என் மலர்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கொளப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை(வயது 43). விவசாயி. இவருக்கு சுந்தரி என்ற மனைவியும், சிவா, சுந்தர் என 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சுந்தரி தோட்டத்திற்கும், சிவா பெரம்பலூரில் உள்ள கல்லூரிக்கும், சுந்தர் குன்னத்தில் உள்ள பள்ளிக்கும் சென்றுவிட்டனர். சின்னதுரை வீட்டை பூட்டிவிட்டு மாடு மேய்க்க சென்றுள்ளார்.
இந்நிலையில் சிவா கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவு மற்றும் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உடனடியாக இதுகுறித்து அவர் தனது தந்தைக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சின்னதுரை வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த அரை பவுன் தாலி மற்றும் இரண்டரை பவுன் எடையுள்ள 8 தங்கக்காசுகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து சின்னதுரை கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள அந்தூர் கிராமத்தில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் வரத்தான் குளம், 15 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பெய்த வடகிழக்கு பருவ மழையின் காரணமாக நிரம்பி கடையோடியது. இதற்கிடையே அந்தூர் கிராமத்தில் குடிநீர் பிரச்சினை ஆண்டுதோறும் கோடை காலங்களில் ஏற்படும். இந்த ஆண்டு குன்னம் தாலுகாவில் அதிக கனமழை பெய்ததன் காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பின. இதன்படி வரத்தான் குளமும் நிரம்பி வழிந்ததால் அந்தூர் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் இந்த குளத்திற்கு வயல்வெளியில் இருந்து நீர்வரத்து உள்ளதால் குப்பை, கூளங்கள் மற்றும் பாசி ஆகியவை குளம் முழுக்க குவியல் குவியலாக காணப்பட்டது. இதைப் பார்த்த கிராம மக்கள் குப்பைகளை அகற்ற முடிவு செய்தனர். இதையடுத்து சமூக ஆர்வலர் ஜெகதீசன் மற்றும் 20-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என அனைவரும் ஒன்றுபட்டு குப்பை மற்றும் குளத்தில் படிந்த பாசிகளை அகற்றி குளத்தை தூய்மைப்படுத்தினார்கள். மேலும் குளத்து நீரை குடிநீராக பயன்படுத்த ஏற்புடையதாக செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம், மக்காச்சோளம் மற்றும் பருத்தி ஆகியவை பிரதானமாக பயிரிடப்பட்டு வருகின்றன. தற்போது கூடுதலாக குன்னம், ஒதியம், அந்தூர், வரகூர், கொளப்பாடி, புதுவேட்டக்குடி, புதுவேட்டக்குடி புதூர், அய்யலூர், அய்யலூர் குடிகாடு, வரகுபாடி, சிறுகன்பூர், நாரணமங்கலம், சாத்தனூர், குடிகாடு உள்ளிட்ட கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் கொடி வகையான வெள்ளை பூசணி, சாம்பார் பரங்கி மற்றும் மஞ்சள், மரவள்ளி, சேனைக்கிழங்கு ஆகியவற்றையும் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர்.
இந்தநிலையில், மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த வடகிழக்கு பருவ மழையின் காரணமாக விளைநிலங்கள் முழுவதும் நீரில் மூழ்கின. அதேபோல் பூசணி மற்றும் பரங்கி கொடிகளும் நீரில் மூழ்கியதால் நன்கு விளைந்த காய்கள் அனைத்தும் வயலிலேயே தற்போது அழுகி வீணாகி வருகின்றன.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு கிலோ ரூ.10-லிருந்து ரூ.15 வரை விற்பனையான பரங்கி மற்றும் பூசணிக்காய்கள் தற்போது கிலோ ஒரு ரூபாய்க்கு கூட வாங்க யாரும் முன்வருவவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும், விளைவிக்கப்பட்டிருந்த காய்களில் பாதியளவு அழுகி விட்டதால் மீதமுள்ள காய்களை வாங்குவதற்கு வியாபாரிகள் தயங்குகின்றனர். கடன் வாங்கி பயிரிட்ட காய்கறிகள் தொடர்ந்து அழுகி வருவதால் எங்களது பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட கிராமங்களில் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 12 ஆயிரத்து 104 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 11 ஆயிரத்து 848 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஒருவர் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு சிறுவாச்சூரைச்சேர்ந்த 85 வயது முதியவர் உயிரிழந்தார். இதுவரை கொரோனாவிற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் 245 பேர் பலியாகி உள்ளனர்.
தற்போது மொத்தம் 11 பேர் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் உள்ளனர். இவர்களில் 6 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 5 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சிகிச்சையில் இருந்தவர்களில் 3 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். நேற்றும் கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது 20 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 507 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. மாவட்டத்தில் நேற்று 2,079 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத மழை பெய்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆண்டு சராசரி மழை அளவான 861 மி.மீட்டரை தாண்டி, 1289.27 மி.மீ. மழை பெய்துள்ளது.
