என் மலர்
நீலகிரி
- கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
- விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது.
குன்னூர்,
குன்னூர் நகரில் நூற்றாண்டு பழமை மிக்க விநாயகர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை சார்பில் செய்யப்பட்டு உள்ளது. அதன் ஒரு கட்டமாக கோவிலில் பாலாய நிகழ்ச்சி நடந்தது. கணபதி ஹோமம், விநாயகருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் செயல் அலுவலர் ராஜேஷ், அறநிலையத்துறை ஆய்வாளர் ஹேமலதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- சம்பளம் வழங்காததை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு லாலி மருத்துவ மனையில் ஒப்பந்த ஊழியர்கள் 30 பேருக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதில் பல்வேறு சமூக அமைப்புக்கள் ஊழியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சம்பளத்தை பெற்று தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- கலெக்டர் மற்றும் பிற துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
- பள்ளியை தரம் உயா்த்தும் வழிமுறைகள் குறித்து கலந்துரையாடினாா்.
ஊட்டி
ஊட்டி அருகே உள்ள பாகல்கோடுமந்து பழங்குடியின கிராமத்தில் கட்டப்படும் பழங்குடியினருக்கான பால் பதனிடும் நிலையத்தை தமிழக பழங்குடியினா் நலத் துறை இயக்குநா் அண்ணாதுரை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
முன்னதாக தேவாலா அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட உயா்நிலைப் பள்ளியை ஆய்வு செய்து, அங்குள்ள பெற்றோா்ஆ சிரியா் கழக உறுப்பினா்களை சந்தித்து அப்பள்ளியை மேலும் தரம் உயா்த்தும் வழிமுறைகள் குறித்து கலந்துரையாடினாா்.
இதனையடுத்து பந்தலூா் வட்டத்தில் புதிய வீடுகள் கோரிய பழங்குடியின கிராமங்களான 10-ம் நம்பா் காலனி, ஏலமன்னா ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் மாவட்ட கூடுதல் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மற்றும் பிற துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பழங்குடியின மக்களுக்கு வன உரிமை வழங்குவது, அவா்களுக்கு வீடு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது தொடா்பாக ஆலோசனைகளை வழங்கினாா்.
இதற்கு முன்னதாக வழங்கப்பட்ட பழங்குடியின வீடுகளுக்கு வழங்கப்பட்ட தொகையைவிட தற்போது வழங்கப்படும் வீடுகளுக்கு கூடுதலாக தொகை வழங்கப்படும் எனவும், அத்துடன் பணி முடிக்காமல் நிலுவையில் உள்ள வீடுகளுக்குத் தேவையான முன்மொழிவுகள் அனுப்பும் பட்சத்தில் கூடுதலாக தொகைப் பெற்றுத் தருவதாகவும் உறுதி அளித்தாா்.
கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் அம்ரித், மாவட்ட வன அலுவலா் சச்சின் போஸ்லே துக்காரம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெயராமன், முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் அருண்குமாா், கூடலூா் வருவாய் கோட்டாட்சியா் சரவண கண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
- ஆய்வின் போது, முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
- கூட்டுறவு நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஊட்டி,
ஊட்டியில் உள்ள, நீலகிரி கூட்டுறவு நிறுவனம் கட்டுப்பாட்டில் மாவட்டம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்படுகின்றன.
கொரோனா காலகட்டத்தில் ரேஷன் கடைகள், ஊட்டி பல்பொருள் அங்காடிக்கு பிற இடங்களில் இருந்து பொருட்கள் வாங்கி 'பேக்கிங்' செய்து விற்பனை செய்யப்பட்டது.
அப்போது ஊட்டி கூட்டுறவு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த விற்பனை பிரிவு ஊழியர் ஒருவர் முறைகேடு செய்துள்ளார். பொருட்களை வினியோகம் செய்த பலருக்கு இன்னும் பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை என உயர் அதிகாரிகளுக்கு புகார் வந்தது. தொடர்ந்து நடந்த ஆய்வின் போது, முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுபற்றி நீலகிரி கூட்டுறவு நிறுவன நிர்வாக இயக்குனர் தியாகு கூறுகையில் கூட்டுறவு நிறுவனத்தில் விற்பனை பிரிவில் நடந்த ஆய்வில், 45 லட்சம் ரூபாய் முறைகேடு செய்திருப்பது தெரியவந்ததால், அங்கு பணிபுரிந்த ரவி என்பவர் சஸ்பெண்டு செய்யப்பட்டு, துறை ரீதியாக விசாரணை நடந்து வருகிறது. மோசடி பணத்திற்காக, 30 லட்சம் ரூபாய், 15 லட்சம் ரூபாய் என 2 காசோலைகளை அவர் கொடுத்துள்ளார். அவை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பின. இது தொடர்பாகவும், கூட்டுறவு நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.
- அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி அளித்தார்.
- வியாபாரிகள் சங்கம் மற்றும் மார்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பிலும் மனு அளிக்கப்பட்டது.
அரவேணு,
கோத்தகிரி கடைவீதி பகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு அலுவலகம், கடைகள், கழிப்பிட வசதி, வாகனம் நிறுத்துமிடம், பாதுகாப்பு சுற்றுச் சுவர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் உழவர் சந்தை அமைக்கப்பட்டது.
இந்த உழவர் சந்தை வழித்தடத்தில் மினி பஸ்களை இயக்கவும் உத்தரவிடப்பட்டது. ஆனால் பஸ்கள் அந்த வழியாக இயக்கப்படாததாலும், விவசாயிகளுக்கு பதிலாக வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டதாலும் உழவர் சந்தை சில மாதங்களில் செயலிழந்தது. பின்னர் பல முறை வேளாண் வணிகத்துறை அதிகாரிகள் உழவர் சந்தையை திறக்க முயற்சி மேற்கொண்டும், விவசாயிகள் போதிய ஆர்வம் காண்பிக்கவில்லை. இதனால் உழவர் சந்தை மூடப்பட்டது.
இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன் மார்கெட்டை ஒட்டியுள்ள பகுதியில் தற்போது செயல்பட்டு வரும் சுமார் 50 கடைகளை அகற்றி புதியதாக உழவர் சந்தை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதனால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், பேரூராட்சிக்கு கிடைத்து வரும் வருவாயும் பாதிக்கப்படும். எனவே பழைய உழவர் சந்தையை புதுப்பிக்கவோ அல்லது மாற்று இடத்தில் உழவர் சந்தையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். மேலும் பழங்குடியின மக்களும் இங்கு உழவர் சந்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் புதிய உழவர் சந்தை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்.
அப்போது அமைச்சரிடம், கடை இழந்து பாதிப்புக்கு ள்ளாகும் வியாபாரிகள் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு பாதிப்பில்லாத வகையில் வேறு பகுதியில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் எனத் தனித்தனியாக கோரிக்கை மனுக்களை அளித்தனர். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி கோத்தகிரி அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் மார்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பிலும் மனு அளிக்கப்பட்டது.
மனுக்களைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் அவர்க ளிடம், வியாபாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் புதிய உழவர் சந்தை அமைக்கப்படும் என உறுதி அளித்து விட்டு, இது குறித்து அதிகாரிகளிடம் விரிவான ஆலோசனை செய்வதற்காக கோத்தகிரி பேரூராட்சி விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார்.
- போலீஸ் நிலையத்தில் வேலை பார்த்த பெண் போலீஸ் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
- சரவணன் மேல்குன்னூர் போலீஸ் நிலையத்தில் இருந்து மஞ்சூர் போலீஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் மேல்குன்னூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் சரவணன் (வயது 39).
இவர் அதே போலீஸ் நிலையத்தில் வேலை பார்த்த பெண் போலீஸ் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அந்த பெண் போலீஸ், உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தார்.
இதைத்தொடர்ந்து சரவணன் மேல்குன்னூர் போலீஸ் நிலையத்தில் இருந்து மஞ்சூர் போலீஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் சரவணன் மீதான இந்த நடவடிக்கை போதாது, அவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பெண் போலீஸ் வலியுறுத்தி வந்தார்.
இந்தநிலையில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் இன்று கைது செய்யப்பட்டார்.
- அரசு பஸ் இயக்கம் கேரள மாநிலம் மலப்புரம், வயநாட்டுக்கு கூடலூர் பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் தினமும் சென்று திரும்புகின்றனர்.
