என் மலர்
நீலகிரி
நீலகிரியில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் 3 தொகுதிகளில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் வாக்குச்சாவடிகளை கூடுதலாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலை ஒட்டி 1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரிப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் ஏற்கனவே 1,000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு வந்தது.
தற்போது 1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரிப்பது குறித்த பட்டியலை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். அதற்கு கலெக்டர் பட்டியல் நகல் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் ஏற்கனவே 683 வாக்குச்சாவடிகள் இருந்தன. கொரோனா கட்டுப்பாடு காரணமாக புதிதாக 176 துணை வாக்குச்சாவடி கள் ஏற்படுத்தப்பட்டன. 14 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
தேர்தல் ஆணையம் 1,050 வாக்காளர்கள் ஒரு வாக்குச்சாவடியில் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்தது. அதன் அடிப்படையில் ஏற்கனவே அதிகரிக்கப்பட்டு 903 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது 35 வாக்குச்சாவடிகள் குறைக்கப்பட்டு, 868 வாக்குச்சாவடிகளாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் சப்-கலெக்டர்கள் மோனிகா, ரஞ்சித்சிங், கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் ராஜகுமார், தேர்தல் தனி தாசில்தார் புஷ்பா தேவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முதன்முறையாக சட்டப்படிப்பு முடித்த தோடர் இன இளம்பெண் நீலகிரி கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகளை ஒட்டி தோடர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சமீபகாலமாக அவர்களது குழந்தைகள் கல்வி பயின்று முன்னேறி வருவதை காண முடிகிறது. அதன் ஒரு பகுதியாக தோடர் இனத்தில் முதல் முறையாக இளம்பெண் ஒருவர் சட்ட படிப்பை முடித்து உள்ளார்.
ஊட்டி அருகே தவிட்டுகோடு மந்து பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவரது மகள் நந்தினி சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் கடந்த 2019-ம் ஆண்டு சட்ட படிப்பை முடித்தார். அவர் சென்னை பார் கவுன்சிலில் வக்கீல் பயிற்சி பெற பதிவு செய்து உள்ளார்.
இந்த நிலையில் நேற்று அவர் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை நேரில் சந்தித்து சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றார்.
இதுகுறித்து நந்தினி கூறும்போது, நான் பள்ளி படிப்பை ஊட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் முடித்தேன். பின்னர் சென்னையில் சட்ட படிப்பை நிறைவு செய்தேன். தோடர் இன மக்களில் முதல் முறையாக சட்டம் படித்து வக்கீலாக பணிபுரிய உள்ளேன். இதன்மூலம் சமூக மக்களுக்கு உதவி புரிவேன் என்றார்.

குன்னூர் அருகே உறைபனியால் தேயிலை செடிகள் கருகியதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவ்வப்போது மழை பெய்தது. இதனால் உறைபனியும், குளிரும் சற்று குறைந்து காணப்பட்டது.
மழை நின்றதும் குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள அருவங்காடு, ஒட்டுபட்டறை உள்ளிட்ட பல இடங்களில் மீண்டும் உறைபனியின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது.
தற்போது குன்னூரில் குறைந்தபட்சமாக 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், அதிகபட்சமாக 12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி உள்ளது. கடந்த சில நாட்களாக பனியும், குளிரும் சேர்ந்து வாட்டி வதைத்து வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள்.
மாலை 3 மணியளவில் தொடங்கும் உறைபனி இரவில் கடும் குளிராக மாறி காலை வரை நீடிக்கிறது. இதனால் அதிகாலையில் தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வோர், வியாபாரிகள் உள்ளிட்டோர் தங்கள் தொழில்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
மக்களும் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் தவித்து வருகின்றனர். கடும் குளிராலும், உறைபனியின் தாக்கத்தாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தேயிலை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்கள். தற்போது கொட்டும் உறைபனி மற்றும் கடும் குளிருக்கு பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்ட தேயிலை செடிகள் அனைத்தும் கருகிவிட்டன.
ஆசை, ஆசையாக வளர்த்த தேயிலை செடியில் அறுவடை செய்ய முடியவில்லையே என விவசாயிகள் வேதனை அடைந்து, செடிகளை முற்றிலும் வெட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர். இதேபோல் புல்தரைகளில் பனி படர்ந்து வெள்ளை போர்வை போர்த்தியது போன்று காணப்படுகிறது. அந்த புல்தரைகளும் பனிக்கு கருகிவிட்டன.
தொடர்ந்து நிலவும் குளிர் மற்றும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மக்களும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 3 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். நீலகிரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 276 ஆக உயர்ந்து உள்ளது.
இதுவரை 8 ஆயிரத்து 187 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவால் 48 பேர் இறந்தனர். மீதமுள்ள 41 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் மாணவ- மாணவிகளுக்கு ஓவிய போட்டி நடைபெற்றது.