இதனால் வறண்டு கிடந்த ஏரி, குளங்கள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன்படி, இதில் பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கே பச்சைமலை அடிவாரத்தில் உள்ள களரம்பட்டி பெரிய ஏரி 16 ஆண்டுகளுக்குப்பிறகு நேற்று இரவு தனது முழு கொள்ளளவை எட்டியதால், தண்ணீர் நிரம்பி வழிய தொடங்கியது.
இதையடுத்து, அந்த ஏரியில் இருந்து பாசன வசதி பெறும் களரம்பட்டி, அம்மா பாளையம் ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏரி நிரம்பி வழிவதை திருவிழா போன்று கொண்டாட முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்தனர்.
தண்ணீர் வரத்தை எதிர்பார்த்து காத்திருந்த 2 கிராம மக்கள், விவசாயிகள் 16 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நிரம்பி வழிந்ததால், மேளதாளங்களுடன் சென்று, குருக்களை வரவழைத்து பூஜை செய்து தண்ணீரை உற்சாகமாக வரவேற்றனர்.
முன்னதாக களரம்பட்டி ஊராட்சித் தலைவர்கள் தலைமையில், தாரை தப்பட்டை முழங்க, அப்பகுதி பொதுமக்கள் ஏரி அருகே ஒன்று கூடினர். பின்னர், ஏரியில் மலர்கள் தூவி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இதைத்தொடர்ந்து அம்மாபாளையம் கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலில் கிடா வெட்டி பொங்கலிட்டு சாமிக்கு படையலிட்டு கொண்டாடினர்.
கடந்த 2005-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது கனமழையின் காரணமாக களரம்பட்டி ஏரியில் நீர் நிரம்பி வருவதை வரவேற்று மிகுந்த மகிழ்ச்சியுடன் பட்டாசு வெடித்து, அதிர் வேட்டுகள் முழங்கிட ஆனந்தத்துடன் ஆடிப்பாடி, குத்தாட்டம் போட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளில், இதுவரை 65 ஏரிகள் முழுக்கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளன. அதன்படி, அரும்பாவூர், கீழப்பெரம்பலூர், வடக்கலூர், நூத்தப்பூர், வெண்பாவூர், வயலப்பாடி, அரும்பாவூர், அரசலூர், மேலப்புலியூர், வடக்களூர் அக்ரஹாரம், அய்யலூர், வரகுபாடி, வெங்கலம், கீரனூர், பெருமத்தூர், வி.களத்தூர், குரும்பலூர்,
கை.பெரம்பலூர், வயலூர், கிழுமத்தூர், அகரம் சிகூர், லாடபுரம், பேரையூர், சாத்தனவாடி, நெய்க்குப்பை, கீழவாடி, தழு தாழை, துறைமங்கலம், பூலாம்பாடி, வெங்கலம், செஞ்சேரி, தேனூர், பெரம்பலூர், சிறுவாச்சூர், பெரியம்மாபாளையம், கிளியூர், ஆய்க்குடி, தொண்டமாந்துறை, காரியனூர், வெங்கனூர், அன்னமங்கலம், ஆண்டிக் குரும்பலூர், கை.களத்தூர், எழுமூர்,
புது நடுவலூர், தொண்டப்பாடி, லாடபுரம், களரம்பட்டி, நாரணமங்கலம், செங்குணம், திருவாளந்துறை, கீழப்புலியூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள 65 ஏரிகள் நிரம்பி வழிகின்றன. மேலும், எஞ்சியுள்ள 2 ஏரிகள் 90 சதவீதமும், 4 ஏரிகள் 80 சதவீதமும், 2 ஏரிகள் 50 சதவீதமும் நிரம்பியுள்ளன.
குன்னம்:
பெரம்பலூரில் பிரபல தொழில் அதிபரிடம் கத்தி முனையில் மர்மநபர்கள், ரூ.60 லட்சம் மதிப்பிலான, 103 சவரன் தங்கநகைகள், 9கிலோ வெள்ளி பொருட்கள், ரொக்கப்பணம் மற்றும் சொகுசு காரை கொள்ளையடித்து சென்றனர். இந்த துணிகர சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:-
பெரம்பலூர் சர்ச் தெருவை சேர்ந்தவர் கருப்பண்ணன் (வயது 65). தொழில் அதிபர். இவர் எளம்பலூர் சாலையில் நகை கடை மற்றும் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
இவரது மனைவி பரமேஸ்வரி (55). இவர்களுக்கு ரேணுகா(32), என்ற மகளும், ஆனந்த் என்ற மகனும் உள்ளனர்.
