search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசியபோது எடுத்த படம்.
    X
    கூட்டத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசியபோது எடுத்த படம்.

    நீலகிரியில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை குறைப்பு- கலெக்டர் தகவல்

    நீலகிரியில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் 3 தொகுதிகளில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் வாக்குச்சாவடிகளை கூடுதலாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலை ஒட்டி 1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரிப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக அரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் அரசியல் கட்சி பிரமுகர்கள் ஏற்கனவே 1,000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு வந்தது.

    தற்போது 1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை பிரிப்பது குறித்த பட்டியலை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். அதற்கு கலெக்டர் பட்டியல் நகல் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

    இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் ஏற்கனவே 683 வாக்குச்சாவடிகள் இருந்தன. கொரோனா கட்டுப்பாடு காரணமாக புதிதாக 176 துணை வாக்குச்சாவடி கள் ஏற்படுத்தப்பட்டன. 14 வாக்குச்சாவடிகள் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

    தேர்தல் ஆணையம் 1,050 வாக்காளர்கள் ஒரு வாக்குச்சாவடியில் வாக்களிக்க நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்தது. அதன் அடிப்படையில் ஏற்கனவே அதிகரிக்கப்பட்டு 903 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது 35 வாக்குச்சாவடிகள் குறைக்கப்பட்டு, 868 வாக்குச்சாவடிகளாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் சப்-கலெக்டர்கள் மோனிகா, ரஞ்சித்சிங், கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் ராஜகுமார், தேர்தல் தனி தாசில்தார் புஷ்பா தேவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×