- 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 28-ந் தேதி மீண்டும் அரசு பஸ் இயக்கப்பட்டது
கூடலூர்,
கூடலூர்-கல்பெட்டா இடையே இயக்கப்பட்ட அரசு பஸ் மீண்டும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதேபோல் சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி, வைத்திரி ஆகிய இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கூடலூரில் இருந்து கல்பெட்டாவுக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. ஆனால், கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கல்பெட்டாவுக்கு இயக்கப்படும் அரசு பஸ் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில். இதனால் பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக பயணம் செய்து வந்தனர். இந்தநிலையில் 1 வாரம் மட்டுமே பஸ் இயக்கப்பட்டது. அதன் பின்னர் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக இருமாநில மக்களும் அவதி அடைந்து வருகின்றனர். Also Read - அங்கன்வாடி பணியாளர்களுக்கு காசநோய் கண்டறியும் முகாம் மீண்டும் நிறுத்தம் இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கூடலூரில் இருந்து வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரிக்கு மட்டுமே தற்போது பஸ் இயக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக வைத்திரி பகுதிக்கு இயக்கப்பட்ட பஸ்சும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்பு கூடலூரில் இருந்து கல்பெட்டாவுக்கு பஸ் இயக்கப்பட்ட நிலையில், ஊரடங்கால் நிறுத்தப்பட்டது. தற்போது இயல்பு நிலை திரும்பி விட்டதால், ஒரு வாரத்துக்கு முன்பு மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியது. இதனால் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக ஏராளமானவர்கள் பயணம் செய்து வந்தனர். தற்போது மீண்டும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த பஸ்சை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, நடத்துனர்கள் பற்றாக்குறையால் தற்காலிகமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
- சாலை மீண்டும் குறுகலாக மாறி உள்ளது.
- வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளை யம் சாலை மலைப்பா தையாக உள்ளது. இந்த சாலையில் குறுகிய வளைவுகள், கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. வாகன ஓட்டிகள் மிதமான வேகத்தில், சாலை விதிகளை கடைபிடித்து வாகனங்களை இயக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சாலையோரம் பள்ளமாக உள்ள பகுதி களில், தடுப்புச்சுவர் கட்டப்பட்டு உள்ளது. குறுகிய வளைவுகளால் போக்குவ ரத்து பாதி ப்பு, விபத்து ஏற்பட்டு வந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலை விரிவாக்க பணிகள் நடந்தது. அப்போது தடுப்புச்சுவர்கள் அமைக்கப்பட்டன. இந்தநிலையில் குன்னூர்-மேட்டு ப்பாளையம் சாலையில் கே.என்.ஆர்.நகர் பகுதியில் கட்டப்பட்டு இருந்த தடுப்புச்சுவர் தொடர் மழையால் இடிந்து விழுந்தது. இதனால் சாலை மீண்டும் குறுகலாக மாறி உள்ளது. அந்த இடத்தை கடக்கும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர். எனவே இடிந்த தடுப்புச்சுவ ரை போர்க்கால அடிப்படை யில் விரைந்து சீரமைக்க நடவடி க்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- பொதுமக்கள் கூடியதால் தப்பிச்சென்றது.
- வனப்பகுதியில் இருந்து வெளியேறி நகரப் பகுதிக்கு வந்து செல்வது வழக்கமாகி உள்ளது.
குன்னூர், -
குன்னூர் நகர பகுதியான ராஜாஜி நகர் 25-வது வார்டு பகுதியில் அய்யப்பன் கோவில் செல்லும் சாலையின் அருகே பயன்படுத்தப்படாத கழிவறை உள்ளது.
இது முட்புதர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் அந்த சாலையின் வழியாக கரடி ஒன்று நடந்து வருவதை பார்த்த பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். அங்கிருந்தவர்கள் உடனடி யாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் .
வனத்துறையினர் அந்தப் பகுதிக்கு வந்து ஆய்வு செய்து கரடி எங்கு உள்ளது என்று தேடினர். அந்தப் பகுதியில் சாலையின் ஓரங்களில் உணவுப்பண்டங்களை கொட்டி உள்ள நிலையில் இந்த உணவுகளை சாப்பிடுவதற்காக கரடிகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி நகரப் பகுதிக்கு வந்து செல்வது வழக்கமாகி உள்ளது.
பொதுமக்களின் கூச்சல் சத்தத்தை கேட்ட கரடி அந்தப் பகுதியில் இருந்த பயன்படுத்தப்படாத கழிவறைக்குள் சென்று மறைந்தது. கரடி மறைந்த இடத்தை வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் அந்த பகுதியில் சுற்றி தேடிப்பார்த்தனர். ஆனால் கரடி அந்த இடத்தை விட்டு வேறொரு இடத்துக்கு சென்று விட்டது.
