என் மலர்
நீலகிரி
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கொரோனா சிகிச்சை மையமாக தனியார் பள்ளி மாற்றப்பட்டு உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தனியார் தொழிற்சாலையில் கொரோனா பாதித்த மக்கள் தொடர்பு அலுவலருடன் தொடர்பில் இருந்த 110-க்கும் மேற்பட்டோருக்கும் தொற்று ஏற்பட்டு உள்ளது. அந்த தொழிற்சாலை நிதி மேலாளர் கொரோனாவுக்கு பலியானார். இதனால் எல்லநள்ளி பகுதி கிளஸ்டராக அறிவிக்கப்பட்டு, அங்கு வசிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. இது தவிர கிராமப்புறங்களில் நடந்த திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிராமங்களிலும் தொற்று பரவும் வேகம் அதிகரித்து உள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
தொற்று உறுதியான 179 பேரில் 69 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். மீதம் உள்ள 109 பேர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, ஊட்டி அரசு ஆஸ்பத்திரி, குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள் போன்றோர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். தொற்று உறுதி செய்யப்பட்டு அறிகுறி இல்லாதவர்கள் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இங்கு 200 படுக்கை வசதிகள் உள்ளன.
இதற்கிடையே கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை குறுகிய நாட்களில் அதிகரித்ததால், குன்னூர் அரசு மருத்துவமனையிலும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது கொரோனா சிகிச்சை மையங்களை மேம்படுத்த வேண்டும், ஏற்கனவே உள்ள மையங்களில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள மையங்களில போதுமான அளவு படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊட்டி பெர்ன்ஹில் ரவுண்டானா அருகே உள்ள தனியார் பள்ளி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டு உள்ளது. அங்கு தொற்று உறுதி செய்யப்பட்டு காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி இல்லாதவர்கள் அனுமதிக்கப்பட உள்ளார்கள். 100 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. வெண்டிலேட்டர் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. தொடர்ந்து அந்த பள்ளி வளாகம் மற்றும் உள்புறத்தில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. வருகிற நாட்களில் கூடுதலாக சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று சுகாதார துறையினர் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதால், வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடின. மேலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
ஊட்டி:
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று ஜூலை மாதத்தின் 2-வது ஞாயிற்றுக்கிழமை என்பதால் நீலகிரி மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. ஊட்டியில் கமர்சியல் சாலை, லோயர் பஜார், அப்பர் பஜார், சேரிங்கிராஸ், ஏ.டி.சி., எட்டின்ஸ் சாலை, பிங்கர்போஸ்ட், ஹில்பங்க், ராஜீவ் காந்தி ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. காய்கறிகள், மளிகை பொருட்கள், நகைக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டதால், அந்த பகுதிகள் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.
மேலும் ஆட்டோ, வாடகை வாகனங்கள் ஓடவில்லை. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் செயல்படாததால், அதன் முன்பு கயிறுகள் கட்டி வைக்கப்பட்டு இருந்தது. முழு ஊரடங்கு என்பதால் பால், மருந்து, மாத்திரைகளை வாங்க மட்டுமே சிலர் வெளியில் வந்தனர். இதற்காக பால் விற்பனை கடைகள், மருந்துக்கடைகள் திறக்கப்பட்டன.