கூடலூர்:
நீலகிரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஓவியப் போட்டி நடைபெற்றது. தற்போது கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே வெள்ளைத்தாளில் ஓவியங்கள் வரைந்து வாட்ஸ்அப் அல்லது நேரில் மூலமாக தங்களது ஓவியங்களை அந்தந்த பள்ளி நிர்வாகத்திடம் வழங்கினர்.
இதில் வெற்றி பெற்றவர்கள் பள்ளி வளாகத்தில் நடந்த போட்டிக்கு தேர்வாகினர். பந்தலூர் தாலுகா கக்குண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஓவியப் போட்டி பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
பள்ளி தலைமையாசிரியர் பால் விக்டர் தலைமை தாங்கினார். ஆசிரியர் கள் அரிமா பேகம், எலியாஸ், ஸ்ரீகலா ஆகியோர் முன்னிலையில் மாணவிகள் ஆதித்யா, அகிலா, த்ருசியா, கோபிகா, ஆன்மரியா தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பள்ளி சுற்றுச் சுவரில் ஓவியங் களை வரைந்தனர்.
இதில் ஆதித்யா முதல் பரிசையும், 2-வது இடத்தை அகிலாவும், த்ருசியா 3- வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர். இவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:-
பள்ளிகள் திறக்கப்படாததால் வீட்டிலிருந்தபடியே மாணவர்கள் ஓவியம் வரைந்து அனுப்பினர். இதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பள்ளி வளாகத்தில் நடந்த போட்டியில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன.
அவர்கள் பள்ளி சுற்றுச் சுவரில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மாவட்டம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில் தேர்வானவர்கள் மாவட்ட அளவில் விரைவில் நடக்கும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

கூடலூர் அருகே காட்டு யானையை பிடிக்கக்கோரி கிராம மக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்:
கூடலூர் கோத்தர்வயல், தோட்டமூலா, அள்ளூர் வயல், 27-வது மைல், மேல் கூடலூர் உள்பட பல இடங்களில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக காயத்துடன் சுற்றி வரும் காட்டு யானை அட்டகாசம் செய்து வருகிறது. அதற்கு உரிய சிகிச்சை அளித்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் காட்டு யானையை பிடிக்க கோரி அள்ளுர்வயல், கோடமூலா பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் நேற்று காலை 7 மணிக்கு கூடலூர்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் வனத்துறையை கண்டித்து கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த கூடலூர் வனச்சரகர் ராமகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்களை கிராம மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்துடன் காயம் அடைந்து சுற்றி வரும் காட்டு யானையை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று கூறினார்கள்.
இதையடுத்து கிராம மக்களுடன் வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது காட்டு யானையை பிடிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-
2 ஆண்டுகளுக்கு மேலாக காட்டு யானை கிராமங்களுக்குள் முகாமிட்டு அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் அதன் உடலில் உள்ள காயங்களில் இருந்து சீழ் வடிகிறது. ஆனால் அதற்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஊருக்குள் முகாமிட்டு உள்ள அந்த காட்டுயானை பொதுமக்களை துரத்துகிறது. இதனால் உயிர்பலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வனத்துறையினர் அந்த காட்டு யானையை பிடிக்கவில்லை என்றால் தொடர் போராட்டங்கள் நடத்துவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
குன்னூர் ஏல மையத்தில் தேயிலை தூள் விலை வீழ்ச்சி அடைந்தது.
குன்னூர்:
நீலகிரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் பச்சை தேயிலை, சிறு தேயிலை தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் இருந்து உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூள் குன்னூர் தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் நடத்தப்படும் ஏலம் மூலம் விற்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த வாரத்தில் விற்பனை எண் 6-க்கான ஏலம் நடந்தது. இதில் மொத்தம் 15 லட்சத்து 93 ஆயிரம் கிலோ தேயிலை தூள் வந்தது.
இதில் 11 லட்சத்து 4 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும் 4 லட்சத்து 89 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 61 சதவீத தேயிலை தூள் விற்பனையானது. விற்பனையான தேயிலை தூளின் அளவு 9 லட்சத்து 68 ஆயிரம் கிலோவாக இருந்தது. இதன் மதிப்பு ரூ.12 கோடியே 90 லட்சம் ஆகும்.
ஏலத்தில் அனைத்து தேயிலை தூள் ரகங்களுக்கும் கிலோவுக்கு ரூ.1 வீழ்ச்சி அடைந்து இருந்தது. சி.டி.சி. தேயிலை தூளின் உயர்ந்த பட்ச விலையாக கிலோ ரூ.265-க்கும், ஆர்தோடக்ஸ் தேயிலை தூளின் அதிகபட்ச விலை கிலோ ரூ.263-க்கும் ஏலம் போனது. சராசரி விலையாக இலை ரகத்தின் சாதாரண வகை கிலோ ரூ.114-ல் இருந்து ரூ.115 வரையும், விலை உயர்ந்த தேயிலை தூள் கிலோ ரூ.160-ல் இருந்து ரூ.286 வரையும் விற்பனையானது.
