என் மலர்
நீலகிரி
தமிழக சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-
வருகிற சட்டமன்ற தேர்தலில் இளம் வாக்காளர்கள் அனைவரும் தவறாது வாக்களிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. யாருக்கு வாக்குரிமை அளித்தால் ஜனநாயகம் சரியாக காப்பாற்றப்படும் என்பதை உணர்ந்து 18 வயது நிரம்பியவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டு உள்ளது. நீங்கள் வாக்களித்து ஜனநாயகத்தை காப்பாற்றும் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருக்க வேண்டும்.
வாக்குப்பதிவு நாளில் விடுமுறை கிடைத்தால், அதில் நமது அன்றாட வேலையை கவனித்துவிட்டு வீட்டிலேயே இருந்துவிட்டால் ஜனநாயக கடமையை ஆற்ற முடியாது. நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்ன? என்பதை அறிந்து சுய சிந்தனையோடு முடிவெடுத்து வாக்களிக்க வேண்டும். நான் ஓட்டு போட்டால் மாற்றம் வருமா? என்று யோசிக்க வேண்டாம். சம்பந்தப்பட்ட தொகுதியில் யார் வேட்பாளர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நமது வீட்டார், உறவினர்கள், அக்கம்பக்கத்தினரிடம் எடுத்துக்கூறி வாக்குப்பதிவு நாளில் வாக்களிக்க அறிவுறுத்த வேண்டும். ஒரு வாக்கு கூட முடிவை மாற்றும். எனவே இளம் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் பாபு மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடந்தது. அரசியல் கட்சியினர் தேர்தல் சமயத்தில் மக்களை சந்திப்பது, வாக்குப்பதிவு நாளில் ஓட்டு போடுவது போன்ற காட்சிகளுடன் நாடகம் நடித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் ஓட்டு போட்ட பிறகு அழியாத மை வைக்கப்படும் ஆள்காட்டி விரலை உயர்த்தி காண்பிப்பது போன்ற வடிவில் மாணவர்கள் நின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளில் தொகுதி வாரியாக வாக்குச்சாவடி அலுவலர்களை ஒதுக்கீடு செய்யும் பணி கணினி மூலம் நடந்தது. இதையடுத்து சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஊட்டி ரெக்ஸ் பள்ளியில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் ஊட்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சப்-கலெக்டர் மோனிகா தலைமை தாங்கி பேசும்போது, இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய விதிமுறைகளை வாக்குச்சாவடி அலுவலர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். ஆள்மாறாட்டம் செய்து வாக்களிப்பதை கண்காணிக்க வேண்டும். வாக்குச்சாவடிகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் மற்றும் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
தொடர்ந்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு எல்.இ.டி. திரை மூலம் குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:-
வாக்குப்பதிவு நடைபெறும் அடுத்த மாதம்(ஏப்ரல்) 6-ந் தேதிக்கு முன்னதாக அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு மண்டல அலுவலர்கள் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் ஓட்டு போடுவதற்கான பொருட்கள் அனுப்பப்படும்.
இதனை அலுவலர்கள் சரிபார்த்து வாக்குச்சாவடியில் மேஜைகள், இருக்கைகள் போட்டு எந்திரங்களை பொருத்த வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்த வேண்டும். இதன் மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியான முறையில் செயல்படுகிறதா என உறுதி செய்யப்படும். பின்னர் மாதிரி வாக்குகள் அழிக்கப்பட்டு, தேர்தல் அன்று வாக்குப்பதிவு நடக்கும்.
வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களிக்கவும், ஓட்டு போடுபவர்கள் கையில் அழியாத மை வைக்கவும் வேண்டும். வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குப்பதிவு எந்திரத்தில் குளோஸ் பட்டனை அழுத்தி சீல் வைத்து மண்டல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். வாக்குப்பதிவு நேரத்துக்கு பின்னர் வரிசையில் நிற்பவர்களை டோக்கன் மூலம் வாக்களிக்க அனுமதிக்கலாம். மேலும் தாங்கள் பணிபுரியும் வாக்குச்சாவடியில் மொத்தம் பதிவான வாக்குகளை குறித்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். பயிற்சியில் ஊட்டி தாசில்தார் குப்புராஜ் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் 1,700 பேர் கலந்துகொண்டனர்.
கடந்த காலங்களில் தாவரவியல் மையத்துக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது. கல்லூரி, பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே தாவரவியல் மையத்தை பயன்படுத்தி வந்தனர். எனவே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர். இதன் மூலம் நாடுகாணி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்தநிலையில் தாவரவியல் பூங்கா மையம் ரூ.25 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. தொடர்ந்து சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நாடுகாணி தாவரவியல் மையத்தை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இதைத்தொடர்ந்து நாடுகாணி பகுதி வியாபாரிகள், பொதுமக்களுக்கு நேரடியாக மற்றும் மறைமுகமாக வேலைவாய்ப்புகள் உருவானது.
