என் மலர்
உள்ளூர் செய்திகள்

தமிழக கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்தது.
பெரம்பலூர்
தமிழக கவர்னரை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் தமிழக கவர்னரின் செயல்பாடுகளை கண்டித்தும், கவர்னர் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும். மத்திய அரசு தமிழ்நாட்டு கவர்னரை திரும்ப பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
Next Story






