search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IMMEDIATE ACTION ON PETTION"

    • மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் 118 மனுக்களை பெற்றுக் கொண்டார்.
    • கூட்டத்தில் கலெக்டர் பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையினை வழங்கினார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 118 மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனங்கள் துறை சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்காற்றியவர் களுக்காக பசுமை முதன்மையாளர் விருது என்ற விருதை நிறுவி வழங்கி வருகிறது. இதன்படி மாநிலத்தில் 100 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையாகவும் வழங்கப்படுகிறது.

    இதில் நீலகிரி மாவட்ட த்துக்கு 2 விருதுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுகுறித்த விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த தனி நபர்கள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், குடியிருப்பு நலச்சங்கங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொழி ற்சாலைகள் ஆகி யோரிடம் இருந்து பெறப்பட்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அவற்றில் கிளீன் குன்னூர் மற்றும் பகல்கோடு மந்து சூழல் மேம்பாடு குழு ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் 2021-ம் ஆண்டு பசுமை முதன்மையாளர் 2021 விருதிற்கு உரியவையாக தேர்ந்தெடுக்கப்பட்டன.

    கிளீன் குன்னூர் நிறுவனத்துக்கான பசுமை சாதனையாளர் விருது சென்னையில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். விருது பெற்ற மற்றொரு நிறுவனமான பகல்கோடு மந்து சூழல் மேம்பாட்டு குழுக்கான விருதினை அக்குழுவின் தலைவர் மணிகண்டனுக்கு நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் பாராட்டு சான்றிதழ் மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையினை வழங்கினார்.

    மக்கள் குறைதீர்க்கும் நாள கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும், உரிய காரணம் இல்லாமல் மனுக்களை நிராகரிக்க கூடாது எனவும், பொதுமக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×