என் மலர்
நீலகிரி
தேனி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கூடலூர்:
தேனி, திண்டுக்கல் உள்பட 17 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி நேற்று பகல் பொழுதில் தேனி மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்தபோதும் மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. சாரலாக தொடங்கிய மழை விடிய விடிய கொட்டியது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு தொடர்ந்து மழை பெய்தது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 127.55 அடியாக உள்ளது. 686 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1300 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இன்று முதல் போடி, உத்தமபாளையம் பகுதி பாசனத்திற்காக 95 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. 15 நாட்கள் திறக்கப்படும் தண்ணீர் மூலம் சுமார் 4,794 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 53.05 அடியாக உள்ளது. 1048 கன அடி நீர் வருகிறது. நேற்று வரை 1819 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று காலை 150 கன அடி குறைக்கப்பட்டு 1669 கன அடி நீர் மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 119.72 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 10, தேக்கடி 18, கூடலூர் 17.5, சண்முகாநதி அணை 7.2, உத்தமபாளையம் 11.3, வீரபாண்டி22, வைகை அணை 14.6, மஞ்சளாறு 15, மருதாநதி 20, சோத்துப்பாறை 10, கொடைக்கானல் 8.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

கொடநாடு வழக்கில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளை வைத்து அதற்கான ஆதாரங்களையும் போலீசார் திரட்டும் பணியில் ஈடுபட்டனர். சில ஆதாரங்களை திரட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ல் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
மனோஜை தவிர மற்ற அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ள நிலையில் கொடநாடு வழக்கில் மறு விசாரணை கோரப்பட்டது. கோர்ட்டின் அனுமதியின் படி நடந்த மறுவிசாரணையில் முதல் ஆளாக சயான் போலீசில் ஆஜராகி மறு வாக்குமூலம் அளித்தார்.
இதில் முக்கிய பிரமுகர்கள் சிலரின் பெயரையும் அவர் தெரிவித்ததாக கூறப்பட்டது. அவரது மறுவாக்குமூலத்திற்கு பின்பே கொடநாடு வழக்கு சூடுபிடிக்க தொடங்கியது.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உத்தரவுப்படி ஏ.டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இதற்கிடையே இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் கடந்த மாதம் 2-ந் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது போலீசார் 4 வார கால அவகாசம் கேட்டது. அதற்கு கோர்ட்டு அனுமதி அளித்தது.
இதையடுத்து தனிப்படையினர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முக்கிய குற்றவாளியான சாலை விபத்தில் இறந்த கனகராஜின் சகோதரர் தனபால், கனகராஜ் மனைவி, நண்பர்கள், வழக்கில் தொடர்புடைய சம்சீர் அலி, மனோஜ்சாமி, சந்தோஷ் சாமி, சதீஷன், பிஜின்குட்டி, எஸ்டேட் மேலாளர் நடராஜன், தற்கொலை செய்து கொண்ட கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேசின் தந்தை, தாய், சகோதரி அரசு சாட்சிகள் என பலரிடமும் விசாரணை நடத்தி, அவர்கள் அளித்த தகவல்களை வாக்கு மூலமாக பதிவு செய்து கொண்டனர்.
மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகரும் ஊட்டியிலேயே முகாமிட்டு குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் நேரில் விசாரணை மேற்கொண்டார். மேலும் எஸ்டேட்டில் வேலை பார்த்த நபர்கள், அவர்களது வீடுகளுக்கு சென்று விசாரித்தார்.

இந்த நிலையில் போலீசாருக்கு கோர்ட்டு வழங்கிய கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து நாளை ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கொடநாடு வழக்கு விசாரணைக்கு வருகிறது.
