என் மலர்
செய்திகள்

தேயிலை செடிகள் கருகி உள்ளதை காணலாம்
குன்னூரில் கடும் உறைபனி- தேயிலை செடிகள் கருகின
குன்னூர் அருகே உறைபனியால் தேயிலை செடிகள் கருகியதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவ்வப்போது மழை பெய்தது. இதனால் உறைபனியும், குளிரும் சற்று குறைந்து காணப்பட்டது.
மழை நின்றதும் குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள அருவங்காடு, ஒட்டுபட்டறை உள்ளிட்ட பல இடங்களில் மீண்டும் உறைபனியின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது.
தற்போது குன்னூரில் குறைந்தபட்சமாக 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், அதிகபட்சமாக 12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி உள்ளது. கடந்த சில நாட்களாக பனியும், குளிரும் சேர்ந்து வாட்டி வதைத்து வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகிறார்கள்.
மாலை 3 மணியளவில் தொடங்கும் உறைபனி இரவில் கடும் குளிராக மாறி காலை வரை நீடிக்கிறது. இதனால் அதிகாலையில் தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்கு செல்வோர், வியாபாரிகள் உள்ளிட்டோர் தங்கள் தொழில்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
மக்களும் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் தவித்து வருகின்றனர். கடும் குளிராலும், உறைபனியின் தாக்கத்தாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தேயிலை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்கள். தற்போது கொட்டும் உறைபனி மற்றும் கடும் குளிருக்கு பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்ட தேயிலை செடிகள் அனைத்தும் கருகிவிட்டன.
ஆசை, ஆசையாக வளர்த்த தேயிலை செடியில் அறுவடை செய்ய முடியவில்லையே என விவசாயிகள் வேதனை அடைந்து, செடிகளை முற்றிலும் வெட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர். இதேபோல் புல்தரைகளில் பனி படர்ந்து வெள்ளை போர்வை போர்த்தியது போன்று காணப்படுகிறது. அந்த புல்தரைகளும் பனிக்கு கருகிவிட்டன.
தொடர்ந்து நிலவும் குளிர் மற்றும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மக்களும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Next Story