என் மலர்
பெரம்பலூர்
- பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- நந்தி பெருமானுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம் செய்யப்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூரில் உள்ள அகிலாண்டேசுவரி சமேத ஸ்ரீபிரம்மபுரீசுவரர் கோவிலில் நேற்று காலை மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மூலவருக்கும், நந்தி பெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து வாழைப்பழம், மாதுளை, ஆப்பிள், சாத்துக்குடி, திராட்சை, முறுக்கு மற்றும் ரூபாய் நோட்டுகள் கோர்த்து நந்தி பெருமானுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் கவுரிசங்கர் சிவாச்சாரியார் நடத்திவைத்தார். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- அடுத்தடுத்து 3 கடைகளின் துணிகரம்
- மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு, ராஜீவ் நகரை சேர்ந்தவர் நாராயணன்(வயது 59). இவர் அதே பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துக்கொண்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் நேற்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் ஷட்டர் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூ.750 மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகள் மட்டும் திருட்டு போயிருந்தது.
இதேபோல் மளிகைக்கடையின் அருகே ரெங்காநகர் மேட்டு தெருவை சேர்ந்த செந்தில்குமார்(43) என்பவர் வைத்துள்ள சலூன் கடையிலும், சிவராமலிங்கம் என்பவர் வைத்துள்ள தண்ணீர் கேன்கள் விற்பனை செய்யும் கடையிலும் ஷட்டர் கதவுகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த 2 கடைகளிலும் பணம் ஏதும் திருட்டு போகவில்லை. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது."
- பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது
- பராமரிப்பு பணி முடியும் வரை மின்தடை
பெரம்பலூர்
பெரம்பலூர் மின் கோட்டத்திற்குட்பட்ட சிறுவாச்சூர் துணை மின்நிலையத்தில் வரும் 19-ந் தேதி ( வியாழக்கிழமை) மாதாந்திரபராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் கிராமபகுதிகளான சிறுவாச்சூர், அய்யலூர், விளாமுத்தூர், செட்டிக்குளம், நாட்டார்மங்கலம், குரூர், நாரணமங்கலம், மருதடி, பொம்மனப்பாடி, கவுல்பாளையம், தீரன்நகர், நொச்சியம், விஜயகோபாலபுரம், செல்லியம்பாளையம், புதுநடுவலூர், ரெங்கநாதபுரம், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, மலையப்பநகர் ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாள் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இதே போல் எசனை துணை மின்நிலையத்தில் வரும் 19-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் கிராமபகுதிகளான கோனேரிபாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, எசனை, செஞ்சேரி, கீழக்கரை, பாப்பாங்கரை, இரட்டைமலைசந்து, அனுக்கூர், சோமண்டாப்புதூர், வேப்பந்தட்டை, பாலையூர், மேட்டாங்காடு, திருப்பெயர், கே.புதூர், மேலப்புலியூர், நாவலூர் ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
- குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட ரவுடிகள் 60-க்கும் மேற்பட்டோர் தாங்களாகவும், வக்கீல் மூலமாகவும் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர்.
பெரம்பலூர்
திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன் உத்தரவின்படி, திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர் மேற்பார்வையில், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி வழிகாட்டுதலின்படி, பெரம்பலூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரவுடிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும், குற்றங்கள் நிகழாமல் தடுக்கவும், பொதுமக்கள் அச்சமின்றி இருப்பதை உறுதி செய்யவும், பொது அமைதியை நிலைநாட்டவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 ரவுடிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ரவுடிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. ரவுடிகளின் நடவடிக்கை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நன்னடத்தை பிணை ஆணை பெற்ற 4 ரவுடிகள் பிணை ஆணையை மீறி மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட காரணத்தால், அவர்கள் பிணை முறிவு ஆணை பெறப்பட்டு சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட ரவுடிகள் 60-க்கும் மேற்பட்டோர் தாங்களாகவும், வக்கீல் மூலமாகவும் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர். மேலும் பெரம்பலூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் இடையூறு ஏற்படுத்துதல், கட்டப்பஞ்சாயத்து, வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு மிரட்டுதல் போன்ற குற்றச்செயலில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள், என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