அப்போது குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் போலீசார் தாங்கள் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் கிடைத்த அனைத்து தகவல்களையும் அறிக்கையாக தயாரித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை நாளை அவர்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அல்லது மேற்கொண்டு விசாரணை நடத்த காலஅவசாகம் கேட்கலாம் எனவும் தெரிகிறது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளை வைத்து அதற்கான ஆதாரங்களையும் போலீசார் திரட்டும் பணியில் ஈடுபட்டனர். சில ஆதாரங்களை திரட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் போலீசாருக்கு கோர்ட்டு வழங்கிய கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து நாளை ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கொடநாடு வழக்கு விசாரணைக்கு வருகிறது.
அப்போது குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் போலீசார் தாங்கள் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் கிடைத்த அனைத்து தகவல்களையும் அறிக்கையாக தயாரித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை நாளை அவர்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. அல்லது மேற்கொண்டு விசாரணை நடத்த காலஅவசாகம் கேட்கலாம் எனவும் தெரிகிறது.
கொடநாடு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருவதால் பரபரப்பு நிலவுகிறது.
இதையும் படியுங்கள்... சென்னையில் ரகளை செய்யும் மாணவர்களை கைது செய்ய அதிரடி நடவடிக்கை
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, டால்பின் நோஸ் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு சுகாதார குழுவினர் முகாமிட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் மொத்த மக்கள் தொகை 7 லட்சத்து 24 ஆயிரத்து 748 ஆகும். இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5 லட்சத்து 21 ஆயிரத்து 60 பேர் உள்ளனர். கொரோனா பாதித்தவர்களை தவிர்த்து 18 வயதுக்கு மேல் தகுதி வாய்ந்த அனைவருக்கும் முதல் டோஸ் செலுத்தப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் 2-வது டோஸ் செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முழு ஊரடங்கு தளர்வை தொடர்ந்து கடந்த மாதம் 23-ந் தேதி முதல் அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்கப்பட்டன. வெளிமாநிலங்களில் இருந்து வர கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
பின்னர் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நெகட்டிவ் சான்றிதழ் இன்றி வரலாம் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது நீலகிரியில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள சூழ்நிலையில், வெளியிடங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதை கருத்தில் கொண்டு சுற்றுலா தலங்களுக்கு வரும் தடுப்பூசி செலுத்தாத சுற்றுலாப் பயணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் செயல்பட தொடங்கி உள்ளது.
அதன்படி ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா, டால்பின் நோஸ் ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு சுகாதார குழுவினர் முகாமிட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். முதல் மற்றும் 2-வது டோஸ் செலுத்தாதவர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்து செலுத்திக் கொள்ளலாம். இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறும்போது, சுற்றுலா பயணிகள் மூலம் உள்ளூர் மக்கள், சுற்றுலாத் தலங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
அங்கு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு, தடுப்பூசி இருப்பை பொறுத்து தினமும் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி தடுப்பூசி செலுத்தாத பிற மக்களும் போட்டுக்கொள்ளலாம். நீலகிரியில் இதுவரை 2 லட்சத்து 4 ஆயிரத்து 348 பேருக்கு 2-வது டோஸ் செலுத்தப்பட்டு உள்ளது என்றனர்.

மஞ்சூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
ஊட்டி:
ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றும் விரிவுரையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த விரிவுரையாளர் சென்று வந்த வகுப்புகளில் படித்து வந்த 140-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான முடிவுகள் வெளிவராத நிலையில் ஊட்டி அரசு கலைக்கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஊட்டியில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் ஒரு ஆசிரியர், 5 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து அந்த பள்ளிக்கும் வெள்ளிக்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊட்டியில் உள்ள ஒரு தனியார் சி.பி.எஸ்.இ பள்ளியில் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அந்த பள்ளிக்கு நாளை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மஞ்சூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. குன்னூர் வட்டாரத்தில் மேலும் 2 தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

2 ஆண்டுகளுக்கு பின்னர் ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஊட்டி:
ஆண்டுதோறும் செப்டம்பர் 27-ந் தேதி உலக சுற்றுலா தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் சமூக வளர்ச்சிக்கு சுற்றுலா என்ற கருப்பொருளை மையமாக கொண்டு உலக சுற்றுலா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக ஆண்டுதோறும் கோடை சீசனையொட்டி ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளுக்காக நடைபெறும் படகு போட்டி ரத்து செய்யப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு படகு போட்டி நேற்று நடைபெற்றது.
