என் மலர்
நீலகிரி
கூடலூரில் டீசல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி நடுரோட்டில் பழுதாகி நின்றது. இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலூர்:
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து சரக்கு லாரிகளில்தினமும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் கோவையில் இருந்து டீசல் எரிபொருள் நிரப்பிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று கூடலூர் வழியாக மசினகுடிக்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது கூடலூர் ஸ்டேட் வங்கி எதிரே வந்து கொண்டிருந்த போது திடீரென டேங்கர் லாரியின் முன்பக்க டயர் பஞ்சராகி நடுரோட்டில் நின்றது.
இதனால் லாரியின் பின்னால் வந்த மற்ற வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து தடைபட்டது. மேலும் கூடலூர் மைசூரு தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் வாகனங்கள் வரிசையாக நின்றது.
தகவலறிந்த கூடலூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் லாரி டிரைவர் மற்றும் கிளனரிடம் உடனடியாக வேறு டயரை பொருத்தி லாரியை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனிடையே சாலையின் நடுவில் தடுப்பு கற்கள் வரிசையாக இருந்ததால் வாகனங்களை திருப்பி விட முடியாத நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து ஊட்டி சாலையில் நின்றிருந்த சிறிய ரக கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மட்டும் பின்னோக்கி இயக்கப்பட்டது. ஆனால் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து சாலையின் மறுபுறம் சிறிய வாகனங்கள் இயக்கப்பட்டது. இதனால் எதிரே வந்த வாகனங்கள் கூடலூர் பழைய பஸ் நிலைய பகுதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்களை இயக்கும்படி போக்குவரத்து போலீசார், டிரைவர்களை அறிவுறுத்தி கொண்டிருந்தனர்.
இதனால் நிலைமைக்கு ஏற்ப வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு ஆமை வேகத்தில் இயக்கப்பட்டது.இந்த சமயத்தில் லாரி டிரைவர் மாற்று டயரை பொருத்தும் பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து பகல் 1.15 மணிக்கு டேங்கர் லாரியில் நல்ல நிலையில் உள்ள டயர் பொருத்தப்பட்டது. பின்னர் டேங்கர் லாரி அங்கிருந்து ஓட்டி செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் 121 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. முதலில் ஊட்டி அருகே தனியார் ஊசி தொழிற்சாலையில் கொரோனா பாதித்தவருடன் தொடர்பில் இருந்த ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என 110-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. பின்னர் மஞ்சூர் அருகே 3 கிராமங்களில் நடந்த 2 திருமண நிகழ்ச்சிகள், ஒரு துக்க நிகழ்ச்சியில் பல கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர். இதில் தொற்று உறுதியானவர்கள் பங்கேற்றதால் 150-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
நேற்று முன்தினம் வரை நீலகிரியில் 371 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. ஒருபுறம் பாதிப்பு அதிகரித்து வருவதோடு, வைரஸ் அறிகுறி கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வரும் இடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அப்பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. வெளியாட்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை. பாதிக்கப்பட்டவர்களுடன் முதல் நிலை, இரண்டாம் நிலை தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சுகாதார குழுவினர் சளி மாதிரி சேகரித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது 121 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. அப்பகுதிகளில் தனிமையில் இருக்காமல் வெளியே சுற்றினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ள நிலையில் மொத்தம் 121 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக கண்டறியப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவர்களது வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். மேலும் அப்பகுதிகளுக்கு பொதுமக்கள் யாரும் செல்வதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், மாவட்ட நிர்வாகத்தால் தனிமைப்படுத்தப்பட்ட குடியிருப்புகள் என அறிவிப்பு செய்யப்பட்ட பகுதியில் உள்ளவர்கள் யாரும் எக்காரணம் கொண்டும் வெளியில் நடமாடக் கூடாது. இந்த பகுதியில் உள்ளவர்களுக்கு ஏதேனும் தேவை இருப்பின் அப்பகுதிக்கு என்று ஒதுக்கப்பட்ட அதிகாரியிடம் கூறலாம்.
மேலும் தன்னார்வலர்கள் மூலம் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். பொருட்கள் வாங்குவதற்கு என்று வெளியே வருவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. தங்களுக்கான தேவையை தன்னார்வலர்கள் மூலமாக பூர்த்தி செய்து வைக்கப்படும். வெளியூர்களில் இருந்து முறையாக இ-பாஸ் பெற்று வருபவர்கள் நீலகிரி மாவட்ட எல்லையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். அவ்வாறு அனுமதிக்கப்படுபவர்கள் பரிசோதனை முடிவு தெரியும் வரை தங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு இருக்க வேண்டும். அதுவரை எக்காரணம் கொண்டும் வெளியே வரக்கூடாது. மேலே குறிப்பிட்ட நிபந்தனைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கூடலூரில் வீடு, நெல் நாற்றுகளை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டது.