- முக்கிய நீராதாரங்களான ஏரிகள் சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
- சுமார் 130-க்கும் மேற்பட்ட சிறுபாசன ஏரிகள் பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட பகுதிகள் பெரும்பாலும் மானாவாரி நிலங்களை கொண்டுள்ள பகுதியாகும். இந்த மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். மாவட்டத்தின் பல ஊர்களிலும் பொதுமக்கள் குளிப்பதற்கு, கால்நடைகளுக்கு, குடிநீர், வேளாண்மை போன்றவற்றின் பயன்பாட்டிற்காக பல ஏரி, குளங்களை தொலைநோக்கு பார்வையுடன் முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர். குறிப்பாக வேளாண்மைக்கென மாவட்டத்தில் சிறு அளவிலான பாசன ஏரிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 130-க்கும் மேற்பட்ட சிறுபாசன ஏரிகள் பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் அதில் பெரும்பாலான ஏரிகள் போதிய பராமரிப்பின்றி கிடக்கின்றன. மூங்கில்பாடி கிராமத்தில் உள்ள சிறுபாசன ஏரியான பெரிய ஏரிக்கு அருகே உள்ள காடுகளில் இருந்தும், வெள்ளியாங்குளம் என்ற மற்றொரு ஏரியில் இருந்தும் தண்ணீர் வருகிறது. இந்த ஏரியானது சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுவதோடு சுமார் 40 ஏக்கர் பரப்பளவிலான பாசன நிலங்களையும் கொண்டுள்ளது. மூங்கில்பாடி - குன்னம் செல்லும் வழியில் வெள்ளியாங்குளம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு அருகே உள்ள காடுகளில் இருந்து மழைக்காலத்தில் சிறு சிறு வாய்க்கால்கள் மூலம் மழைநீர் வந்தடைகிறது. இந்த ஏரி நிரம்பிய பிறகு இங்கிருந்து வெளியேறும் நீரானது பாசன ஏரியான பெரிய ஏரிக்கு செல்கிறது. இந்த பெரிய ஏரி நிரம்பினால் அடுத்துள்ள ஊர் ஏரிக்குச் சென்று பிறகு மருதையாற்றின் கிளை ஓடைகளுள் ஒன்றான மூங்கில்பாடி ஓடையை அடைந்து அங்கிருந்து மருதையாற்றுக்கு தண்ணீர் செல்கிறது. இதில் பெரிய ஏரி பாசன பயன்பாட்டிற்கும், மற்ற 2 ஏரிகளும் நிலத்தடி நீர்மட்டம், கால்நடைகள் உள்ளிட்ட பல்லுயிர்களின் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு மூங்கில்பாடி பகுதியில் கூடுதல் மழைப்பொழிவின் காரணமாக, சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு 3 ஏரிகளும் நிரம்பின. இதையடுத்து பெரிய ஏரியின் மூலம் ஆண்டின் இறுதியில் விவசாயிகள் மகிழ்ச்சியோடு நெல் பயிரிட்டு சாகுபடி செய்தனர். கடந்த பல ஆண்டுகளாக இந்த ஏரிகள் முறையாக சீரமைக்கப்படவில்லை. குறிப்பாக பெரிய ஏரியின் மதகானது முறையாக இல்லாத காரணத்தினால் பாசனத்திற்கு தண்ணீரை வெளியேற்ற விவசாயிகள் 12 அடி ஆழ நீருக்குள் மூழ்கி மதகை சிரமத்துடன் திறந்தும், மூடியும் வருகின்றனர். மேலும் ஏரிகள் தூர்ந்து போனதால் ஆழம் இல்லாமல் உள்ளது. கூடுதலாகத் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாத சூழலும் உள்ளது. கரைகள், உள்பகுதிகள் என ஆங்காங்கே சீமைக்கருவேல மரங்களும் வளர்ந்து காணப்படுகின்றன. வெள்ளியாங்குளம் ஏரியின் மடைப் பகுதியானது 15 ஆண்டுகளுக்கு முன்பு உடைந்தநிலையில், அது சீரமைக்கப்படாததால் ஏரியில் போதுமான அளவு தண்ணீரைத் தேக்கி வைக்க முடியவில்லை. ஏரியும், நீர் வெளியேறும் பகுதியும் ஒரே மட்டமாக காணப்படுகிறது. இது தொடர்பாக பல முறை ஊராட்சி நிர்வாகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கையாக மனுவும் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் விவசாயிகளின் கோரிக்கைக்கு இதுவரை யாரும் செவி சாய்க்கவில்லை. எனவே இனியும் தாமதிக்காமல் இந்த ஏரிகளை முறையாக ஆழப்படுத்தி, மதகு மற்றும் மடைப்பகுதிகளை சீரமைத்து, கரைகளை பலப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர்
அண்ணங்கார குப்பம் வன்னியர் தெருவை சேர்ந்தவர் முஜ்மல்(வயது 63). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் முஜ்மல் ஆண்டிமடம் நான்கு ரோடு சந்திப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இடையக்குறிச்சி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த சிட்டு என்ற இளையராஜா(36) என்பவர் முஜ்மலிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து முஜ்மல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சிட்டு என்ற இளையராஜா மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- 18-ந் தேதி வழங்கப்படுகிறது