இருப்பினும் கூடுதல் நிதி ஒதுக்கப்படாததால் தாவரவியல் மையத்தில் பராமரிப்பு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.
மேலும் சுற்றுலா பயணிகளுக்கும் தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து தாவரவியல் மையம் மூடப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தாவரவியல் மையம் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகளும், தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு கூட்டுறவு தொழிற்சாலைகளும், தனியார் தொழிற்சாலைகளும் செயல்பட்டு வருகின்றன.
விவசாயிகள் தங்களது தோட்டத்தில் பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலைக்கு வழங்கி வருமானம் ஈட்டுகின்றனர். அந்த பச்சை தேயிலையை கொண்டு தொழிற்சாலைகளில் தேயிலைத்தூள் தயாரிக்கப்படுகிறது.
அதன்படி நீலகிரியில் தயாரிக்கப்படும் தேயிலைத்தூள், குன்னூரில் உள்ள ஏல மையத்தில் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்களில் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகிறது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை வாங்குகின்றனர்.
இங்கு விற்பனை எண் 10-க்கான ஏலம் கடந்த 11, 12-ந் தேதிகளில் நடைபெற்றது. ஏலத்துக்கு 14 லட்சத்து 22 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது. இதில் 10 லட்சத்து 82 ஆயிரம் கிலோ இலை ரகமாகவும், 3 லட்சத்து 40 ஆயிரம் கிலோ டஸ்ட் ரகமாகவும் இருந்தது.
இந்த ஏலத்தில் 12 லட்சத்து 2 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. அதன் மதிப்பு ரூ.14 கோடியே 74 லட்சம் ஆகும். இது 86 சதவீத விற்பனை. அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் கிலோவுக்கு ரூ.1 விலை உயர்வு இருந்தது. சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.277, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.250 என விற்பனையானது.
சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.105 முதல் ரூ.109 வரை, உயர் வகை கிலோவுக்கு ரூ.171 முதல் ரூ.211 வரை, டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.113 முதல் ரூ.117 வரை, உயர் வகை கிலோவுக்கு ரூ.171 முதல் ரூ.234 வரை ஏலம் போனது.
அடுத்த ஏலம்(விற்பனை எண்-11) வருகிற 18, 19-ந் தேதிகளில் நடக்கிறது. இதற்கு 13 லட்சத்து 59 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வருகிறது. கடந்த 5 வாரமாக தேயிலைத்தூளுக்கு தொடர்ந்து விலை வீழ்ச்சி ஏற்பட்டு வந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து இருந்தனர். ஆனால் தற்போது கிலோவுக்கு ரூ.1 விலை உயர்வு ஏற்பட்டு உள்ளது. இது அவர்களுக்கு சற்று ஆறுதலை தந்து உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து காணப்பட்டது. தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக முககவசம் அணியாமல் தொற்றை பரப்புபவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என கலெக்டர் எச்சரித்தார்.
மேலும் மாவட்டம் முழுவதும் முககவசம் அணியாமல் வாகனங்களில் சுற்றி திரிபவர்களை பிடித்து அதிகாரிகள் அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று ஊட்டியில் நடந்து செல்லும் மக்கள், வாகனங்களில் செல்வோர்கள் என அனைவரும் அரசின் விதி முறைகளை கடை பிடிக்கிறார்களா? முககவசம் அணிந்து வருகிறார்களா? என்பதை ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவே களத்தில் இறங்கினார்.
ஊட்டி ஸ்டீபன் சர்ச் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் அந்த வழியாக முககவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள், சுற்றுலா வாகனங்களில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி ரூ.200 அபராதம் விதித்தார்.
இதேபோல் அந்த வழியாக வந்த அரசு பஸ்சில் ஏறி பயணிகள் முககவசம் அணிந்துள்ளனரா? என ஆய்வு மேற்கொண்ட அவர், அப்படி அணியாதவர்களுக்கு அபராதம் விதித்ததுடன் கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தினார். தொடர்ந்து அந்த வழியாக முககவசம் அணியாமல் நடந்து சென்ற 50 பாதசாரிகளை தடுத்து நிறுத்தி ரூ.200 அபராதம் விதித்தார்.
இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-
பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வரும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். தற்போது மக்களிடம் முக கவசம் அணிவது குறைய தொடங்கி உள்ளது. முக கவசம் அணிவதை கண் காணிக்க கூடுதல் தனிக்குழு அமைக்கப்பட உள்ளது. சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் முறையான பாதுகாப்பு வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். பஸ்சில் செல்லும் பயணிகளும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.




