இது தவிர ஊட்டியில் நகராட்சி மார்க்கெட் மூடப்பட்டது. அனைத்து நுழைவு வாயில்களுக்கும் பூட்டப்பட்டு, அங்குள்ள 1,300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஊட்டி நகரில் கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடியதால் கால்நடைகள், தெருநாய்கள் சுதந்திரமாக உலா வந்ததை காண முடிந்தது. ஊட்டியில் சேரிங்கிராஸ், ஏ.டி.சி., பிங்கர்போஸ்ட், லவ்டேல் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முழு ஊரடங்கை மீறி வெளியில் யாராவது சுற்றி வருகிறார்களா? என்று தீவிரமாக கண்காணித்தனர். நீலகிரி மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதோடு, தற்காலிகமாக தடுப்புகள் வைத்து கண்காணித்தனர்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நேற்று கடைபிடிக்கப்பட்ட முழு ஊரடங்குக்கு ஊட்டியில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தனர். தேவையின்றி வெளியே வருவதை தவிர்த்ததோடு, வாகனங்களும் வெளியே வரவில்லை. எனினும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதேபோன்று கூடலூர், குன்னூர், பந்தலூர், மசினகுடி பகுதிகளில் எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை. மேலும் மக்கள் நடமாட்டமும் இல்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. கூடலூர் பகுதியில் மருந்து கடைகள் மட்டும் திறந்து இருந்தது. மேலும் பால் வினியோகமும் நடைபெற்றது. கூடலூரில் இருந்து ஊட்டி, கோழிக்கோடு, சுல்தான்பத்தேரி, மைசூரூ செல்லும் சாலைகள் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி கிடந்தது. இது தவிர தேவையின்றி வெளியே நடமாடியவர்களை கூடலூர் புதிய மற்றும் பழைய பஸ் நிலைய பகுதியில் பாதுகாப்பு பணிக்கு நின்றிருந்த போலீசார் எச்சரித்து வீடுகளுக்கு அனுப்பினர்.
கோத்தகிரி நகரின் முக்கிய பகுதிகளான ராம்சந்த் சதுக்கம், பஸ் நிலையம், காமராஜர் சதுக்கம், டானிங்டன், காந்தி மைதான திறந்தவெளி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் மருந்து கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தாலும், பொதுமக்கள் வருகை இல்லாததால் பெரும்பாலான மருந்து கடைகள் மற்றும் பால் பூத்துக்கள் மூடப்பட்டு இருந்தன.

கூடலூர் அருகே ஆட்டோவை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன.
கூடலூர்:
கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஓவேலி பேரூராட்சி பார்வுட் பகுதிக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவில் குட்டியுடன் 3 காட்டுயானைகள் புகுந்தன. தொடர்ந்து அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அருகில் முகாமிட்டது. இதை கண்ட பொதுமக்கள் பீதி அடைந்தனர். மேலும் வீடுகளுக்குள் பதுங்கி கொண்டனர். இதற்கிடையில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அருகில் நின்றிருந்த பாக்கு, தென்னை உள்ளிட்ட பயிர்களை காட்டுயானைகள் தின்றன. மேலும் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. இதில் சதீஷ் என்பவரது ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. விடிய, விடிய அப்பகுதியிலேயே முகாமிட்ட காட்டுயானைகள், அதன்பிறகு வனப்பகுதிக்குள் சென்றன.
இதுகுறித்து தகவல் அறிந்த ஓவேலி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சேதம் அடைந்த ஆட்டோவை பார்வையிட்டனர். அப்போது சேதம் அடைந்த ஆட்டோவை சரி செய்ய உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வனத்துறையிடம், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, மளிகை கடைகள், வாகனங்கள், பயிர்களை சேதப்படுத்தும் செயலில் காட்டுயானைகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. அவை ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஆனால் எந்த பலனும் இல்லை. எனவே காட்டுயானைகள் ஊருக்கு வருவதை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதேபோன்று பாடந்தொரை பகுதியில் தோட்டத்துக்குள் காட்டுயானைகள் புகுந்து, வாழைகளை சேதப்படுத்தின. இதற்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் வனத்துறையிடம் மனு அளித்தனர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் உறுதி அளித்தனர்.

சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றக்கூடாது என்று கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜ்குமார் உத்தரவிட்டு உள்ளார்.
கூடலூர்:
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் சரக்கு வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஆர்.டி.ஓ. ராஜ்குமார் தலைமை தாங்கினார். தாசில்தார் தினேஷ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெய்சிங், அமீர் அகமது, வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஆர்.டி.ஓ. ராஜ்குமார் பேசும்போது கூறியதாவது:-
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்களில் டிரைவர், கிளனர் மட்டுமே இருக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களை இறக்கிவிட்டு வரும்போது, பயணிகளை ஏற்றி வரக்கூடாது. இதை மீறினால் சம்பந்தப்பட்ட வாகன டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
லாரி உரிமையாளர்கள் தங்களிடம் பணியாற்றும் டிரைவர்கள், கிளனர்களுக்கு அடையாள ஆவணங்கள் வழங்கினால், அதனை சான்றிதழ் போல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில எல்லைகளில் போலீசார், சுகாதாரத்துறையினரிடம் அவர்கள் சான்றிதழ்களை காண்பிக்க வேண்டும். சான்றிதழில் குறிப்பிடப்படாத நபர்களை வாகனத்தில் அழைத்து செல்வது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட வாகன டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து எக்காரணத்தை கொண்டும் சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்ற மாட்டோம் என்று உரிமையாளர்கள், டிரைவர்கள் உறுதி அளித்தனர்.

