என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • மகள் இறந்த துக்கத்தில் தாய் தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா மங்களமேட்டை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி தையல்நாயகி (வயது 45). இவருடைய மகள் ரேஷ்மா (14). இவர் தோல் அலர்ஜி நோய் காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டார். இதில், மனவேதனை அடைந்த தையல்நாயகி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தையல்நாயகியின் உடலை கைப்பற்றி பிரேத சோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




    • பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வில்லையென்றால் புகார் அளிக்கலாம் என கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா ெதரிவித்துள்ளார்
    • பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வில்லையென்றால் புகார் தெரிவிக்கலாம்-கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தகவல் பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வில்லையென்றால் புகார் அளிக்கலாம் என கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா ெதரிவித்துள்ளார் மருத்துவக்கழிவுகளை பொது உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு மற்றும் அகற்றும் நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து அதன் மூலமாகவே மருத்துவக்கழிவுகளை அகற்ற வேண்டும்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படு த்தவில்லையென்றால் புகார் தெரிவிக்கலாம் என கண்காணிப்பு குழு கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கூறினார்.பெரம்பலூர் மாவட்டத்தில் மருத்துவ கழிவுகளை முறையாக பிரித்து அப்புறப்படுத்துவது தொடர்பான கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி பேசியதாவது:-

    மருத்துவக்கழிவுகள் பொது உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு மற்றும் அகற்றும் நிறுவனங்கள் மூலம் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்கள் மூலம் மட்டுமே எடுத்து செல்வதையும், பிற வாகனங்களில் எடுத்து செல்லாமல் இருப்பதையும் காவல்துறை கண்காணிக்க வேண்டும். மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சிகிச்சை நிலையங்கள் இணையதள முகவரியில் பதிவு செய்து, அதன் பிறகு தங்கள் மருத்துவக்கழிவுகளை பொது உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு மற்றும் அகற்றும் நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து அதன் மூலமாகவே மருத்துவக்கழிவுகளை அகற்ற வேண்டும்.

    மருத்துவக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் பொது இடங்களில் கொட்டுவதோ மற்றும் பொதுக்கழிவுகளுடன் கலந்து மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவது தெரிந்தால் பொதுமக்கள் அரியலூரில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தை 8220051372 என்ற செல்போன் எண்ணிலும், deeary@tnpcb.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


    • பெரம்பலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 20 ம் தேதி நடைபெறும்
    • தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

    பெரம்பலூர்:

    தனியார்துறை நிறுவனங்களும் - தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் "வேலைவாய்ப்பு முகாம்"; பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இம்மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமை மட்டும் நடைபெற உள்ளது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த சிறு குறு மற்றும் தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவசப்பணியே ஆகும்.

    தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.எனவே இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் தனியார்த்துறை நிறுவனங்களும் வருகின்ற 20 ம் தேதி (வெள்ளிக்கிழமை) மட்டும் காலை 10 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ப.ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.


    • பசும்பலூர் ஆற்றில் மணல் அள்ளிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூர் ஆற்றில் அனுமதி இன்றி அதே ஊரைச் சேர்ந்த முருகன் (வயது 35), வேல்முருகன் (40), சாமிக்கண்ணு (45) ஆகிய 3 பேரும் மாட்டு வண்டியில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற வி.களத்தூர் போலீசார் 3 பேரையும் கைது செய்து மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


    • சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது
    • 200-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, மங்களமேட்டை அடுத்துள்ள திருமாந்துறை சுங்கச்சாவடியில் 52-வது சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. இதில், வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்தும், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் ஓய்வு எடுத்து கொண்டு வாகனங்களை இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பின்னர் 200-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த விழா 17-ந்தேதி வரை நடைபெறுகிறது.


    • பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பை கலெக்டர் வழங்கினார்
    • குடும்ப அட்டைதாரர்களுக்கு தினமும் 250 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் 282 ரேஷன் கடைகள் மூலம் 1 லட்சத்து 90 ஆயிரத்து 267 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை ஆலம்பாடி சமத்துவபுரத்தில் உள்ள அமராவதி அங்காடியில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தொடங்கி வைத்தார்.