கருப்பண்ணனுக்கு சங்கு பேட்டை அருகே உள்ள சர்ச்சாலையில் பூர்வீக வீடும், எளம்பலூர் சாலையில் உள்ள நகைக்கடை மாடி மேல் ஒரு வீடும் உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு சங்குபேட்டை வீட்டில் கருப்பண்ணன் மட்டும் தங்கியுள்ளார். மனைவியும், மகளும் எளம்பலூர் சாலையில் நகை கடை வீட்டில் படுத்து தூங்கினர்.இதற்கிடையே மகன் ஆனந்த் வேலை விஷயமாக திருச்சி சென்று விட்டார்.
திருச்சிக்கு அவர் செல்லும் முன்பு, நான் சீக்கிரம் வந்துவிடுவேன் என்று கருப்பண்ணனிடம் கூறி சென்றுள்ளார். இதனால் கருப்பண்ணன் வீட்டின் கதவை பூட்டாமல், இரவு சுமார் 11 மணியளவில், டி.வி.பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது முகத்தை துணியால் மூடியபடி 3 மர்ம நபர்கள் திபு திபுவென வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இதனை பார்த்த கருப்பண்ணன் சத்தம் போட்டார். உடனே மர்ம நபர்கள் கருப்பண்ணனின் கழுத்தில் கத்தியை வைத்து, கத்தினால் குத்தி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர்.
இதனால் மிரண்டுபோன கருப்பண்ணன் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தபடி நின்றுள்ளார். அப்போது அவரிடம் பீரோ சாவியை மிரட்டி வாங்கிய மர்ம நபர்கள், பீரோவை திறந்து அதிலிருந்த நெக்லஸ், செயின், மோதிரம் உள்ளிட்ட 103 சவரன் தங்க நகைகளையும். 9 கிலோ வெள்ளி பொருட்களையும், ரொக்கப்பணம் ஆகியவற்றையும் கொள்ளையடித்தனர்.
அதன் பின்னர் மாடியில் இருந்து கீழே இறங்கிய கொள்ளையர்கள், கருப்பண்ணனுக்கு சொந்தமான வீட்டு வாசலில் நின்றிருந்த அவரது சொகுசு காரையும் எடுத்துக் கொண்டு, தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து உடனடியாக கருப்பண்ணன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் பெரம்பலூர் நகர போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். தடய அறிவியல் நிபுணர்கள், மர்ம நபர்கள் விட்டுச் சென்ற தடயங்களை சேகரித்தனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது வீட்டிலிருந்து குறிப்பட்ட தூரம் வரை சென்று நின்றுவிட்டது.
இச்சம்பவம் தொடர்பாக டி.எஸ்.பி.சஞ்ஜிகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மர்மநபர்களை தேடிவருகின்றனர்.
தொழிலதிபர் வீட்டில் இந்த துணிகர கொள்ளை சம்பவம், பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
வள்ளியூர் அருகே உள்ள கேசவநேரி கிராமத்தை சேர்ந்தவர் சேர்மராஜ் (வயது34). இவர் ஒரு ஓட்டலில் கேஷியராக வேலை பார்த்து வந்தார்.
இவரது மனைவி சுகன்யா (29). இவர்களுக்கு ஹன்சிகா (10), அனுஷ்கா (10) என்ற இரட்டை பெண் குழந்தைகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேர்மராஜூக்கும், அவரது மனைவி சுகன்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சுகன்யா தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தனியாக சென்று விட்டார். இந்தநிலையில் பெரியவர்கள் சமரசம் செய்து இருவரையும் சேர்த்து வைத்தனர். இதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆறு மாதமாக கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி வேலைக்கு சென்றுவிட்டு திரும்பிய சேர்மராஜ் வீடு பூட்டி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அவரது மனைவி சுகன்யா, மற்றும் 2 மகள்களையும் காணவில்லை. இதுகுறித்து சுகன்யாவின் பெற்றோர் வீட்டில் விசாரித்தபோது அங்கும் அவர்கள் இல்லை என்று தெரியவந்தது. இதனால் சேர்மராஜ் பல்வேறு இடங்களில் அவர்களை பற்றி விசாரித்தார். எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதை தொடர்ந்து அவர் வள்ளியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து சுகன்யா மற்றும் இரண்டு குழந்தைகளையும் தேடி வருகிறார்கள்.
குன்னம்:
பெரம்பலூர் சர்ச் தெருவை சேர்ந்தவர் கருப்பண்ணன் (வயது 65). தொழில் அதிபர். இவர் எளம்பலூர் சாலையில் நகைக்கடை மற்றும் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
இவரது மனைவி பரமேஸ்வரி (55). இவர்களுக்கு ரேணுகா(32), என்ற மகளும், ஆனந்த் என்ற மகனும் உள்ளனர்.
