என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில், தமிழ் இலக்கிய மன்றம் தொடக்க விழா
    X

    அரசு பள்ளியில், தமிழ் இலக்கிய மன்றம் தொடக்க விழா

    • அரசு பள்ளியில், தமிழ் இலக்கிய மன்றம் தொடக்க விழா நடைபெற்றது
    • தலைமை ஆசிரியா் தலைமை வகித்தாா்.

    பெரம்பலூா்:

    பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் த. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். பட்டதாரி ஆசிரியா்கள் ச. மகாலட்சுமி, கி. மகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பூலாம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை தமிழாசிரியா் இரா. முரளி, இலக்கிய மன்றத்தை தொடக்கி வைத்து பேசினாா். இந்நிகழ்ச்சியை ஆசிரியா் இரா. அகல்யா ஒருங்கிணைத்தாா். இதில், முதுகலை தமிழாசிரியா் வா. வேல்முருகன், ஆசிரியா்கள் பூ. ஷாலினி, பிரியதா்ஷினி மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    முன்னதாக, பட்டதாரி ஆசிரியா் ஸ்ரீ நளினி வரவேற்றாா். நிறைவாக, ஆசிரியா் லா. ஜனனி நன்றி கூறினாா்."

    Next Story
    ×