    ஏற்கனவே ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக வழங்கப்பட்ட டோக்கன் முறையில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தினமும் 250 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இது வரும் 13-ந் தேதி வரை வழங்கப்பட உள்ளது

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் (கூட்டுறவுத்துறை) பாண்டியன், பெரம்பலூர் நகரமன்றத்தலைவர் அம்பிகா, நகர மன்ற உறுப்பினர்கள் சிவக்குமார் துரை காமராஜ் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


    • பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூல் பெற ஆலோசனைகள் வழங்கப்பட்டது
    • ஜிப்சத்தில் உள்ள கால்சியம், கந்தகச் சத்து அதிக எண்ணெய் சத்து கொண்ட திரட்சியான காய்களை அதிக அளவில் உருவாக்க உதவுகிறது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் தெய்வீகன் வெயிட்டுள்ள செய்தி குறிப்பில், நடப்பு பருவத்தில் நிலக்கடலை விதைக்கும்போது சரியான தட்பவெப்பநிலை இருப்பதால் அதிக மகசூலுக்கு வாய்ப்புள்ளது. அதிக மகசூல் பெற சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும்.

    விதைகள் மூலம் பரவும் பூஞ்சான நோய்களை தடுப்பதற்கு நிலக்கடலை விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக ஒரு கிலோ விதையுடன் 4-கிராம் ட்ரைக்கோடெர்மோ விரிடி கொண்டு பூஞ்சான விதை நேர்த்தியும், காற்றிலுள்ள தழைச்சத்தை கிரகித்து பயிருக்கு கிடைக்க செய்ய விதைப்பதற்கு முன்பு ஒரு ஏக்கருக்கு தேவையான ரைசோபியம் 2 பாக்கெட், பாஸ்போ பாக்டீரியா 2 பாக்கெட் உயிர உரத்தினை, ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து உயிர்உர விதை நேர்த்தி செய்து நிழலில் உலர வைத்து விதைக்க வேண்டும்.

    நிலக்கடலை சாகுபடியில் பயிர் எண்ணிக்கை பராமரிப்பு மிகவும் முக்கியமானது. ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் 80 கிலோ விதையினை 30 செ.மீ இடைவெளியில் விதைத்து ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும். நுண்ணூட்டச்சத்து பற்றாகுறையைப் போக்க நிலக்கடலை நுண்ணூட்ட சத்து 5 கிலோவினை 2கிலோ மணலுடன் சேர்த்து வயலில் இட வேண்டும்.

    விதைத்த 40 முதல் 45வது நாளில் 80 கிலோ ஜிப்சத்தை இட்டு மண் அணைக்க வேண்டும். ஜிப்சத்தில் உள்ள கால்சியம், கந்தகச் சத்து அதிக எண்ணெய் சத்து கொண்ட திரட்சியான காய்களை அதிக அளவில் உருவாக்க உதவுகிறது. இதனுடன் நல்ல வளர்ச்சி அடைந்த முழுமையான பருப்புகளை பெறுவதற்கு மற்றும் அதிக மகசூலை பெற ஊட்டச்சத்து கலவையான ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற விகிதத்தில் இரண்டு முறை பூக்கும் பருவம் மற்றும் காய் பிடிக்கும் தருணத்தில் 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். மேற்கண்ட உரிய வழிமுறைகளை கடை பிடித்து அதிக மகசூல் பெற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.


    • பெரம்பலுார் மாவட்டத்தில் நாளை 121 கிராம ஊராட்சிகளில் சமத்துவ பொங்கல் விழா நடக்கிறது
    • பொதுமக்கள் அனைவரும் தங்கள் ஊராட்சிகளில் நடைபெறவுள்ள சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலுார் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் சுகாதார சமத்துவ பொங்கல் விழா நாளை கொண்டாடப்படுகிறது.இந்த விழாவில் அந்தந்த ஊராட்சி மன்றத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

    மேலும், கலை நிகழ்ச்சிகள், உள்ளூர் சார்ந்த விளையாட்டுகள், கோலப்போட்டிகள், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுகள் போன்ற பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். ஊராட்சிகளில் பணி யாற்றும் சுகாதார பணி யாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள்போன்ற ஊராட்சியின் அலுவலர் களை பாராட்டி ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

    சமத்துவ கருத்துகளை வலியுறுத்தும் வகையிலும், அனைத்து மகளிரின் ஒற்றுமை உணர்வை வளர்த்திடும் வகையிலும், பேச்சுப்போட்டி, கோல போட்டி உள்ளிட்டவை நடத்தப்படவுள்ளன. பொதுமக்கள் அனைவரும் தங்கள் ஊராட்சிகளில் நடைபெறவுள்ள சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.




