என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவிலில் உண்டியல் திருட்டு
- பெரம்பலூர் துறைமங்கலத்தில் கோவிலில் உண்டியல் திருட்டு போனது
- பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் மூன்று ரோட்டில் இருந்து கவுல்பாளையம் செல்லும் சாலையில் வீர ரெட்டியார் அம்பலக்காரர் கோவில் உள்ளது. இந்த கோவில் கதவின் பூட்டு நேற்று உடைக்கப்பட்டிருந்தது. மேலும் கோவில் கருவறையில் பொருத்தப்படாமல் இருந்த உண்டியல் திருட்டு போயிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story