கூடலூர்:
இந்த நிலையில் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட தொரப்பள்ளி, அள்ளூர் வயல் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு காட்டு யானை முதுமலை வனத்தில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்தது. பின்னர் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வீடுகளை முற்றுகையிட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
அப்போது அள்ளூர் வயலை சேர்ந்த மணி என்பவரின் வீட்டு பின் பக்கம் அமைத்து இருந்த சமையல் அறையின் மேற்கூரையை காட்டு யானை திடீரென உடைத்தது. இதனால் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் பயத்தில் அலறினர்.
இதனால் யானை அங்கிருந்து சென்றது. பின்னர் மணி, சுகுமாறன், தாமோதரன் உள்ளிட்ட பல விவசாயிகளின் நிலத்துக்குள் புகுந்தது. தொடர்ந்து அங்கு பயிரிட்டு இருந்த நெல் நாற்றுகளை மிதித்து சேதப்படுத்தியது. பின்னர் விடியற்காலை வரை அப்பகுதியில் நின்றிருந்த யானை அதன்பின்னர் முதுமலை வனத்துக்குள் சென்றது. இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:-
நள்ளிரவு முதல் யானையின் நடமாட்டம் இருந்தது. இது போல் யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருவதால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. வனத்துறையினர் வந்து விரட்டினாலும் எந்த பயனும் ஏற்படுவது இல்லை. யானைகள் நடமாட்டம் காரணமாக பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு தங்கள் நிலத்தை குத்தகைக்கு விட்டுள்ளனர்.
ஆனால் விவசாயத்தை தொடர்ந்து மேற்கொண்டு வரும் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். எனவே காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் உரிய தீர்வு காண வேண்டும். இல்லை எனில் சேதத்துக்கு ஏற்ப இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கவலையுடன் கூறினர்.
கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் வனங்களை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. காட்டு யானைகள் வருகையை தடுக்க வனத்தின் கரையோரம் அகழிகள் தோண்டப்பட்டுள்ளது. இருப்பினும் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க முடியவில்லை. தற்போது பருவமழை துவங்கியுள்ளதால் விவசாயிகள் நெல் விவசாயம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இதற்காக வயல்களில் நெற்பயிர்களை நடவு செய்வதற்காக பாத்திகள் அமைத்து விதை நெல்லை தூவி வைத்துள்ளனர். தொடர் மழையால் விதை நெல் நன்கு முளைத்து நாற்றுக்களாக வளர்ந்துள்ளது.ஆடி மாதம் துவங்கியுள்ளதால் வயல்களை சீரமைத்து நாற்று நடவு செய்வதற்கான பணிகளையும் விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட தொரப்பள்ளி, அள்ளூர் வயல் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு காட்டு யானை முதுமலை வனத்தில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்தது. பின்னர் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வீடுகளை முற்றுகையிட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
அப்போது அள்ளூர் வயலை சேர்ந்த மணி என்பவரின் வீட்டு பின் பக்கம் அமைத்து இருந்த சமையல் அறையின் மேற்கூரையை காட்டு யானை திடீரென உடைத்தது. இதனால் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் பயத்தில் அலறினர்.
இதனால் யானை அங்கிருந்து சென்றது. பின்னர் மணி, சுகுமாறன், தாமோதரன் உள்ளிட்ட பல விவசாயிகளின் நிலத்துக்குள் புகுந்தது. தொடர்ந்து அங்கு பயிரிட்டு இருந்த நெல் நாற்றுகளை மிதித்து சேதப்படுத்தியது. பின்னர் விடியற்காலை வரை அப்பகுதியில் நின்றிருந்த யானை அதன்பின்னர் முதுமலை வனத்துக்குள் சென்றது. இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:-
நள்ளிரவு முதல் யானையின் நடமாட்டம் இருந்தது. இது போல் யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருவதால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. வனத்துறையினர் வந்து விரட்டினாலும் எந்த பயனும் ஏற்படுவது இல்லை. யானைகள் நடமாட்டம் காரணமாக பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டு தங்கள் நிலத்தை குத்தகைக்கு விட்டுள்ளனர்.