    • அரசின் சாதனைகள்-திட்டங்கள் குறித்து புகைப்பட கண்காட்சி 10 நாட்கள் நடைபெறுகிறது
    • புகைப்படக்கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நாளை முதல் தொடங்கி 22-ந்தேதி வரை நடைபெறும்

    பெரம்பலூர்:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் பெரம்பலூர் பாலக் கரையில் நடத்தப்படவுள்ள புகைப்பட கண்காட்சி, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா பேசும் போது, பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி என்ற தலைப்பில் அரசுத்துறைகளை ஒருங்கிணைத்து, அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நாளை (13ம் தேதி) முதல்தொடங்கி 22-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறும்.

    இதில் தமிழக அரசின் சாதனை-திட்டங்களை விளக்கும் புகைப்படங்கள் இக்கண் காட்சியில் இடம் பெற்றிருக்கும். மேலும் சுற்றுலாத்துறையுடன் மற்ற துறைகளையும் ஒருங்கிணைத்து பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், மகளிர் சுய உதவிக்குழுக்களை கொண்டு "தெருவோர உணவகம்" அமைப்பில் சிறுதானியம் மற்றும் பல்சுவை உணவுடன் கூடிய உணவு திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது என்று அவர் பேசினார்.

    • பெரம்பலூர் மதனகோபாலசாமி கோவிலில் நம்மாழ்வார் மோட்ச உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
    • கோவிலின் வடக்குபகுதியில் 10 நாட்களாக பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து வைக்கபட்டிருந்த சொர்க்கவாசல் அடைக்கப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கடந்த 2-ந்தேதி சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதனைதொடர்ந்து இராப்பத்து நிகழ்ச்சி 10 நாட்கள் சிறப்பு ஆராதனையுடன் நடந்தது. நிறைவு நாளான நேற்று இரவு நம்மாழ்வார் மோட்ச நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி உற்சவ பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வெளியே சன்னதி அக்ரஹாரம் வழியாக வந்து கோவில் முன்புறம் உள்ள ஆஞ்சநேயர் கம்பத்தை 3 முறை வலம் வந்து மீண்டும் சொர்க்கவாசல் வழியாக கோவிலை அடைந்தார்.

    பல்லக்கில் இருந்து உற்சவ பெருமாள் இறங்கியதும் கோவில் அர்ச்சகர் பட்டாபிராமன் பட்டாச்சாரியார் குழுவினர் பெருமாள் முன்பு நம்மாழ்வாரின் பாசுரங்களை பாடி சேவித்து நம்மாழ்வாருக்கு அரங்கநாதர் மோட்சம் அருளிய நிகழ்ச்சியை நிறைவு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து கோவிலின் வடக்குபகுதியில் 10 நாட்களாக பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து வைக்கபட்டிருந்த சொர்க்கவாசல் அடைக்கப்பட்டது. இனி அடுத்த வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்படும்.


    • நிலுவை வழக்குகளை விரைவாக முடிக்க கலந்தாய்வு நடந்தது.
    • போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் இயங்கி வரும் வாகனங்களை ஆய்வு செய்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமை தாங்கி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள் குறித்து ஆய்வு செய்து, புலன் விசாரணை முடியாமல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கலந்தாய்வு செய்தார். இதில் போலீசார், மருத்துவத்துறையினர், சுகாதார துறையினர், போக்குவரத்து துறையினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு உள்பட பல்வேறு துறையினர் கலந்து கொண்டனர். முன்னதாக போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் இயங்கி வரும் வாகனங்களை ஆய்வு செய்தார்.


    • மாற்றுத்திறனாளி குழந்தைகள் சுற்றுலா சென்றனர்.
    • கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வழியனுப்பி வைத்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் ஒரு நாள் சுற்றுலாவாக திருச்சி வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு நேற்று அழைத்து செல்லப்பட்டனர். முன்னதாக அவர்களை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வழியனுப்பி வைத்தார்.


    ×