ஆண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய 2 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். படகு போட்டியை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். சுற்றுலா பயணிகள் மிதி படகுகளில் குறிப்பிட்ட எல்லை வரை வேகமாக சென்று கடந்தனர். 2-வது பிரிவு போட்டியின் போது கொட்டும் மழையின் நடுவே நனைந்தபடி சுற்றுலா பயணிகள் படகில் சென்றனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஊட்டியை சேர்ந்த திலீப், சுவாமிநாதன் முதல் இடம் பிடித்தனர்.
ஊட்டியை சேர்ந்த மற்ற 2 பேர் 2-வது இடம், கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த பிரசாத், சனோக் 3-வது இடத்தை பிடித்தனர். அவர்களுக்கு கலெக்டர் நினைவு பரிசுகளை வழங்கினார். கலப்பு இரட்டையர் பிரிவில் சென்னையை சேர்ந்த ராகவேந்திரன், பவானி ஆகியோருக்கு முதல் பரிசு, கோவையை சேர்ந்த சாகுல் ஹமீது, பால்சிஸ் 2-ம் பரிசு, கேரளாவைச் சேர்ந்த பிரவீன், திசா ஆகியோருக்கு 3-ம் பரிசு வழங்கப்பட்டது. உலக சுற்றுலா தினத்தையொட்டி பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது. இதில் ஊட்டச்சத்து உணவுகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.
மேலும் தோடர், படுகர் இன மக்களின் நடனம் நடந்தது. உலக சுற்றுலா தினத்தையொட்டி ஊட்டி அரசு கலைக் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டது இதில் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் வெங்கடேசன், மாவட்ட சுற்றுலா அலுவலர் உமா சங்கர், ஊட்டி படகு இல்ல மேலாளர் சாம்சன் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர். படகு போட்டியில் சுற்றுலா பயணிகள் பங்கேற்று குதூகலம் அடைந்தனர்.

கூடலூர் செம்பாலா பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கூட மாணவி ஒருவருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.
கூடலூர்:
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து விட்டதால் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் பள்ளிக்கூடங்களும் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் தினமும் பள்ளிக்கூடம், கல்லூரிகளுக்கு சென்று வீடு திரும்புகின்றனர். வகுப்பறைகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினாலும் வீட்டிலிருந்து பள்ளிக்கூடங்களுக்கு பஸ்கள் மற்றும் பிற வழிகளில் சென்று வரும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
இதையொட்டி சில மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கூடலூரில் கடந்த வாரம் தனியார் பள்ளிக்கூட நிர்வாகிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து பள்ளி கட்டிடங்கள் மற்றும் வகுப்பறைகளில் சுகாதாரத்துறையினர் கிருமி நாசினி தெளித்தனர். தொடர்ந்து மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பின்னர் பள்ளிக்கூடம் மூடப்பட்டது.
இதன் பரிசோதனை அறிக்கையில் வேறு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. இதைத் தொடர்ந்து தனியார் பள்ளிக்கூடம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கூடலூர் செம்பாலா பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கூட மாணவி ஒருவருக்கு வைரஸ் தொற்று நேற்று கண்டறியப்பட்டது. இதையொட்டி சுமார் 750-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து அனைத்து வகுப்பறைகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பின்னர் ஒரு வாரத்துக்கு பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பள்ளிக்கூடம் மூடப்பட்டது.
இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறும்போது, மாணவ மாணவிகள் வீடுகளில் இருந்து பள்ளி கூடம் மற்றும் கல்லூரிக்கு வரும் போது மிகுந்த கவனமுடன் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். வீடு மற்றும் பள்ளிக்கூடத்துக்கு சென்ற பின்னர் கைகளை நன்றாக கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். இதுபோன்ற வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றினால் மட்டுமே பாதுகாப்பாக இருக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மூலைக்கடை, தட்டாம்பாறை, கோட்டப்பாடி உள்பட பல பகுதிகளில் 5 காட்டுயானைகள் குட்டிகளுடன் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகிறது.