நீலகிரியில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி முன்கூட்டியே அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைக்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர்.
ஊட்டி:
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. தொற்று வேகமாக பரவி வருவதால், இந்த மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி கடந்த 5-ந் தேதி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் 2-வது ஞாயிற்றுக்கிழமையான இன்று நீலகிரி மாவட்டம் முழுவதும் தளர்வில்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நேற்று தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை மார்க்கெட்டுகளில் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். நீலகிரிக்குள் அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், கிராமப்புற மக்கள் தங்களது சொந்த வாகனங்களில் காலை முதலே பொருட்களை வாங்க நகர் பகுதிகளுக்கு வருகை தந்தனர்.
ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் உள்ள காந்தி விளையாட்டு மைதானத்தில் செயல்பட்டு வரும் திறந்தவெளி உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்களை வாங்க பொதுமக்கள் அதிகளவில் வந்திருந்தனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் காய்கறிகளை வாங்கியதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. சிலர் முகக்கவசம் அணியாமல் வந்து இருந்ததை காண முடிந்தது. அங்கு பொருட்களை வாங்க வந்தவர்கள் தங்களது கார்களை மைதானத்துக்குள் நிறுத்தியதால் பொதுமக்கள் சென்று வர சிரமப்பட்டனர். நுழைவாயில் பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. ஊட்டி குதிரை பந்தய வாகன நிறுத்துமிடம் வாகனங்களால் நிரம்பி வழிந்தது.
நகராட்சி மார்க்கெட்டில் உள்ள இறைச்சி கடைகளில் மீன், கோழி, ஆடு போன்ற இறைச்சிகளை வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இன்று மதுக்கடைகள் மூடப்படுவதால் மதுபானங்களை வாங்க மது பிரியர்கள் மதுக்கடைகளுக்கு அதிகளவில் சென்று வந்தனர்.
முழு ஊரடங்கால் இன்று கடைகள் அனைத்தும் மூடப்படுகின்றன. அத்தியாவசிய தேவையான பால் விற்பனை கடைகள், மருந்து கடைகள் மட்டும் வழக்கம்போல் செயல்படும். பொதுமக்கள் பால் மற்றும் மருத்துவ தேவையை தவிர்த்து வேறு காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது. முழு ஊரடங்கையொட்டி மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் திறக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் சளி மாதிரிகள் எடுத்து, கொரோனா பரிசோதனைக்காக குன்னூர் பாஸ்டியர் இன்ஸ்டியூட் நிறுவன ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு வந்தது. தற்போது அங்கு திடீரென கொரோனா பரிசோதனை நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் நீலகிரியில் இருந்து கோவையில் உள்ள ஆய்வகத்துக்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டு, முடிவுகள் கிடைக்க பெற்று வந்தன.