கருப்பண்ணனுக்கு சங்குபேட்டை அருகே உள்ள சர்ச் சாலையில் பூர்வீக வீடும், எளம்பலூர் சாலையில் உள்ள நகைக்கடை மாடி மேல் ஒரு வீடும் உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு சங்குபேட்டை வீட்டில் கருப்பண்ணன் மட்டும் தங்கியுள்ளார். மனைவியும், மகளும் எளம்பலூர் சாலையில் நகைக்கடை வீட்டில் படுத்து தூங்கினர். இதற்கிடையே மகன் ஆனந்த் வேலை விஷயமாக திருச்சி சென்று விட்டார்.
திருச்சிக்கு அவர் செல்லும் முன்பு, நான் சீக்கிரம் வந்துவிடுவேன் என்று கருப்பண்ணனிடம் கூறி சென்றுள்ளார். இதனால் கருப்பண்ணன் வீட்டின் கதவை பூட்டாமல், இரவு 11 மணியளவில், டி.வி.பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது முகத்தை துணியால் மூடியபடி 3 மர்மநபர்கள் திபுதிபுவென வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இதனை பார்த்த கருப்பண்ணன் சத்தம் போட்டார். உடனே மர்மநபர்கள் கருப்பண்ணனின் கழுத்தில் கத்தியை வைத்து, கத்தினால் குத்தி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர்.

இதனால் மிரண்டுபோன கருப்பண்ணன் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தபடி நின்றுள்ளார். அப்போது அவரிடம் பீரோ சாவியை மிரட்டி வாங்கிய மர்மநபர்கள், பீரோவை திறந்து அதிலிருந்த நெக்லஸ், செயின், மோதிரம் உள்ளிட்ட 103 சவரன் தங்க நகைகளையும். 9 கிலோ வெள்ளி பொருட்களையும், ரொக்கப் பணம் ஆகியவற்றையும் கொள்ளையடித்தனர்.
அதன் பின்னர் மாடியில் இருந்து கீழே இறங்கிய கொள்ளையர்கள், கருப்பண்ணனுக்கு சொந்தமான வீட்டு வாசலில் நின்றிருந்த அவரது சொகுசு காரையும் எடுத்துக்கொண்டு, தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து உடனடியாக கருப்பண்ணன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் பெரம்பலூர் நகர போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். தடய அறிவியல் நிபுணர்கள், மர்மநபர்கள் விட்டுச் சென்ற தடயங்களை சேகரித்தனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது வீட்டிலிருந்து குறிப்பட்ட தூரம் வரை சென்று நின்றுவிட்டது.
இச்சம்பவம் தொடர்பாக டி.எஸ்.பி.சஞ்ஜிகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மர்மநபர்களை தேடிவருகின்றனர்.
தொழிலதிபர் வீட்டில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம், பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்... புதுவகை வைரஸ் பரவல் - தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதித்தது அமெரிக்கா
ஈரோடு:
பவானிசாகர் அணை நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டம் உள்பட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 104 அடியாக நீடித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை குறைந்ததால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து வந்தது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் பவானிசாகர் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104 அடியாக இருந்தது. அணைக்கு 7 ஆயிரத்து 815 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 1500 கனஅடியும், பவானி ஆற்றுக்கு 6300 கனஅடி என மொத்தம் 7800 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பவானி ஆற்றில் 6300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆற்றில் யாரும் குளிக்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
மதுரை:
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தனியார் நிறுவனத்தின் செல்போன் டவர் உள்ளது.
இந்த நிலையில் வாலிபர் ஒருவர் குடிபோதையில் செல்போன் கோபுரத்தில் ஏறி நின்றுகொண்டு, “என் மனைவி பிரிந்து சென்று விட்டார். அவரை மீண்டும் என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும். இல்லையெனில் குதித்து தற்கொலை செய்து கொள்வேன்” என்று கூச்சலிட்டார்.
இதனை கேட்ட பொது மக்கள் திரண்டு வந்தனர். இது குறித்து கீரைத்துறை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் துரை பாண்டியன் சம்பவ இடத்துக்கு வந்தார். அவர் அந்த வாலிபரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
குடிபோதை வாலிபரை மீட்கும் வகை யில் தீயணைப்பு படை வீரர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக் கப்பட்டு உள்ளனர்.
போலீசாரின் விசார ணையில் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கண்ணன் என்பது தெரிய வந்தது.
இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இதன் காரணமாக மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மனைவி கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
வாழ்க்கையில் விரக்தி அடைந்த கண்ணன் செல் போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.
வில்லாபுரம் செல்போன் கோபுரத்தில் ஏறிய வாலிபர் குடிபோதையில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