டஸ்ட் ரகத்தின் சாதாரண வகை கிலோ ரூ.115 முதல் ரூ.122 வரையும், விலை உயர்ந்த தேயிலை தூள் ரூ.168 முதல், ரூ.215 வரையும் ஏலம் விடப்பட்டது. விற்பனை எண் 7-க்கான ஏலம் வருகிற 18, 19 ஆகிய தேதிகளில் நடக்கிறது. ஏலத்திற்கு மொத்தம் 14 லட்சத்து 83 ஆயிரம் கிலோ தேயிலை தூள் வருகிறது.

ஊட்டியில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வை சேர்ந்த 1,300 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊட்டி:
நீலகிரியில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் உரிமைகளை பறிக்கும் அ.தி.மு.க. அரசை கண்டித்தும், அதற்கு துணைபோகும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் நீலகிரி மாவட்ட தி.மு.க. சார்பில் ஊட்டியில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் காலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதனை தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறும்போது, உள்ளாட்சி அமைப்புகளில் டெண்டர் விடுவதில் முறைகேடு நடந்து வருகிறது. ஆளுங்கட்சிக்கு சாதகமாக விடப்பட்ட டெண்டர்களை ரத்து செய்ய வேண்டும் என்றார். தொடர்ந்து தி.மு.க.வின்ர் கோஷங்களை எழுப்பியபடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 1,300 பேரை போலீசார் கைது செய்தனர். ஆனால் ஆ.ராசா எம்.பி. கைது செய்யப்படவில்லை. கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
கோடை சீசனையொட்டி ஊட்டி ரோஜா பூங்காவில் செடிகளை கவாத்து செய்யும் பணி தொடங்கியது.
ஊட்டி:
கடந்த 1995-ம் ஆண்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 100-வது மலர் கண்காட்சியை நினைவு கூறும் வகையில், ஊட்டி விஜயநகரம் பகுதியில் ரோஜா பூங்கா தொடங்கப்பட்டது. தோட்டக்கலை துறை மூலம் பல்வேறு நாடுகளில் இருந்து ரோஜா ரகங்கள் கொண்டு வரப்பட்டு நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த பூங்காவில் 4,201 ரகங்களை சேர்ந்த 31 ஆயிரத்து 500 ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. நீலகிரியில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுவது வழக்கம். தொடர் மழை மற்றும் உறைபனியால் ரோஜா மலர்கள் குறைந்த அளவில் பூத்து குலுங்கியது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
இந்த நிலையில் கோடை சீசனையொட்டி ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணி நேற்று முதல் தொடங்கியது. கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர் பணியாளர்கள் ரோஜா செடிகளின் அடிப்பகுதியை வெட்டி கவாத்து செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்மூலம் செடிகள் நன்றாக தளிர்ப்பதோடு, உரமிடுவதால் செழித்து வளரும். கவாத்து செய்யப்பட்ட செடிகளில் இருந்த ரோஜா பூக்கள் பறிக்கப்பட்டன.
மேலும் இயற்கை உரம் இடுவது, களை எடுப்பது, தண்ணீர் பாய்ச்சுவது, நோய்கள் ஏதேனும் தாக்காமல் இருக்க மருந்து தெளிப்பது, உறைபனியில் இருந்து அலங்கார செடிகளை பாதுகாப்பது போன்ற பராமரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கவாத்து பணி காரணமாக நடப்பு மாதம் மற்றும் மார்ச் மாதம் ரோஜா மலர்களை பார்க்க முடியாது.
வருகிற ஏப்ரல் மாதம் முதல் ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்கும். அப்போது சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்து படைக்கும். இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம், உதவி இயக்குனர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கோத்தகிரியில் கரடிகள் அட்டகாசம் அதிகரித்து உள்ளதால் அவற்றை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கோத்தகிரி:
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கரடி, காட்டெருமை, சிறுத்தை, காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அவைகள் .உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அங்குள்ள வீடுகள் மற்றும் கடைகளில் கதவுகளை உடைத்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் கோத்தகிரி அருகே கன்னேரிமுக்கு கிராமத்தில் உள்ள பார்வதி (வயது50) என்பவரது வீட்டின் ஜன்னல் கதவுகளை நேற்று நள்ளிரவு மூன்று குட்டிகளுடன் அங்கு வந்த தாய் கரடி உடைத்து வீட்டிற்குள் செல்ல முயன்றது.
