என் மலர்tooltip icon

    நீலகிரி

    • 16 அணிகள் பங்கேற்றன.
    • முதல் கோல் அடித்த வீரருக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

    அரவேணு,

    கோத்தகிரியில் நீலகிரி மாவட்ட கால்பந்தாட்ட கழகம் 50-ம் ஆண்டு பொன் விழாவையொட்டி மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டி நடந்தது.

    போட்டியில் நீலகிரி, தேனி, திருவள்ளூர், திருநெல்வேலி, சிவகங்கை,மதுரை, ஈரோடு, திண்டுக்கல்,சென்னை, கோயமுத்தூர்,சேலம், வேலூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த 16 அணிகள் பங்கேற்றன.

    அரையிறுதி போட்டியில் நீலகிரி, திருவள்ளூர், சென்னை, தஞ்சாவூர் ஆகிய அணிகள் இவிளையாடின. இதில் நீலகிரி அணியும் தஞ்சாவூர் அணியும் இறுதி போட்டிக்கு முன்னேறினர்.

    இறுதிப்போட்டியில் நீலகிரி அணி 4 கோல்களும், தஞ்சாவூர் அணி 1 கோலும் அடித்தன. இதில் நீலகிரி அணி 4-1 என்ற கோல் கணக்கில் தஞ்சாவூர் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.

    ஆட்ட நாயகன், சிறந்த கால்பந்தாட்ட வீரர் போன்ற சிறப்பு பரிசுகள் கால்பந்தாட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் இறுதிப்போட்டியில் முதல் கோல் அடித்த வீரருக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. 2-ம் கோல் அடித்த வீரருக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்து.

    போட்டி ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட கால்பந்தாட்ட கழக உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • வாழ்க்கையில் சாதிக்க கனவு காண வேண்டும் என அறிவுரை
    • மாணவர்கள் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்திக் கொண்டு முன்னேற்றம் அடைய வேண்டும்.

    ஊட்டி,

    ஊட்டி அருகே முத்தோரை பாலாடாவில் பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் உள்ளது. இதனை ஒட்டியே ஏகலைவா பழங்குடியினர் மாதிரி உண்டு, உறைவிட மேல்நி லைப்பள்ளி உள்ளது. இங்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    நீலகிரிக்கு வருகை தந்துள்ள தமிழக கவர்னர் ஆர்.என். ரவி நேற்று அங்கு சென்றார். பள்ளி மற்றும் விடுதிகளை அவர் பார்வையிட்டார்.

    மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார்.

    அப்போது கவர்னர் ஆர்.என். ரவி கூறியதாவது:-

    மாணவர்கள் தங்களது வாழ்க்கையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என கனவு காண வேண்டும். அந்த லட்சியத்தை மனதில் கொள்வதன் மூலம் அதனை அடைய முடியும். மாணவர்கள் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்திக் கொண்டு முன்னேற்றம் அடைய வேண்டும்.

    மாணவர்கள் தன்னை இணையதளம் மூலம் ெதாடர்பு கொண்டு பல்வேறு தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும். மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த பாடுபட வேண்டும். அடிப்படை கல்வியை சிறந்த முறையில் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித், போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவத் உள்பட பலர் பங்கேற்றனர்.

    ஊட்டி முத்தோரை பாலாடா பகுதியில் உள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்திற்கு சென்ற கவர்னர் ஆர்.என். ரவி, அங்குள்ள அருங்காட்சியகத்தில் பழங்குடியின மக்களின் பாரம்பரிய பொருட்களின் மாதிரிகளை பார்வையிட்டார்.

    • கடன் மனுவை சமர்ப்பித்து பயிர்க்கடன் பெற்று பயன் அடையலாம்.
    • அனைத்து வகையான கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்ட விவசாயிகள் தங்களது ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை, நில உடைமை தொடர்பான சிட்டா, பயிர்க்கடன் தொடர்பான வட்டாட்சியரின் அனுபோக சான்றிதழ் மற்றும் அடங்கல், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஆகியவற்றுடன் தங்களது இருப்பிடம் அல்லது விவசாயம் பயிர் சாகுபடி செய்யும் நில அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை உடன் தொடர்பு கொண்டு கடன் மனுவை சமர்ப்பித்து பயிர்க்கடன் பெற்று பயன் அடையலாம்.

    மேலும் வட்டியில்லா கால்நடை பராமரிப்பு கடன், மாற்றுத் திறனாளிகளுக்கான கடன், குறைந்த வட்டியில் சுய உதவிக்குழுக்களுக்கான கடன், பிற்படுத்தப்பட்டோர் கடன் மற்றும் சிறுபான்மை யினர் கடன் போன்ற அனைத்து வகையான கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக இல்லாத விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் உறுப்பினர் படிவத்தை பெற்று ரூ.110 பங்கு தொகை மற்றும் நுழைவுக்கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேர்த்து உரிய ஆவணங்களுடன் கடன் மனுவை சமர்ப்பித்து பயிர்க்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களையும் பெற்று பயன் அடையலாம்.