பந்தலூர்:
பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே மூலைக்கடை, தட்டாம்பாறை, கோட்டப்பாடி உள்பட பல பகுதிகளில் 5 காட்டுயானைகள் குட்டிகளுடன் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அய்யன்கொல்லியிலிருந்து கொளப்பள்ளி செல்லும் சாலையில் கோட்டப்பாடியில் அரசு பஸ்சை வழி மறித்தது. இதனால் பஸ்சில் இருந்தவர்கள் அச்சமடைந்தனர். இதுபற்றி அறிந்த வனத்துறையினர் காட்டுயானைகளை விரட்டி அடித்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 37 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. இதன் மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 32 ஆயிரத்து 535 ஆக உயர்ந்து உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 37 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது. இதன் மூலம் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 32 ஆயிரத்து 535 ஆக உயர்ந்து உள்ளது. இதுதவிர 35 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் இதுவரை 31 ஆயிரத்து 994 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 2 பேர் இறந்தனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவால் 198 பேர் இறந்து உள்ளனர். தற்போது 343 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கூடலூரில் பொதுமக்கள் போராட்டம் காரணமாக புலியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர். ஊருக்குள் வரும் விநாயகன் காட்டு யானையை ட்ரோன் மூலம் கண்காணித்து வருகின்றனர்.
கூடலூர்:
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி அம்பலமூலா பகுதியில் கடந்த சில மாதங்களாக புலி ஒன்று ஊருக்குள் புகுந்து கால்நடைகளை கடித்து கொன்று வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அம்பலமூலா அருகே சேமுண்டி பகுதியில் கன்றுக்குட்டியை புலி கடித்துக் கொன்றது. இதனால் அதிச்சி அடைந்த ஊராட்சி மக்கள், இறந்த கன்றுகுட்டியின் உடலை எடுத்துக் கொண்டு கூடலூர் கோட்ட வன அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் அவர்கள், மாக்கமூலா, தொரப்பள்ளி ஆகிய இடங்களில் பல மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது புலியை பிடிக்க கூண்டு வைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதேபோல் விநாயகன் என்ற காட்டு யானை, சில ஆண்டுகளாக ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே காட்டு யானையை பிடித்து முகாமுக்கு கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து கூடலூர்- முதுமலை எல்லைகளில் 4 கும்கி யானைகள் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் கூறினர். அதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் கன்றுக்குட்டியை கொன்ற புலியை பிடிப்பதற்காக அம்பலமூலா காபி தோட்டம் பகுதியில் வனத்துறையினர் நள்ளிரவு இரும்புக்கூண்டு வைத்தனர். அதற்குள் புலி கடித்துக் கொன்ற கன்றுக்குட்டியின் உடல் வைக்கப்பட்டது. மேலும் சேமுண்டி பகுதியில் தானியங்கி கேமராக்கள் பொருத்தினர். நேற்று காலை கூண்டு வைக்கப்பட்ட இடத்தில் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். இதில் கூண்டுக்குள் புலி சிக்கவில்லை என்பது தெரிய வந்தது. இதையொட்டி மாலை, இரவு நேரத்தில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே தனியாக நடமாடக்கூடாது என வனத்துறையினர் எச்சரித்து உள்ளனர்.
இதனிடையே கூடலூர் அருகே ஏச்சம்வயல் பகுதியில் நேற்று முன்தினம் இரவு விநாயகன் காட்டு யானை ஊருக்குள் புகுந்தது. அது, அங்கிருந்த தென்னை மரத்தை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது. இதை அறிந்த பொதுமக்கள் திரண்டு வந்து யானையை விரட்டி அடித்தனர். இதனால் காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றது.
