search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலுார் மாவட்டத்தில் நாளை 121 கிராம ஊராட்சிகளில் சமத்துவ பொங்கல் விழா
    X

    பெரம்பலுார் மாவட்டத்தில் நாளை 121 கிராம ஊராட்சிகளில் சமத்துவ பொங்கல் விழா

    • பெரம்பலுார் மாவட்டத்தில் நாளை 121 கிராம ஊராட்சிகளில் சமத்துவ பொங்கல் விழா நடக்கிறது
    • பொதுமக்கள் அனைவரும் தங்கள் ஊராட்சிகளில் நடைபெறவுள்ள சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலுார் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் சுகாதார சமத்துவ பொங்கல் விழா நாளை கொண்டாடப்படுகிறது.இந்த விழாவில் அந்தந்த ஊராட்சி மன்றத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

    மேலும், கலை நிகழ்ச்சிகள், உள்ளூர் சார்ந்த விளையாட்டுகள், கோலப்போட்டிகள், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுகள் போன்ற பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். ஊராட்சிகளில் பணி யாற்றும் சுகாதார பணி யாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள்போன்ற ஊராட்சியின் அலுவலர் களை பாராட்டி ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

    சமத்துவ கருத்துகளை வலியுறுத்தும் வகையிலும், அனைத்து மகளிரின் ஒற்றுமை உணர்வை வளர்த்திடும் வகையிலும், பேச்சுப்போட்டி, கோல போட்டி உள்ளிட்டவை நடத்தப்படவுள்ளன. பொதுமக்கள் அனைவரும் தங்கள் ஊராட்சிகளில் நடைபெறவுள்ள சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.




    Next Story
    ×