    இதில் ஏதேனும் சேவை குறைபாடுகள் இருந்தால் நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனரை அல்லது உதவி பொதுமேலாளர், கடன் மேலாளரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் 118 மனுக்களை பெற்றுக் கொண்டார்.
    • கூட்டத்தில் கலெக்டர் பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையினை வழங்கினார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 118 மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனங்கள் துறை சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்காற்றியவர் களுக்காக பசுமை முதன்மையாளர் விருது என்ற விருதை நிறுவி வழங்கி வருகிறது. இதன்படி மாநிலத்தில் 100 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையாகவும் வழங்கப்படுகிறது.

    இதில் நீலகிரி மாவட்ட த்துக்கு 2 விருதுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுகுறித்த விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த தனி நபர்கள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்பு நலச்சங்கங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொழி ற்சாலைகள் ஆகி யோரிடம் இருந்து பெறப்பட்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அவற்றில் கிளீன் குன்னூர் மற்றும் பகல்கோடு மந்து சூழல் மேம்பாடு குழு ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் 2021-ம் ஆண்டு பசுமை முதன்மையாளர் 2021 விருதிற்கு உரியவையாக தேர்ந்தெடுக்கப்பட்டன.

    கிளீன் குன்னூர் நிறுவனத்துக்கான பசுமை சாதனையாளர் விருது சென்னையில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். விருது பெற்ற மற்றொரு நிறுவனமான பகல்கோடு மந்து சூழல் மேம்பாட்டு குழுக்கான விருதினை அக்குழுவின் தலைவர் மணிகண்டனுக்கு நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையினை வழங்கினார்.

    மக்கள் குறைதீர்க்கும் நாள கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும், உரிய காரணம் இல்லாமல் மனுக்களை நிராகரிக்க கூடாது எனவும், பொதுமக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    • விளை நிலங்களுக்குள் நுழைந்து பொதுமக்களைய அச்சுறுத்தி வருகின்றன.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உபதலை சுற்றுபுற பகுதிகளில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக வனப்பகுதி ஒட்டியுள்ள தேயிலை தோட்டங்களில் கரடிகள் உலா வருவதால் தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்கள் அச்சத்துடனேயே பணிக்கு சென்று வருகின்றனர்

    இப்பகுதியில் உணவு, குடிநீர் தேடி கரடி, காட்டெருமை, சிறுத்தை, காட்டுப்பன்றி, கடமான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் குடியிருப்பு, விளை நிலங்களுக்குள் நுழைந்து பொதுமக்களையும் விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன.

    இந்தநிலையில் நேற்று இரவு நேரத்தில் உபதலை ஊருக்குள் வந்த கரடி சாலையை கடந்து உணவு தேடி ரேஷன் கடையின் கதவை உடைக்க முயற்சித்தது. இதனை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் படம் எடுத்தனர்.

    சிறிது நேரம் முயற்சித்து முடியாததாலும், அருகில் மக்கள் சத்தம்கேட்டதால் கரடி அருகில் இருந்த தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். அசம்பாவிதங்கள் நடக்கும் முன் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • குதிரையேற்றம், மலையேற்றம், படகு சவாரி, உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும்.
    • 77 -வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

     ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், குன்னூா் வெலிங்டனில் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி உள்ளது.

    சா்வதேச அளவில் புகழ்பெற்ற இக்கல்லூரியில் அமெரிக்கா, கென்யா, பிரிட்டன், பாகிஸ்தான் உள்பட பல வெளிநாட்டு முப்படை அதிகாரிகள் பயிற்சி பெறுகின்றனா்.

    கடந்த ஏப்ரல் மாதம் 77 -வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 479 அதிகாரிகள் பட்டங்கள் பெற்றனர். இந்தநிலையில் 78 -வது பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கின. பயிற்சி வகுப்புகளை கல்லூரி முதல்வா் கமாண்டென்ட் லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.மோகன் தொடங்கிவைத்தாா்.

    இதில் இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையைச் சோ்ந்த 439 அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமை ச்சகத்தின் தொடா்புடைய சேவைகளைச் சோ்ந்த அதிகாரிகள் சோ்ந்துள்ளனா். 11 மாதங்கள் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்புகள் நிறைவடைந்ததும் சென்னை பல்கலைக்கழகத்தின் சாா்பில் எம்எஸ்சி டிபன்ஸ் பட்டம் வழங்கப்படும்.