இது குறித்து தகவலறிந்த கூடலூர் வனச்சரகர் கணேசன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நேற்று பகல் 11 மணிக்கு ட்ரோன் பறக்க விட்டு விநாயகன் காட்டு யானை எந்த பகுதியில் உள்ளது என தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் யானையின் நடமாட்டத்தை அறிய முடியவில்லை. இதைத்தொடர்ந்து முதுமலையில் இருந்து 4 கும்கி யானைகள் கூடலூருக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
2 ஆண்டுகளுக்கு பிறகு அவலாஞ்சி வனப்பகுதிக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்டது. இதையொட்டி நிலச்சரிவு பாதிப்புகளை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஊட்டி:
நீலகிரி வனக்கோட்டம் அவலாஞ்சி வனப்பகுதியில் சூழல் சுற்றுலா உள்ளது. இங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் எழில்மிகுந்த மலை முகடுகள், சிறுத்தை, புலி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் மற்றும் அரிய வகை பறவைகளை பார்வையிடலாம். காலிபிளவர் போன்று மூடி மறைந்து காணப்படும் மலைப்பகுதி பிரமிக்க வைக்கிறது. மலை உச்சியில் பவானி அம்மன் கோவில் உள்ளது. லக்கிடி காட்சி முனையில் இருந்து இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம். அடர்ந்த காடுகள் வழியாக சுற்றுலா செல்வது மனதில் ஒருவித திகிலுடன் கூடிய மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
இதற்கிடையே கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஒரே நாளில் அவலாஞ்சியில் 90 சென்டி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் அவலாஞ்சியில் இருந்து லக்கிடி காட்சிமுனை செல்லும் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. சில இடங்களில் சாலையே தெரி யாத அளவுக்கு மண் மூடியது. பல இடங்கள் சாலை பெயர்ந்த நிலையில் காடுகளாக காட்சி அளிக்கிறது. இதனால் அவலாஞ்சி சூழல் சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் நிலச்சரிவால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவில்லை.
கொரோனா ஊரடங்கை தளர்வை தொடர்ந்து அவலாஞ்சி வனப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 2 ஆண்டு களுக்கு பிறகு திறக்கப்பட்டதால் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் சென்று இயற்கை அழகை கண்டு ரசித்து வருகின்றனர். சோதனைச்சாவடியில் இருந்து வனத்துறை விருந்தினர் மாளிகை வரை மட்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். வாகனங்கள் நிறுத்த ரூ.30, நுழைவு கட்டணம் ஒரு நபருக்கு ரூ.20 வசூலிக்கப்பட்டு வருகிறது.
அவலாஞ்சி அணை, வனவிலங்குகள் மற்றும் நர்சரியில் உள்ள ஆர்கிட் செடிகளை சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறும் போது, அவலாஞ்சியில் சிறிது தூரம் செல்ல மட்டும் அனுமதி உள்ளது. இதனால் முழுமையாக கண்டு ரசிக்க இயல வில்லை. நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்து சீரமைக்க வேண்டும். மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு முழுமையாக அனுமதி வழங்க வேண்டும் என்றனர்.
முதுமலையில் வனவிலங்குகள் அடிக்கடி சாலையை கடப்பதால் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
கூடலூர்:
தமிழகம், கேரளா, கர்நாடகா என 3 மாநிலங்களை இணைக்கும் மையமாக கூடலூர் திகழ்கிறது. இதனால் அண்டை மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான வாகனங்கள் கூடலூர் வழியாக இயக்கப்படுகிறது. மேலும் கொரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு செல்ல கூடுதல் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் வரத்தொடங்கி உள்ளன.
இதனால் கூடலூர், முதுமலை வழியாக சரக்கு லாரிகள் மட்டுமின்றி தனியார் வாகனங்கள் சாலைகளில் இயக்கப்படுகிறது. இதேபோல் முதுமலை வனத்திலும் மான்கள், காட்டு யானைகள், உள்ளிட்ட வனவிலங்குகளும் அதிகமாக காணமுடிகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் சாலையோரம் தென்படும் வனவிலங்குகளை காணும் ஆர்வத்தில் வாகனங்களை நிறுத்தி ரசிக்கின்றனர். சிலர் செல்போன்களில் புகைப்படம் எடுக்கின்றனர்.
