிரிலேயே வரிசையாக ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால், பேருந்து நிலையத்திற்குள் இருந்து வரும் பேருந்தை திரும்பி செல்வதற்கு ஓட்டுனர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.மேலும் ஷேர் ஆட்டோக்கள் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் அதிவேகமாக இயக்கப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாகவே ஆட்களை ஏற்றிச் செல்கிறது.இது குறித்து மாவட்ட கலெக்டர், ஆர்டிஓ, போக்குவரத்து போலீஸ் ஆகிய அலுவலகங்களில் இது குறித்து ஏராளமான மனு கொடுக்கப்பட்டிருந்தாலும், எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.இது பற்றி சமூக ஆர்வலர்கள் கூறும்போது,பெரம்பலூரில் ஓடும் ஷேர் ஆட்டோக்கள் அனைத்திலும் , அதிகளவில் ஆட்கள் ஏற்றப்படுகிறது. மேலும் ஸ்பீக்கரில் பாடல்களை அலற விட்டு, செல்கிறது. சரியான பராமரிப்பு இல்லாதததால் அதிகளவு புகையை வெளியிடுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஷேர் ஆட்டோக்களை கட்டப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.இது குறித்து பெரம்பலூர் ஆர்டிஓ பிரபாகரன் கூறும்போது,விதிமுறைகளை மீறும் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுத்து கொண்டு தான் இருக்கிறோம். புதிதாக எந்த ஷேர் ஆட்டோவிற்கும் பர்மிட் தரப்படுவதில்லை. தற்போதுள்ள குறைகளை களைய உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று அவர் கூறினார்.

    Next Story
    ×