ஆனால் விவசாயத்தை தொடர்ந்து மேற்கொண்டு வரும் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். எனவே காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் உரிய தீர்வு காண வேண்டும். இல்லை எனில் சேதத்துக்கு ஏற்ப இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கவலையுடன் கூறினர்.
2-வது சீசனையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கியது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசன் நடைபெறுகிறது. சீசனில் பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டு உள்ளன. சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் கோடை சீசன், கண்காட்சிகள் நடைபெறவில்லை.
ஊட்டியில் சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய நிலையில் காணப்படுகிறது. இருப்பினும் 2-வது சீசனுக்கான பணிகள் பூங்காக்களில் நடைபெற்று வருகின்றன. கோடை சீசனின் போது பூத்து ஓய்ந்த மலர்களில் இருந்து விதைகள் சேகரிக்கப்பட்டு, நர்சரியில் வளர்த்து பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனையொட்டி மலர் செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கி உள்ளது. இதற்காக நடைபாதை ஓரங்கள், பூந்தொட்டிகள், மலர் பாத்திகள், மரங்களை சுற்றிலும் தயார்படுத்தப்பட்டு இருக்கிறது.
பிரஞ்சு மேரிகோல்டு, இன்கா மேரிகோல்டு, சால்வியா, பிகோனியா, டையான்தஸ், பெட்டுனியா, ஆஸ்டர், ஜீனியா, டேலியா, பிளாக்ஸ், கேலண்டுலா, செல்லோசியா உள்பட 140 ரகங்களை சேர்ந்த 2.3 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. ஜப்பான் பூங்கா, இத்தாலியன் பூங்கா, புது பூங்கா உள்ளிட்ட இடங்களில் பணியாளர்கள் ஊட்டியில் பெய்து வரும் மழையை பொருட்படுத்தாமல் கம்பளி ஆடைகளை அணிந்த படி நடவு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் 5 ஆயிரம் பூந்தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட உள்ளது.
நடவு செய்யப்படும் மலர் செடிகளில் வருகிற செப்டம்பர் மாதம் பூக்கள் பூக்கத் தொடங்கும், பெரிய புல்வெளி மைதானத்தில் புற்கள் அதிகமாக வளர்ந்துள்ளதால், அதை சமமாக வெட்டி பராமரிக்கும் பணி நடந்து வருகிறது. மலர் செடிகள் நன்றாக வளரும் வகையில் மண்புழு உரம் இடப்படுகிறது. இதுகுறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, ஊரடங்கு உத்தரவால் தாவரவியல் பூங்கா மூடப்பட்டு உள்ளது. இருப்பினும் 2-வது சீசனுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் தான் உள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டால் உடனடியாக பூங்காவை தயார் செய்ய முடியாது. எனவே, தற்போது மலர் செடிகளை நடவு செய்து வருகிறோம் என்றார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சேற்றில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது.
கூடலூர்:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வேடன்வயல் பகுதியில் சேற்றில் சிக்கி ஆண் யானை உயிரிழந்தது.
தனியார் தோட்டத்தில் சேற்றில் சிக்கி ஆண் யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் திடீர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
குன்னூர்:
குன்னூரில் உள்ள லாலி அரசு ஆஸ்பத்திரிக்கு குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஏழைகள் சிகிச்சைக்காக வருகின்றனர். லாலி அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தைகளுக்கு தனி வார்டு, முதல்வர் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தனி வார்டு, அவசர நோயாளிகள் பிரிவு போன்றவை செயல்பட்டு வருகின்றன. மேலும் தாலுகா ஆஸ்பத்திரியாக இருப்பதால் விபத்தில் சிக்கியவர்கள் மற்றும் அவசர நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
லாலி அரசு ஆஸ்பத்திரியில் 11 டாக்டர்கள் உள்ளனர். இவர்களில் ஒரு டாக்டர் கோவையில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக மாற்றப்பட்டுள்ளனர். ஒரு டாக்டர் மருத்துவ விடுப்பிலும் ஒரு டாக்டர் தலைமை டாக்டர் பொறுப்பாகவும் உள்ளார். தற்போது 8 டாக்டர்கள் மட்டுமே பணியில் இருந்து வருகின்றனர்.இந்த நிலையில் லாலி அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் 8 டாக்டர்களில் 4 பேர் கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கும் 4 டாக்டர்கள் பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கும் இரவோடு இரவாக மாற்றப்பட்டு ஆணை வழங்கப்பட்டது. அதே போன்று கூடலூர் மற்றும் பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிகளிலிருந்து 8 டாக்டர்கள் குன்னூருக்கு மாற்றப்பட்டனர்.
