search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேயிலைத்தூள்
    X
    தேயிலைத்தூள்

    குன்னூர் ஏல மையத்தில் தேயிலை தூள் விலை வீழ்ச்சி

    குன்னூர் ஏல மையத்தில் தேயிலை தூள் விலை வீழ்ச்சி அடைந்தது.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் பச்சை தேயிலை, சிறு தேயிலை தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் இருந்து உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூள் குன்னூர் தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் நடத்தப்படும் ஏலம் மூலம் விற்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த வாரத்தில் விற்பனை எண் 6-க்கான ஏலம் நடந்தது. இதில் மொத்தம் 15 லட்சத்து 93 ஆயிரம் கிலோ தேயிலை தூள் வந்தது.

    இதில் 11 லட்சத்து 4 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும் 4 லட்சத்து 89 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 61 சதவீத தேயிலை தூள் விற்பனையானது. விற்பனையான தேயிலை தூளின் அளவு 9 லட்சத்து 68 ஆயிரம் கிலோவாக இருந்தது. இதன் மதிப்பு ரூ.12 கோடியே 90 லட்சம் ஆகும்.

    ஏலத்தில் அனைத்து தேயிலை தூள் ரகங்களுக்கும் கிலோவுக்கு ரூ.1 வீழ்ச்சி அடைந்து இருந்தது. சி.டி.சி. தேயிலை தூளின் உயர்ந்த பட்ச விலையாக கிலோ ரூ.265-க்கும், ஆர்தோடக்ஸ் தேயிலை தூளின் அதிகபட்ச விலை கிலோ ரூ.263-க்கும் ஏலம் போனது. சராசரி விலையாக இலை ரகத்தின் சாதாரண வகை கிலோ ரூ.114-ல் இருந்து ரூ.115 வரையும், விலை உயர்ந்த தேயிலை தூள் கிலோ ரூ.160-ல் இருந்து ரூ.286 வரையும் விற்பனையானது.

    டஸ்ட் ரகத்தின் சாதாரண வகை கிலோ ரூ.115 முதல் ரூ.122 வரையும், விலை உயர்ந்த தேயிலை தூள் ரூ.168 முதல், ரூ.215 வரையும் ஏலம் விடப்பட்டது. விற்பனை எண் 7-க்கான ஏலம் வருகிற 18, 19 ஆகிய தேதிகளில் நடக்கிறது. ஏலத்திற்கு மொத்தம் 14 லட்சத்து 83 ஆயிரம் கிலோ தேயிலை தூள் வருகிறது.
    Next Story
    ×