    பயிற்சி வகுப்பில் பங்கேற்றுள்ள அதிகாரிகளுக்கு பாடத் திட்டம் மட்டுமல்லாமல், குதிரையேற்றம், மலையேற்றம், படகு சவாரி, சைக்கிள் சவாரி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும்.

    • கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை அரசு கண்டறிய வேண்டும்.
    • ஓராண்டு தி.மு.க. ஆட்சி என்பது மக்களுக்கு கிடைத்த தண்டனை

    குன்னூர்,

    அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்தது.

    கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    ஓராண்டு தி.மு.க. ஆட்சி என்பது மக்களுக்கு கிடைத்த தண்டனை. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் ஆனவுடன் மு.க.ஸ்டாலின் மறந்து விட்டார். குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய் தருவேன் என்றார். அதை மறந்து விட்டார்.

    சொத்து வரியை உயர்த்த மாட்டேன் என்று கூறினார். பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.4 குறைப்பதாக சொன்னார். அவற்றை மறந்து விட்டார். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்களுக்கு கொண்டு வந்த திட்டங்கள் எல்லாவற்றையும் மூடுவிழா செய்து விட்டனர்.

    தி.மு.க. ஆட்சி விளம்பரங்களால் ஓடிக் ெகாண்டிருக்கிறது. அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு லஞ்ச ஊழல் ஒழிப்பு என்பதெல்லாம் ஊடக வெளிச்சத்துக்காக மு.க.ஸ்டாலின் செய்கிறார்.

    காவல்துறையினருக்கு அதிகாரம் இருப்பதால் அத்துமீறி செயல்படுவது மக்கள் மத்தியில் அவப்பெயரை தான் ஏற்படுத்துகிறது. காவல்துறையினர் கவனமுடன் செயல்பட வேண்டும்.

    அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. இணைய வாய்ப்பில்லை. கோடநாடு கொ லை, கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை அரசு கண்டறிய வேண்டும்.

    சசிகலா பா.ஜ.க. வுக்கு வந்தால் ஏற்று க்கொள்வோம் என நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறி வருகிறார். அதுகுறித்து சசிகலா தான் கூற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து டி.டி.வி. தினகரன் இன்று பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூரில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார்.

    • அ.தி.மு.க. திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி வருகிறது
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடந்தது.

    ஊட்டி,

    தி.மு.க. அரசை கண்டித்து கூடலூரில் அ.தி.மு.க.வினர் மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் தலைமை யில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

    கூடலூா் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கிழக்கு ஒன்றிய செயலாளா் மொய்தீன் முன்னிலை வகித்தாா்.

    தெப்பக்காடு பாலத்தை விரைந்து கட்டி முடிக்க வேண்டும். மசினகுடி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு போதிய ஆசிரியா்களை நியமிக்க வேண்டும். வீடு இல்லாதவா்களுக்கு வீடுகள் வழங்க வேண்டும். தெப்பக்காடு பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்பாட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் கூறியதாவது:-

    தெப்பக்காடு பாலத்தை விரைந்து கட்டி முடிக்க வேண்டும். மசினகுடி அரசு உயா்நிலைப் பள்ளிக்கு போதிய ஆசிரியா்களை நியமிக்க வேண்டும். வீடு இல்லாதவா்களுக்கு வீடுகள் வழங்க வேண்டும். தெப்பக்காடு பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை திறக்க வேண்டும்.

    அ.தி.மு.க. அரசின் திட்டங்களை முடக்கும் விதமாக தி.மு.க. அரசு செயல்படுகிறதுஅ.தி.மு.க. அரசால் கூடலூர் பஸ்நிலைய மேம்பாட்டிற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது இன்று வரை இதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை.கூடலூர் பகுதி அரசு மருத்துமனைகளில் போதிய மருத்துவர்கள் இல்லை. அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை. கூடலூர்சட்ட மன்ற தொகுதி அ.தி.மு.க. வெற்றி தொகுதி என்பதால் ஒதுக்கபட்ட தொகுதியாக மாறி உள்ளது. இதை உடனடியாக தவிர்த்து மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்ட பேரவை மாவட்ட செயலாளர் சாந்தி ராமு, கூடலூர் சட்டப் பேரவை உறுப்பினா் பொன்.ஜெயசீலன், முன்னாள் அமைச்சா் மில்லா் ,கேத்தி பேருராட்சி செயலாளர் கண்ணபிரான், குன்னூர் நகர மன்ற உறுப்பினர் குரு மூர்த்தி உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

    • தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் ஆனவுடன் மு.க.ஸ்டாலின் மறந்து விட்டார்.
    • தி.மு.க. ஆட்சி விளம்பரங்களால் ஓடிக் கொண்டிருக்கிறது.