திடீர் பணி மாற்றத்தை அறிந்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து டாக்டர்கள் நேற்று காலை ஆஸ்பத்திரி வளாகத்தில் மாறுதல் உத்தரவை திரும்ப பெற கோரி சமூக இடைவெளியை கடைபிடித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதியுற்றனர். டாக்டர்கள் தர்ணா போராட்டம் குறித்து தகவலறிந்த சுகாதார துறை இணை இயக்குனர் டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பணிமாறுதல் ஆணையை நிறுத்தி வைப்பதாக கூறியதால் மதியம் 12.15 மணியளவில் டாக்டர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

நீலகிரியில் மேலும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு 277 ஆக உயர்ந்து உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 258 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இதில் 6 பேரின் பெயர்கள் வெளி மாவட்டத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு திருத்தம் செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு 252 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 25 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஊட்டி நகராட்சி தாசப்பிரகாஷ் சாலையைச் சேர்ந்த ஒரு ஆண், குன்னூர் நகராட்சி வள்ளலார் நகரைச் சேர்ந்த ஒரு ஆண், குன்னூர் காந்திபுரத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன், விநாயகர் கோயில் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆண், ஆர்.சி. காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆண், பார்சைடு எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த ஒரு ஆண், ஹேர்வுட்குடியிருப்பை சேர்ந்த ஒரு ஆண், குன்னூர் ஒசட்டியை சேர்ந்த இரண்டு ஆண்கள், ஓட்டு பட்டறை சேர்ந்த ஒரு சிறுமி,
அப்பர் சர்ச் சாலையைச் சேர்ந்த ஒரு ஆண், குன்னூர் பெட்போர்டு பகுதியை சேர்ந்த 2 ஆண்கள், குன்னூர் டைகர் ஹில்லை சேர்ந்த ஒரு ஆண், வண்டிசோலையை சேர்ந்த ஒரு பெண், காமராஜபுரத்தை சேர்ந்த ஒரு பெண், தொரையட்டியை சேர்ந்த ஒரு மூதாட்டி, அதிகரட்டியை சேர்ந்த ஒரு பெண், ஒரு ஆண், அத்திக்கல்லை சேர்ந்த 85 வயதான முதியவர், முட்டி நாடை சேர்ந்த மூதாட்டி, தங்காடு கிராமத்தை சேர்ந்த 67 வயதான மூதாட்டி, ஊட்டி அன்பு அண்ணா காலனியைச் சேர்ந்த 64 வயதான முதியவர், பில்லிக் பையை சேர்ந்த ஒரு ஆண் ஆகியோருக்கு தொற்று உறுதியானது.
ஐக்கிய அரபு நாட்டில் இருந்து குன்னூர் வெலிங்டன் அந்த 39 வயதான பெண்ணுக்கு பரிசோதனை செய்ததில் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிப்பு 277 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 107 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 169 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார். குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வரும் டாக்டர் ஒருவருக்கு சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்ததில் வைரஸ் தொற்று உறுதியானது. ஊட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகத்தில் மண்டல துணை மேலாளராக பணிபுரிந்து வரும் ஒரு பெண் மதுரையில் இருந்து ஊட்டிக்கு வந்தார். அவரிடம் சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா தடுப்பு பணியின்போது இறந்தால் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என்பது உள்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி:
கொரோனா தடுப்பு மற்றும் சேவை பணியில் ஈடுபட்டு வரும் அனைத்து அரசு துறைகளில் பணியை மேற்கொள்ளும் போது இறந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீட்டுத் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணியும் வழங்க வேண்டும் என்பது உள்பட 13 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நீலகிரி மாவட்ட தலைவர் முத்துகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆஸ்ரா கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் உயிரை பணயம் வைத்து வைரஸ் தொற்று உறுதியானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு முகக்கவசம் மற்றும் பாதுகாப்பு உடைகள் வழங்க வேண்டும். பொது முடக்க காலத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு செல்லும் வகையில் அரசு ஊழியர்களுக்காக தனியாக பஸ் வசதிகள், பாதுகாப்பு வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் காலமுறை ஊதிய ஏற்ற முறையிலாக நியமனங்கள் மூலம் உடனடியாக நிரப்ப வேண்டும். ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தியதை திரும்பப் பெற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது.
