search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாக்லேட் - கோப்புப்படம்
    X
    சாக்லேட் - கோப்புப்படம்

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சாக்லேட்... பிறகு நடந்தது என்ன?

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சாக்லேட்டை வாங்கி சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்ற விளம்பரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே எச்.பி.எப். பகுதியில் சாக்லேட் தொழிற்சாலை உள்ளது. அந்த கடையில் விற்பனை செய்யப்படும் சாக்லேட் வகைகளை வாங்கி சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என உரிமையாளர் விளம்பரம் செய்தார். இது தொலைக்காட்சிகள் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் வைரலானது. இதுகுறித்து தகவல் அறிந்த நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, அந்த தொழிற்சாலை மற்றும் கடையில் ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி மருத்துவத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் நேற்று அந்த தொழிற்சாலை மற்றும் கடைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

    கலெக்டர் இன்னசென்ட் திவ்யா


    அப்போது, உணவு பாதுகாப்பு விதிமுறைகளின்படி எவ்வித அனுமதியும் பெறாமல் சாக்லேட் தயாரிப்பது தெரியவந்தது. பின்னர் உடனடியாக சாக்லேட் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று விளம்பரம் செய்யப்பட்ட சாக்லேட் வகை பாக்கெட்டின் விலை ரூ.45-க்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் தவறான விளம்பரம் செய்தது, அனுமதி பெறாமல் சாக்லேட் தயாரித்தது போன்ற காரணங்களுக்காக அந்த தொழிற்சாலை மற்றும் கடையை பூட்டி ‘சீல்’ வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
    Next Story
    ×