என் மலர்
பெரம்பலூர்
- ராஜேந்திர பிரசாத் பெரம்பலூரில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
- இவருக்கு திருமணமாகி 2 மாத கைக்குழந்தை உள்ளது
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டமாந்துறையை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத் (வயது 29). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
இவருக்கு திருமணமாகி 2 மாத கைக்குழந்தை உள்ளது. இந்தநிலையில் நேற்று ராஜேந்திர பிரசாத் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரிய வில்லை.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பெரம்பலூரில் கார்கில் போர் வெற்றி கொண்டாட்டம் மற்றும் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
- தலைவர்கள் ஆனந்த், சதாசிவம், சுகன்யா, கருப்பையா, மாவட்ட முன்னாள் முப்படைவீரர்கள் நல அறக்கட்டளை தலைவர் பெரியசாமி மற்றும் சதானந்தம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் சுப்ரீம் லயன்ஸ் கிளப் சார்பில் கார்கில் போர் வெற்றி கொண்டாட்டம் மற்றும் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
பெரம்பலூர் பாலக்கரை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் உள்ள இந்தியா ஸ்தூபி நினைவு சின்னம் முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு சாசன தலைவரும், மாவட்ட தலைவருமான ராஜாராம் இறந்த ராணுவ வீரர் சரணவனின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் சங்க தலைவர் ரவி, செயலாளர்கள் வேல்முருகன், விக்னேஷ், பொருளாளர் கலைவாணன், முன்னாள் தலைவர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதே போல் பெரம்பலூர் லயன்ஸ் கிளப் மற்றும் மாவட்ட முன்னாள் முப்படைவீரர்கள் நல அறக்கட்டளை இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் போரில் உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதில் தலைவர்கள் ஆனந்த், சதாசிவம், சுகன்யா, கருப்பையா, மாவட்ட முன்னாள் முப்படைவீரர்கள் நல அறக்கட்டளை தலைவர் பெரியசாமி மற்றும் சதானந்தம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- சாலை விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
- கரகாட்டம் ஒயிலாட்டம் மூலம் நிகழ்ச்சிகள் நடந்தது
பெரம்பலூர்:
75வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திருச்சி டோல்கேட் பிரைவேட் லிமிடெட் மற்றும் சத்யன் பரதாலயா கல்ச்சுரல்ஸ் ஆகியோரும் இணைந்து சாலைப்போக்குவரத்து விதிகளைப் பற்றி திருமாந்துறை சுங்கச்சாவடியில் கரகாட்டம் ஒயிலாட்டம் மற்றும் நடன நிகழ்ச்சிகள் மூலம் சாலை பயனாளர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பாக நரசிம்மன் பிராஜக்ட் டைரக்டர் திருச்சி, மற்றும் டிடிபி எல் சார்பில் கருணாகரன் ப்ராஜெக்ட் மேனேஜர் மற்றும் அலுவலர்கள் சிவசங்கரன், ரகுநாத், சீனிவாசன், பாஸ்கர், மகேந்திரன், மனோஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
- சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
- குழந்தைகள் நலக்குழுவிற்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூரை அடுத்த ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் சின்னசாமி. கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மகன் ராஜேஷ் (வயது25). இவர் பிளஸ்-1 படிக்கும் 16 வயது சிறுமியை காதலித்து, திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அந்த சிறுமி 2 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ராமு, பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், ராஜேஷ் திருமணம் செய்து கொண்டது, குழந்தை திருமணம். ஆகவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.
அதன்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் குழந்தை திருமண சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் ராஜேஷ், அவரது தந்தை சின்னசாமி, தாய் காந்தி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், தந்தை ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ராஜேஷ் கைது செய்யப்பட்டார். பின்னர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்."