கரடிகளின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், வீட்டை விட்டு வெளியே வந்து தீப்பந்தங்களை காண்பித்து கரடிகளை விரட்டினர். இந்த குடியிருப்பு பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால், அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோத்தகிரி கிளப் ரோடு பகுதியில் உள்ள சுபாஷ் என்பவரின் பேக்கரியை உடைத்து உள்ளே சென்று பொருட்களை தின்று நாசபடுத்தியது. தொடர்ந்து கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால், அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இரவு நேரத்தில்கூட வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடக்கி கிடக்கும் நிலை நீடித்து வருகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, இங்கு அட்டகாசம் செய்து வரும் கரடிகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என்று அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

உலக அளவில் விருது பெற்று ஊட்டி அரசு ரோஜா பூங்கா இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளதாக கவாத்து பணியை தொடங்கி வைத்த கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் ரோஜா செடிகளில் கவாத்து பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் தெரிவித்தாவது:-
ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் 31,500 வீரிய ரக ரோஜா ஒட்டுச் செடிகளில் கவாத்து பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. அரசுரோஜா பூங்கா 1995-ம் ஆண்டு ஊட்டி மலர் காட்சியின் 100-வது ஆண்டு நினைவாக தொடங்கப்பட்டு சிறந்த முறையில் தோட்டக்கலை துறையின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றது. அரசு ரோஜா பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள ரோஜா ரகங்கள், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டு தற்போது 4,201 வீரியரக ரோஜா ரகங்களில் 31,500 ரோஜா செடிகள் நடவுசெய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2006-ம்ஆண்டில் உலக ரோஜா சங்க சம்மேளனம் அரசு ரோஜா பூங்காவிற்கு உலக அளவில் சிறந்த ரோஜா பூங்கா என்ற விருதினை வழங்கி சிறப்பித்துள்ளது. இது நீலகிரி மாவட்டத்திற்கும், தமிழகம் மற்றும் இந்தியா நாட்டிற்கு பெருமை வாய்ந்ததாக அமைந்துள்ளது. அரசு ரோஜா பூங்கா தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே மிகஅதிகமான ரோஜா ரகங்களை கொண்ட பூங்காவாக திகழ்கின்றது.
இந்த ஆண்டு கோடை பருவ காலத்தை முன்னிட்டு கவாத்துபணிகள் மேற்கொள்வதன் மூலம் கவாத்து செய்தரோஜா செடிகளில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலிருந்தே ரோஜா மலர்கள் பூத்து சுற்றுலாபயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும். இவ்வாறு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊட்டியில் உறைபனியால் தேயிலை செடிகள் கருகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
ஊட்டி:
பொதுவாக கொழுந்து மற்றும் நல்ல இலைகளை விவசாயிகள் பறித்து தொழிற்சாலைகளுக்கு வினியோகித்து வருகின்றனர். தற்போது இலைகள் கருகி வருவதால், தரமான பச்சை தேயிலை குறைவாக உள்ளது. தரம் இல்லாத இலைகளை வழங்கினால் விலை குறைவாக கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். மேலும் வருமானமின்றி பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
எனினும் உறைபனியால் கருகாமல் இருக்க தேயிலை செடிகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பகல், இரவு நேரங்களில் தேயிலை செடிகள் மீது மற்ற செடிகளை போட்டு மூடி முன்னேற்பாடுகளை செய்கிறார்கள்.
இதன் மூலம் நிழல் கிடைப்பதாலும், செடிகள் பனி விழாததாலும் அவை கருதுவது தவிர்க்கப்படுகிறது. சிலர் காலை, மாலை நேரங்களில் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். அதிகாலையில் கேரட், பீட்ரூட், பூண்டு போன்ற காய்கறி பயிர்கள் மீது உறைபனி படர்ந்து கிடக்கிறது. வெயில் வந்த பின்னர் உறைபனி கரைந்து விடுகிறது.
பனி காரணமாக பயிர்கள் கருகும் அபாயம் உள்ளது. இதை தடுக்க விவசாயிகள் ஸ்பிரிங்ளர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊட்டி நகரில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 20.4 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 2.1 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவானது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உறைபனி தாக்கம் தொடர்கிறது. நாளுக்கு நாள் உறைபனி அதிகரித்து வருவதால் புல்வெளிகள், வனப்பகுதிகள் வேகமாக கருகி வருகின்றன. குறிப்பாக ஊட்டி, மஞ்சூர் பகுதிகளில் தேயிலை செடிகள் கருக தொடங்கி உள்ளது.
தொடர் உறைபனி காரணமாக லவ்டேல், வேலிவியூ, கேத்தி பாலாடா, சோலூர் உள்ளிட்ட பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் பசுமையை இழந்து வருகிறது. பச்சை, பசேல் என காட்சி அளித்த அவை நிறம் மாறி கருகி வருகின்றன. இந்த ஆண்டு உறைபனி காலதாமதமாக தொடங்கினாலும், அதன் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் பச்சை தேயிலை மகசூல் வெகுவாக குறைந்து இருக்கிறது.