இதற்கிடையே பாதிப்பு எண்ணிக்கை 100-ஐ தாண்டியதால் ஒரு நாளைக்கு 500-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது. இந்த முடிவுகள் கிடைக்க 2 முதல் 3 நாட்கள் ஆகிறது. இதனால் தொற்று பரவும் வேகத்தை கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் செயல்பட அனுமதிக்கும்படி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு(ஐ.சி.எம்.ஆர்.) கடிதம் அனுப்பினார். இதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் ஊட்டியில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ஐ.சி.எம்.ஆர். அனுமதி அளித்ததை தொடர்ந்து, ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் நேற்று முதல் கொரோனா பரிசோதனை ஆய்வகம் திறந்து, செயல்பட தொடங்கியது. நீலகிரியில் எடுக்கப்படும் மாதிரிகள் ஊட்டியிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு 270 மாதிரிகளுக்கான பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். அதற்கான நவீன கருவிகள், உபகரணங்கள் உள்ளன. இதன் மூலம் பரிசோதனை முடிவுகள் உடனுக்குடன் கிடைக்கும். இருப்பினும் தினமும் 600 அல்லது 700 நபர்களுக்கு மேல் சளி மாதிரிகள் எடுப்பதால், கோவையில் உள்ள ஆய்வகத்துக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது. இதுவரை 21 ஆயிரம் பேரிடம் இருந்து சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடந்து உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சாக்லேட்டை வாங்கி சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்ற விளம்பரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே எச்.பி.எப். பகுதியில் சாக்லேட் தொழிற்சாலை உள்ளது. அந்த கடையில் விற்பனை செய்யப்படும் சாக்லேட் வகைகளை வாங்கி சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என உரிமையாளர் விளம்பரம் செய்தார். இது தொலைக்காட்சிகள் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் வைரலானது. இதுகுறித்து தகவல் அறிந்த நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, அந்த தொழிற்சாலை மற்றும் கடையில் ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி மருத்துவத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் நேற்று அந்த தொழிற்சாலை மற்றும் கடைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

அப்போது, உணவு பாதுகாப்பு விதிமுறைகளின்படி எவ்வித அனுமதியும் பெறாமல் சாக்லேட் தயாரிப்பது தெரியவந்தது. பின்னர் உடனடியாக சாக்லேட் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று விளம்பரம் செய்யப்பட்ட சாக்லேட் வகை பாக்கெட்டின் விலை ரூ.45-க்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் தவறான விளம்பரம் செய்தது, அனுமதி பெறாமல் சாக்லேட் தயாரித்தது போன்ற காரணங்களுக்காக அந்த தொழிற்சாலை மற்றும் கடையை பூட்டி ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே எச்.பி.எப். பகுதியில் சாக்லேட் தொழிற்சாலை உள்ளது. அந்த கடையில் விற்பனை செய்யப்படும் சாக்லேட் வகைகளை வாங்கி சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என உரிமையாளர் விளம்பரம் செய்தார். இது தொலைக்காட்சிகள் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் வைரலானது. இதுகுறித்து தகவல் அறிந்த நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, அந்த தொழிற்சாலை மற்றும் கடையில் ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி மருத்துவத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் நேற்று அந்த தொழிற்சாலை மற்றும் கடைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

எருமாடு அருகே நகைக்கடை ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பந்தலூர்:
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட எருமாடு அருகே உள்ள கூலால் பகுதியை சேர்ந்தவர் அமிர்தலால்(வயது 25). டெல்லியில் உள்ள ஒரு நகைக்கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால் டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது அமிர்தலால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சேரம்பாடி போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து எருமாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊட்டி அருகே பழங்குடியின மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகல்கோடு மந்து பகுதியில் பழங்குடியின மக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்து கிராம அளவிலான சமூக விழிப்புணர்வு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தார். இன்கோசர்வ் தலைமை செயல் அதிகாரியும், நீலகிரி மாவட்ட கொரோனா சிறப்பு அதிகாரியுமான சுப்ரியா சாகு தலைமை தாங்கி தோடர் இன மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. விழிப்புணர்வு நடவடிக்கைகள் அனைத்து கிராம மக்களை சென்றடைய கிராம ஊராட்சி அளவிலான சமூக விழிப்புணர்வு கூட்டம் என்ற முறை நீலகிரியில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. பழங்குடியின கிராமங்கள் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஊர் தலைவர்கள், சமுதாய தலைவர்களுக்கு கொரோனா தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, அது கிராம அளவில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முகக்கவசம் அணிவது, அடிக்கடி கை கழுவுவது, கிருமி நாசினி உபயோகிப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது போன்றவை முக்கிய அம்சங்களாகும். அந்தந்த பகுதி கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க சென்று வரும் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும். தங்கள் கிராமத்துக்கு வெளிமாவட்ட, வெளிமாநிலங்களில் இருந்து யாரேனும் வருகை புரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். வயது முதிர்ந்தவர், இணை நோய்களை உடையவர்களுக்கு கபசுர குடிநீர், வைட்டமின் சி மாத்திரைகள் போன்றவற்றை வழங்க வேண்டும்.
கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதன் மூலம் வெளியிடங்களில் இருந்து வருகை தருபவர்கள் குறித்த விவரங்களை மாவட்ட கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பழங்குடியின மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து ஊட்டியில் அமைய உள்ள அரசு மருத்துவ கல்லூரிக்கு காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.
ஊட்டி:
தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் ஆகிய 10 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.
இதையடுத்து தமிழகத்தில் 11-வது புதிய மருத்துவ கல்லூரி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கட்டப்பட உள்ளது. மத்திய அரசின் நிதி பங்களிப்பு 60 சதவீதம், தமிழக அரசின் நிதி பங்களிப்பு 40 சதவீதம் என்ற அடிப்படையில் கட்டிட பணிகள் நடைபெற இருக்கிறது. இதற்காக ஊட்டி அருகே எச்.பி.எப். பகுதியில் 40 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்தவாறு, இன்று காணொலி காட்சி மூலம் ஊட்டியில் மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார். பல்வேறு நவீன வசதிகளுடன் ரூ.447½ கோடியில் மருத்துவ கல்லூரி அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நீலகிரி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 10 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 160 ஆக உயர்ந்து உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்பேரில் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்காக பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதாவது ஊட்டி அருகே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவருடன் தொடர்பில் இருந்த எல்லநள்ளியை சேர்ந்த 45 வயதான ஆண், தும்மனட்டியை சேர்ந்த 38 வயதான ஆண், சென்னை காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று வந்த எமரால்டு பகுதியை சேர்ந்த 31 வயதான லாரி டிரைவர், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வருகை புரிந்த ஒருவர் மூலம் ஊட்டி அருகே மேல் கவ்வட்டியை சேர்ந்த 36 வயதான பெண், 15 வயதான சிறுமி ஆகியோருக்கு தொற்று உறுதியானது.
ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட லவ்டேல் பகுதிக்கு வந்த குடும்ப உறுப்பினர் மூலம் ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. அந்த குடும்பத்தை சேர்ந்த 64 வயதான பெண், 42 வயதான பெண், 45 வயதான ஆண், 19 வயதான ஆண், 13 வயதான சிறுமி ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 160 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 49 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். மீதம் உள்ள 111 பேரில் 74 பேர் ஊட்டி அரசு மருத்துவமனையிலும், 7 பேர் குன்னூர் அரசு மருத்துவமனையிலும், 30 பேர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.

வண்டிசோலையில் வாயில் காயத்துடன் சுற்றித்திரியும் குரங்கை பிடித்து, சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் ஏராளமான குரங்குகள் வாழ்ந்து வருகின்றன. அவை உணவு தேடி நகர பகுதிகளிலும் சுற்றித்திரிகின்றன. மேலும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து உணவு பொருட்களை எடுத்து தின்றும், சிதறடித்தும் அட்டகாசம் செய்கின்றன. இது தவிர மேற்கூரைகளில் ஏறி விளையாடுவதோடு கேபிள் மற்றும் போன் ஒயர்களை துண்டித்து விடுகின்றன. சில நேரங்களில் மின் ஒயர்களை அறுக்க முயன்று, குரங்குகள் உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குன்னூர் அருகே வண்டிசோலை குடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக வாயில் காயத்துடன் குரங்கு ஒன்று சுற்றித்திரிகிறது. இதற்கு எப்படி காயம் ஏற்பட்டது? என்பது தெரியவில்லை. எனினும் உணவு தேடி தின்ன முடியாமல் அவதிப்பட்டு வருகிறது. எனவே அந்த குரங்கை பிடித்து, வனத்துறையினர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
அந்த குரங்குக்கு மின்சாரம் தாக்கி காயம் ஏற்பட்டதா? அல்லது நாட்டு வெடி வெடித்து காயம் ஏற்பட்டதா? என்பது தெரியவில்லை. உணவு தின்ன முடியாமல், உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இப்படியே விட்டால் குரங்கு உயிரிழக்க நேரிடலாம். அதற்கு முன்பாக குரங்குக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.