இது குறித்து மாவட்ட தலைவர் முத்துகுமார் கூறியதாவது:-
ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகள், வழக்குகள், குற்ற குறிப்பாணைகள், தற்காலிக பணிநீக்கம், பணியிட மாறுதல் உள்பட அனைத்து நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும். புதிய வேலை நியமன தடை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு அனைவருக்கும் பயனளிப்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
சரண் விடுப்பு ரத்து, அகவிலைப்படி முடக்கம், விடுப்பு கால பயண சலுகை ரத்து, ஓராண்டு கால பணி ஓய்வு மறுப்பு, இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிப்பு ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும். அரசுப் பணிகளை ஒப்பந்த அடிப்படையிலான பணிகளாக மாற்றும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இவ்வாறு அவர் கூறினார். பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஆனந்தன் மற்றும் நிர்வாகிகள் சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டனர்.
குன்னூரில் விதி மீறலில் கட்டப்பட்ட 2 கட்டிடங்களுக்கு நக ராட்சி அதிகாரிகள் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாக உள்ளதால் பருவமழை காலத்தின் போது நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது இதனை கருத்தில் சொண்டு 7 மீட்டர் கூடிய உயரம் மற்றும் 1500 அடிக்கு உட்பட்டும் கட்டிடம் கட்ட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் பாறைகள் உடைக்கவும் பொக்லைன் எந்திரம் கொண்டு மண்ணை அகற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விதிகள் மீறப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
குன்னூர் நகராட்சியின் வார்டுகளில் விதிகள் மீறிய மற்றும் அனுமதியற்ற கட்டிடங்கள் கட்டப்படுவதும் நகராட்சி அதிகாரிகளால் இதற்கு நடவடிக்கை எடுப்பதும் தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில் குன்னூர் மவுண்ட் ரோட்டில் தனியார் கண் ஆஸ்பத்திரி கட்டிடமும், அதன் அருகிலுள்ள தனியார் நிதி நிறுவன கட்டிடமும் விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ளதாக குன்னூர் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விதி மீறிய கட்டிடங்களுக்கு அதிரடியாக சீல் வைத்தனர்.மேலும் ஓட்டுப் பட்டரை, உமரி காட்டேஜ்‘ மாடல் அவுஸ் ஆகிய இடங்களில் அனுமதியில்லாமல் கட்டப்பட்ட 3 கட்டிடங்களுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கோத்தகிரியில் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் குன்னூர் சப்-கலெக்டர் ஆய்வு செய்தனர்.
கோத்தகிரி:
கோத்தகிரி பகுதியில் கடந்த வாரம் சுமார் 5 பேருக்கு நோய் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அவர்கள் ஊட்டி அரசு மருத்துவமனை மற்றும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத்தொடர்ந்து நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பியவர்களிடமிருந்து இருந்து சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இந்த சோதனையின் முடிவில் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மேலும் 11 பேருக்கு நோய் தொற்று அறிகுறிகள் தென்பட்டதால் நேற்று முன்தினம் அவர்களில் 8 பேர் ஊட்டி அரசு கொரோனா சிறப்பு பிரிவு மருத்துவமனைக்கும், மீதமுள்ள நான்கு பேர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து நோய்த்தொற்று அறிகுறி தென்பட்ட பகுதிகள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்டு போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. அந்தப் பகுதிகளில் தீவிர சுகாதார பணிகளை உள்ளாட்சி துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோத்தகிரி பேரூராட்சிக்குட்பட்ட குமரன் காலனி, கேம்ப் லைன், கெட்சிகட்டி, வியூ ஹில் உள்ளிட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கோத்தகிரி பேரூராட்சி சார்பில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. மேலும் கோத்தகிரி செயல்அலுவலர் மணிகண்டன் சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் கோத்தகிரி அரசு சித்த மருத்துவமனை மருத்துவர் கார்த்திகா தலைமையில் அலுவலர்கள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்டு கபசுர குடிநீரை வழங்கினர். மேலும் இந்த தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது கோத்தகிரி தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி வருவாய் ஆய்வாளர் பூவேந்திரன் உட்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
கொரோனா தொற்று அதிகரிப்பதால் ஊட்டியில் 700 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சில இடங்கள் கிளஸ்டர் ஆக உள்ளது. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்கள், தொழிலாளர்கள் என 111 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. அதனை தொடர்ந்து 2 திருமண நிகழ்ச்சிகள், ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நபர்களுக்கு பாதிப்பு உறுதியாகி வருகிறது. நிகழ்ச்சிகளில் தொற்று பாதித்தவர்கள் கலந்துகொண்டதால் நோய் பரவும் பகுதியாக (கிளஸ்டர்) கிராமங்கள் உருவாகி இருக்கிறது. நிகழ்ச்சிகளுக்கு வந்து சென்ற 11 கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