- வனஉயிரினங்களை வேட்டையாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- வனக்காவலர்கள் குழுவினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர்-அரியலூர் சாலையில் சித்தளி வனக்காப்புக்காடு பகுதிக்கு அருகே சிலர் வன உயிரின வேட்ைடயில் ஈடுபட்டு வருவதாக பெரம்பலூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில், பெரம்பலூர் வனச்சரகர் பழனிகுமரன் தலைமையில், வனவர் குமார், வனகாப்பாளர்கள் ரோஜா, அன்பரசு, வனக்காவலர் சவுந்தர்யா ஆகியோர் கொண்ட குழுவினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வனத்துறையினரின் எச்சரிக்கையை மீறி வன உயிரின வேட்ைடயில் ஈடுபட்ட 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், வன உயிரின வேட்ைடயில்ஈடுபட்ட 3 பேரும் குன்னம் தாலுகா ஒகளுரைச்சேர்ந்த ராமசாமி (22), சாமிநாதன் (60), ராமலிங்கம் (70) என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் பேரிடமும் இருந்து வேட்டையாடப்பட்ட வன உயிரினங்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து 3 பேர் மீதும் வன உயிரின காப்பு சட்டத்தின் கீழ் வனத்துறையினர் வழக்குப்பதிவு, 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
- ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்றது
வேப்பந்தட்டை:
தமிழ்நாடு தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து பெரம்பலூர் மாவட்ட அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் 50 அறிவியல் ஆசிரியர்களுக்கான 2 நாள் பணியிடை பயிற்சி, வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்றது. பயிற்சி ஒருங்கிணைப்பாளரும், இயற்பியல் துறை தலைவருமான பாஸ்கரன் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் சிவநேசன் தலைமை தாங்கி பேசுகையில், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நல்ல உறவு மேம்பட ஆசிரியர்களாகிய நாம் உயரிய நோக்கத்தில் செயல்பட வேண்டும், என்றார். இப்பயிற்சியை மாவட்ட கல்வி அலுவலர் சண்முகம் தொடங்கி வைத்து பேசினார். பல்கலைக்கழக இயக்குனர் சின்னப்பா, கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் சேகர், காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் கருணாகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். இப்பயிற்சி முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் கல்லூரியில் பணிபுரியும் துறை தலைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கணினி அறிவியல் துறை தலைவர் சகாயராஜ் நன்றி கூறினார்.
- மின் சிக்கனம்-பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- பொதுமக்களுக்கு இணைய வழி மூலமாக மின் கட்டணம் செலுத்துவது பற்றி விளக்கப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட மேலப்புலியூர் மின் பகிர்மான பகுதியில் பொதுமக்களிடையேயும், பள்ளி மாணவ-மாணவிகளிடையேயும் மின் பாதுகாப்பு மற்றும் மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. பெரம்பலூர் கிராமிய உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் தலைமையில், உதவி மின் பொறியாளர்கள் பாலமுருகன் (எசனை), பிரபாகரன் (குரும்பலூர்), சிறப்பு நிலை ஆக்க முகவர் ராமகிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் மேலப்புலியூர் பொதுமக்களுக்கும், அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் மின் பாதுகாப்பு மற்றும் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினர். மேலும் பொதுமக்களுக்கு இணைய வழி மூலமாக மின் கட்டணம் செலுத்துவது பற்றி விளக்கப்பட்டது.
- 20 கிலோ எடையில் “நம்ம செஸ் நம்ம பெருமை” என்ற வாசகம் மற்றும் செஸ் ஒலிம்பியாட் இலச்சினை போன்ற வடிவில் தயாரிக்கப்பட்ட கேக்கினை மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியா மற்றும் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் வெட்டினர்
- உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலச்சினை அச்சிடப்பட்ட மஞ்சப்பை மற்றும் 187 நாடுகள் பங்கேற்கும் சதுரங்கப் போட்டி நிகழ்வை நினைவு கூறும் வகையில் 187 மரக்கன்றுகள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்ட செஸ் ஒலிம்பியாட் ஜோதி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வரவேற்று சதுரங்க அட்டை வடிவில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டம் திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நான்கு ரோடு சந்திப்பில் தொடங்கி, அமோனைட்ஸ் மையம் வரை 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட பேரணி புதிய பேருந்து நிலையம், பாலக்கரை, சங்குபேட்டை வழியாக தாலுகா அலுவலகத்தில் உள்ள அமோனைட்ஸ் மையத்திற்கு வந்து நிறைவு பெற்றது.
பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 20 கிலோ எடையில் "நம்ம செஸ் நம்ம பெருமை" என்ற வாசகம் மற்றும் செஸ் ஒலிம்பியாட் இலச்சினை போன்ற வடிவில் தயாரிக்கப்பட்ட கேக்கினை மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியா மற்றும் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் ஆகியோர் வெட்டினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கி நிகழ்ச்சி துவங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமோனைட்ஸ் மையத்தில் விழிப்புணர்வு ஓவியம் மற்றும் சுவர் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்ட 12 ஓவிய ஆசிரியர்களும், மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் சிறப்பாக நடைபெறுவதற்கு ஒத்துழைத்த 12 ஆசிரியர்களும் என மொத்தம் 24 ஆசிரியர்களுக்கு மாவட்ட கலெக்டர் பெரம்பலூர் எம்எல்ஏ, மாவட்ட எஸ்பி ஆகியோர் முன்னிலையில் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலச்சினை அச்சிடப்பட்ட மஞ்சப்பை மற்றும் 187 நாடுகள் பங்கேற்கும் சதுரங்கப் போட்டி நிகழ்வை நினைவு கூறும் வகையில் 187 மரக்கன்றுகள் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
- பாடாலூர் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை ஆதிதிராவிடநலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டார்.
