என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலீஸ்வரர் கோவிலில் கொள்ளை முயற்சி
- மேற்கூரையில் இரும்பிலான கம்பி வலை பிரிக்கப்பட்டிருந்தது
- வாலீஸ்வரர் கோவிலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் பிரசித்தி பெற்ற இந்திய தொல்லியல் கட்டுப்பாட்டில் உள்ள வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குருக்கள் வழக்கம்போல் பூஜைகள் முடிந்து கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர். காலையில் பூஜைகள் செய்வதற்காக குருக்கள் கோவிலை திறந்தனர். அப்போது கோவிலின் மேற்கூரையில் காற்றோற்றட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த இரும்பிலான கம்பி வலை பிரிக்கப்பட்டிருந்ததும், மேலும் அதன் வழியாக வேட்டிகளை கட்டி தொங்கவிட்டிருந்ததும் கண்டும் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் கோவிலில் கடப்பாறைகள், கையுறைகள் உள்ளிட்டவை கிடந்தது. பீரோவும் திறந்து கிடந்தது. ஆனால் கோவிலில் பஞ்சலோக சிலைகள், உற்சவர் சிலைகள், நகைகள், உண்டியல் பணம் ஏதுவும் கொள்ளை போகவில்லை. இதுகுறித்து தகவலறிந்தும் மங்களமேடு போலீசார் கோவிலுக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பிரசித்தி பெற்ற வாலீஸ்வரர் கோவிலில் கொள்ளை முயற்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