    குன்னூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்தது. கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஓராண்டு தி.மு.க. ஆட்சி என்பது மக்களுக்கு கிடைத்த தண்டனை. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் ஆனவுடன் மு.க.ஸ்டாலின் மறந்து விட்டார். குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய் தருவேன் என்றார். அதை மறந்து விட்டார்.

    சொத்து வரியை உயர்த்த மாட்டேன் என்று கூறினார். பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.4 குறைப்பதாக சொன்னார். அவற்றை மறந்து விட்டார். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை, எளிய மக்களுக்கு கொண்டு வந்த திட்டங்கள் எல்லாவற்றையும் மூடுவிழா செய்து விட்டனர்.

    தி.மு.க. ஆட்சி விளம்பரங்களால் ஓடிக் கொண்டிருக்கிறது. அரசு அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு லஞ்ச ஊழல் ஒழிப்பு என்பதெல்லாம் ஊடக வெளிச்சத்துக்காக மு.க.ஸ்டாலின் செய்கிறார்.

    காவல்துறையினருக்கு அதிகாரம் இருப்பதால் அத்துமீறி செயல்படுவது மக்கள் மத்தியில் அவப்பெயரை தான் ஏற்படுத்துகிறது. காவல்துறையினர் கவனமுடன் செயல்பட வேண்டும்.

    அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. இணைய வாய்ப்பில்லை. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை அரசு கண்டறிய வேண்டும். சசிகலா பா.ஜ.க.வுக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் என நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறி வருகிறார். அதுகுறித்து சசிகலா தான் கூற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து டி.டி.வி. தினகரன் இன்று பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூரில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார்.

    • கூடலூரில் இன்று அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • கிழக்கு ஒன்றியம் சார்பில் இந்த போராட்டம் நடந்தது

    ஊட்டி:

    தாலிக்கு தங்கம் திட்டம் மற்றும் உதவித் தொகை வழங்குவதை நிறுத்தக்கூடாது, தொடர்ந்து வழங்க வேண்டும், குடும்பத் தலைவிக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக கூடலூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி இன்று கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு அ.தி.மு.க.வினர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத், பொன்.ஜெயசீலன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் மில்லர், ஜெயலலிதா பேரவை செயலாளர் சாந்தி ராமு உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • பந்தலூரில் டேன்டீ தொழிலாளர்கள் இன்று வேலைநிறுத்தம் செய்தனர்
    • பேரணியாக சென்று அவர்கள் மறியலிலும் ஈடுபட்டனர்

    ஊட்டி:

    தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கைக்கு உடனடி தீர்வு காண வேண்டும், தற்காலிக தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக டேன்டீ தொழிலாளர்கள் அறிவித்து இருந்தனர்.

    அதன்படி அன்று 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். தொடர்ந்து அவர்கள் பந்தலூர் பஜாரில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக பேரணியாக புறப்பட்டுச் சென்றனர்.

    திடீரென அவர்கள் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.

    தொழிலாளர்கள் தங்கள் தொழிற்சங்க கொடிகளுடன் ஊர்வலமாக வந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    • 7 பேர் படுகாயம் அடைந்தனர்
    • கேரள மாநிலம் வயநாட்டுக்கு சுற்றுலா வந்தனர்

    ஊட்டி:

    சென்னையைச் சேர்ந்த 15 பேர் ஒரு வேனில் கேரள மாநிலம் வயநாட்டுக்கு சுற்றுலா வந்தனர். அவர்களுடன் வேன் டிரைவர்கள் 2 பேரும் இருந்தனர். அவர்கள் வயநாட்டில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு நேற்று இரவு வேனில் சென்னைக்கு புறப்பட்டனர். ஊட்டியை கடந்து அவர்களது வேன் மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

    அதிகாலை 4 மணிக்கு 4-வது கொண்டை ஊசி வளைவில் வந்தது. அப்போது திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் நடுரோட்டில் வேன் கவிழ்ந்தது. அதிகாலை நேரம் என்பதால் வேனில் இருந்தவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். அவர்கள் வேன் கவிழ்ந்ததும் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர். அப்போது அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதில் 7 பேர் படுகாயம் அடைந்திருந்தனர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் ஏராளமான கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தற்போது சீசன் நேரம் என்பதால் நூற்று க்கணக்கான வாகனங்கள் அந்த வளைவுகளை கடந்து செல்கின்றன.

    புதிதாக வரும் வாகன ஓட்டிகள் இவ்வாறு வளைவில் திரும்ப முடியாமல் விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். இதற்காக ஊட்டியின் முக்கிய இடங்களில் போலீசார் நின்று வாகனங்களை மெதுவாக இயக்குமாறு கூறி துண்டுபிரசுரங்கள் வழங்கி வருகிறார்கள். இருந்தாலும் எதிர்பாராதவிதமாக விபத்துகள் நடந்து விடுகின்றன. 

    ×