- உணவுப் பொருள் சேமிப்பு அறை, சமையலறை மற்றும் உணவருந்தும் கூடம், விடுதியில் குடிநீர், தங்கும் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா என்பது குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், விடுதிகளை ஆதிதிராவிடநலத்துறை அமைச்சர் அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
ஆலத்தூர் ஒன்றியம், பாடாலூர் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை ஆதிதிராவிடநலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டார். தொடர்ந்து பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியிலுள்ள ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவிகள் விடுதி, களரம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கயல்விழி செல்வராஜ்,
அடிப்படை வசதிகள், கழிப்பறைகள், காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும், மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், அரசால் வழங்கப்பட்டுள்ள பொருள்கள் பதிவேடுகளில் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து உணவுப் பொருள் சேமிப்பு அறை, சமையலறை மற்றும் உணவருந்தும் கூடம், விடுதியில் குடிநீர், தங்கும் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா என்பது குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது ஆதிதிராவிடர் நல ஆணையர் சோ. மதுமதி, மாவட்ட வருவாய் அலுவலர் நா. அங்கையற்கண்ணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பால்பாண்டி, வருவாய்க் கோட்டாட்சியர் நிறைமதி, தாட்கோ மேலாளர் ஜஹாங்கீர் பாட்ஷா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
- இரு வீடுகளில் 26 பவுன் நகை, ரூ. 20 ஆயிரம் ரொக்கத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.
- குன்னம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்
பெரம்பலூா்:
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கல்லை கிராமம் பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருபவா் கு. மணி (80). இவா், தனது மனைவி தமிழரசி (70), மகன் மாலியவன் (35) மருமகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், மாலியவன் தனது மனைவி, குழந்தைகளுடன் வெளியூா் சென்றிருந்தாா். இரவு காற்று வருவதற்காக வீட்டை திறந்துவைத்து மணியும், அவரது மனைவி தமிழரசியும் தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது, வீட்டுக்குள் நுழைந்த மா்ம நபா்கள் வீட்டிலிருந்த 26 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.
இதேபோல், அதே பகுதியில் வசிக்கும் வரதராஜு (70) என்பவரது வீட்டுக்குள் நுழைந்த மா்ம நபா்கள், வீட்டிலிருந்த ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனா்.
இதுகுறித்து புகாரின்பேரில் குன்னம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
- அரசு பள்ளியில், தமிழ் இலக்கிய மன்றம் தொடக்க விழா நடைபெற்றது
- தலைமை ஆசிரியா் தலைமை வகித்தாா்.
பெரம்பலூா்:
பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் த. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். பட்டதாரி ஆசிரியா்கள் ச. மகாலட்சுமி, கி. மகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பூலாம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை தமிழாசிரியா் இரா. முரளி, இலக்கிய மன்றத்தை தொடக்கி வைத்து பேசினாா். இந்நிகழ்ச்சியை ஆசிரியா் இரா. அகல்யா ஒருங்கிணைத்தாா். இதில், முதுகலை தமிழாசிரியா் வா. வேல்முருகன், ஆசிரியா்கள் பூ. ஷாலினி, பிரியதா்ஷினி மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக, பட்டதாரி ஆசிரியா் ஸ்ரீ நளினி வரவேற்றாா். நிறைவாக, ஆசிரியா் லா. ஜனனி நன்றி கூறினாா்."
- பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற மாற்றுத்திறனாளி வீரர், வேலை வழங்கக்கோரி மனு அளித்தார்.
- இந்திய அணிக்காக விளையாடி வெள்ளி பதக்கம்
பெரம்பலூர்:
குரும்பலூர் மெயின்ரோட்டை சேர்ந்த மோகனின் மகன் பார்த்தீபன். மாற்றுத்திறனாளியான இவர் பெரம்பலூர் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில், நான் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். எனது குடும்பத்தை கவனித்து கொள்ளும் கடமையில் உள்ளேன். நான் கடந்த 2019-ம் ஆண்டு பாரா ஒலிம்பிக்கில் கூடைப்பந்து போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி 2-ம் இடத்தை பிடித்து வெள்ளி பதக்கம், சான்றிதழ் பெற்றுள்ளேன். எனவே என்னுடைய தகுதிக்கேற்ப ஒரு வேலையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.