கரடி கழிவறைக்குள் புகுந்த தகவல் அறிந்த ஏராளமானோர் அங்கு கூடி நின்றனர். பின்னர் போலீசார் அவர்களை அங்கிருந்து புறப்பட்டுச் செல்லுமாறு கூறி அப்புறப்படுத்தினர்.
- வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
- பேராசிரியர்களும், மாணவிகளும் கலந்துகொண்டு உற்சாகமாக ஆடி மகிழ்ச்சியடைந்தனர்.
ஊட்டி,
கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை (8-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள நீலகிரியிலும் இந்த பண்டிகை களை கட்டத் தொடங்கி உள்ளது.
கூடலூர், பந்தலூர், தேவாலா உள்ளிட்ட பகுதி கேரள எல்லையில் உள்ள பகுதிகளாகும். இங்கு கேரள மக்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். இங்கும், ஊட்டி, குன்னூர் பகுதிகளிலும் ஓணம் பண்டிகை களை கட்டி உள்ளது.
கேரள மக்கள் வீடுகள் முன்பு பல வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டு உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். இதேபோல பள்ளி, கல்லூரிகளிலும் ஓணம் கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது.
குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் அதிக அளவில் கேரளா மாணவிகள் படித்து வருவதால் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. அருட்தந்தை விமல் திருப்பலி நடத்தி ஓணம் பண்டிகை விழாவை தொடங்கி வைத்தார்.
மாணவிகள் பட்டாசு வெடித்தும், திருவாதிரை களி நடனமாடியும் ெசண்டை மேளம் முழங்க விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் அனைத்து பேராசிரியர்களும் மாணவிகளும் கலந்துகொண்டு உற்சாகமாக ஆடி மகிழ்ச்சியடைந்தனர்.
இதேபோல மாவட்டம் முழுவதும் ஓணம் பண்டிகை களை கட்டி உள்ளது.
- அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார்
- சாலையை சீரமைத்து தருமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஊட்டி
ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகள் குறித்தும் வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
தொடர்ந்து அவர் நிரு பர்களிடம் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் விவ சாயிகளுக்கு கூட்டுறவுச் சங்கங்களின் மூலமாக விவசாய கடன்களும், கடன் பெறுவதற்கான அனுபோக சான்றும் வழங்கப்படுகிறது. ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மழை ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்கின்ற காரணத்தினால் மருத்துவமனைக்குச் செல்லும் சாலையை சரி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.சாலை பழுதடைந்துள்ளதால் மருத்துவக் கல்லூரிக்குச் செல்ல சிரமமாக உள்ளதாகவும், வாகனங்கள் சென்று வர ஏதுவாக சாலையை சீரமைத்து தருமாறும் மாணவா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
குறிப்பிட்ட கால கெடுவுக்குள் இச்சாலையை சரி செய்து தர பொதுப் பணித் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் அம்ரித், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் வெங்கடேசன், மாவட்ட வன அலுவலா் சச்சின் போஸ்லே துக்காராம், ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மனோகரி, தி.மு.க. ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
- ஊட்டியில் நாள்தோறும் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
- நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் தொடங்கிய மழை தற்போதும் பெய்து வருகிறது. தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் தங்களது அன்றாட பணிகளை தொடர முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக, ஊட்டியில் நாள்தோறும் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த மாதம் பெய்த மழையால் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் விழுந்தும், மண் சரிவுகள் ஏற்பட்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்தநிலையில் மீண்டும் நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதற்கு ஏற்றார் போல், நீலகிரி மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.
குறிப்பாக, ஊட்டியில் நேற்று 2 மணிக்கு பெய்த மழை சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் கொட்டி தீர்த்தது. சேரிங்கிராஸ், மத்திய பஸ் நிலையம், கூட்செட் போன்ற தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
ஊட்டியில் பெய்த பலத்த மழை காரணமாக காந்தல் கே. கே. நகர் தெருக்கள் மழை வெள்ளத்தால் நிரம்பி வழிந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் வீடுகளில் புகுந்த மழை நீரை கஷ்டப்பட்டு வெளியேற்றினர்.