இதனால் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் சில சமயங்களில் காட்டு யானைகள் வாகனங்களை வழிமறிக்கும் சம்பவங்க ளும் நிகழ்கிறது. இந்த நிலையில் முதுமலை சாலையோரம் புள்ளிமான்கள், மயில்கள், சிங்கவால்குரங்கு, காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இது போன்ற வனவிலங்குகள் அடிக்கடி சாலைகளை கடந்து செல்கிறது. அது போன்ற நேரங்களில் வாகனங்களை வேகமாக இயக்கினால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே வனப்பகுதியையொட்டி உள்ள சாலைகளில் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். வனத்துறை உத்தரவை மீறினால் கடும் அபராதம் விதிக்கப்படும். எனவே வனவிலங்குகளுக்கு இடையூறு செய்தல் உள்ளிட்ட காரியங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் ஈடுபடக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
யானை அகழியைக் கடந்து ஊருக்குள் வரும் பகுதிகளில் கும்கி யானைகளை நிறுத்தி காட்டு யானையை ஊருக்குள் வரவிடாமல் தடுக்கும் பணி நடந்து வருகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த சில மாதங்களாக ஒற்றை புலியின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதுவரை 30-க்கும் மேற்பட்ட மாடுகளையும், 2 மனிதர்களையும் அந்த புலி அடித்து கொன்றுள்ளது.
தொடர்ந்து வீட்டு விலங்குகள் மற்றும் மனிதர்களை தாக்கி வரும் புலியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் கூட ஸ்ரீமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கன்றுகுட்டியின் உடலை வனத்துறை அலுவலகம் முன்பு போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். உடனடியாக கூண்டு வைத்து புலியை பிடிக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி புலியை பிடிக்க கூண்டு வைப்பதாக உறுதி அளித்தனர்.
அதன்படி நேற்று அதிகாலை மண்வயல் அடுத்த அம்பலமூலா பகுதியில் கூண்டு வைத்து அதனுள் இறந்த கன்றுகுட்டியை வைத்து புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
இதுதவிர ஸ்ரீமதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் புலியின் நடமாட்டத்தை அறிந்து கொள்ளும் வகையில் அந்த பகுதிகளில் தானியங்கி கேமராக்கள் பொருத்த வனத்துறையினர் முடிவு செய்தனர்.
இதையடுத்து ஸ்ரீமதுரை, மண்வயல், அம்பலமூலா உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் புலி வந்து செல்லக் கூடியதாக 20 இடங்களை தேர்வு செய்து, அங்கு 40 தானியங்கி கேமராக்களை வனத்துறையினர் பொருத்தியுள்ளனர். தொடர்ந்து கேமராக்களில் பதிவாக கூடிய காட்சிகளையும், புலியின் நடமாட்டத்தையும் கண்காணித்து வருகின்றனர்.
புலி நடமாட்டம் இருப்பதால் குறிப்பிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தனியாக எங்கும் செல்ல வேண்டாம் என்றும், இரவு நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், பாதுகாப்பாக இருக்கவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
புலி நடமாட்டம் மட்டுமின்றி இந்த பகுதியில் விநாயகன் என்ற யானையும் ஊருக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தி வருகிறது. இதையடுத்து இந்த யானையையும் டிரோன் கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்தனர். அப்போது விநாயகன் யானை நெல்லிக்கரை கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் இருப்பு தெரியவந்தது.
இதையடுத்து யானை அகழியைக் கடந்து ஊருக்குள் வரும் பகுதிகளில் கும்கி யானைகளை நிறுத்தி காட்டு யானையை ஊருக்குள் வரவிடாமல் தடுக்கும் பணி நடந்து வருகிறது.