என் மலர்tooltip icon

    செய்திகள்

    யானைகள்
    X
    யானைகள்

    பந்தலூர் அய்யன்கொல்லியில் காட்டு யானைகள் அட்டகாசம்

    மூலைக்கடை, தட்டாம்பாறை, கோட்டப்பாடி உள்பட பல பகுதிகளில் 5 காட்டுயானைகள் குட்டிகளுடன் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகிறது.
    பந்தலூர்:

    பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே மூலைக்கடை, தட்டாம்பாறை, கோட்டப்பாடி உள்பட பல பகுதிகளில் 5 காட்டுயானைகள் குட்டிகளுடன் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அய்யன்கொல்லியிலிருந்து கொளப்பள்ளி செல்லும் சாலையில் கோட்டப்பாடியில் அரசு பஸ்சை வழி மறித்தது. இதனால் பஸ்சில் இருந்தவர்கள் அச்சமடைந்தனர். இதுபற்றி அறிந்த வனத்துறையினர் காட்டுயானைகளை விரட்டி அடித்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×