என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • தலைமை ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது

    பெரம்பலூர்

    தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் தங்கவேல் தலைமையில் பெரம்பலூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் தனி முன்னுரிமை பட்டியலும், முதுநிலை ஆசிரியர்களுக்கு தனி முன்னுரிமை பட்டியலும் வழங்க வேண்டும். பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும். 12 மாத காலம் மகப்பேறு விடுப்பில் செல்லும் ஆசிரியர்களுக்கு பதிலாக பள்ளிகளில் மாற்று ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு, அகவிலைப்படி நிலுவைத்தொகை ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில இணை செயலாளர் வேலு, முன்னாள் மாவட்ட தலைவர் வி.பி.தங்கராஜ், தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர்கள் சுந்தரபாண்டியன், புலவர் ராமர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். முன்னதாக, மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். முடிவில் முன்னாள் மாவட்ட பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார்."

    • ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • டி.எஸ்.பி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர்,

    ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு சார்பில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடந்த 31-ந் தேதி முதல் வரும் 5-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பெரம்பலூர் முக்கிய அலுவலகங்களில் ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நோட்டிஸ் ஒட்டப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் செயின்ட் ஜோசப் மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    இதை தொடர்ந்து நேற்று பெரம்பலூர் பாலக்கரை கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தொடங்கிய பேரணியை ஊழல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி சத்யராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். பாலக்கரையில் துவங்கி பேரணி முக்கிய வீதி வழியாக சென்று புது பஸ்ஸ்டாண்டில் முடிவடைந்தது. செல்லும் வழியில் பொதுமக்களிடம் ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

    இதில் இன்ஸ்பெக்டர்கள் ராமேஸ்வரி, விஜயலெட்சுமி, போலீசார் மற்றும் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மா

    • மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி உயிரிழந்தார்.
    • வடமாநிலத்தை சேர்ந்தவர்

    பெரம்பலூர்

    உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத்தில் இருந்து சுமார் 50 பேர் ஆன்மிக சுற்றுலாவாக ராமேசுவரம் கோவிலுக்கு பஸ்சில் சென்றனர். நேற்று முன்தினம் அதிகாலை அவர்கள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் வழித்துணை ஆஞ்சநேயர் கோவில் அருகே பஸ்சை நிறுத்தி ஒரு டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்தனர். அப்போது ஜவகர்லால் சிங் என்பவரின் மனைவி சியாம்குமாரி (வயது 60) சாலையின் மறுபக்கம் சென்று விட்டு, மீண்டும் பஸ் ஏறுவதற்காக சாலையை நடந்து கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சியாம்குமாரி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."

    • சேத்து மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
    • பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் உள்ள சேத்து மாரியம்மன் கோவிலின் தேர் திருவிழா கடந்த 23-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மன் திருவீதி உலா நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. முன்னதாக உற்சவர் சேத்து மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, பூஜைகளுக்கு பிறகு உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளினார்.

    பின்னர் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற அலகு குத்தி நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் சிறுவர்களை நோய் நொடியில் இருந்து காக்க கரும்புள்ளி-செம்புள்ளியிட்டு நூதன நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனை தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது. தேரினை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளின் வழியாக தேர் சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது.

    இதில் வாலிகண்டபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்."

    • பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம் நடந்தது
    • செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் (பொ) பொன்னுதுரை தலைமை வகித்தார்.பள்ளி மேலாண்மை குழு தலைவி கவிதா, தொழிற்கல்வி ஆசிரியர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நிதிதிரட்டி கட்டிய கட்டடம் இடியும் தருவாயில் உள்ளதால் அந்த கட்டிடத்தை அகற்றுதல், ஆஸ்பெஸ்டாஸ் கட்டிடத்தை புனரமைப்பு செய்து பயன்பாட்டுக் கொண்டு வருதல், சீரமைப்பு செய்யப்பட்ட ஓட்டு கட்டிடத்தை மாணவர்கள் பயன்பாடு கொண்டு வருதல், பள்ளி கட்டிட இட அமைப்புக்கான ரூ.9 லட்சம் நிதியும், பள்ளி மாணவர்களின் குடிநீர் திட்டத்திற்கான ரூ 3 லட்சம் நிதியும் இந்தப் பள்ளிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.இந்த நிதியை முறையான வகையில் பயன்படுத்தி திட்டங்களை நிறைவேற்றிட வேண்டுமெனவும், இன்று நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டுமென இக்கூட்டத்தில் பேசினார்.