- விடுபட்டவர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் 282 நியாயவிலைக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 267 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் பணி கடந்த 9ம்தேதி தொடங்கப்பட்டது. 13ம்தேதி வரை 5 நாட்களிலும் நாளொன்றுக்கு 250 குடும்ப அட்டைதாரர்களுக்கு மிகாமல் சுழற்சி முறையில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்குவதற்கு ஏதுவாக டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு, பொங்கல் பரிசுத் தொகுப்புகள் அனைத்து அங்காடிகளிலும் வழங்க விநியோகிக்கப்பட்டது. விடுப்பட்டவர்களுக்கு 14ம்தேதியும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 485 அரிசி பெறும் குடும்ப அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. ரேசன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறாமல் விடுப்பட்டுள்ள 6 ஆயிரத்து 676 அரிசி பெறும் குடும்ப அட்டைதார்களுக்கு நாளை மறு நாள் (18ம்தேதி) முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. எனவே பொங்கல் பரிசு தொகுப்பு பெறப்படாமல் உள்ள அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் நாளை மறு நாள் முதல் தங்களுக்குரிய ரேசன் கடையில் பெற்று கொள்ளலாம் என மாவட்ட நிரிவாகம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்
தமிழக கவர்னரை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் தமிழக கவர்னரின் செயல்பாடுகளை கண்டித்தும், கவர்னர் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும். மத்திய அரசு தமிழ்நாட்டு கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
- ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்
- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். உறுப்பினர் அப்துல் ரஹீம் வரவேற்று பேசினார். செயலாளர் சையத் பாஷா ஜான், ஓய்வு பெற்ற நல்லாசிரியர் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 4 சதவீதம் அகவிலைபடியை உயர்த்தி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வது, 70 வயது பூர்த்தி அடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் வட்டாரத்தில் உள்ள ஓய்வு பெற்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் தங்கராசு நன்றி கூறினார்.
- மேற்கூரையில் இரும்பிலான கம்பி வலை பிரிக்கப்பட்டிருந்தது
- வாலீஸ்வரர் கோவிலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் பிரசித்தி பெற்ற இந்திய தொல்லியல் கட்டுப்பாட்டில் உள்ள வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குருக்கள் வழக்கம்போல் பூஜைகள் முடிந்து கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர். காலையில் பூஜைகள் செய்வதற்காக குருக்கள் கோவிலை திறந்தனர். அப்போது கோவிலின் மேற்கூரையில் காற்றோற்றட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த இரும்பிலான கம்பி வலை பிரிக்கப்பட்டிருந்ததும், மேலும் அதன் வழியாக வேட்டிகளை கட்டி தொங்கவிட்டிருந்ததும் கண்டும் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் கோவிலில் கடப்பாறைகள், கையுறைகள் உள்ளிட்டவை கிடந்தது. பீரோவும் திறந்து கிடந்தது. ஆனால் கோவிலில் பஞ்சலோக சிலைகள், உற்சவர் சிலைகள், நகைகள், உண்டியல் பணம் ஏதுவும் கொள்ளை போகவில்லை. இதுகுறித்து தகவலறிந்தும் மங்களமேடு போலீசார் கோவிலுக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பிரசித்தி பெற்ற வாலீஸ்வரர் கோவிலில் கொள்ளை முயற்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு
- டாஸ்மாக் கடைகளுக்கு நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
பெரம்பலூர்
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்தும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஒரு நாள் மட்டும் விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளும், டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களும் மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும், என்று அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தோழியின் வீட்டில் தூங்கிய போது சம்பவம்
- போலீசார் விசாரணை
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூர் சின்னாறு பிள்ளையார் கோவில் எதிர்புறத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சத்தியபாமா(வயது 38). சத்தியபாமாவின் கணவர் வெளியூரில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இதனால் சத்தியபாமா தனது மகளுடன் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவரது தோழியான ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த தனசேகரின் மனைவி சத்யா(31) என்பவர் எறையூரில் உள்ள தோழியை பார்ப்பதற்காக தனது மகனுடன் சத்தியபாமா வீட்டிற்கு வந்து கடந்த 2 நாட்களாக தங்கியுள்ளார். இரவு சத்யா வீட்டின் கதவு அருகே தூங்கி கொண்டிருந்தார். இந்த நிலையில் வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள் சத்யா கழுத்தில் கிடந்த ¾ பவுன் தாலி சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இச்சம்பவம் குறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