அறிகுறி தென்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டு, நீலகிரி மாவட்டம் நீண்ட நாட்களாக பச்சை மண்டலத்துக்குள் இருந்தது. தற்போது பாதிப்பு 200 -ஐ கடந்து உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கருத்தில் கொள்ளாமல், அரசின் வழிமுறைகளை கடைபிடிக்காமல் பெயர் சூட்டுவது, காது குத்துவது போன்ற நிகழ்ச்சிகளை மக்கள் வழக்கம்போல் நடந்துகின்றனர். தொற்று உறுதியானவர்கள் மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். தேவையில்லாமல் நிகழ்ச்சிகள் நடத்துபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை சுகாதார குழுவினர் கண்டறிந்து பரிசோதனை நடத்துகிறார்கள். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் உருவாக்கப்பட்டு உள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஊட்டியில் 120 படுக்கை வசதிகளுடன் தனியார் பள்ளி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. வருகிற நாட்களில் பாதிப்பு அதிகரிக்கக் கூடும் என்பதால் 700 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் ஊட்டி, குன்னூர், கூடலூரில் போதுமான படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா சிகிச்சை மையத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டு அறிகுறி இல்லாதவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அங்கு சுழற்சி முறையில் டாக்டர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். நோயாளிகளுக்கு மூன்று வேளையும் நல்ல உணவு, அரசு வழிமுறைப்படி சித்த மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நீலகிரியில் கொரோனாவுக்கு விவசாயி பலியானார். இதனால் அவர் வசித்து வந்த கிராமத்துக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மே மாதம் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி முதல் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மஞ்சூர் அருகே தங்காடு கிராமத்தில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முள்ளிகூர் கிராமத்தை சேர்ந்த 72 வயதான மூதாட்டி வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு முன்பு தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி மஞ்சூர் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து 4 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து ஆஸ்பத்திரியில் பணிபுரிந்த செவிலியர்கள், பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. செவிலியர்கள் 4 பேருக்கு கொரோனா வைரஸ் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி நடந்து வருகின்றது. இந்த நிலையில் தங்காடு கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் புது அட்டுபாயில், அத்திக்கல் கிராமங்களை சேர்ந்த சிலர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட ஊட்டி அருகே அத்திக்கல் கிராமத்தை சேர்ந்த 78 வயதான விவசாயி ஒருவர் காய்ச்சல், இருமலால் அவதிப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா சந்தேகத்தின் பேரில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர்அவரிடம் கொரோனா பரிசோதனைக்காக சளிமாதிரி எடுக்கப்பட்டது. இந்த நிலையில் உடல் நலம் தேறி வருவதாக கூறி வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் திடீரென இறந்தார்.
இதற்கிடையில் அவரது சளி மாதிரி பரிசோதனை முடிவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அவருக்கு இருந்தது உறுதி செய்யப்பட்டது. ஆகவே திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்த விவசாயி கொரோனாவுக்கு பலியானது தெரியவந்தது. நீலகிரியில் மேலும் ஒரு விவசாயி கொரோனாவுக்கு பலியான சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிலையில் அத்திக்கல் கிராமம் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதிக்கு சீல் வைக்கப்பட்டு வெளியாட்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதனைத் தொடர்ந்து மஞ்சூர், புது அட்டுபாயில், அத்திக்கல் ஆகிய மூன்று பகுதிகளில் 150 பேரிடம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 24 மணி நேரமும் ஊழியர்கள் சுழற்சி முறையில் பணி புரிந்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு பணிபுரிந்து வரும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து அவரிடமிருந்து மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. முடிவு வந்த பின்னர் விவரங்கள் தெரியவரும். இதை அடுத்து நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்த பொதுமக்களை மனுக்கள் கொடுத்து விட்டு உடனடியாக வெளியே செல்லுமாறு ஊழியர்கள் அறிவுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து உள்ளது.