    தொடர்ந்து பள்ளியில் செயல்படும் நான் முதல்வன் திட்டம் பற்றி நீலாவதி ஆசிரியர் விரிவாக பேசினார். முடிவில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது. முன்னதாக உதவி தலைமை ஆசிரியர் லதா வரவேற்றார். நிறைவாக ஆசிரியை பாஸ்கர் நன்றி கூறினார்.

    • திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க.வினர் மனு அளித்தனர்
    • 31-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணிநீக்கப்பட்டோர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.

    திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணிபிரிந்து வந்த 28 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஒப்பந்த தனியார் நிறுவனத்தை கண்டித்தும், பணிநீக்கம் செய்த ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த கோரியும் அந்த ஊழியர்களும், சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்களும் கடந்த 1-ந் தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    31-வது நாளாக தொடர்ந்து நடைபெறும் இந்த போராட்டத்திற்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான வரகூர் அருணாசலம் தலைமையில் அ.தி.மு.க.வினர் நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் அ.தி.மு.க. சார்பில் பெரம்பலூர் எஸ்பி அலுவலகம் வந்து எஸ்பி மணியிடம் கோரிக்கை மனு அளித்தனர், அம்மனுவில் திருமாந்துறை சுங்கச்சாவடியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும், பணியில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தி அவர்களின் பொருளாதாரத்தை நல்ல முறையில் அமைத்துத் தர காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்பிக்கள் மருதராஜா, சந்திரகாசி, முன்னாள் எம்எல்ஏ பூவைசெழியன், மாவட்ட நிர்வாகிகள் குணசீலன், ராஜாராம், ராஜேஸ்வரி, நகரசெயலாளர் ராஜபூபதி, ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், செல்வகுமார்,சி வப்பிரகாசம், செல்வமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வடபழனி என்றழைக்கப்படும் தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா கடந்த 27-ந் தேதி தொடங்கியது.நேற்று கந்தசஷ்டி விழாவினையொட்டி கோவிலில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, தண்டாயுதபாணி சுவாமிகளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு நறுமண பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது கோவில் முன்பு உள்ள வீதியில் சுப்பிரமணியர் சூரனை வதம் செய்தார்.

    தொடர்ந்து மலைக்கோவிலில் இருந்து சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை ஆகிய சுவாமிகள் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு வந்தடைந்தனர்.

    அதனை தொடர்ந்து ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதனையொட்டி கோவில் கொடி மரம் அருகே சுப்பிரமணியர், வள்ளி,தெய்வானை ஆகிய சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    இதில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், கூத்தனூர், பெரகம்பி, மாவலிங்கை, பொம்மனப்பாடி, சத்திரமனை, வேலூர், குரூர், நாட்டார்மங்கலம், சீதேவிமங்கலம், பாடாலூர், இரூர், ஆலத்தூர்கேட், நாரணமங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ஹேமாவதி, தக்கார் வேல்முருகன், எழுத்தர் தண்டபாணி தேசிங்கன், கந்தசஷ்டி விழாக்குழுத் தலைவர்,செ யலாளர்,பொருளாளர், உள்ளிட்ட விழாக்குழுவினர் செய்திருந்தனர். மேலும் இன்று (செவ்வாய்க்கிழமை) விடையாற்றி உற்சவத்துடன் கந்தசஷ்டி பெருவிழா நிறைவு பெற்றது.

    • குன்னத்தை அடுத்த சு.ஆடுதுறை கிராமம் மூப்பனார் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் கோபால்.
    • முதல் கட்ட விசாரணையில் கோபாலுக்கு குடிப்பழக்கம் இருந்ததோடு, பலரிடம் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தை அடுத்த சு.ஆடுதுறை கிராமம் மூப்பனார் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் கோபால் (வயது 42). இவருக்கு திருமணமாகி முனியம்மாள் (40) என்ற மனைவியும், கோகுல் (19) என்ற மகனும், பவித்ரா (14) என்ற மகளும் உள்ளனர்.

    கோபால் திருமாந்துறையில் செயல்பட்டு வரும் சுங்கச்சாவடியில் சாலை ரோந்து பணியில் ஈடுபடும் அலுவலராக ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். அந்த சுங்கச்சாவடி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடக்கும் விபத்து மற்றும் விதிமீறும் வாகனங்கள், பழுதாகும் வாகனங்களை இழுத்து வரும் பணியில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இந்தநிலையில் இன்று அதிகாலை எழுந்த அவர் காலை 5.45 மணிக்கு தனது மனைவியிடம் கூறி விட்டு வேலைக்கு புறப்பட்டு சென்றார். வழக்கமாக பணியிடத்திற்கு சென்றவுடன் அவரது மனைவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிப்பது வழக்கம். ஆனால் இன்று நீண்ட நேரமாகியும் முனியம்மாளுக்கு கோபாலிடம் இருந்து அழைப்பு எதுவும் வரவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் முனியம்மாள் பதட்டம் அடைந்தார்.

    இதற்கிடையே சுங்கச்சாவடிக்கு செல்லும் வழியில் உள்ள சு.ஆடுதுறை வெள்ளாற்றங்கரை அருகிலுள்ள பாழடைந்த தகரக்கொட்டகையில் இருந்து திடீரென்று புகை வந்தது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து சென்று பார்த்தபோது கடும் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு ஒருவரின் உடல் எரிந்து கொண்டிருந்தது. அதற்கு சற்று தூரத்தில் இருசக்கர வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது.

    இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் மங்களமேடு போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அதற்குள் எரிந்த நபரின் உடல் கரிக்கட்டையானது. பின்னர் அதனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் எரிந்து கிடந்த நபர் டோல்கேட் ஊழியரான கோபால் என்பது தெரியவந்தது.

    மனைவியிடம் கூறிவிட்டு வேலைக்கு சென்ற கோபால் எப்படி இறந்தார், அவர் தனக்கு தானே உடலில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது மர்ம நபர்கள் அவரை கடத்தி சென்று எரித்து கொலை செய்தார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    மேலும் முதல் கட்ட விசாரணையில் கோபாலுக்கு குடிப்பழக்கம் இருந்ததோடு, பலரிடம் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.

    மேலும் இன்று காலை பணிக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு பங்க்கில் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி சென்ற அவர் மறைவான இடத்திற்கு சென்று தனது உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பெரம்பலூர் சர்க்கரை ஆலையில்
    • கரும்பு அரவை டிசம்பர் 5-ந்தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் உள்ள பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் அதிகாரிகள், கரும்பு விவசாயிகள் சங்க தலைவர்கள் மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர்களுடனான கூட்டம் நடந்தது. இதற்கு ஆலையின் தலைமை நிர்வாகி ரமேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆலையில் 2022-23-ம் ஆண்டுக்கான கரும்பு அரவை பருவத்தை டிசம்பர் 5-ந் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது.

    130 நாட்கள் அரைப்பது எனவும், 12 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள 3 லட்சத்து 60 ஆயிரம் டன் கரும்பை அரைப்பது என்றும், 9.75 சதவீதம் சர்க்கரை கட்டுமானத்தை உயர்த்தவும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. பூஞ்சாண நோயால் சுமார் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் டன் வரை கரும்பு பாதிக்கப்பட்டுள்ளது. அதை ஈடுகட்ட பதிவு செய்யப்படாத கரும்பையும் அரவைக்கு எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. வருகிற 21-ந்தேதி ஆலையில் கரும்பு அரவைக்கான சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கூட்டத்தில் 2022-23-ம் ஆண்டுக்கு வெட்டும் கரும்புக்கு கொடுக்கும் வெட்டுக்கூலியாக முன்பணம் தொகை ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். இணைமின் திட்டத்திற்கு பிடித்தம் செய்த பங்கு தொகைக்கான பங்கு பத்திரத்தை வழங்காததால், வரும் பேரவை கூட்டத்திற்குள் பங்குத்தொகையையும் அதற்கான வட்டியையும் வழங்க வேண்டும். டீசல் விலை ஏற்றத்தால் கரும்பு ஏற்றும் டிராக்டர்களுக்கு டீசல் போடுவதற்கு தொகையை உயர்த்தி தரவேண்டும். வருவாய் பங்கீடு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஆலையின் முகப்பில் இருந்து எடை மேடை வரை உள்ள மோசமான சாலையை உடனடியாக சீரமைக்கப்பட வேண்டும். கூடுதல் எடை மேடை அமைக்க வேண்டும்.

    சாலையின் குறுக்கே செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி கட்ட வேண்டும். இந்த ஆண்டுக்கு 450 டிராக்டர்கள் பதிவு செய்ய வேண்டும். ஆலை அரவை கடைசி நேரத்தில் கரும்புகள் தேக்கமடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்புக்கான தொகையை தாமதமடைவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கரும்பு விவசாய சங்க நிர்வாகிகள், டிராக்டர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

    • சிறுமியிடம் கேலி, கிண்டல் செய்து மிரட்டல் விடுத்தனர்
    • சிறுமியை தற்கொலைக்கு தூண்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 53). இவரது உறவினர் மாரிமுத்து (30). இருவரும் அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியை கேலி, கிண்டல் செய்து மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த அந்த சிறுமி கடந்த 25-ந் தேதி பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவரது உறவினர்கள் சிறுமியை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த சம்பவம் குறித்து கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கேலி, கிண்டல் செய்து மிரட்டல் விடுத்த ராமசாமி, மாரிமுத்து ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்."


    • வீட்டை பூட்டிவிட்டு அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார்
    • வீட்டின் பூட்டை உடைத்து தங்க சங்கிலியை திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மலையாளப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி ஷீலாராணி (வயது 42). கிருஷ்ணமூர்த்தி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    ஷீலாராணி சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டிவிட்டு அருகே உள்ள அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து ஷீலாராணி அளித்த புகாரின் பேரில் அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்."


    • 121 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நாளை நடக்கிறது.
    • உள்ளாட்சி தினத்தையொட்டி நடைபெறுகிறது

    பெரம்பலூர்

    தமிழக அரசின் உத்தரவின்படி உள்ளாட்சி தினத்தையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம், அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களால் நடத்தப்பட உள்ளது. இதில் துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கிராம சபை கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு, கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிதல், அரசு நலத்திட்டங்களை கூட்டத்தில் வழங்குதல், அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிய வேண்டும். மேலும், கிராம சபை கூட்டத்தில் கூட்டப்பொருள்கள் பற்றி விவாதிக்க வேண்டும். கிராம சபை கூட்டத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து துறை வாரியான அலுவலர்கள் தவறாது கிராம சபை கூட்டங்களில் கலந்து கொள்வதோடு, துறை தொடர்பான திட்டங்கள் பொதுமக்கள் நன்கு அறியும் வகையில் எடுத்துக் கூறிட வேண்டும். கிராம சபை கூட்டம் நல்ல முறையில் நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரால் (கிராம ஊராட்சிகள்) பற்றாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வட்டாரம் வாரியாக மாவட்ட நிலை அலுவலர்கள், மண்டல அலுவலர்களாக கிராம சபை கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே கிராம சபை கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கு வழிவகுத்து தக்க ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்."

    ×